என் சமையல் அறையில் - திருமதி. வானதி

வானதி சமையலறை

அறுசுவையின் நீண்ட நாள் உறுப்பினரும், யு.எஸ்.ஏ வில் வசித்து வருபவருமான திருமதி. வானதி அவர்கள், "என் சமையல் அறையில்.." சிறப்பு பகுதிக்காக தனது இல்லத்து சமையல் அறையின் படங்களையும், அதன் சிறப்புகளையும் இங்கே கொடுத்துள்ளார். அத்துடன் சமையல் அறையை பராமரிக்க அவர் கையாளும் சில டிப்ஸ்களையும் வழங்கி இருக்கின்றார்.

எனது சமையலறை - வானதி (Vinne)

இது கொஞ்சம் பழைய மாடல் கிச்சன்தான். இங்கு பெரும்பாலான இல்லங்களில் உள்ள சமையலறையில் இது போன்ற கேபினட் பொருத்தப்பட்டு இருக்கும். கேபினட் இருப்பது நல்ல வசதி. சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் எல்லாவற்றையும் கேபினட்டின் உள்ளே வைத்து விடலாம். இதனால் பாத்திரங்கள் சுத்தமாகவும், பொருட்கள் இறைந்து கிடக்காமல் கிச்சனும் பார்ப்பதற்கு நீட்டாக இருக்கும்.

my kitchen
 

சமைப்பதற்கு எலக்ட்ரிக் ஸ்டவ் வித் அவன். இப்போது இதுபோன்ற ஸ்டையின்லஸ் ஸ்டீல் உபகரணங்கள்தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.

my kitchen
 

இந்த ஜன்னல் எனக்கு மிகவும் பிடிக்கும், வேடிக்கை பார்த்துக் கொண்டே பாத்திரம் கழுவ இதுதான் சிறந்தது :-) ஒவ்வொரு கிச்சனிலும் இது போல் ஒரு ஜன்னல் இருப்பது மிகவும் அவசியம். நல்ல காற்றோற்றமாகவும் இருக்கும். ஃப்ரீயாகவும் சமைக்க முடியும்.

my kitchen
 
இந்த இடத்திற்கு Breakfast nook என்று பெயர். இங்கு நிறைய வீடுகளில் கிச்சனுள்ளே இது போல் காலை உணவு சாப்பிட ஒரு இடம் இருக்கும்.
my kitchen
 

இதற்கு Kitchen pantry என்று பெயர். இது ஒரு பெரிய ஷெல்ஃப். மளிகை சாமான்களை ஸ்டோர் செய்ய பயன்படுத்த படுகிறது. இவ்வாறு கதவு போட்டு மூடி விடுவதால் தூசி படியாமல் இருக்கும். கிச்சன் பான்ட்ரியினுள் இது போல் பெரிய ப்ளாஸ்டிக் கன்டயினர்களில் பொருட்களை அடுக்கி வைத்தால் நமக்கு உபயோகிக்க எளிதாக இருக்கும்.

my kitchen
 

ஸ்பூன்களை இது போல் ஒரு ட்ரேயில் அடுக்கி வைத்தால் உபயோகிக்க எளிதாக இருக்கும். கேபினட்டில் டிராயரினுள் இந்த ட்ரேயை வைத்து விடலாம். கிளிப்புகள், மற்ற சிறிய பொருட்களை சிறிய கன்டெயினர்களில் போட்டு வைக்கலாம். பெரிய கரண்டிகளை அடுக்கவும் இது போல் ட்ரே கிடைக்கிறது.

my kitchen
 

சில டிப்ஸ்:

குப்பை கூடையையும் சிங்கிற்கு கீழ் உள்ள கேபினட்டில் வைத்து விடலாம். அப்படி வைப்பதால் ஸ்மெல் எதுவும் வராமல் இருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை கொட்டி குப்பை கூடைக்கு பக்கத்தில் வைத்து விட வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்ற வேண்டும்.

கிச்சன் தரையை சுத்தம் செய்ய, நான் ஒரு புக்கில் படித்ததை பின்பற்றுகிறேன். அரை கப் அளவு வினிகர், கால் கப் அளவு பேக்கிங் சோடா, இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் (அளக்க வேண்டியது இல்லை, தோராயமாக செய்யலாம்) இது மூன்றையும் கலந்து கொண்டு எப்போதும் போல் தரையை துடைக்கலாம். தரை சுத்தமாக இருக்கும். எந்த கெமிக்கல்ஸ்ஸும் இல்லாததால் உடல் நலத்திற்கும் கேடு இல்லை.

Comments

ரொம்ப அழகாக இருக்கு உங்க கிச்சன்...
போட்டோ எடுக்கும்போது மட்டும்தானா ...இல்லை எப்போதுமே இப்படி வைத்திருப்பிங்களோ..
நானும் முயற்சிக்கிறேன்...
உங்கள் டிப்சும் புதுசு...அவற்றையும் முயற்சிக்கிறேன் ...

வானதி,

உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு, நல்ல டிப்ஸ். கிச்சனுக்கு மட்டும் தான் இப்படி பண்ணனுமா, இல்ல மத்த Rooms க்கும் இப்படி பண்ணலாம? கிச்சன் மேடையை யெப்படி துடைப்பிங்க?

Devaki

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

wow ithu palaya kitchana super vanathi

all is well

வானதி எப்படி இருக்கீங்க. கிச்சன் மிக அருமையாக இருக்கு. உங்க டிப்ஸ் மிக அருமை. வீட்டில் அனைவரும் நலமா வானு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வின்னி... கிட்சன் சூப்பர், படமும் டிப்ஸ்'ம் சூப்பரோ சூப்பர்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாராட்டிய தோழிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.

தேன், உங்க கேள்விக்கு ரகசியமா பதில் சொல்றேன் வாங்க:-) ஆமாம், சமைத்து முடித்தவுடன் கிச்சன் மேடையில் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.

தேங்க்ஸ்..தேவகி. நீங்க தரையை சுத்தம் செய்வதைத் தானே கேட்கிறீங்க. எல்லா தரையையும் இப்படி சுத்தம் செய்யலாம். அப்படி தரைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என சந்தேகப் பட்டால் வெறும் வினிகரை மட்டும் தண்ணீருடம் கலந்து பயன்படுத்துங்கள்.

கிச்சன் மேடையை துடைக்க: வெதுவெதுப்பான நீரில் மைல்டான சோப்பு சிறிது கலந்து, ஒரு துணியை நனைத்து பிழிந்து விட்டு துடைக்கவும். பிறகு வேறொரு நல்ல துணியினை வெறும் தண்ணீரில் மட்டும் நனைத்து துடைத்து விடவும்.

உங்கள் பாராட்டிற்கு நன்றி சுந்தரமதி. இந்தியாவில் கூட கிச்சனில் இப்போ நிறைய மாடல்கள் கிடைக்கிறது இல்லையா.

தனீ, குழந்தையும், நீங்களும் நலமா. பேசி ரொம்ப நாளாச்சு உங்களோடு. இங்கு அனைவரும் நலம் தனீ..

வனீ, குட்டீஸ் இருவரும் நலமா. தேங்க்ஸ்..வனி. ஆமாம் தோழிகளே நீங்களும் உங்க சமையலறை படங்களை அனுப்புங்க. வார வாரம் ஒருவருடையதாக வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

vanathi ungal kitchen super aanal ingu sila things meleydhan vikkamudium grinder mixi innum sila things irundhalum tips koduthatharku thanks.

life is short make it sweet.

வானதி,

தேங்ஸ், நான் இந்த டிப்ச் செய்து பார்கிரேன்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.

தேங்க்ஸ் கீதா. மிக்ஸி மேலேயே இருக்கலாம். கேபினட் கொஞ்சம் பெரிய சைஸாக இருந்தால் டேபிள் டாப் கிரைண்டரை உள்ளே தள்ளி விட்டு சமர்த்தா இருக்கலாம்:) நான் அப்படித்தான் செய்து இருக்கேன்:)

வானதி!
உங்க கிச்சன் ரொம்ப அழகாய் இருக்கு. எனக்குகூட சமையலறையில் எதுவுமே கண்ணுக்கு தெரியாம இருக்கனும்.
தரை சுத்தம் செய்யும் உங்க டிப்ஸ் வினைல் டைலுக்கும் பொருந்துமா???

