ஒரு நபர் உண்ணும் உணவின் அளவினைக் குறிப்பிட பரிமாறும் அளவுகள் என்ற அளவு முறையைக் கடைபிடிக்கின்றோம். இது ஒரு வரையறுக்கப்பட்ட அளவு முறை கிடையாது. ஒரு உத்தேச அளவே. ஒரு பரிமாறும் அளவு என்பது நாம் உண்ணும் உணவைப் பொறுத்து எடையில், அளவில் மாறுபடும்.
ஒருவருக்கு எத்தனை பரிமாறும் அளவுகள்(servings) உணவுத் தேவை என்பது அவருக்கு எவ்வளவு சக்திகள்(calories) தேவை என்பதனைப் பொறுத்தது. ஒருவருக்கு எவ்வளவு சக்திகள் தேவை என்பது அவருடைய வயது, பால், உடல், எடை மற்றும் அவர் செய்யும் வேலைகள் போன்ற அம்சங்களைப் பொறுத்தது. தாங்களுக்கு தேவையான சக்திகளின் அளவினை அறிந்து அதற்கு ஏற்றார்போல் உணவு முறையையும் பரிமாறும் அளவுகளின் எண்ணிக்கையையும் அமைத்துக் கொள்ளவும்.
சில முக்கிய உணவுகளின் பரிமாறும் அளவுகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
தானிய உணவு வகைகள் (ஒரு பரிமாறும் அளவு)
ஒரு துண்டு ப்ரெட்
அரை கோப்பை சமைத்த அரிசி
இரண்டு ரொட்டிதுண்டுகள்
ஒரு அவுன்ஸ் கேக் வகை உணவுகள்
கால் கோப்பை சமைத்த தானியங்கள்
காய்கறி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
ஒரு கோப்பை கீரைகள்
அரை கோப்பை பச்சைக் காய்கறிகள்
முக்கால் கோப்பை காய்கறிச் சாறு
பழ உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
நடுத்தர அளவுள்ள ஒரு பழம் (ஆப்பிள், வாழை...)
அரை கோப்பை நறுக்கிய பழத்துண்டுகள்
முக்கால் கோப்பை பழச்சாறு
பால் உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
ஒரு கோப்பை பால்
ஒரு அவுன்ஸ் பாலாடைக்கட்டி
அரைக் கோப்பை தயிர்
இறைச்சி உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
90 கிராம் சமைத்த இறைச்சி
ஒரு முட்டை
100 கிராம் மீன் உணவு
இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் (ஒரு பரிமாறும் அளவு)
ஒரு தேக்கரண்டி வெண்ணெய், நெய் போன்றவை
ஒரு மேசைக்கரண்டி கிரீம்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஜாம்
ஒரு அவுன்ஸ் சாக்லேட்
Comments
உடல் பருமன் குறைக்க
உடல் எடை , உடல்பருமன் இரண்டிற்க்கும் நிறைய விதியாசமுண்டு என்பதை உங்கள் வலைப்பக்கதின் மூலம் அனைவரும் புரிந்து கொண்டிருப்பர்.உங்கள் அட்டவனையை பார்த்தாலே மிகத்தெளிவாகப்புரியும். தமிழில் மிக நல்ல ஓர் வலைத்தளம் மிக்க நண்றி. ஒருவர் 1 கிலோ எடை குறைக்க 7000 கலோரிகளை உடலில் சேராமலோ அல்லது நீக்கவோ வேண்டும். ஒருவருக்கு 1200 - 1400 கலோரி (ஆண், பெண், வயது, உயரம் , அவர்களின் அன்றாடைய வேளை இவற்றைப்பொருத்து) தேவைப்படும் நாம் உணவில் 150 கலோரி குறைத்தும் உடற்பயிற்ச்சி மூலம் 200 கலோரி குறைத்தால் ஒரு நாளைக்கு 350 கலோரி குறைக்கலாம் ஆக 20 நாட்களில் 7000 கலோரி குறைத்து 1 கிலோ எடை குறைக்கலாம்.
nan romba weight any tips for
nan romba weight any tips for weight loss
vijayalashmi
உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?
weightloss
u should go to walking regularly , eat lowfat food , drink more water
பாபு அண்ணா..
இது நிச்சயம் முகப்புல தெரிய வேண்டிய த்ரெட்தான். இப்போதான் எல்லாம் ஒவ்வொண்ணா இருக்க வேண்டிய இடத்துக்கு வருது. ஆஃபீஸ்ல மும்முரமா வேலை நடக்குது போல இருக்கே! :)
கலக்குங்க. வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
நன்று
இதில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் அருமை :)
வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.
என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ
உடல் பருமன் குறைக்க
பப்பாளிக்காயை சாப்பாட்டில் சோ்த்துக் கொள்ளலாம்
இலந்தை இலையை தண்ணீாில் ஊற வைத்து மறு நாள் காலையில் அந்த தண்ணீரைக் குடிக்கலாம்
கொள்ளு ரசம் சாப்பிடலாம்
ப்ரியங்களுடன்
ஜெய்பு
Weight loss
கடையில் கிடைக்கும் கொள்ளு சாறு குடிக்கலாமா இடை குறைக்க
பிராண சிகிச்சை
சகோதரிகளுக்கு எனது வணக்கம்.
நான் செய்து கொண்டுள்ள பிராண சிகிச்சை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். திருமூலர் பிராண சிகிச்சை மையம் என்ற எனது பேஸ்புக் முகப்பை காணவும். நன்றி.
Do or die