என் மகளுக்கு விக்கல்/எக்கல் தொந்தரவு

அருசுவை அனைவருக்கும் வணக்கம்,

என் 2 மாத பெண் குழந்தைக்கு அடிக்கடி விக்கல்/எக்கல் வந்துக் கொண்டே
இருக்கிறது.என் தாய்பால் கொடுத்தால் போதும் 5 நிமிடம் கழித்து
உடனே வந்து விடும்.சரி மில்க் பவுடர் கொடுத்தாலும் அதே மாதிரிதான்
இருக்கு.பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் இப்படிதான் ஒவ்வொரு
தடைவயும் கஹ்ட படுகிறாள்.விக்கல் ரொம்ப வேகமாக கேட்குது.
ஒரு நாலைக்கு குறைந்தது 3 அல்லது 4 தடவையாவது வந்து விடுகிறது.
மனதுக்கு ரொம்ப கஹ்டமா இருக்கு.
யாரவது முடிந்தால் என் மகளுக்கு இந்த விக்கலிருந்து விடுதலை
தரவும்.

Thanks&B.Rgds
Keerthisvary

விக்கல் எல்லா குழந்தைகளுக்கும் வருவது சாதாரணமான விடயமே அதை பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. வேண்டுமானால் நீங்கள் gripe water கொடுத்துப்பாருங்கள் அது விக்கலை இல்லாமலாக்கும்

Enathu baby piranthu 8 days ahakuthu vikal varukirathu ithu normal ah sis yarachum solunga

அது இருப்பதுதான். குழந்தைகள் தாயின் வயிற்றினுள் இருக்கும் போதும் விக்கலெடுப்பது உண்டாம். குழந்தையின் உறக்கத்திற்கு இடையூறாக‌ இருக்கிற‌ மாதிரி விடாமல் விக்கினால் மருத்துவரிடம் காட்டுங்கள். மற்றப்படி பிரச்சினை இல்லை.

‍- இமா க்றிஸ்

Thanks ma

மேலும் சில பதிவுகள்