முதல் தொகுப்பு - நூர்ஜஹான், விதுபா, சுபா, டெய்சி கவிதைகள்

முதல் வணக்கம்

அறுசுவை
இது இணையதளமில்லை...
நம்மை இணைக்கும் களம்.

இதயம் களைப்படைந்தால்
இளைப்பாற்றும்
இனிய நிழல்.

மானிடப்பறவைகளைச்
சேர்த்தணைக்கும்
வேடந்தாங்கல்.

ஆறு சுவையோடு
ஏழு கடல் தாண்டி
எட்டுத்திசைகளிலும்
ஒளி பரப்பும்
கலைவிளக்கம்...

இல்லையில்லை
கலங்கரைவிளக்கம்!!!

- விதுபா

மாற்றங்கள் எனக்குள்ளே..

இரண்டு நாட்களாய் உறக்கமில்லை
முதல்நாள் உனைப் பார்த்ததால்
மறுநாள் உனைக் காணாததால்

உன்னிடம் சொல்ல முடியாத செய்திகள்
என் சுவாசத்தை கடினமாக்குகின்றன.

உன் வருகை தாமதத்தால்
நான் மனம் வருந்தவில்லை
என் நினைவு மூட்டைகளை
சுமந்து நடப்பது
சிரமமென்று எனக்கு தெரியும்

எப்போது வீழ்ந்தாலும்
எப்படி வீழ்ந்தாலும்
பற்றி எழுவதென்னவோ
உன் நினைவுகளில் மட்டும்தான்

- செல்வி. நூர்ஜஹான்

 

குழந்தையின் சிரிப்பில்

சின்ன குழந்தையின் சிரிப்பில்
வண்ண மீன்களைக் கண்டேன்
வண்ண மீன்களின் வருகையிலே
வானவில்லினைக் கண்டேன்
வானவில்லின் நிறத்தினிலே
மயிலின் தோகையைக் கண்டேன்
மயில் தோகையின் அழகினிலே
உன்னைப் பார்க்கிறேன்
எங்கெங்கு காணினும் நீயடா!!
என் மூச்சும் , பேச்சும் நீயடா!!
நீ நானாகி, நான் நீ யாகி,
காதல் வசப்பட்டோம்
காதலிலே விளைந்தது
நம் குழந்தைச் செல்வம்
வாழ்க்கையிலே உயர்ந்தது
நம் குழந்தைச் செல்வம்

- சுபா ஜெயப்பிரகாஷ்

மோனோலிசா புன்னகை

மலராத மொட்டுக்களின்
ரசிகனோ
உன் இதழ் விரியா
புன்னகையை வரைந்தவன்...!!

நட்சத்திரங்கள்

பெண்களுக்குள் பொறாமை....
அணிய முடியாத
இத்தனை வைரங்களா.!
வானத்தில் நட்சத்திரங்கள்.

- டெய்சி

 

நீயில்லாத போது

கொண்டு வந்த அனைத்தையும்
நீ சென்றபோது எடுத்துச் சென்றாய்
ஓயாத உன் நினைவுகளை மட்டும்
மறந்துபோய்
என மனதில் விட்டுச் சென்றாய்

உன்னை இழந்த
இக்கணத்தில் நினைக்கின்றேன்
இன்னமும் கொஞ்சம்
அடைந்திருக்கலாம் என்று

என்னைப் பிரியும் அவசரத்தில்
நீ விட்டுச் சென்ற
கைக்கடிகாரம்
காட்டுவது நிகழ்காலத்தையா
அல்லது நீ
கொண்டு சென்றுவிட்ட
என் இறந்த காலத்தையா?

- செல்வி. நூர்ஜஹான்

சிதறல்கள்

எப்படி செலவழிப்பது?
ரூபாய் நோட்டில்
உன் கையெழுத்து

தனி கிளாஸில்
டீ குடித்தவன் காசும்
ஒரே கல்லாவில்

நட்சத்திரம் நினைவுபடுத்தின
அடகுவைத்த
அக்காவின் மூக்குத்தி

அறுந்த செருப்பில்
ஒட்டியிருந்தது
தைப்பவனின் பசி

தொலைந்த பர்ஸில்
காத்துக் கிடந்தது
எடுப்பவனுக்கு ஏமாற்றம்

- செல்வி. நூர்ஜஹான்

 

Comments

கனவு நனவானது,
கவிதை உருவானது
காத்திருந்த கவிதைகள்
களமிறங்கப் போகுது,
தேக்கிவைத்த நினைவுகள்
தொடர்ந்துவரப் போகுது.

அறுசுவைக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து தினம் ஒரு புதுமை கொடுக்கும் அட்மினுக்கு நன்றி!!! அருமையான கவிதை படைத்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!!!

ஹய் நூர்ஜஹான், விதுபா, சுபா, டெய்சி கவிதைகள் அனைத்தும் அருமை. தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அட்மின் கோடான் கோடி நன்றி.

