கவிதைகள் - மலர்

யாருக்கும் புரியாது

இருந்த ஒரே கை வளையலும்,
கழுத்தின் தாலியும்
கல்லூரிக்கட்டணமாய்
ஆனாலும்
களிப்போடு
தந்தாள் உன் அன்னை...
தனக்கு கந்தலுடை
என்றாலும்
உன்
கைச் செலவுக்கென்ன
குறை வைத்தாள்?

கையிருப்பு கறைந்தாலும்
கடன் மேல் கடன் வாங்கி
உன்னைக்
கரை சேர்க்கும் கனவோடு
காத்திருக்கும் உன்
தந்தை...
சாதிப்பாள் என் மகளென்று
சாதி சனம் எதிர்த்தல்லவா
கற்று வா என்றான்?

ஆனால்,

காதலெனும் தேர்வெழுதி
கானல் நீராய்
மாறிவிட,
கனவுலகிலே
காத்திருக்கும் உன் கவலை
யாருக்கும் புரியாது
தான்...

- மலர்

அகல்

என் விடியல்
என்றும்
உனக்கானது...

என் உள்ளத்தின்
உற்சாகம்
உன் புன்னகையில்...

ஆனால்
புதிதாகவும்,
நான் காணும்போது
புதிராகவும்
மறைக்கப்படும்
உன் நாணம்...

என்னுடனான
உன் நட்பு
இன்று
எல்லைகளுடன்...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

தனிமையில்
கனவுகள் காண்கிறாய்...
உறக்கம், உணவு
தொலைக்கிறாய்
உண்மை கேட்டால்
வெடிக்கிறாய்...

காதல் கனவுகளில்
காலத்தைத்
தொலைத்து விடாதே..
கானல் நீராக
காணாமல் போய்விடாதே...

காலச்சக்கரத்தில்
உண்மைக்காதல்
உன்னைத்தேடி வரும்...
வாழ்க்கைச்சக்கரத்தில்
தேடும்போது வாராது
இளமைப்பருவம்...

உன்னை
விரட்டும் வறுமை
மாற வேண்டும்...
நீ,
வறுமை விரட்டும்
கல்வி தேட வேண்டும்...

உன் கையில் தருவேன்
கல்விஅகல் இதமாக...
மகளே,
கல் சுமக்கிறேன்
நான், சுகமாக...

- மலர்

 
கனவுக்கவிதை

திருமகளைக் கண்டிரா
ஏழைத் தாய்தந்தை
புனையும்
வியர்வைக் கவிதை...

கண்ணீர் துடைக்கும்
கல்வி என்னும்
கனவிற்காக ஓர் கவிதை...

விலை கேட்கும் பள்ளிகள்...
விழி பிதுங்கும்
பெற்றோர்கள்...

சிறார்களின்
சிந்தனைச் சிறகை
திசை மாற்றத் தானே
இன்று
எத்தனை எத்தனை
தொல்லைக்காட்சிகள்...
வழிக் காட்டுபவர்களே
வழி மாறும் தினசரிக்
கேள்விகள்...

நேர்மை
நேற்றைய பாடமாகிறது...
வாய்மை
வார்த்தைகளில்
பாடமாக்கபடுகிறது...

உழைக்க மட்டுமே
தெரிந்தால் போதாது,
பிழைக்கத்
தெரிந்து
கொள்ளவேண்டுமாம்...

நல்லதொரு வாழ்க்கை
தருமாம் கல்வி...
நற்பண்பாளன் ஆக்குமாம்
நான் கனாக்கண்ட கல்வி...

வயிற்றைக் கட்டி,
வாயைக் கட்டி,
வாங்கிய கடனுக்கு
வட்டி கட்டி,
பள்ளிக்கூட கட்டணம் கட்டி
படிச்சுட்டு வருவான்னு
கனவுக் கோட்டைக் கட்டி
காத்துக்கிடக்கிறோமடா...

பாதையை மட்டும்
பக்குவமா பாத்துக்கிட்டா
பிழைச்சுக்குவடா
என் தங்கக் கட்டி...

- மலர்

 

Comments

மிக எளிமையான கவிதை..ஒரு சிறிய படம் பார்ப்பது போல உள்ளது.இன்னும் நிறைய அனுப்புங்கள்.எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

அனைத்தும் தேன் துளிகள். இனிமையாக இருக்கிறது,

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு MALAR.
எனக்கும் இந்த கவிதையை கவிதை மலரில் போட ஆசை ஆனால் எப்படி கவிதை மலரில் அனுப்புவது என தெரியவில்லை.

கண்ணே மணியே
சுகமா செல்வமே
நான் உன் தாய்
நானிங்கு சுகமில்லை
என்று நீ வருவாயென
ஏங்கியே இருக்கிரேன்
உன் பாட்டிக்கு உனை
பார்க்காமல் கட்டை வேகாதாம்
உலகத்தின் ஊசிப்பார்வை
கருவரையை துளைக்கிரதடா
பனிக்குடம் ஏற்காததால்
கண்ணீர்குடம் சுமக்கிரேனே
மாதம் விலகும்போது
வலி வயிற்றிலிலையடா
நெஞ்சிலே வருகிரது என் கண்ணே
கனவில் இருக்கும் நீ
என் கருவில் வந்துவிடு
காத்திருக்கேன் உனக்காக
கண்ணே வந்துவிடு
காலங்கள் கடந்துவிட்டு
கண்ணீரை பெருக்கியது
கண்ணே நீ வந்து
கண்ணீரை துடைப்பாயா
உன் தாய் மலடியல்ல
உலகறிய சொல்லிவிட
உடனே வருவாயா

போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குஇறைவன் தருவான்.நம் தோழிகள் அனைவரின் பிரார்த்தனைகள்

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா உமர் மிகவும் நன்றி தோழி,
உங்களின் மனமார்ந்த இந்த வாழ்த்திற்கு நன்றி.என்னை உங்கள் சகோதரியாய் நினைத்து.எனக்காக கடவுளை ப்ரார்த்திக்கிரீர்களா.

தோழி தனு!!!
கவலை வேண்டாம் எப்பவும் பாசிடிவா இருங்க!!! உங்க கவிதையை என் அம்மாவிடம் வாசித்து காண்பித்தேன்.. நல்லதே நடக்கும் என் நினையுங்கோ!!
"Miracles sometimes occur, but one has to work terribly hard for them."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நண்பி தனு மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது.சோர்ந்து விட வேண்டாம்.காலம் நம்மை காக்க வைக்கிறது அவ்வளவுதான்.கவலை வேண்டாம்.நான் உங்களுக்காக கடவுளைப்பிரார்த்தனை செய்கிறேன்.

நண்பி தனு நீங்கள் சீக்கிரம் தாயாக நான் கடவுலை வேன்டிக் கொல்கிரேன் எல்லாம் நல்லதே நடக்கும் என்ரு நினையுங்கள் கடவுள் எப்போதும் உஙலுக்கு துணை இருப்பார்.
உங்கலைப் போல் தான் நானும் 5 வருடம் திருமணம் செய்து இப்ப தான் 7 வாரம் கர்பமாக இருக்ரேன் அதுவும் இன்று 4 தடவை லேசா இரத்த போக்கு இருந்தத்து அதை பார்த உடனே நான் பெரிதகா சத்தம் போட்டு அலுது விட்டேன்.எனக்கும் தாய்மையின் ஏக்கம் நன்ராகவே தேரியும் தனு நீங்கள் யோசிகாமல் இருங்கள் கூடிய சீக்ரம் நீங்கள் தாய்மை அடைவீர்கள்

வணக்கம் தோழிகளே,
மிகவும் நன்றி.ஆசியா உமர்,இலா,சுரேஜினி,துஷி அனவருக்கும் நன்றி.மன்னிக்கவும் என் வருத்தத்தை சொல்லி உங்கலையும் வருத்தப்படுத்திவிட்டேன்.தோழி துஷி இப்போ உடம்பு எப்படி இருக்கு.உடனே டாக்டரிடம் சென்றீர்களா?முழுக்க முழுக்க ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள்பா.
எனக்கும் திருமணமாகி 5 வருடங்கல் முடியப்போகிரது.ஒவ்வொரு நாளும் யுத்தகளமாக போகின்றது.என்னையும் அறியாமல் நான் ஒவ்வொரு நாளும் ஓவென்று அழுதுகொண்டிருக்கிரேன்.
தோழிகளே உங்கள் வாழ்த்து எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.
நான் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு பின்னூட்டம் வரும் என்று.வெரும் கவிதையாகத்தான் பார்ப்பார்கள் என நினைத்தேன்.ஆனால் இதை நிஜம் என்று கண்டுபிடித்துவிட்டீர்கள்.தோழிகளே எனக்கு மனது விட்டு பேச யாருமே இல்லை.ஒவ்வொரு நிமிடமும் கடவுளிடம் அர்ப்பனித்துக்கொண்டிருக்கேன்.கடவுள் மேலும் வெருப்பு வருகிரது.தோழி துஷி உடம்பு இப்போ எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்.

வருத்தப்படாதீர்கள்.கடவுளுக்கு தெரியும்,எப்போ தந்தால் நல்லது என்று.எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்,நிம்மதியாக இருங்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எப்படி இருக்கிங்க?உங்க கவிதையைப் படித்ததும் மனசுத்தாங்கலைப்பா.தோழி ஆசியா சொன்ன மாதிரி போதும் போதும் என்ற அளவிற்க்கு கடவுள் உங்களுக்கு மழலைச்செல்வம் கொடுப்பார்,கவலைப்படாதீங்க.எனக்கும் 2 வருடம் கழித்துத்தான் பிள்ளைப் பிறந்த்து.விரைவில் தாயாக என் வாழ்த்துக்கள்

ஹாய் மேனகா தேங்ஸ்.நான் நல்லாயிருக்கேங்க.நீங்க எப்படி இருக்கீங்க?

கவலை படாதீர்கள் thanu நல்லதே நடக்கும். கட்டாயம் உங்களுக்காக கடவுளை வேண்டிக்கொள்கிறேன். 6 மாதம் முன்பு வரை இதே மனநிலையில் தான் நான் இருந்தேன். கல்கியில் வரும் ஒரு பாட்டு (எழுதுகிறேன் ஒரு கடிதம்) அதை கேட்கும் போது என்னையறியாமல் அழுவேன். என் அப்பாவினால் ஆண்கள் மேல் எனக்கு பயங்கர கோபம்.அம்மாவை நன்றாக வைக்கவேண்டும் என்பது மட்டுமே என் குறிக்கோள்.கல்லூரியில் என்னுடன் படித்த பையன்கள் என்னிடம் பேசகூட பயப்படுவார்கள். ஆனால் காலம் என்னை மாற்றியது.என் கணவர் என்னை தான் திருமணம் செய்வேன் என்று சாதித்தும் விட்டார் (என் அம்மா கெஞ்சியதால் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன்). அவரும் இதோ இந்த 3 1/2 வருடத்தில் என்னை கண்கலங்க விட்டதில்லை. என் அம்மாவும் என்னுடன் தான் இருக்கிறார்கள்.ஆனால் கடவுள் தான் என்னை 2 முறை சோதித்துவிட்டார். 3-வது முறையும் 45வது நாளில் இரத்தப்போக்கு. நான் முடிவு செய்தேன் இம்முறை ஏதாவது என்றால் என் கணவரை விட்டு பிரிவதென்று.அது கடினம் தான் (அவராவது நன்றாக இருக்கவேண்டும் என்று).இவ்வளவு நல்லவருக்கு நம்மால் ஒரு குழந்தை கூட பெற்றுத்தர முடியவில்லையே என்று தினமும் அழுவேன்.ஆனால் சிறுவயதில் இருந்து என்னை சோதித்த கடவுள் இம்முறை காப்பாற்றி விட்டார். இப்பொழுது எனக்கு 6 மாதம்.உங்களையும் கடவுள் சந்தோஷப்படுத்துவான் நம்புங்கள். மன்னித்துக்கொள்ளுங்கள் நிறைய எழுதிவிட்டேன். எனக்கு உங்கள் கவிதையை படித்தவுடன் அழுகை வந்துவிட்டது. அதான் இவ்வளவு எழுதிவிட்டேன்.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

தனு, நல்ல மருத்துவரை நம்பிக்கையோடு மீண்டும் நாடி உங்கள் பிரச்சினையை விளக்குங்கள். எல்லாம் வல்ல கடவுள் கைகொடுப்பார் என்று நம்பி இருங்கள். கவலைதனை நெருங்க விடாமல் நம்பிக்கையை மனதில் நிரப்புங்கள், தோழி!

அன்புடன்,
ஆயிஸ்ரீ புகழேந்தி

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வணக்கம் தளிகா, தனு, ஆசியா உமர் ...

இவைகள் கவிதைகள் போல் தோற்றம் கொண்ட உண்மை நிகழ்வுகள். உங்களின் பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றிகள். கண் கூடாக பார்க்கிறேன். இன்றைக்கு பள்ளி, கல்லூரியில் பயிலும் நாட்டின் நாளைய தூண்கள் திசை தெரியாமல் வழி மாறிப் போவதை.......எனக்குள் தோன்றிய கேள்விகள்,எண்ணங்கள்...இவற்றை எழுதிய பின் மனதிற்கு, ஒரு சிறிய வடிகாலாய் இருந்தது. பாராட்டுக்கள் பெற மட்டும் எழுதும் படி மனம் சென்று விடகூடாது. மலர் என்னும் பெயரில் கவிதை அனுப்பினேன். அட்மின் அவர்களிடம் என் பெயரை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

அன்புடன்,
ஆயிஸ்ரீ புகழேந்தி

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வணக்கம்

தனு, கீழே "தொடர்புக்கு" என்று இருக்கும். பாருங்கள். அதை அழுத்துங்கள். நீங்கள் தமிழில் அடித்த கவிதையை இங்கே copy செய்து அனுப்பலாம். எழுதுங்கள் நிறைய......புது தெம்புடன் ஒவ்வொரு நாளும் பிறக்கும்....

அன்புடன்,
ஆயிஸ்ரீ

உமாராஜ் எனக்காக உங்கள் நிலையை சொல்லி அனக்கு ஆருதல் சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க.முழுக்க முழுக்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கப்பா.6 ஆம் மாசத்திலிருந்து கொஞ்சம் வேலைகள் செய்யலாம் அப்போதான் சுகப்பிரசவம் ஆகும் என பெரியவர்கள் சொல்வார்கள்.ஆனால் நீங்கள் அப்படியெல்லாம் செய்யாதீங்க.9 வது மாதத்தில் வேண்டுமென்ட்ரால் செய்யுங்கள்பா.நன்றாக சத்தான உணவுகலை சாப்பிடுங்கள்.அதியெல்லாம் மீறி முழுதாக மனதளவில் சந்தோஷமாக இருங்கள்.உள்ளே பாப்பாவின் அசைவுகள் இதையெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் அனுபவியுங்கள்.பாப்பாவிடம் பேசுங்கள்பா.

நன்றி தோழி நீங்க சொன்னது போலவே அடுத்த கவிதையை போடுகிரேன்.

