இணைய நட்பு

இணைய நட்பு - திருமதி. கமலா

என் வீட்டுச் சன்னலில்
பூ வைத்துப் போனவள்
முகம் மட்டும்
காட்டவில்லை
பூ மட்டும் மணக்கிறது
அவள் மனம் போல

இணைய நட்பு - திருமதி. அன்னுராஜ்

பல தேசப் பறவைகள்
பாகுபாடு மறந்து
வருடம் முழுதும் உரையாடும்
வேடந்தாங்கல்

நட்பு அலைகளைப் பின்னும்
வலைதளம்

இதயங்களை இணைப்பதால்
இணையம்

பிசிராந்தயார்-கோப்பெருஞ்சோழன் நட்பு
புதிய கோணத்தில்...

கணினி யுகத்தில்
இடுக்கண் களையப்படுகிறது-
இணைய நட்பில்!

 
இணைய நட்பு - திருமதி. விதுபா

என் உள்ளம் கவர்ந்துசென்ற
உருவமில்லா ஸ்னேகிதியே!
எங்கே நீ போய்விட்டாய்
ஏன் என்னை அழவிட்டாய்?

திங்கள் தொடங்கி இங்கு
தினம் ஏழும்
காத்திருந்தேன்
எங்கேயோ இருந்துகொண்டு
என்னைச்
சிறைப்பிடித்தாய்...

காலை எழுந்தவுடன்
காப்பியில்லை டீயில்லை
கணினியே கதியென்று
காத்திருக்க
வைத்துவிட்டாய்...

இ மெயிலில்
எழுப்பிவிட்டாய்
வாய்ஸ் மெயிலில்
சிரிக்கவைத்தாய்
வாழ்த்துக்கள் அனுப்பி
என்னை
வானத்தில் பறக்கவைத்தாய்
முகத்தை மட்டும் ஏன்
மறைத்தென்னை சோதித்தாய்?

உன்னோடிருந்த
இனியபொழுதுகளில்
எல்லாத் தளங்களும்
நமக்கென்று நேசித்தேன்
இரவும் பகலுமெல்லாம்
அவற்றையே சுவாசித்தேன்...

இன்று,
நீயில்லாத் தனிமையில்
அத்தனை தளங்களும்
போர்க்களமாய்த்
தெரியுதடி...

இணைய நட்பு - திருமதி. அஸ்மா

என் கவிதைக்கு
கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!

கவிதைக்கு மட்டுமில்லை
கண்ணா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!

"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நட்புக்கு!"
கருத்தாய் சொன்னாய் நீ!
கிடைத்த உன் நட்பு எனக்கு
கடவுளைப் பற்றிய ஈடுபாட்டாலென்றால்
கடவுளுக்கே என் முதல் நன்றி!

கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் இதை பரிசளிப்பாய் உனக்கு!

சண்டை போடவா என் நட்புனக்கு
இல்லை திட்டிக்கொள்ளவா? - நம்
சகோதரிகளை சமாதானப்படுத்தவே
இந்த சாக்குபோக்கு - ஆம்!

நீதான் ஐடியா ராணியாச்சே!

 
இணைய நட்பு - திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ்

நானும் சிலந்தியாய்
வாழ்ந்துவிட்டுதான்
போகிறேன்
வலை தளத்திலே!

தூரத்திலே - தெரியாத
நேரத்திலே
அந்தி வானத்திலே
இரவு நேரத்திலே
பேசுவேன்.. நான்

பின்னிய பிரச்சினையுடன்
அன்னிய மண்ணில் -- வாழும்
நானும்
வாதாடுகிறேன்
வக்கீலாய்!

அழகிய அம்மாவுடன்
நெருங்கிய தோழிகளுடன்
ஆட்சி செய்யும் அண்ணனுடன்
பின்னிய பின்னல்
இந்த அறுசுவை பின்னல்

 

Comments

anbudanஹாய் அஸ்மா, சுபா, கமலா, விதுபா,

அனைவரும் நலமா? நலமே. உங்கள் கவிதைகள் மிக அருமை. சும்ம பூந்து விளையாடி இருக்கிறிர்கள். கவிதைகள் மிக நன்றாக உள்ளது, மேலும் தொடரட்டும் உங்கள் கவிதைப் பணி. மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எளிமையான சொற்களில் அருமையான கவிதைகள். வாழ்க வளமுடன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

கவிதை எழுதிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டும் வாழ்த்துக்களும். மேலும் இது போல் அரிய படப்புகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.

அன்புடன் கதீஜா.

கவிதை எழுதிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்..அருமையான கவிதைகள்.
கொடுத்த தலைப்பில் கவிதையை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிரீர்கள்..வாழ்த்துக்கள்

டியர் சுபா, விதுபா, அன்னு, அஸ்மா, கமலா, உஙக கவிதை சூப்பர்ப்பா. நான் கூட கவிதை பிரியை தான். சுபா, இணய நட்பு பற்றியும் கூடவே அன்னிய தேசத்தில் வசிக்கும் தனிமை பற்றியும் அழகாக சொல்லிவிட்டீர்கள். மிக அருமை. பயணங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

நாவிற்க்கு இனிய உணவுகளை நாலே நொடியில் அறிந்திட
என்றும் என் சமையலறை நண்பன் arusuvai.com

இணைய தளத்தில் ஒரு ஐந்து நட்சத்திர சமையல்

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க... நீங்களும் கவிதாயினி .. உங்கள் திறமையை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்க
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இன்றுதான் இந்தப்பக்கம் வந்தேன். கவிதைகள் அனைத்துமே அழகாக இருக்கின்றன. சுபா, விதுபா, அஸ்மா, கமலா, அன்னுராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

அனைத்தும் அருமை,உண்மையும் கூட,நன்றி தோழிகளே.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Thanks to Everybody.. Keep it up.....

Sow.MohanaRavi
nanRu!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

congrats....i feel in the same way...my dear friend!
expecting a lot from you...

Madam kamala.. wow.. simple lines n attractive one.

suba..nice one.. is there any place where i can download all these? want to hav a collection.. appreciate if anyone sends out to me
kewlfrend@yahoo.com thanks

எனது கிறுக்கல்கள்

சொப்பனம்!!!

கணப்பொழுதும் நினையாத
கற்பனையிலும் காணாத
விபரீத நிகழ்வு
உறக்கத்தில் சொப்பனமாய்...!
விதிர்விதிர்க்கிறது மனம்...
அரக்கப்பரக்க எழுந்து
நிதர்சனம் உணர்கையில்
மனம் துடிதுடிக்கிறது...!
உறவுகளின் அரவணைப்பில்
ஆறுதலான ஸ்பரிசத்தில்
தெளிந்த நீரோடையாகிறது மனம்....!
மிச்ச உறக்கம் அமைதியாய்...
வைகறைப் பொழுது
பூபாளம் இசைக்க
நிலவுப்பெண் விடைபெற
வானமங்கை போர்வை விலக்க
விடிகிறது காலைப்பொழுது...!

வேறு தளத்தில் எழுதிய கவிதைகள் சொந்த படைப்பாகவே இருப்பினும் அறுசுவையில் வெளியிட அனுமதி இல்லை என்பது அறுசுவையின் நிபந்தனை.....

வனஜா நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். வேறு ஒரு கவிதை (எங்கும் வெளீயாஜாதவை) எழுதி தொடர்புக்கு என்ற தொடுப்பின் மூலம் அனுப்பினால் உங்கள் கவிதை கவிதை பூங்காவில் இடம் பெறும்!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா