சிரியா.. ஒரு இனிய அனுபவம்

Damascus Airport


Syria


மத்திய கிழக்கில் அமைந்துள்ள, சுமார் இரண்டரை கோடி மக்கள் வசிக்கக்கூடிய ஒரு சிறிய அரபு நாடுதான் சிரியா. அங்கே சில காலம் வசித்தவரும், அறுசுவையின் தீவிர உறுப்பினருமான திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் சிரிய நாட்டைப் பற்றியும், அவருக்கு அங்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் சுவைபட எழுதுகின்றார்.

welcome to syria

திருமணம் நிச்சயமான பிறகுதான் 'டமாஸ்கஸ்' ன்னு ஒரு ஊரு பெயர் என் காதில விழுந்தது. அதுக்கு முன்ன அதைப்பத்தி படிச்சதாக்கூட நெனைவு இல்ல.. திருமணம் நிச்சயமான விஷயத்தை என் நண்பர்கிட்டே சொன்னப்ப, "என்னது டமாஸா... என்னடி ஊரு பேரு சொல்ற? எங்க இருக்கு இந்த ஊரு?" ன்னு ரொம்ப ஆச்சரியமா கேட்டார். "எனகென்ன தெரியும்... இப்படி ஒரு ஊர் பேரைத்தான் பெண் பார்க்க வந்தப்ப அவர் சொன்னதா ஞாபகம்". "சரி எதுக்கு இருக்கு வெப்சைட்... கண்டு பிடிச்சிடுவோம்"னு இந்த நூற்றாண்டின் கொலம்பஸ்ஸா மாறி, உலக வரைபடத்தில் டமாஸ்கஸ்ஸை தேடி, கண்டுபிடிச்சு அதோட வரலாற்றையே எடுத்துக் கொடுத்துட்டாரு. அதுமட்டுமில்லாம "பக்கத்தில் இருக்குற நாடுதான் லெபனான்... இப்போ கொஞ்ச நாளா நியூஸ்ல பார்த்திருப்பியே... அங்கங்க குண்டு வீசிகிட்டு இருக்கானுங்க.." ன்னு இங்க ஒரு குண்டை போட்டாரு. உள்ளுக்குள்ளே ஒரே பயம். நாமெல்லாம் யாரு.. கீழ விழுந்து பொரண்டாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்ற சென்னைவாசியாச்சே..(நமக்கு ஏது மீசை..:-)) "அடப் போடா.. நாங்க எல்லாம் வீசின குண்டை பிடிச்சு திருப்பி வீசும் வீரத்தமிழச்சியாக்கும்" ன்னு பேஸ்மெண்ட் ஆட்டத்தை மறைச்சு, பொய்யா சிரிச்சிட்டு வந்துட்டேன். சரி.. இது ரொம்ப பழைய கதை.. கொஞ்சம் ப்ளாஸ்பேக்கை பார்வேர்டு பண்ணிடலாம். ஒரு வழியா கல்யாணம் ஆச்சு. கிளம்ப வேண்டிய தேதியும் வந்தாச்சு.. வேற எங்க.. சிரியாவுக்குதான்.

airport

வழியனுப்பும் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிஞ்சு, ப்ளைட் ஏறியாச்சு. அதுதான் எனக்கு முதல் விமானப் பயணம். புது அனுபவம் ரொம்பவே அற்புதமா இருந்துச்சு. கொஞ்சம் நேரத்திலேயே நல்ல சுகமான நித்திரைக்கு போயிட்டேன். திடீர்னு என்னவர் என்னை உசுப்பினார். "ஹேய்.. கீழே பாரு... ஃப்ளைட் லேண்ட் ஆகப் போகுது... இதுதான் நாம இருக்கப் போகும் ஊரு". அட அதுக்குள்ள இறங்கப் போற இடம் வந்தாச்சா.. அடுத்த நொடியே எனக்கு தூக்கம் பறந்து போயிடுச்சு. திருமணம் முடிஞ்சு தேனிலவு கூட போகாம, நேரா சிரியாவுக்கு ப்ளைட் ஏறிட்டதால, அந்த ஊரைப் பார்க்குற ஆர்வம்தான் தலையில இருந்து கால் வரைக்கும். அவசர அவசரமா என்னவரைத் தாண்டி கண்ணாடி வழியா கீழே பார்த்தால்.. பார்த்தால்.. "அம்மாடியோ... ஃபிளைட்டை திருப்ப சொல்லு, நான் ஊருக்கே போறேன்.. பாவி கல்யாணம் பண்ணி மொத மொதல்ல ரொமாண்டிக்கா ஸ்விஸ், சிங்கப்பூர், மலேசியா' ன்னு கூட்டிட்டு போகாமா, இப்படி ஒரு பாலைவனத்தில கொண்டு வந்து விடுறியே.. நியாயமா??"... அவர் சிரிக்கிறார்... "அதுக்கென்ன பண்றது... இந்த ஊருல தான் வேலை"னு. என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணினார். ஒரு வழியாக சிரிய நாட்டின் ஏர்போர்ட்டுக்குள்ளே ஃப்ளைட் லேண்ட் ஆச்சு.