ஹாய் தனு எப்படி இருக்ரீர்கள் எனக்கு இப்ப உடம்புக்கு ஒரு பிரச்சனயும் இல்லை நான் நல்லா இருகேன். நீங்கள் யோசிக்காமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் மன்னிச்சிடும்மா உடனே பதில் போட முடியல .மனசை தளர விட வேண்டாம் உங்களுக்கு குழந்தை இல்லை என்ர கவலயயை விடுங்க முதல் எதுவுமே நம்பிக்கை தான்டா வாழ்க்கை.

எல்லோர்க்கும் சில நேரம் வரும் வேதனை இருந்தலும் கூடாது மனவேதனை,
வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்க்கை பாடமே தோல்வி காட்டும் ஞானம் புது வேதமகுமே,
எது வந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய் இருளோடு ஒளி வீசும் துணிந்தே செல்வாய்

அன்புடன் தோழி துஷி

வணக்கம் துஷி,
இப்பதான் அருசுவையை ஓப்பன் செய்தேன்.முதலிலேயே ஹாய் தனு என்று பார்த்தேன்.துஷியாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் துஷியேதான்.இப்பொ உடம்பு பரவாயில்லையல்லவா.உடம்பை ரொம்ப நல்லா பார்த்துக்கோங்க.கடின வேலைக செய்யாதீங்க.பாப்பா பேசுகிரதா உங்களுடன்.நீங்க பேசுங்க பாப்பாகூட பேசுங்க.

ஹாய் தனு ஜோஓஓஒ சந்தோஷமா இருக்கு தனு உங்கள பார்க்ரது மெயில் add பண்ணினீங்கலா

வணக்கம் துஷி,
துஷி நீங்க என்ன கேட்கரீங்க என்று புரியவில்லை.மெயில் எ
தில் add செய்தீங்கனு கேட்கரீங்க.

வணக்கம்

ஹாய் நான் ப்ரியதர்சினி சபரிநாதன், நான் இப்ப தான் அருசுவையில் முதன்முதலாக எழுதுறேன். ஆனால் தொடர்ந்து எழுத வேண்டும் என நினைக்கிறேன். இதில் உள்ள குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வாங்க பிரியதர்ஷினி வாங்க.

ரொம்ப நன்றி என்னை வெல்கம் செய்தத்தற்க்கு. ப்ரியா.

பிரியா உங்கொளப்பத்தி சொல்லுங்கோ

நான் இப்போது கத்தாரில் இருக்கிறேன், கல்யாணம் ஆகி 1 வருடம் ஆகிறது. இங்கே மிகவும் போர். எனது அம்மா, அப்பா, மற்றும் அனைவரும் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுடன் வாரம் 3 அல்லது 4 முறை பேசுவேன். நான் எம்.பி.ஏ முடித்துள்ளேன். எனது கணவர் இங்கே ஒரு பிரைவேட் கம்பெனில் வொர்க் செய்கிறார். அவர் காலையில் வேலைக்கு 6 மணிக்கு சென்றார் என்றால் வருவதற்க்கு இரவு 8 மணி ஆகும். இது தான் இப்போது என் நிலவரம்.

...
சுரேஜினி

ஹாய் தனு என் மெயில் இது vanathy24@yahoo.com. add பன்னுங்க நான் முதல் அனுப்பினேன் நீங்கள் பர்கலைப் என்று நினைக்ரேன் coolbalajini9@yahoo.com இது தானே உங்க மெயில்

ஹாய் துஷி நீங்கள் குரிப்பிட்டு இருக்கும் மெயில் ஐடி என்னுடையது இல்லைப்பா.என்னுடைய ஐடி இதுதான் hmonish@yahoo.com.சாரி நான் நீங்க முதலில் கொடுத்ததை பார்க்கலைங்கரொம்ப நேரம் ஆயிடுத்து நீங்க அனுப்பி எனக்கு நெட் கனெக்ஷன் ஸ்லோவாக இருக்கு அதான் லேட்...