முக்கிய அறிவிப்பு

அறுசுவை நேயர்களுக்கு வணக்கம்.

அறுசுவை தளத்தை மாற்றியமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பேசி வந்தாலும், பல்வேறு காரணங்களால் அந்த பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் என்னால் முடிக்க இயலவில்லை. இப்போது ஓரளவிற்கு அதை நிறைவு செய்துள்ளேன். அதன் இறுதிக்கட்ட பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இப்போது இருக்கும் தளத்தில் உள்ள அனைத்து குறிப்புகளையும் புது வடிவ தளத்திற்கு மாற்ற வேண்டியுள்ளது. குறிப்புகள் மட்டுமில்லாது மொத்த பதிவுகள் அனைத்தையும் மாற்ற வேண்டும். குறிப்புகளை பிழை திருத்தம் செய்தல், தேவையற்ற குறிப்புகளை நீக்குதல், பொருத்தமான பிரிவில் குறிப்புகளை கொண்டு வருதல் என்று நிறைய செய்யவேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், புதிதாக வெளிவரும் தளத்தில் நிறைய மாறுதல்கள் இருப்பதால், கிட்டத்திட்ட 10 ஆயிரம் குறிப்புகளை மேனுவலாக(manual) எண்டர் செய்ய வேண்டியுள்ளது.

நாளை திங்கள் முதல் இந்த பணிகள் தொடர இருப்பதால், நாளையில் இருந்து அறுசுவையில் புதிய சேர்க்கைகள் அனைத்தையும் நிறுத்தவுள்ளோம். அதாவது பெயர்ப்பதிவு செய்தல், குறிப்புகள் சேர்த்தல், மன்றத்தில் உரையாடுதல் என்பது இயலாது. அறுசுவையில் இருப்பவற்றை பார்வையிடலாம். அதில் பிரச்சனைகள் இருக்காது. ஆனால், பதிவுகள் எதுவும் கொடுக்க இயலாது. இந்த நிலை அடுத்த ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு தொடரும். குறிப்புகள் மாற்றும் பணி முடிவடைந்ததும், நீங்கள் வழக்கம் போல் மாற்றியமைக்கப்பட்ட தளத்தில் உங்கள் பங்களிப்பினை தொடரலாம். தயவுசெய்து மன்ற உரையாடல்களை இன்றுடன் முடித்துக்கொள்ளவும். தவிர்க்க இயலாத இந்த சிரமத்திற்கு வருந்துகின்றோம்.

அறிவிப்பு மேலே :-)

Sow.MohanaRavi
aduththa varaththirkkul mudiyunga admin.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நலமா அண்ணா.... புது தளத்துக்கு என் வாழ்த்துக்கள். :) 10 நாளைக்கு பின் மீண்டும் புது புது குறிப்புகள், செய்முறைகள், தலைப்புகளோட உங்களை சந்திக்கறேன்...... ஹிஹீ.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

10 நாட்கள்னு ஒரு குத்துமதிப்பா சொல்லி இருக்கேன். அது இன்னும் அதிகமானாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. :-) தளம் மாத்துறதுல டெக்னிக்கல் விசயங்கள் கொஞ்சம் சிரமமானதா போயிடுச்சு. ஒவ்வொரு பிரச்சனையா சரி செய்யறதுக்கு ரொம்பவே டைம் எடுக்குது. இப்ப டேட்டா மாத்தும் போது நிறைய பிரச்சனைகள் இருக்கு. நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி நிறைய கண்டெண்ட் மேனுவலாத்தான் புது சைட்ல சேர்க்கணும். அப்படி சேர்த்தாலும் குறிப்புகளுக்கு கீழே உள்ள கமெண்ட்ஸ் எல்லாம் சேர்க்கிறது ரொம்பவே கஷ்டம். அதிலயும் நிறைய வேலைகள் இருக்கு. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் இதுலத்தான் போய்க்கிட்டு இருக்கு. எப்படியும் 10 நாளைக்குள்ள முடிக்க பார்க்கிறேன். லேட்டான திட்டாதீங்க.. :-)

தங்கை வனிதாவிற்கு,

நலம். இப்பவே வாழ்த்தெல்லாம் சொல்லாதீங்க. புதுத்தளம் வந்த பிறகு நல்லா இருந்தா சொல்லுங்க. இதுக்குபோயி இன்னா பில்ட் அப்னு சந்தானம் மாதிரி நக்கலடிச்சிடுவீங்களோன்னு பயமா இருக்கு. :-)

+2 physics exam க்கு கூட நான் இந்த அளவு டென்சனா இருந்ததில்லை. இப்ப ரொம்பவே டென்சனா இருக்கேன். 10 நாளைக்குள்ள ரிலீஸ் பண்ணனுமே..

பாபு அண்ணா,
புது தளம் வெகு விரைவில் :) வர உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
லக்ஷ்மிஷங்கர்

எப்படி இருக்கீங்க.அண்ணி, குழந்தை நலமா.புது தளம் வருவதற்க்கு வாழ்த்துக்கள். டென்ஷன் இல்லாமல் இருங்க எல்லாம் நல்லபடியாக அமையும்.

அன்புடன் கதீஜா

சகோதரி லக்ஷ்மி அவர்களுக்கு நன்றி. மேலே சொன்ன மாதிரி வாழ்த்தெல்லாம் இப்ப வேண்டாமே.. ரிலீஸ் ஆனபிறகு வச்சுக்கலாம். :-)

சகோதரி கதீஜா அவர்களுக்கு,

இங்கு அனைவரும் நலம். நீங்கள் மற்றும் குடும்பத்தினர் நலமா?

இந்த டென்சன் இருந்தாதாங்க என்னால வேலையே செய்ய முடியும். வீட்டுல, ஆபிஸ்ல எல்லாரும் என் பக்கத்துல வர்றதுக்கே பயப்படுறாங்கன்னா பார்த்துக்கோங்களேன்... :-)

பாபு அவர்கட்க்கு!எல்லாம் வெற்றி கரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் யோகராணி.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஏற்கனவே ஒரு வாரமா இன்விஸிபிளாத்தான் பார்வையிட்டுக் கொண்டு இருந்தேன்:-D இப்ப கூட ஒரு பத்து நாளு சேர்த்து பார்வையிடமாட்டோமா என்ன:-) அட்மின், இதுக்கெல்லாம் எங்களுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கிட்டு...ஆவலுடன் வெயிட் பண்ணுகிறேன்..

இவ்வளவு பெரிய தளத்தை இன்றளவும் மிகவும் அருமையாக நிர்வகித்து வந்த உங்களுக்கு புது தளம் அமைப்பது ஜுஜுபி என்றே நினைக்கிறன்.வாழ்த்துக்கள் புது தளத்துக்கு
அன்புடன் சகோதரி

அனிதாஅருண்

மேலும் சில பதிவுகள்