நன்றி கீதா. வினைல் டைல்ஸ்ஸுக்கும் பயன்படுத்தலாம். என் வீட்டில் வினைல் டைல்ஸ்தான் உள்ளது. பொதுவாக வினைல் டைல்ஸ்ஸில் அழுக்கு பிடித்துவிட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் போகாது. ஆகவே அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் ஒன்று, வினீகரைக் கொண்டு துடைக்கும்போது வரும் வினிகர் ஸ்மெல் காய்ந்தவுடன் சரியாகி விடும். எந்த தரைக்கும் சந்தேகமாக இருந்தால் ஒரு சிறிய இடத்தில் டெஸ்ட் செய்து பார்த்து விட்டு பயன் படுத்துங்கள்

ஹாய் வானு,
நலமா?
உன்னோட கிச்சன் ரொம்ப அழகா இருக்கு. நல்ல விளக்கம், வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி.

வின்னி... கிச்சன் சூப்பர், நீட்டா வைச்சிருக்கிங்க. (ஸாரி, ரொம்ப லேட்டா சொல்றேன் ‍ இப்பதான் பதில் போட டைம் கிடைச்சிது. )

எனக்கும்கூட கிச்சன் கவுன்டர் மேல் எதுவும் அடைப்பா இல்லாமல், காலியா வைச்சிருக்கனும்னு தோணும். ஆனால் இப்ப இருக்கும் வீட்டில், ஓப்பன் கிச்சனுக்கு ஆசைப்பட்டு, குறைவான கவுன்டர் ஸ்பேஸ்தான் கிடைத்தது, ஆக மிகக் குறைவான கப்போர்ட்ஸ். சோ, ரொம்ப கஷ்டப்பட்டுதான் எல்லா பொருட்களையும் கப்போர்ட்ஸ் உள்ளே தள்ள முடியும். (நீ நிறைய பொருட்களை சேர்த்து வைச்சிக்கிற, அதான் இடம் பற்றாக்குறை! ‍- இது என் ஹஸ்சோட ஸ்டேட்மென்ட்! :))

அதனால, சில பொருட்களை (மிக்ஸி, ஃபுட் ப்ராஸசர்.. இந்த மாதிரி), பேண்ட்ரியில தள்ளிடுவேன்! (எனக்கு பேண்ட்ரி நல்லா பெரிசு, டபுள் தெ சைஸ்! அதனால தப்பிச்சேன்! : )

என‌க்கும்கூட‌ கிச்ச‌ன் ஃப்ளோர் டைல்ஸ்தான் -‍ உங்க‌ மெத்த‌ட் ட்ரை ப‌ண்ணி பார்க்கிறேன் வின்னி! அப்ப‌டியே, க‌ப்போர்ட்ஸ் எல்லாம் என்ன‌ வைச்சு துடைக்க‌லாமுன்னும் சொல்லுங்க‌ வின்னி -‍ நல்லா எண்ணெய் பசை போறமாதிரி‍, ‍ எதாவது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்?!! :)

அன்புடன்
சுஸ்ரீ

வானதி,
சமையலரை நன்றாக இருக்கிறது. நல்ல சுத்தமாகப் பராமரிக்கிறாய்.
என்னோட சமையலரையையும் போட முயற்சி எடுக்கிறேன்.
பதில் போட எண்ணினேன் ஆனால் நெட் சரியாக வேலைச் செய்யவில்லை

Save the Energy for the future generation

நலமா. பிள்ளைகள் நலமா.உங்கள் கிச்சன் அழகா இருக்கு. நீங்க சுத்தமாக வைத்திருக்கும் விதமும் அருமை. எனக்கு கிச்சன் சுத்தமாக இருந்தால் ரெம்ப பிடிக்கும். க்ளீனிங் டிப்ஸும் அருமை.

வின்னி, நலமா? அழகா சொல்லி இருக்கின்றீர்கள். என் சமையல் அறையில் உள்ள பொருட்கள் எல்லாம் ஒளித்து வைக்கவே ஒரு வீடு வேணும். அவ்வளவு பொருட்கள் இருக்கு.
வாணி

my kitchen is just exactly like ur kitchen i always try my best to keep my kitchen very clean i m little clean freak my husband call me like that only your tip to put kitchen spoons in a tray like that is excellent i immediately tried it and working great keep writing expecting more articles from you

என்றும் அன்புடன்,
கவிதா

செல்விக்கா, உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. நீங்களும் உங்க கிச்சன் படத்தை அனுப்புங்க. பார்க்க ஆவலாக உள்ளது.

இந்திரா, கிச்சன் நல்லா இருக்கா. அனுப்புங்க, அனுப்புங்க, பார்க்க ரெடியா இருக்கேன்.

தேங்க்ஸ் கதீ..நீங்களும், குழந்தைகளும் நலம்தானே. எங்கே அப்படியே நீங்களும் அனுப்புங்க பார்க்கலாம்.