ஜானகி

கவிதைகள் அருமை.....இன்னும் இன்னும் இன்னும் கவிதைகளை தந்து எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக்கொள்கிரோம்
தளிகா:-)

விதுபா, நூர்ஜஹான், சுபா, டெய்சி கவிதைகள் எல்லாமே சூப்பர். தொடர்ந்து நிறைய எழுத எனது வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

அருமையான கவிதைகள் வழங்கிய அன்பு மலர்கள் நூர்ஜஹான், சுபா, விதுபா, டெய்ஸி அனைவருக்கும் வாழ்த்துக்கள். அட்மினுக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கவிதாயினிகளுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் கவிதை மழையில் நனைய ஆவலுடன் இருக்கிறோம். பாபுத் தம்பி, அறுசுவை தளமே அதிருதில்ல. வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

மலராத மொட்டுக்களின் ரசிகையோ டெய்சி!

கவிதைகள் அனைத்தும் அருமை

வாழ்த்துக்கள்.

பர்வீன்.

self-confidense is the key to open the door of happiness in your life
அட்மின் அண்ணா,
கவிதை பக்கம் ஆரம்பித்து எங்ஙள் கவிதகளை பதித்ததற்கு நன்றி.

self-confidense is the key to open the door of happiness in your life

வேறு எங்கயோ வாழ்த்தி இருந்தேன். இங்கயும் வாழ்த்திடறேன். விது, சுபா, டெய்ஸி, நூர்ஜஹான் நீங்கள் மேன்மேலும் கவிதை எழுத வாழ்த்துகிறேன்.

விது உங்களுக்கென்று ஒரு பக்கம் வந்தாயிற்று. கலக்குங்க.

வேறு எங்கயோ வாழ்த்தி இருந்தேன். இங்கயும் வாழ்த்திடறேன். விது, சுபா, டெய்ஸி, நூர்ஜஹான் நீங்கள் மேன்மேலும் கவிதை எழுத வாழ்த்துகிறேன்.

விது உங்களுக்கென்று ஒரு பக்கம் வந்தாயிற்று. கலக்குங்க.

ஹாய் ,
விதுபா,நூர்ஜஹான்,சுபா,மற்றும் டெய்சிக்கு தங்கள் கவிதைகள் மிக அருமை, தங்கள் புலமை மேலும் வளர வாழ்த்துக்கள்.

விதுபாவின் அறுசுவை ஒரு கலங்கரைவிளக்கம்... என்பது மிகையில்லை.
சுபாவின் குழ்ந்தையின் சிரிப்பில் அழகுதான்.
டெய்சியின் கவிதைக்கு சீக்கிரம் டெய்சியின் புன்னகை மலர வாழ்த்து நட்சத்திரங்களை அணிந்து கொள்ளலாம்..
மற்றும்
நூர்ஜஹானின் நீயில்லாத போது மாற்றங்கள் எனக்குள்ளேயும்மாய் (என்னுடைய மலரும் நினைவுகள்) சிதறல்கள் ஒரு தொகுப்பாய் இருந்தது.
அருமை.
நன்றி.

உப்பில்லா பண்டம் குப்பையிலே

கவிதைகள் அனைத்தும் அருமை.எனக்கு கவிதை எழுத வராட்டியும் கை தட்ட வரும்.
சுபா,விது,நூர்ஜகான் மற்றும் டெய்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க .....

அனிதா

hi

self-confidense is the key to open the door of happiness in your life
சுபா, விது, மற்றும் நூர்ஜகான்கு வாழ்த்துக்கள். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

self-confidense is the key to open the door of happiness in your life

உங்கள் கவிதை மிக மிக அருமை...........சுருக்கமாக இனிமையாகவும் இருக்கிரது...................வழ்த்துக்கள்

leemacyril

leemacyril

self-confidense is the key to open the door of happiness in your life
தாங்ஸ் லீமா, இரண்டாவது பாராட்டிற்கு

self-confidense is the key to open the door of happiness in your life

பாராட்ட வார்தை இல்லை... உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
இனி நாவிர்க்கு மட்டும் அருசுவை இல்லை, நாவாழ் உனர்து படிக்க கவிதை வரிகலும் நல்விருந்து தான்.

வாழ்த்துக்கள்

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

ஹாய் விதுபா,நூர்ஜஹான்,சுபா,டெய்சி உங்க கவிதைகள் மிக அருமை. கவிதை மழையில் எங்களை நனைய வைக்கும் தேவதைகளுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

சகோதரர் அஹ்மது,மற்றும் சகோதரி திவ்யாவுக்கு என் நன்றிகள் கோடி!!!

உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருந்தது.

நூர்ஜஹான், விதுபா,ஜெய், டெய்சி, இப்போது தான் கவிதையை படித்தேன்.... மிகவும் அருமை...... தொடரட்டும்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இங்கு பதிவிடுவது எப்படி?

மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்,,

இங்கு பதிவிடுவது எப்படி?

மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்,,

ஒரு போண்ணால பைத்தியக்காரனா ஆகுறத விட......

போனால பைத்தியக்காரனாவுரது ..எவ்வளவோ மேல்..