பழமை வாய்ந்த ஏர்போர்ட் அது.. வெளிநாட்டு ஏர்போர்ட் அப்படினதும், சினிமாக்கள்ல பார்த்த வெளிநாட்டு ஏர்போர்ட் மாதிரி ஒண்ணை கற்பனை பண்ணி வச்சிருந்தேன். அந்த கற்பனைக்கு கொஞ்சமும் ஒத்துவராத சின்ன, பழைய ஏர்போர்ட். நம்ம சென்னை ஏர்போர்ட் மாதிரி.. ;) எங்களை அழைச்சுக்கிட்டு போக அந்த ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருத்தர் வந்திருந்தாரு. எல்லாரும் ஏதோ பேசிக்கிறாங்க... நான் என்னவர் கையை பிடிச்சதுதான். இப்படி அப்படி அசையலை. சுத்தி இருந்தவங்களையெல்லாம் 'பே'ன்னு பார்த்தேன். என்னையும் எல்லாரும் அப்படித்தான் பார்த்தாங்க... புடவையில ஒல்லியா ஒரு பொண்ணு.... அதுவும் கை நிறைய வளையல் எல்லாம் போட்டு. அவங்களுக்கு நான் வித்தியாசமா தெரிஞ்சேன், எனக்கு அவங்க வித்தியாசமா தெரிஞ்சாங்க. எல்லாரும் அரபிக்கில்தான் பேசுறாங்க.. எனக்கும், என்னவருக்கும் ஒரு வார்த்தை கூட புரியலை. அவங்க பேசிக்கிற விதத்தைப் பார்த்தா திட்டுறது மாதிரியே தோணுச்சு. ஒரு வழியா மத்த ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிட்டு, காரில் ஏறினோம்.

desert

போற வழி முழுக்க பாலைவனம்தான். இதோ அதோன்னு நகரத்துக்குள்ள நுழைய கிட்டத்திட்ட 30 நிமிசம் ஆச்சு. நகரம் எப்படி? அன்னைக்கு வெள்ளி கிழமை. ஊரே மயான அமைதியா இருந்துச்சு. வரிசையா ஒரே மாதிரியான கட்டிடங்கள். அதில ஒரு கட்டிடம் முன்னால கார் நின்னது. "This is your residence sir" னு சொல்லி, கூட வந்தவர் வீட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போனாரு.

அம்மாடியோ... வீட்டைப் பார்த்ததும் ஒரு நிமிசம் மூச்சுவிட மறந்துட்டேன்.. அவ்வளவு பெரிய வீடு. பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி பார்த்துக்கிட்டே இருந்தேன். நம்ம ஊரு 5 ஸ்டார் ஹோட்டல்ஸ் ரேஞ்ச்சுல இருந்துச்சு. வீட்டு சோபாவில இருந்து ஜன்னல் கதவு வரைக்கும் எல்லாமே பார்த்து பார்த்து செஞ்சு இருக்காங்க. ஒவ்வொண்ணுலயும் நல்ல வேலைப்பாடு. அரண்மனைக்குள்ள இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். உள்ளே காலை வச்ச மறுநொடியே அந்த இடம் ரொம்ப பிடிச்சு போச்சு. இதுதான் இனி என்னோட மாளிகைன்னு (அட்லீஸ்ட் கொஞ்ச காலத்துக்கு)
நினைக்கிறப்ப சந்தோசம் தாங்கலை. அதேசமயம், புறப்படுறதுக்கு முன்ன நான் அந்த நாட்டைப் பத்தி படிச்ச, கேள்விப்பட்ட விசயங்கள் எல்லாம் மனத்திரையில விளம்பர இடைவெளி இல்லாம ஓடி கொஞ்சம் பயமுறுத்திக்கிட்டும் இருந்துச்சு.