வாணி, நான் நல்ல இருக்கேன். உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி. எல்லா பொருட்களையும் ஒளித்து வைக்க உங்களுக்கு டிப்ஸ் வேணுமா;-)

Uk5mca, இதனால் நமக்கு எந்த பட்டப் பெயர் கிடைத்தாலும் மனம் தளரக் கூடாது..என்ன சரியா:-) இந்த பகுதி உங்களுக்கு பயன்பட்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. அப்படியே நீங்களும் படம் பிடித்து அனுப்புங்க.

சுஸ்ரீ, நலமா? ஸாரியெல்லாம் எதுக்கு? உங்களுடன் பேசுவதே மிக்க மகிழ்ச்சி.ஆமாம் ஏதாவது ஒன்றை காம்ப்ரமைஸ் பண்ணித்தான் ஆகவேண்டும். நான் கிச்சன் பேண்ட்ரியினுள் கீழே சின்னதாக பூஜை ரூம் போல வைத்து இருக்கிறேன். அதை ஃபோட்டோ எடுக்க வில்லை. (யாருக்காவது இந்த ஐடியா பயன்படும்?) உங்க கிச்சன் போட்டோஸ்ஸையும் அனுப்புங்க.

அப்புறம் சுஸ்ரீ நீங்க கேட்ட கிளீனிங் டிப்ஸ்:

பாத்திரம் கழுவும் சோப்பை (dishwashing liquid) சில துளிகள் தண்ணீரில் கரைத்து ஒரு துணியினால் கேபினட்டின் வெளிப் புரத்தை துடைத்து விட்டு, பிறகு வேறொரு துணியினால் துடைத்து காய வைக்க வேண்டும். இப்படி மாதம் ஒரு முறை அல்லது இருமுறை செய்தால் நல்லது. மற்றபடி அடிக்கடி டஸ்டிங் (dusting) மட்டும் செய்து தூசு சேராமல் பார்த்தால் போதும்.

மேஜிக் எரேஸர் (Magic Eraser) என்று ஒரு ஸ்பாஞ் கிடைக்கிறது அல்லவா, அதை வைத்து துடைத்தால் கூட எண்ணெய் பசை எல்லாம் போய்விடும்.

கேபினட் மற்றும் டிராயரின் அடியில் அதிகம் அழுக்கு சேராத இடங்களில் (பௌல்கள், தட்டுகள் வைக்கும் இடங்கள் போன்று) வால் பேப்பரை ஒட்டி வைக்கலாம். கிளீன் செய்யும்போது நன்கு பிழிந்த ஈர டவலால் துடைத்தால் போதும். எண்ணெய் கேன் போன்ற பொருட்களை ப்ளாஸ்டிக் ஷீட்டின் மேலோ அல்லது வேறு ரிமூவபிள் ஷீட்டின் மேல் வைத்தால் கேபினட்டினுள் கறை படிவதை தடுக்கலாம்.

பொதுவாக உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ்ஸை யூஸ் பண்னுவதை விட வினிகர், சோப், பேக்கிங் சோடா இதை வைத்தே நிறைய கிளீனிங் வேலைகளை செய்து விடலாம்.

கிச்சனும் டிப்ஸும் அருமையாக இருக்கு.வெரி கிலீன் ஹெல்தி கிச்சன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி ஆசியா. ஒவ்வொரு பக்கமாக சென்று ஒவ்வொருவரையும் பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.

my name is kavitha
i dont get worried by the names i am happy that i m like this
i have 3 unused trashbins in my home
what can i do with that madam
please terl me
expecting more articles from you madam
all the best

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க? என்னையும் நீங்க வின்னி or வானதின்னே கூப்பிடலாம். நிச்சயம் எனக்கு தெரிந்தவற்றை, டெஸ்ட் செய்து பார்த்தவற்றை உங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அப்புறம் இந்த ட்ராஷ்பின் பெரிய சைஸா இருந்த இப்படி கூட யூஸ் செய்யலாம் :

நீங்க ரீஸைக்ளிங் (Recycling) செய்வதாயிருந்தால் அதில் ப்ளாஸ்டிக், அலுமினிய பொருட்களை போட்டு வைக்கலாம். இப்படி தனியே போட்டு வைப்பதால் மறக்காமல் ரிசைக்ளிங் செய்யலாம்.

