காதலியே! அன்று...
கண்டதும் காதல் கொண்டேன்
கடிதத்தில் உள்ளம்
உரைத்தேன்
காத்திருந்தேன் துணை
வருவாயென...
புதிராய் நீ விலக
என் உதட்டிற்கும்
விரலிற்கும்
இடையில் தீ பொட்டுடன்
புதிதாய் உறவானதோ
சிகரெட்...
கடந்தன வருடங்கள் பல
கல்யாணமும் நடந்தது
வேறொருவளுடன்
கடமையில், உறவில் கலைந்தது
காதல்! இன்று...
மனைவிக்கும் மக்களுக்கும்
இடையில்
மறைந்த உன் முகத்தையும்
மறந்த என் காதலையும்
மரணத்தின் பயணத்தில்
நினைவுபடுத்துகிறது...
என் நுரையீரல் புற்றுநோய்!!
- டெய்ஸி
பார்த்து பார்த்து
தேந்தெடுத்த உடைகள்..
பத்தியமாய் செய்த உணவு..
பார்த்து மகிழ
தொலைக்காட்சி, இணையம்
இன்னும் பிற..
இறுமாப்புடன் கேட்டேன்
தந்தையை பார்த்து,
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
எனக்காக நீ செலவிடும் நேரம்
இடியாய் வந்திறங்கியது
பதில்.
- இலட்சுமி சுந்தர்
கேட்கிறது
குழந்தையின் அழுகுரல்!!
பார்க்கும்
மனது பதறுகிறது!!
தொலைக்காட்சி பெட்டி!!
போர் வீரன்
கொட்டும் பனியிலே!
தீவிர பணியிலே!
அல்லும் பகலும்
நித்திரை இல்லாமல்
முத்திரை பதிக்கிறான் -
எங்கள்
போர் வீரன் !!
- சுபா
ஒரு நூறு
முகங்களின் அறிமுகத்தில்
பதிந்து போனது
உனது முகம் மட்டும்
அதிகமில்லை பழக்கம்
பரஸ்பர பகிர்வுக்கு
நான்கு பொழுதுகள்
பிடுங்க முடியாத
முள்ளாய்
சொருகிய நினைவுகள்
சலசலக்கும்
தென்னங்கீற்றுகள்
உன் சிரிப்பின் ஞாபகம்
கடந்துபோய்
மாதங்களானாலும்
கரைந்து போகாத குரல்
பிரிவு மட்டும்
நம்மை விட்டு
இன்னும் பிரியாமல்..
- நூர்ஜஹான்
Comments
கவிதை
நீண்ட நாளுக்கு பிறகு நச்சென்று சில கவிதைகளைப் பார்த்ததில் மகிழ்ச்சி:-..கவிகளுக்கு வாழ்த்துக்கள்
கவிகளுக்கு வாழ்த்துக்கள்
கவிகள் டெய்ஸி, லட்சுமி சுந்தர், சுபா, நூர்ஜஹான் வாழ்த்துக்கள். கவிதை அனைத்தும் சுப்பர். இன்னும் நிறைய கவிதை பொழிய வாழ்த்துக்கள்.
ஜானகி
மனதை தொட்டது!
அன்புள்ள அனைவருக்கும்
அனைத்து கவிதைகலும் மனதை தொட்டது
வாழ்த்துக்கள்.
பர்வீன்
kavithaikal
kavithaikal annaithum arumai
கவிதைகள்
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
கவிதைகள்
கவிதைகள் அனைத்தும் சூப்பர் அதிலும் த்ந்தையும் நானும் கவிதை மனதை தொட்டது... பாராட்டுக்கள்..
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
kavithai
marakkaninaithalum ninaikkamarakkathe nantraka irunthana