இந்த பயம் எல்லாம் சில மணிநேரத்துக்குதான். அந்த நாட்டை பத்தின என்னோட ஒப்பீனியன், பயம் எல்லாமே சில மணி நேரத்துக்கு அப்புறம் சுத்தமா மாறிடுச்சு. ஆஹா.. இதுவல்லவா பூலோக சொர்க்கம்னு என் மனசுல சிரியாவுக்கு ஒரு புது வடிவம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். அப்படி என்ன நடந்துச்சுன்னு கேக்குறீங்களா.. அதைத்தான் இனி வர்ற பாகங்கள்ல சொல்லப் போறேன்.. இது சும்மா ஒரு முன்னுரைதான். மெயின் மேட்டரு அடுத்த பாகத்துல இருந்துதான். ரெடியா இருங்க.

(தொடரும்..)

Comments

வனிதா, சிரியா அனுபவங்கள் நன்றாக இருக்கின்றன. சமீபத்தில் ஒரு நூல் படித்தேன். சீனாவைப் பற்றிய நடிகர் ராஜேஜின் நூல் அது. வித்தியாசமான பார்வையில் அவரின் ஒவ்வொரு அலசல்களும், ஒப்பீடுகளும் படிக்கும் போது முற்றிலும் வேறான சுவாரசிய உணர்வினை தந்தது. உங்களின் தொடர் அவ்வாறே இருக்குமென்று நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்
கோயமுத்தூர்

அன்பு திரு.தங்கவேல் மாணிக்கம்.... உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. எனக்கு முன் பின் எதுவும் எழுதிய அனுபவம் இல்லை... இதுவே முதல் முறை. அதனால் எப்படி இருக்கும் என்று எனக்கே தெரியலை.... இனி வரும் பாகத்தை படிச்சுட்டு திட்டிடாதிங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanitha ninga ellathilum best than pa dont worry keep it up

all is well

அன்பு சுந்தரமதி... உங்க நம்பிக்கைக்கு நன்றி. ;) உண்மையில் நான் கத்துகுட்டி தான் எல்லா விஷயத்துலையும். உங்களை போல் ஒரு சில தோழிகள் தந்த ஊக்கம் தான் என்னால் என்ன முடியும் முடியாது என்று எனக்கே தெரியப்படுத்தியது. அதனால் உங்களுடைய ஊக்கமளிக்கும் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

vanitha nan mathisundaresan pa en password lock akiruchu itu new id pa.ungal padaipu athunalum bestda than pa irukkum

all is well

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க?
அடடே சிரியா பயணம் தொடங்கி இருக்கீங்க....வாழ்த்துக்கள் வனி...
உங்கள் நினைவலைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
என்னது......கட்டுரை எழுதுவது முதல் அனுபவமா...?
போங்க வனி சும்மா அசத்தலா எழுதிருக்கீங்க....படிக்கும்போது நாங்களும்
அதை உண்ர்ர ஃபீலிங் வருதுப்பா....ஆரம்பமே அசத்தலா இருக்கு வனி......
வனிதாவுக்குள் எத்தனை விதமான திறமைகள்.அப்பப்பா......
உங்கள் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
தொடர்ந்து உங்கள் பயண கட்டுரையை படிக்கும் ஆவலுடன் விடை பெறுகின்றேன்.மீண்டும் என்னுடைய வாழ்த்துகள் வனி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மதி & அப்சரா....

மதி நீங்க தானா... புது பெயரில் பார்த்ததும் யாரோ என்று நினைத்தேன். மிக்க நன்றி மதி. :)

அப்சரா... மிக்க நன்றி தொடர்ந்து படிங்க. உங்களுக்கு ஒரு பதிவு அரட்டை பாகத்தில் போட்டேன் பார்த்தீங்களா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம் நீங்க எழுதியிருப்பதை படித்ததும் சிரியாவுக்கே நேரில் சென்றுக் கொண்டு இருக்குற மாதிரி ஒரு பீலிங். உங்களுடைய எழுத்து நடை நல்லா இருக்கு, இதுப் போலவே சாதாரணமா எழுந்துங்க பிடிச்சிருக்கு.

