1 வயது குழந்தைக்கு சளி இருமல்

அன்பு தோழிகளே
என்னை மறந்தே போயிருப்பீர்கள். குழந்தைக்காகவே என் முழுநேரத்தையும் செலவிடுவதால் என்னால் கணினிபக்கமே வர முடிவதில்லை. என் பெண்ணிற்கு சளி இருமல் உள்ளது. அண்டிபயாட்டிக் கொடுத்தும், டானிக் கொடுத்தும் கேட்ட பாடில்லை.
கணவருக்கும் இதே பிரச்சனை. இப்பொழுது எனக்கும் தொற்றிவிட்டது. தாய்ப்பால் கொடுப்பதால் டாக்டர் எனக்கு மைல்டான ஆண்டிபயாட்டிக் கொடுத்தார்கள்.குணமாக நாளாகும் என்று வேறு கூறுகிறார்கள். தெரிந்த கைவைத்தியம் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன்.எனக்கு உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை தயவுசெய்து கூறுங்களேன்.. அவள் இருமுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. உடன் பதில் எனக்கு உதவியாக இருக்கும்..
நன்றி

கற்போரவல்லி இலையய் பிழிந்து சாறுயெடுது தேன் (அ) சர்கரை கூட்டி வடி கட்டவும் 4மிலி கொடுத்தால் பலன் கிடைகும்

மேலும் சில பதிவுகள்