வின்டர் முடிந்தவுடன் வின்டர் ட்ரெஸ்களை ஒரு ட்ராஷ் பையில் போட்டு பின்னில் வைத்து விட்டால் தூசு, பூச்சிகள் வராமல் இருக்கும். அடுத்த வின்டர் சீஸனுக்கு தேட வேண்டிய அவசியமும் இருக்காது. இப்படித்தான் என் பொண்ணோட ட்ரெஸ்ஸை ஒரு சீஸனில் எங்கேயாவது வைத்து விட்டு பிறகு தேடி கிடைக்கும்போது அந்த சைஸ் பத்தாமல் போகும் கொடுமையெல்லாம் நடந்து இருக்கு:)

பேக்கிங் ட்ரே, பேக்கிங்க் ஷீட் இது போல் கூட போட்டு வைக்கலாம், நமக்கு தேவைப் படும்போது ஈசியாக எடுக்க.

ட்ராஷ் பின் கொஞ்சம் சிறிய சைசில் இருந்தால் சிறிய ஆடைகள், சாக்ஸ் போன்றவற்றை மடித்து வைக்கலாம். கலைந்து சிதறி போகாமல் ஒரே இடத்தில் இருக்கும்.

நீங்க கிராஃப்ட் செய்பவராயிருந்தால் அதற்கு தேவையானவற்றை ஒவ்வொரு பேக்/பாக்ஸில் போட்டு ஒரே இடமாக ஒரு பின்னில் போட்டு வைக்கலாம்.

கவிதா, உக்காந்து யோசித்து ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன்:) இதில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பயன்பட்டால் மிகுந்த சந்தோஷப்படுவேன்.

thanks a lot vinnnie
u have thought and replied me
extremely happy!!
i have put my winter clothing in to one of the trash and baking trays in to another my kids dolls and her play things to another
i saved much space now
thanks a lot....

என்றும் அன்புடன்,
கவிதா

வானதி உங்க கிச்சனும் சூப்பர், நீங்க கொடுத்த டிப்ஸ் சூப்பர்.

\\ கவிதா, உக்காந்து யோசித்து ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன்:) இதில் ஏதாவது ஒன்று உங்களுக்கு பயன்பட்டால் மிகுந்த சந்தோஷப்படுவேன்.//

இதைதான் உட்கார்ந்து யோசிக்கறதுனு சொல்லுவாங்களோ....

ஹாய் வானதி எப்படி இருக்கீங்க..?
உங்கள் கிச்சனை இவ்வளவு லேட்டா நான் தான் பார்த்து இருக்கேன்.
ரொம்ப சூப்பரா இருக்கு வானதி.
எப்போதும் ஒரு வீட்டு விஷேசத்துக்கோ சும்மா விசிட் பண்ணாலோ
நான் முதலில் பார்ப்பது கிச்சனைதான்.
அதை அவ்வளவு ரசிசசு பார்ப்பேன்.
உங்களின் கிச்சனும்,அதை எப்படி வைத்துக் கொள்வது என்ற டிப்ஸும் சூப்பர் வானதி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நன்றி கவி, உங்கள் பாராட்டிற்கு:)

நன்றி அப்சாரா உங்கள் பாராட்டிற்கு. நாம் நிறைய நேரம் செலவிடும் கிச்சன் மிகவும் முக்கியமான அம்சம்தான். நமக்கு பிடித்த வகையில் கிச்சனும் அமைந்து விட்டால் (அமைத்துக் கொண்டால்)அது நாம் சமைக்கும் சமையலிலும் பிரதிபலிக்கும்

Kitchen ரொம்ப சூப்பர்ங்க வானதி...

எங்க வீட்டு Kitchen எல்லாம் இப்படி இருக்கணும்நு நான் கனவு கூட காண முடியாது... :)

Really impressed...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

ஹாய் வானதி உங்க டிப்ஸ் மிகவும் அருமை .ரொம்ப லேட் ,ஓகே மேட்டருக்கு வருவோம் .உங்க டிப்ஸ் எல்லாத்தையும் செய்து பார்த்தேன் எனக்கு ரொம்ப திருப்தி .சுத்தமா அழகா இருக்கு எங்க சமையல் அறையும் .நன்றி வானதி . இதே போல் வீடு முழுக்க துடைக்க்கலாமா? டயில்ஸ் தரைக்கு ஒத்துவருமா?

உங்க சமையல் அறை மிகவும் அழகாக இருக்கிறது வானதி. நானும் வினிகர்தான்
பயன்படுத்துகிறேன். பிந்திய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.