கௌரி... மிக்க நன்றிங்க. மேடம் எல்லாம் சொல்லி தள்ளி வெச்சுடாதிங்க.... வனிதா'னு ஒரு தோழியாக பெயரை சொல்லி கூப்பிடுங்க. தொடர்ந்து படித்து பதிவு போடும்போது பார்ப்பேன்.... வனிதா'னு கூப்பிடுறீங்களான்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதுப்பொலிவுடன் மீண்டும் சிரியா தொடர்.வாழ்த்துக்கள் வனி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மிக்க நன்றி ஆசியா... புது தளத்தில் உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vanitha,thodaradum ungal pani. neril parpathupol irukkirathu. authathu avaludan ethirparkiren,nanri.

லுசியா... மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா மறுபடியும் சிரியாவை(மட்டும்):) சுத்தி பார்க்கா போறோம்னு நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு!!!:)

கவி... வாங்க வாங்க. எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்??? எங்க போனீங்க? மிக்க நன்றி உங்க பதிவுக்கு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு. மறுபடி சுத்தி காட்டுறதுல எனக்கும் சந்தோஷம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,ஊர்லயிருந்து அம்மா வந்திருக்காங்க,அதுவுமில்லாமல் சிஸ்டம் எப்பவும் பிஸியாகவே இருக்கு,என் கைக்கு கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு:).

மீண்டும் சிரியாவையும்,புது அறுசுவையும் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கவி... எப்படியோ இப்பவாது வந்துட்டீங்களே.. சந்தோஷமா இருக்கு உங்களை பார்க்க. இனி எல்லா இழையிலும் பார்க்கலாம்ல??? அம்மா நலமா இருக்காங்களா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி என்னால் முடிந்தளவு வருகிறேன்,நீங்களும் மத்தவங்களும் என்கிட்டயிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பமுடியுமா??

இனிமே இங்க அரட்டை அடிக்க மாட்டேன்,யாரவது வந்து பனிஷ்மென்ட் கொடுத்துருவாங்களோனு பயமாயிருக்கு குறிப்பா உங்ககிட்ட ரொம்ப பயமாயிருக்கு:) வரேன் அரட்டை பக்கம்..

வனிதா கலகிட்டீங்க......
உங்களின் எழுத்து நடை நன்றாக உள்ளது. ஏதோ என் காதுக்குள்ளே மட்டும் கதை சொல்ற மாதிரி இருக்கு. படிக்கும் எல்லோருக்கும் தனியே நீங்கள் நேரிலே பொய் சொல்ற மாதிரி இருக்கு. பாராட்டுக்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா... மிக்க நன்றி. //படிக்கும் எல்லோருக்கும் தனியே நீங்கள் நேரிலே பொய் சொல்ற மாதிரி இருக்கு// - ஒன்னும் புரியல ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதன்முறையாக படிக்கிறேன் அப்படியே உங்களுடன் சகபிரயாணி போல உணர்கிறேன். சிரியாவை மனக்கண்ணில் கொண்டுவருகிரீர்கள். நானும் மஸ்கட்டில் தான் உள்ளேன். Thanks, Keep on Rock..............

மிக்க நன்றி தோழி. நீங்க இருக்க ஊரை பற்றி எழுதுங்களேன்... நாங்களும் படித்து தெரிந்துகொள்ள ஆசை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நானும் உங்களோட சிரியாவுக்கு கூடவே வாரேன் பத்திரம் பத்திரம்

நன்றி... பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்தும் விட்டுடுவேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி, ரொம்ப நாளா இந்த சிரியா பற்றி படிக்கனும் னு நெனச்சிட்டே இருந்தேன். இன்று தான் டைம் கிடைத்தது;)) ஆஹா! ரொம்ப அழகா பயணத்த ஆரம்பிச்சி இருக்கிங்க. சுற்றி பார்க்க நானும் ஆவலாஇருக்கேன்.;)))

உன்னை போல பிறரையும் நேசி.

உங்க பதிவை இன்று தான் பார்க்கிறேன்... மிக்க நன்றி... முழுதும் படிச்சிருக்கீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க சிரியா பயணக் கட்டுரையை படித்தேன். மிக அருமை இதே போன்று மாலத்தீவுகள் கட்டுரையை சீக்கிரம் எழுதுங்கள். ஆவலுடன் இருக்கிறோம்.

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

மிக்க நன்றி :) மாலத்தீவுக்கு நான் இன்னும் புதியவள் தான்... இன்னும் காதுவழியாக கேட்பதோடு இருக்கு, அந்த இடங்களை எல்லாம் நேரில் போய் பார்க்க வாய்ப்பு அமையல. பார்ப்போம்... நிச்சயம் எழுத முயற்சிப்பேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா