படித்தவை, ரசித்தவை.. சீதாலஷ்மி

Reading Novels


Books Review


தைகள், நாவல்கள் எனத் தேடித் தேடி, படிப்பது ஒரு உற்சாகம். அதை ரசிப்பது ஒரு அனுபவம். படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களது கண்ணோட்டத்தை கேட்பதும், விவாதிப்பதும் ஆனந்தம்! வெறும் ஆனந்தம் என்று சொல்வதைவிட பேரானந்தம் என்றே சொல்ல வேண்டும். அந்த பேரானந்தத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றோமோ என்ற சந்தேகமும், அதனால் உண்டான சிறிய வருத்தமும்தான் இந்த தலைப்பில் என்னை எழுத வைத்துள்ளது. இந்தப் பகுதியில், என்னை, நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்கள், அவர்களது படைப்புகள், மனதில் நின்ற கதாபாத்திரங்கள் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன்.

books

சமீப காலமாக பத்திரிக்கைகளில் ஒரு பக்கக் கதை, போஸ்ட் கார்ட் கதை, என்று தொடங்கி, ஒரு வரிக் கதை வரைக்கும் வந்து விட்டது. இனி 140 வார்த்தைகளில் ”ட்வீட், ட்வீட்” என்று ஸ்வீட் ஆக ட்விட்டரில் இலக்கியம் படைக்கத் தொடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களது குடும்பத்தில் ஒரு அத்தையோ, சித்தியோ - வாரப் பத்திரிக்கைகளில் வெளி வந்த நாவல்கள், தொடர்கதைகளை பைண்ட் செய்து வைத்திருந்து, அதை நீங்களும் படித்த அனுபவம் உண்டா? வாரா வாரம் தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் படிப்பதற்காக, சகோதரர்கள், சகோதரிகளுடன் சண்டை போட்டு, வாரப் பத்திரிக்கையைப் படித்ததுண்டா? எப்படியோ தவறவிட்ட அத்தியாயங்களைத் தேடி நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளில் அந்த வார பத்திரிக்கை தேடுதல் நடத்திய அனுபவம் உண்டா?

என்ன - பழைய நினைவுகள் மலரத் தொடங்குகிறதா? :-) ஆம்.. படிக்கும் ஆர்வம் உள்ள எவரும், இந்த அனுபவங்கள் இல்லாது இருந்திருக்க முடியாது.

books

50ல் இருந்து 80கள் வரைக்குமே வாரப் பத்திரிக்கைகளில் நாவல்கள் தொடர்களாக வந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம், விகடன், குமுதம், கல்கி, ராணி இப்படி எல்லாப் பத்திரிக்கைகளின் கட்டமைப்பு பெரும்பாலும் இப்படித்தான்:

தலையங்கம், ஒரு சரித்திரத் தொடர், ஒரு சமூகத் தொடர், 2-3 சிறுகதைகள், ஒரு பேட்டி, சிறுவர் பகுதி, சித்திரத் தொடர், பக்தித் தொடர், சினிமாப் பகுதி, பயணக் கட்டுரை, ஜோக்குகள், கருத்துப் படம் இப்படி...

கதைகளும் கருத்துப் படங்களும் வரைபவர்களுக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. ஜெயராஜ், மாருதி, பாலு, வினு, கல்பனா, ராமு, மாயா, மதன், செல்லம், மணியம் செல்வன்.. இன்னும் இன்னும்...

சினிமாவுக்கென்று தனிப் பத்திரிக்கைகள் வரும். பேசும் படம், பொம்மை, ஃபிலிமாலயா, சினிமா எக்ஸ்பிரஸ் - இப்படி, பொம்மையின் வண்ணப் படங்கள் மிகப் பெரிய அட்ராக்‌ஷன் அந்த நாட்களில்.
சிறுவர் பத்திரிக்கைகள் - கண்ணன், அம்புலிமாமா, ரத்ன பாலா, பூந்தளிர், கோகுலம்..

காமிக்ஸ் புத்தகங்கள் - இந்திரஜால் காமிக்ஸ் - இதில் வேதாளர், டயானா, மந்திரவாதி மாண்ட்ரெக், அப்புறம் முத்து காமிக்ஸ் - இதில் இரும்புக் கை மாயாவி, மற்றும் டெஸ்மாண்ட் - ஹும், மீண்டும் படிக்க மனம் ஏங்குகிறது.. அப்புறம் உள்ளூர் சித்திரக் கதைகளை வெளியிட்ட பொன்னி காமிக்ஸ்.. இன்னும் பல..

books

எனக்கு விவரம் தெரிந்து - தீபாவளி, பொங்கல் சிறப்பிதழில் தொடர்கள் ஆரம்பம் ஆகும். சாண்டில்யன், பி.வி.ஆர், ஆர்.வி., மெரீனா, சுஜாதா, லஷ்மி, அகஸ்தியன், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன், மணியன், எஸ்.லட்சுமி சுப்ரமணியம், சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, பாலகுமாரன், அமுதா கணேசன், ரமணி சந்திரன், இப்படி நிறையப் பேர் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.

குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன், ரமணி சந்திரன் முதலியோர் ராணி பத்திரிக்கையில், மெரீனா( இவர் பரணீதரன் என்ற பெயரில் பக்தித் தொடர் எழுதியும் மற்றும் ஸ்ரீதர் என்ற பெயரில் கேலிச் சித்திரங்கள் வரைந்தும் வந்தார்), மணியன், எஸ்.லட்சுமி சுப்ரமணியம் இவர்கள் ஆனந்த விகடனில், ரா.கி.ரங்கராஜன்(கிட்டத்தட்ட ஒரு டஜன் புனை பெயர்கள் உண்டு இவருக்கு), ஜ.ரா.சுந்தரேசன்(புகழ் பெற்ற அப்புசாமி சீதாப் பாட்டியை உருவாக்கியவர்), புனிதன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி இவர்களெல்லாம் குமுதத்தில்,

சாவி அவர்கள் தினமணி கதிர் என்ற இதழின் ஆசிரியர் ஆக இருந்தார். துமிலன், ஜோதிர்லதா கிரிஜா, பி.வி.ஆர், ஜெகசிற்பியன் இவர்களது படைப்புகள் இதில் வெளி வந்ததுண்டு. தி.சா.ராஜு என்ற எழுத்தாளர் - (இவர் இராணுவத்தில் பணி புரிந்தவர்) ஹோமியோபதி மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் நிறைய எழுதினார். அகஸ்தியன் - இவர் பி.எஸ் மற்றும் ரங்கனாதன் என்ற பெயர்களிலும் எழுதுவார். மிஸ்டர் & மிஸஸ் பஞ்சு, மற்றும் தொச்சு, அங்கச்சி, கமலா போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவைக் கதைகள் எழுதுவார்.

பின்னாளில் தினமணி கதிர் இதழ் நின்ற பின் சாவி அவர்கள் தொடங்கிய சாவி இதழின் மூலம் பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜு, சுபா, ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் முதலியோர் புகழ் பெற்றனர்.

ஆஹா, நினைக்க நினைக்க, மீண்டும் ஒரு முறை இந்த கால கட்டங்கள், இதற்கு முந்தைய கால கட்டங்களில் மூழ்கி, முத்தெடுக்க ஆர்வமாக இருக்கிறது. முன்னுரையே(என்னது?) மிகவும் நீண்டு விட்டது.

சமீபத்தில் நிறைய நாவல்கள் படித்தேன். அதில் ஒன்று “ தில்லானா மோகனாம்பாள்”. இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மற்றும் இதை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவின் அழுத்தமான, ஆழமான ஆக்கம் பற்றி எழுத ஆசை.

தொடர்ந்து சொல்கிறேன்.

Comments

அட்மின், இந்தப் பகுதி பிடித்திருக்கிறது. ;) நன்றி. ;)

சீதாலஷ்மி, தொடர்ந்து சொல்லுங்க. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. ;) உங்களுக்கும் என் நன்றி. அடுத்த பாகம் எப்போ!!

‍- இமா க்றிஸ்

அம்புலி மாமா கதைகளை இப்ப்ழுது கிடைக்குமா
சிறுவர் மலர் படிக்க எங்க ஊர் படிப்பகத்தில் வரிசையில் நின்றது நினைவு வருது பலமுக மன்னன் ஜோ என் பாவரெட்

all is well

சீதாலஷ்மி.... நன்றாக இருக்கிறது உங்க துவக்கம்.... இதுல இருக்க எல்லார் பெயரையும் அம்மா சொல்லி கேட்டிருக்கேன். சொன்னா நம்ப மாட்டிங்க, அம்மா ஒரு பெரிய மர பெட்டி (உண்மையாவே ரொம்ப பெருசுங்க!!!) நிறைய பழைய கதைகள் எல்லாம் தொடரா வந்ததை எடுத்து ஒவ்வொரு கதையையும் தனி தனியா பைன்ட் செய்து வெச்சிருக்காங்க. இன்னும் எங்க கிராமத்துல அந்த பெட்டி உட்கார்ந்திருக்கு. இது வரைக்கும் நான் படித்தது இல்லை.... ஏன்னு தெரியல. நான் படிச்சது ஒன்னே ஒன்னு... ராஜேஷ்குமார் கிரைம் நாவல்கள். அதுக்கே வீட்டுல திட்டு விழும். நல்லது எதையும் படிக்க மாட்டியான்னு. இப்பவும் வெளியே தனியா போனா யாருக்கும் தெரியாம வாங்கி வந்துடுவேன். இப்போ உங்க தொடர் பார்த்து அந்த பழைய நாவல்கள் மேல் எனக்கு ஈடுபாடு வந்துடும் போலிருக்கு. வந்தா எங்க அம்மா பாதுகாத்து வரும் பொக்கிஷத்தை நான் கொல்லை அடிக்க பார்க்கிறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு இம்மா,

உங்களது பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. அந்த நாட்களை என்ணி மகிழ இந்த அரங்கம் எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுந்தரமதி,

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனிதா,

உங்க சிரியா பயணக் கட்டுரை படித்த போதே நான் பின்னூட்டம் கொடுத்து இருக்கேன், ஞாபகம் இருக்கா? ரொம்ப சுவாரசியமாக எழுதறீங்கன்னு. இப்போ நீங்க சொர்க்கமே என்றாலும் இழையில் எங்க எல்லார் பெயரையும் குறிப்பிட்டு அழைத்து இருந்தீங்க, நிஜத்தில் நான் உங்க பயணக் கட்டுரை படிக்கும் போதே என்ன நினச்சேன் தெரியுமா, இவங்க இன்னொரு நாட்டைப் பற்றி இவ்வளவு அருமையாக இத்தனை தகவல்களுடன் எழுதறாங்களே, நமக்கு நம்முடைய சொந்த ஊரைப் பற்றி என்ன தெரியும் அப்படின்னு.

அப்புறம் .. உங்க அம்மா வீடு எங்கேன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ், நீங்க அங்கே போய் புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரதுக்குள்ளெ நான் முதலில் போய் படிச்சு முடிச்சுடறேன். தொடர்கதைகளை பைண்ட் செய்யப்பட்ட வடிவத்தில், சித்திரங்களுடன் படிப்பது ஒரு தனி சுவை. அம்மா அறுசுவை உறுப்பினரா. அவங்களுக்கு என் அன்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

பி.கு.
என் ஸிஸ்டம் ரொம்ப ஸ்லோவா இருக்கிறதால எல்லாருக்கும் பதில் ஒரே பதிவாகப் போட்டு இருக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆஹா இப்படி பழைய ஞாபகங்களையெல்லாம் தட்டி எழுப்பிட்டீங்களே. ஒவ்வொண்ணும் ரசிச்சு சொல்லி இருக்கீங்க. அந்த புத்தகங்களின் சொர்க்க பூமிக்கு போவது போல் இருக்கு. நீங்க சொன்ன அத்தனையையும் அசை போட்டு நினைக்கிறேன். நீங்கள் எழுதி இருக்கும் எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையுமே எப்போதும் படிப்பேன்.என் அண்ணன் ஒருத்தன் ராணி காமிக்ஸ் முழுக்க சேர்த்து வேச்சிருப்பான். இந்திராஜால் காமிக்ஸ் கலெக்ஷனும் இருக்கும். லீவுக்கு அவங்க வீட்டுக்குப் போகும்போது அதையெல்லாம் படிச்சுட்டே இருப்பேன். அத்தை பைண்ட் செய்து வைத்திருந்த தொடர் நாவல்கள், அந்த கால தீபாவளி மலர்கள், அப்போது குமுதத்தில் வந்த விளம்பரங்களையெல்லாம் படிப்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. தில்லானா மோகனாம்பாள் பற்றி நீங்க எழுதறதைப் படிக்க ஆவலோடு இருக்கேன்.

அன்பு கீதாலக்ஷ்மி... உங்களை மறப்பேனா??? அதான் எல்லா இடத்திலும் கூப்பிட்டு கொண்டே இருக்கேன். :) அம்மா அறுசுவை அங்கத்தினர் தான், ஆனால் பெயர் பதிவு செய்யாமல். ஹிஹிஹீ. இதில் இருக்கும் ஒரு தகவலும் நான் சொல்லாமல் விடுவதில்லை... அவங்க குறிப்பு கூட ஒரு முறை அனுப்பி இருந்தேனே சென்னை வந்ததும். என் ஊர் எதுன்னு "சொர்கமே என்றாலும்..." பகுதியிலயே இருக்கே.... அங்க தான் அம்மா பெட்டிய பதுக்கி வெச்சிருக்காங்க. உண்மையில் அந்த பகுதியில் நான் சொல்லி இருக்கும் தகவல் ரொம்ப கம்மி... இம்முறை ஊருக்கு போனா புகைப்படங்களோட எழுதனும்'னு நினைச்சுட்டு இருக்கேன்... பார்ப்போம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

anbu,seethalakshmi nanum pazya kadhaigal endral viruppamaga padippean thillanamoganambal marakkamudiyadha kadai meendum ungalidam edhirparkirean.

life is short make it sweet.

நாவல்கள் படிப்பது சுகமென்றால் படித்ததை ரசித்ததை பகிர்ந்துகொள்வது சுகமோ சுகம்

அம்புலி மாமா கதைகள் படித்தது,ரத்னபாலா தேடி அலைந்தது சிறுவயதில் விடுமுறை நாட்களில் நான் மிகவும் நேசித்தது எங்களூர் லைப்ரரிதான்....

லைப்ரரி கார்ட்டில் ஒரு நாளைக்கு சில புத்தகங்களை எடுத்து படித்துவிட்டு அதே நாளில் லைப்ரரி மூடுமுன் அவசரமாய் சென்று அடுத்த தொகுப்பை வாங்கி வந்து அதை எந்நேரமானாலும் படித்து விட்டு தூங்கிய பசுமையான நாட்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்...நன்றி

நீங்கள் சொல்லியுள்ள எல்லாருடைய நாவல்களும் படித்து ரசித்திருக்கிறேன்.
ஆனால் கல்லூரி நாட்களில் அதிகம் ரசித்து படித்தது ரமணிசந்திரன்,இந்துமதி
நாவல்கள்தான்...

தோழிகள் என் பிறந்தநாளுக்கு கூட நாவல்களைத்தான் (ரமணிசந்திரன்,இந்துமதி)
பரிசளிப்பார்கள்..அந்தளவுக்கு புத்தகபையித்தியம் நான்...

உங்களின் சுகமான ரசனைக்கு நன்றி....

ஒவ்வொன்றாய் பகிர்ந்துகொள்ளுங்கள் காத்திருக்கிறோம்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு தேவா,

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க எல்லோரது பதிவும் பாக்கறப்போ ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அழகுக் குறிப்புகள் பகுதி முழுவதும் இப்பொதான் படிச்சு முடிச்சேன். சூப்பர். அப்புறம் உங்க ஊர் பற்றி ரொம்ப அருமையா ரசிச்சு எழுதி இருக்கீங்க. மிகவும் அருமை. எனக்கு நிறைய விஷயம் பகிர்ந்து கொள்ள ஆசை. ஆனா, நேரில மட மடன்னு பேசறது ஒரு விதம், எழுதும்போது நிதானமா எழுத வேண்டியிருக்கு, அதனால சொல்ல விரும்புவதை முழுமையாக சொல்லாம விட்டுடற மாதிரி தோணுது. அது தவிர, டைப்பிங் வேகமும் இன்னும் அதிகரிக்கணும்னு நினைக்கிறேன். நேரப் பற்றாக்குறையும் ஒரு காரணம். இன்னும் நிறைய எழுத ஆசை, பாக்கலாம். தொடர்ந்து படிச்சு, உங்க கருத்துக்களை சொல்லுங்க.

அன்பு கீதாஜி,

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. உங்களுக்குப் பிடித்த மற்ற எழுத்தாளர்களையும் பற்றி சொல்லுங்க, நிறைய பேசலாம்.

அன்பு இளவரசி,

உங்க பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. எழுத்தாளர் இந்துமதி ரசிகை ஒருவரை பல வருடங்களுக்கு முன் சந்தித்த போது அவர் சொன்ன விஷயம் ரசிக்கும்படியும் ஆச்சரியமாகவும் இருந்தது. அவர் கல்லூரியில் படிக்கும்போதுதான் இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்” வெளி வந்த நேரம், அவரது எழுத்தினால் கவரப்பட்ட அவரும் அவரது தோழியரும் – மொத்தம் 17 பேர் என்று நினைக்கிறேன், தங்களுக்கு திருமணம் ஆகி, பெண் குழந்தை பிறந்தால் “இந்துமதி” என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்களாம். வியக்க வைக்கும் சங்கதி என்னவென்றால் – அத்தனை பேருக்குமே முதல் குழந்தை பெண், பேசிக் கொண்டது போலவே எல்லாரும் “இந்துமதி” என்றே பெயர் வைத்தார்களாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

படித்தவை,ரசித்தவை பழைய காலகட்டத்தை நினைவு படுத்திவிட்டது.ஒரு கால கட்டத்தில் குமுதம்,ஆனந்த விகடன்,சாவி,குங்குமம்,ராணி இன்னும் பல பத்திரிக்கைகளில் தொடர் கதை அடித்து பிடித்து படித்த் காலங்கள்.இனி திரும்ப வருமா?வரும்,மேடம் உங்க மூலமாக.மிக்க நன்றி.இளைய சமுதாயத்திற்கு நம் கால பொழுது போக்கில் பத்திரிக்கை ஒரு நீங்க இடம் வகித்ததை இதன் மூலம் அறிவிக்க முடியும்.இப்ப பேஸ் புக் தான் கொடி கட்டி பறக்கிறது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சீதாலஷ்மி மேடம்

ஹலோ சீதாலஷ்மி மேடம் படித்தவை, ரசித்தவை உங்க எழுத்துக்களால், ரொம்ப சுவையான பகுதியா அமைந்து இருக்கு. உங்களோட சிறப்பான எழுத்துக்கள், எனக்கும் மலரும் நினைவுகளை மனதில் கொண்டு வந்துவிட்டது.

சிறுவயதிலே அம்புலிமாமா, காமிக்ஸ் படிக்க ஒரே போட்டி, சண்டை நடக்கும் எனக்கு என அண்ணனுக்கும், யார் முதலில் படிப்பது என்று. நான் லீவுக்கு பாட்டி, சித்தி வீட்டுக்கு போவதென்றால், முன்னமே எனக்கு நிறைய காமிக்ஸ் புக்ஸ், சிறுவர் மலர் எல்லாம் வாங்கி ரெடியா வைச்சிருப்பாங்க. இல்லைன்னா, வந்ததுமே ஆரம்பிக்கும் என் நச்சரிப்பை அவங்களால் தாங்கமுடியாதே... : ) பிறகு அப்படியே, குமுதம், ஆனந்த விகடன் என்று முன்னேறி, அப்புறம் பாக்கெட் நாவல் படிப்பது ரொம்ப பிடித்தமான விஷ‌யமாகி போனது! பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, ராஜேஷ்குமார், சுபா,ராஜேந்திரகுமார் என்று பெரிய பட்டியலே உண்டு. கூடவே அப்பா, அறிமுகப்படுத்தி ஜெயகாந்தன், சுஜாதா எழுத்துக்கள் மீது தீராத பிரியம் ஏற்பட்டது. சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, காகித சங்கிலிகள், வைரங்கள் எல்லாம் நான் பலமுறை படித்திருக்கிறேன். அவரோட என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, விக்ரம், மற்றும் அவரோட பல நாவல்கள் படித்து இருக்கிறேன். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. - எவ்வளவு அற்புதமான படைப்பு! இந்த அளவுக்கு புத்தகப்பைத்தியமாக இருந்திருக்கிறேன். இப்பவும் படிப்பது என்றால் கொள்ளை பிரியம், ஆனால் அதற்குண்டான வாய்ப்புகள்தான் இல்லை. திருமணமாகி இங்கே வந்தபுதிதில், புத்தகங்கள் இல்லாமல் கொஞ்சம் திண்டாடிப்போனேன். அப்புறம் குடும்பம், குழந்தைகள், வேலை என்று ‍ இப்போதெல்லாம் நான் படிப்பது எல்லாமே கணினியில்தான்! : )

உங்களோட இந்த பகுதி, மனதை பழைய நினைவுகளென்ற மயிலிறகால் மெல்ல வருடும் வகையில் மிக நன்றாக இருக்கிறது மேடம். தொடர்ந்து எழுதுங்கள், படிக்க ஆவலாக உள்ளேன். மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு ஆசியா,

நாம் இப்ப தொடர்கதைகள், நல்ல சிறுகதைகள் படிக்க நினைத்தாலும், அது எந்தப் பத்திரிக்கையில் வருகிறது, சொல்லுங்கள். எல்லோருமே கிட்டத்தட்ட சினிமா பத்திரிக்கை மாதிரிதான் நடத்துகிறார்கள். அதோடு, எது பரபரப்பு செய்தியோ அதற்குதான் முதலிடம். அப்புறம் பேட்டிகள்,அரசியல், கிசுகிசுக்கள் இவைதானே முதலிடம் பிடித்து இருக்கிறது. அதனால்தான் ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது டி.வி. சீரியல் பக்கம் போய் விட்டார்கள் போல.

ஆனாலும் – புத்தகக் கண்காட்சியில் கூடும் கூட்டம் கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. படிக்கும் பழக்கம் முழுவதும் மறைந்து விடாது என்று.

புத்தகங்கள் நிறைய வாங்க ஆசைதான். எங்கே பத்திரப் படுத்துவது, யாருக்கு அதைக் கொடுப்பது என்று தோன்றுகிறது சில(பல) சமயம். அதனால் இப்போதெல்லாம் லைப்ரரிதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

V.Good

That Is Golden Days Sweet memory

Thank U

Ithuvum Kadanthu Pogum

தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

hi seethalakshmi mam,

nice to read, i like to read historical novels very much, kalki, sandilyan, balakumaran, etc., i like balakumaran sir novels, nan samebathil padithathu udayar (balakumaran) and yavana rani(sandilyan). ethanai murai padithalum alukatha vishayangal, antha kalathu nagareegangal, enaku ungaloda indha article padikum bothu romba santhosham irunthathu, thanks mam,

if u dont mine pls tell me how to use tamil font,

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா ஹரி

பின்னூட்டத்துக்கு நன்றி.

இந்தப் பக்கத்தில் கீழே உஙள் வலது பக்கம், தமிழ் எழுத்துதவி என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். அதிலேயே தமிழில் டைப் செய்ய குறிப்புகள் கொடுக்கப் பட்டு இருக்கிறது.

NHM Writer download செய்து உங்கள் சிஸ்டத்தில் இன்ஸ்டால் செய்தும் தமிழில் டைப் செய்யலாம்.

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா லக்ஷ்மி மேடம் மிக்க நன்றி. நான் அறுசுவை இணையதளத்திற்கு எழுதிய முதல் கருத்து தங்களுக்கு தான், உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது சந்தோஷமாக உள்ளது. நாளை தங்களின் பகுதி 2 மற்றும் 3 இவட்றை படித்து உங்களுக்கு கருத்து தெரிவிக்கிறேன். வணக்கம்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

arumai .naanum adigamaga seidigal vaithullen .ip paguthikku eppadi anuppa vendum ?jollyana oru kadi quiz vaithullen adaiyum eppadi conduct seivadhu ena solla mudiyuma? pls.

பழைய காலத்துக்கூ கூட்டிட்டுப்போயிட்டிங்க. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. அதெல்லாம் ஒரு வசந்த கால நினைவுகள். நீங்க இந்த வயசிலும் எதையும் மறக்காமல் அத்தனையும் நினைவில் வைத்திருப்பது ஆச்சர்யம். எனக்கு நேற்று படித்ததே மறந்து போயிருது. இதெல்லாம் பலையனவற்றை நினைவுபடுத்த வைக்கிறது.

naan yenna solrathu theriyala naan yeluthunathu yellam love story love, amma poems ungalukaga athu ungaluku theva pata enkita pesunga 8489325459, urakka! sonnathu en uthiram en uyire amma neethan endru

vilunthavudan karainthu pogum malai thuligal alla, en kadhal! idhayathodu kalanthu irukum kanneer thuligal

Adukka Adukka ovoru sengkallum uyarvai nokiye sellum, athu pola Adukkadukana thunpangal vanthalum uyarvai nokiye sel

//கதைகள், நாவல்கள் எனத் தேடித் தேடி, படிப்பது ஒரு உற்சாகம். அதை ரசிப்பது ஒரு அனுபவம். படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களது கண்ணோட்டத்தை கேட்பதும், விவாதிப்பதும் ஆனந்தம்!//

ரொம்ப சரியா சொன்னீங்க மேடம் :-) இன்றும் கூட ஒரு கதை படித்து, பிடித்திருந்தால், அதை யாரிடமாவது சொல்லாவிட்டால் எனக்கு தலையே வெடித்து விடும் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அன்பு பிந்து,

இன்னிக்குதான் டைம் கிடைச்சுது, பதில் போடுவதற்கு. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

படித்த, பிடித்த, கதைகளைப் பற்றி, பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்துகிட்டிருக்கோம்.

அன்புடன்

சீதாலஷ்மி

எனக்கு பிடித்த கதை சரி நான் படித்த கதை எல்லாம் பகிர்ந்துக் கொள்ள நேரம் பத்தாது ;-)

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சீதாம்மா ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கதை படிக்கும் பழக்கம் அதிகம்.. தொடர்கதைகள் படித்தது இல்லை. ராஜேஷ் குமார் கதைகள் படித்திருக்கிறேன்.. ரொம்ப திரில்லிங்கா இருக்கு.. ராணி முத்து கதைகள் நிறைய படித்திருக்கிறேன். எல்லாமே சூப்பரா இருக்கும். இப்போ நேரம் கிடைக்காததால் படிப்பது கடினமாக உள்ளது. பொன்னியின் செல்வன் வாங்கி வைத்து 40 பக்கதிற்கு மேல் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கவில்லை. உங்களை பதிவை பார்த்தவுடன் எனக்கும் நிறைய படிக்கனும்ன்னு ஆசையா இருக்கு. தொடர்ந்து சொல்லுங்கள். உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன். இவ்வளவு எழுத்தாளர்களா?? சமீபத்தில் தான் பாலகுமாரன் புத்தம் இரண்டு வாங்கியுள்ளேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆக்ச்சுவலி பேஸ்புக் ல உங்க லிங்க் பார்த்தவுடனே எனக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்ற ஆவல் வந்தது ஏனா நான் ஒரு புத்தக பிரியர் 2003 ல் காலேஜ் படிக்கும் போது ஹாஸ்டலில் என் வயது பசங்க தேடல் எல்லாம் இண்டர்நெட் கஃபே ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் இப்படி இருந்த பொழுது நான் மட்டும் லைப்ரரியே கதியாக இருப்பேன் எல்லாருடைய எழுத்தும் ரொம்ப பிடிக்கும் ராஜேஸ்குமார் க்ரைம் நாவலுக்கு அடிமை பட்டுக்கோட்டை பிரபாகர், அனுராதா ரமணன், சுபா, சுஜாதா, கல்கி, சாண்டில்யன், சிவசங்கரி, ஆர்.கீதாராணி, எஸ்.சுமதி, ஜெயகாந்தன், ரமணி சந்திரன், இந்திரா சௌந்தராஜன் கோட்டயம் புஷ்பநாத், இவங்க எழுத்துக்கள் எல்லாமே காலத்தால் அழியாதவை அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துமே ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தவை தேடி தேடி படித்த காலங்கள் எல்லாம் பசுமை மாறா நினைவுகளாக படர்ந்திருக்கிறது. பொழுதுக்கும் புக் படிக்கிறேன் என்று நிறைய பேட் கமெண்ட்ஸ் வாங்கியிருக்கேன் அதெல்லாம் தனிக்கதை படிக்கிறதுல உள்ள சந்தோஷம் திருப்தி வேற எந்த பொழுதுபோக்கு அம்சத்திலும் கிடையாது எனலாம், இன்றைய தலைமுறையிடையே வாசிக்கும் பழக்கமே குறைந்துவிட்டது, நல்ல நினைவூட்டல் எனக்கும் இந்த பகுதி ரொம்ப பிடித்திருக்கிறது.

அன்பு ரேவதி,

பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? இப்ப கல்கியில் தொடர்கதையாக(4வது தடவையாக) வர ஆரம்பிச்சிருக்கு.

நேரம் கிடைக்கிறப்ப பொறுமையாகப் படிங்க. எத்தனை தடவை படித்தாலும் சலிக்காது.

ஃபேஸ்புக்ல தொடர்ந்து ஷேர் பண்றேன். இந்தப் பகுதி 3 வருடங்களுக்கு முன்னால எழுதியது. இப்ப திரும்பவும் ஷேர் செய்து, பின்னூட்டம் வருவது சந்தோஷமாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பெனாசிர்,

சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், ‘நீங்க ஃபேஸ்புக்ல ஷேர் செய்ததைப் படிச்சேன், நல்லா இருந்தது’ என்று சொன்னாங்க.

அப்பத்தான் இந்தப் பகுதியையும் ஒவ்வொரு இழையாக ஷேர் செய்யலாம்னு தோணிச்சு.

ஒரு மூத்த உறவினர் இதைப் படிச்சுட்டு, நேற்று ஃபோன்ல கூப்பிட்டு பாராட்டினாங்க. என் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.

தொடர்ந்து ஷேர் செய்யறேன், படிச்சுட்டு சொல்லுங்க.

நீங்க சொல்வது போல வாசிக்கும் பழக்கம் குறைஞ்சுடுச்சோன்னு சில சமயம் தோணும், ஆனா, புத்தகக் கண்காட்சியில் வரும் கூட்டம், அந்தக் கவலையை கொஞ்சம் குறைக்குது.

அன்புடன்

சீதாலஷ்மி