குழந்தை வளர்ப்பு & பாலூட்டுதல் - தளிகா

குழந்தை வளர்ப்பு

பாலூட்டுதல்

இந்த பூமியில் அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையின் முதல் உணவு தாய்ப்பாலாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்க தொடங்கிவிடலாம். மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.

பால் புகட்டலில் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

குழந்தைக்கு பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்பது சிலரின் குறையாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பிலேயே வாயில் வைக்கும் எதையும் உறிஞ்சும்(சப்பும்) குணம் இருக்கும். சில குழந்தைகள் விதிவிலக்காக ஆரம்பத்தில் தடுமாறலாம். ஆனால், பழக்கத்தில் எல்லா குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடும். பாலை உறிஞ்சத் தெரியவில்லை என்று தொடர்ந்து வேறு வழிகளில் பால் புகட்டக்கூடாது. தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் குழந்தைகள் பாலை உறிஞ்சுக் குடித்தல் அவசியமான ஒன்று. எனவே, பால் புகட்டலை பழக்கத்தில் உண்டு செய்யவேண்டும்.

நிறைய பேரின் மற்றொரு கவலை, பால் பற்றவில்லை என்பது. தாய்ப்பால் சுரக்க என்ன வழி என்ற கேள்வியை அனைவரிடமும் கேட்டு கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்றவர்கள் அனைவரும் தங்களது உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாங்கள் சாப்பிடும் உணவே பாலாக குழந்தைக்கு செல்கின்றது என்பதையும், அது நல்ல உணவாக இருக்க வேண்டும் என்பதிலும் நிறைய அக்கறை காட்ட வேண்டும்.

சத்தான உணவுகள், எண்ணெய், காரம் குறைவான உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் நலம். வழக்கமாய் சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும். பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும்

பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும். பாலுடன் மதர் ஹார்லிக்ஸ் போன்ற மாவுக்களை கரைத்து குடித்தல் இன்னமும் சிறப்பானது.

பால் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

எப்போதும் உட்கார்ந்த நிலையில் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் இருப்பதால், தாயும், குழந்தையும் அப்படியே உறங்கிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் பால் குழந்தையின் மூக்கில் ஏறி, விபரீதங்கள் உண்டான சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. பால் கொடுக்கும்போது தாயானவள் கண்டிப்பாக உறங்கக்கூடாது. அதேபோல் குழந்தை பால் குடிக்கும்போது உறங்கிவிட்டால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி, தூங்க வைக்கவேண்டும்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், சில காலத்திற்கு குழந்தையை தூக்கி பால் கொடுத்தல் இயலாது. இவர்களுக்கு படுத்த நிலையில் பால் கொடுத்தல்தான் எளிதானது. அப்படி கொடுக்கும்பட்சத்தில், மேலே சொன்ன விசயங்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி, கூடிய விரைவில் அந்த பழக்கத்தில் இருந்து மாறுதல் வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு தலை நிற்கும் வரை மிகவும் எச்சரிக்கையாகவே பால் கொடுக்க வேண்டும். கழுத்துப் பகுதிக்கு கீழ் கையைக் கொடுத்து, கழுத்தை இறுக்காமல், தலையையும் முதுகையும் தாங்கியபடி குழந்தையை பிடித்துக்கொண்டு, அணைத்தவாறு, தலையை சற்றே தூக்கிய நிலையில் வைத்து கொடுக்க வேண்டும். குழந்தையின் மூக்கு பகுதி மார்பில் மிகவும் அழுந்தக்கூடாது. குழந்தையை நேர்மட்டத்தில் வைத்து பால் கொடுக்கும்போது புரையேறும் வாய்ப்புள்ளது. எனவே குழந்தையின் தலை சற்று உயரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

குழந்தையை இழுத்துப் பிடித்து மார்பில் அழுத்தி பால் கொடுத்தல்கூடாது. குழந்தை படுத்திருக்கும் மட்டத்திற்கு குனிந்து பால் கொடுக்க வேண்டும். அல்லது குழந்தைக்கு மார்பு எட்டும் உயரத்திற்கு மிருதுவான தலையணையை வைத்து, அதில் குழந்தையை வைத்து பால் கொடுக்கலாம். மார்பகத்தின் எடை முழுவதும் குழந்தையின் முகத்தில் இறங்கிவிடாதவாறு எச்சரிக்கையாய் கொடுக்கவும்.

குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்கவும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்யவும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியைக் கொண்டு நன்றாக துடைத்துவிட வேண்டும். குளிக்கும்போது அதிக மணம் தரும் சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். மார்பகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் அதிக நேரம் உறங்குவதாலும், உடற் செயல்பாடுகள் மிகவும் குறைவு என்பதாலும், வெறும் பால் மட்டும் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதற்கு மருத்துவர்கள் தரும் மருந்தினை தொடர்ந்து கொடுத்து வரவும். நன்கு காய்ச்சி, ஆற வைத்த நீரை ஒரு தேக்கரண்டி அளவிற்கு தினமும் பருகக் கொடுக்கலாம். அப்படிக் கொடுக்கும்போது சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும்.

தவிர்க்க இயலாத சில காரணங்களால், சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுத்தல் இயலாது போய்விடும். தாய்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்று கொடுக்காமல் இருப்போரை நாம் கணக்கில் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்க இயலாதவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பார்முலா மில்க் கொடுக்கலாம்.

ஆறுமாதம் கடந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Comments

என் மகனுக்கு 1. 5 வயது ஆகிறது.என் போன்ற தாய்மார்களுக்கு இந்த கட்டுரை ரொம்ப உபயோகமாக இருக்கும். எந்த வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்று சொல்ல முடியுமா?

எப்படி இருக்கீங்க? வீட்டில் ரெண்டு குட்டீஸும் எப்படி இருக்காங்க? ரீமா ஸ்கூல் ஆரம்பிச்சாச்சா? பையனோட தூக்க பழக்கம் எப்படி? இந்த பகுதி ரொம்ப நல்லா இருக்கு. சின்ன சின்ன விஷயங்களையும் விடாம நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள். நேரம் கிடைக்கும்போது மெயில் பண்ணுங்க.

மிக்க நன்றி ரேவதி.குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்..1.5 வயது முடிந்தவுடனேயே மெல்ல வேளாவேளை குறைத்து 2 வயதோடு நிறுத்துவது நல்லது.

ஹாய் தேவா...ரொம்ப நன்றி:-)...பொண்ணு ரொம்ப சமத்தாகிவிட்டாள்...தூக்கம் கடந்த 6 மாசமா ஒரு ப்ரச்சனையும் இல்லை..ரொம்ப ஜாலியா போகுது வாழ்க்கை.பையன் மெல்ல வாலு பண்ண ஆர்ம்பித்துவிட்டான்.அங்கும் பைய்யன் ரொம்ப மாறியிருப்பான் இல்லையா...நான் பிறகு மெயில் அனுப்புறேன் சரியா

hai en kulanthaiku 10 month ahuthu anal avan sariyaha thunkuwathu illai night mattum tan thunguran pahalil 5mintues kuda thunguwathilla yarawaathu sollungalen plz

தங்களது குழந்தை வளர்ப்பு கட்டுரை நன்றாக பயனுள்ளதாக உள்ளது. Thanks

sankari

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி

ஹாய் சஹ்லா

சில பிள்ளைகள் அப்படி தான்..ஆனால் சில சின்ன பழக்கங்களால் கொஞ்சம் தூங்கலாம்
1)தினசரி ஒரே சமயத்தில் உணவை கொடுத்து பழக்குங்கள்..காலை உணவு 8.30 மணிக்குள்..மதியம் 1.30 மணிக்குள்,இரவு 8 மணிக்கு முன் என கூடுமானவரை அதே நேரத்தில் உணவூட்டவும்
2)சரியாக பசியடங்குகிறதா இல்லை இன்னும் பால்,தண்ணீர் தேவைப்படுகிறதா என்று பாருங்கள்..அதனாலும் தூக்கம் கெடலாம்
3)காலை எழுந்ததும் எண்ணை தேய்த்து மசாஜ் கொடுத்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க(தலைக்கும்) வைத்து தூங்க வைத்து பாருங்கள்.
4)4)குழந்தை தூங்கியதும் அருகில் சின்ன தலையணை வைத்து அதன் மேல் நீங்கள் உடுத்தும் உடை அல்லது ஷாள் எதையாவது விரித்து பாருங்கள்..சில குழந்தைகளுக்கு அம்மாவின் மணம் கூடவே இருக்க விரும்புவார்கள்

அப்படியும் தூங்கவில்லையா விட்டு விடுங்கள்..ஒரு குறிப்பிட்ட வயதில் தூங்க பழகுவார்கள்:-)

பிள்ளைகள் தூங்கினால் தான் நமக்கு கொஞ்சம் ரெஸ்டும் கிடைக்கும் சில வேலைகளும் வீட்டில் நடக்கும்..இல்லையென்றால் சிரமம் தான்

hai thalika thankspa.

தளிகா!
குழந்தைகள் நலமா?ரொம்ப நல்ல பயனுள்ள பகுதிக்கு ஆலோசனைகளை வழங்கறீங்க.
படித்தவர்களுக்கு கூட நிறைய பேர்க்கு இந்த விஷயங்கள் சரிவர தெரியாததால்
குழந்தை உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகிறது.
தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளை அளிக்கவும்!
நன்றி!

Assalamu alaikum
ரூபினா எப்படி இருக்கிங்க,குழந்தைகள் நலமா?உங்க கட்டுரை ரொம்ப super .எனக்கு ஒரு சந்தேகம்.என் பொண்ணுக்கு 9 மாதம் solid food கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்+ lactogen stage 2கொடுக்கிறேன்.என் பால் அவளுக்கு ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் கொடுக்க முடிகிறது.அப்படி பால் கொடுக்கும்போது கொஞ்சம் வெளியே எடுத்துவிட்டு துடைத்து கொடுக்கிறேன்.இப்படி நீண்ட இடைவெளியில் தாய் பால் கொடுக்கலாமா?

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

அருமையான தொகுப்பு.நல்ல எழுத்து நடை.உண்மையிலேயே ரொம்ப பயனுள்ள பகுதி.தங்களுக்கு சிறு குழந்தைகள் கைகளில் இருப்பதால் நல்ல அனுபவ எழுத்துக்கள்.பாராட்டுக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai talika how are u niga enga erukiga?

ஹாய் சாய் கீதாலக்ஷ்மி

குழந்தை வளர்ப்பு விஷயங்கள் எல்லாம் முதல் பெண்ணை கர்பமாக இருக்கும்பொழுதே படிக்க தொடங்கியது தான் விருப்பமான சப்ஜெக்டாக இருப்பதால் தொடர்ந்து படிக்கிறேன் பகிர்ந்தும் கொள்கிறேண் அவ்வளவே:-)

வஸ்ஸலாம் ஷாரிஸ்

நலமாக இருக்கிறேன்.கொடுக்கலாம் தப்பில்லை ஆனால் சிலருக்கு நெடுநேரம் கழித்தால் பால் கட்டி விடும் அப்படி இருக்கும் பட்சத்தில் கட்டின பாலை எடுத்து விட்டு தான் கொடுக்க வேண்டும்..மற்றபடி தப்பே இல்லை..

hi
எனக்கு இது முதல் குழந்தை. குழந்தை பிறந்து 4 மாதம் முடிகிறது. மற்ற உணவுகள் 6 மாதத்திற்கு பிறகுதான் கொடுக்க வேண்டுமா. சிலர் 4 மாதம் முடிந்ததும் கேல்வரகு 3 ஸ்பூன் காச்சி கல்கண்டு சேர்ட்த்து கொடுக்கலாம்னு சொல்ராங்க. அப்படி செய்யலாமா

நன்றி ஆசியாக்கா தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.உண்மைய சொன்னீங்க கைய்யில் குழந்தைகள் இருக்கப்ப இந்த சப்ஜெக்ட்ஸ் எல்லாம் விரல்நுனியில் இருக்கும்...கொஞ்சம் பெரிசாகிவிட்டால் கூட மெல்ல மறந்து விடும்.
நன்றி ஷங்கரி,ரேவதி

ஹாய் சத்யா
குழந்தைக்கு போதிய உடல் எடை இருந்தால் அல்லது தாய்பாலிலேயே பசியடங்குவதாக இருந்தால் 6 மாதம் கழித்தே கொடுக்கலாம்.

Thank you தளிகா sister

hi mam
எப்படி இருக்கீங்க.என் பையனுக்கு 4 மாதம் முடிஞ்சுடுச்சு ஆனா இன்னும் வாந்தி எடிக்குறான். எல்லாரும் சொன்னாங்கா 3 மாதம் அப்படி தான் இருக்கும்ன்னு ஆனா இப்பவும் இருக்கு. பால் திருஞ்ச மாதிரி கட்டி கட்டியா இருக்கு. அப்படிதான் எப்பவும் இருக்குமா இல்ல doctor கிட்ட போகனுமா.சில நேரம் வாந்தி வாடையா இருக்கு.என் பையன் குப்புத்துக்கிரான். கை சப்புரான் அது பால் பத்தாமயா.நான் வெளினாட்டுல இருக்கேன் இப்படி பன்னனும் சொல்ல யாரும் பக்கத்துல இல்ல. எதாவது பன்னினா பயமா இருக்கு. சில நேரம் toilet போகும் போது பச்சையா இருக்கு. எனக்கு help பன்னுங்க please.

sathya

தளிகா நீங்களும் குழந்தைகளும் நலமா? ரொம்ப அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.

ஹாய் சத்யா

ஆமாம் 3 மாசம் வரை பெரும்பாலான பிள்ளைகளுக்கு வாந்தி ப்ரச்சனை மறையும்..சில குழந்தைகளுக்கு அதற்கு பின்னும் இருக்கலாம்.டாக்டரிடம் தெளிவு படுத்திகிட்டால் நிம்மதியாக இருக்கலாம்....வாயில் விரல் போட்டு சப்புவது தப்பே இல்லை...சொல்லப் போனால் குழந்தையில் வளர்ச்சியில் விரல் சப்ப்புவதை கூட ஒரு நல்ல சைனாக காணலாம்..பிறகு இன்னும் கொஞ்சம் வளர கிடைத்ததையெல்லாம் வாயில் போடுவார்...விரல் சப்பும் பழக்கம் இருந்தால் விரலை எடுத்து விடுங்கள்...ஒரு நாளைக்கு ஒரு 6 ௮ முறை சிறுநீர் கழித்தால் போதும் பால் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்யலாம்.
பச்சையாக ஸ்டூல் போவதும் ப்ரச்சனை இல்லை.தாய்ப்பால் குடிக்கையில் முதல் சில நிமிடங்களுக்கு நீர் போன்ற சத்தான பாலும் பிறகு சிறிது கட்டியாக கொழுப்புசத்து நிறைந்த பாலும் குழந்தைக்கு கிடைக்கும்...
நீர் போன்ற பாலைமட்டும் குடித்து அதற்குள் அடுத்த மார்பகத்தில் கொடுத்தால் திரும்ப தண்ணீர் போன்ற பால் கிடைத்தால் கூட இப்படி பச்சையாக ஸ்டூல் போகும்..அதனால் தான் முழுக்க ஒரு பக்கம் கொடுத்த பின் மறுபக்கம் கொடுக்க சொல்கிறார்கள்..
சத்யா தைரியமா இருங்க...ஒரு குழந்தைக்கு தன் அம்மாவை விட நல்ல மருத்துவர் வேறு யாரும் இல்லை..பயப்படாமல் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் வளர்ச்சியையும் கவனித்தால் ப்ரச்சனையே இல்லை..மனசை குழப்பும் விஷயம் இருந்தால் டாக்டரிடம் தெளிவு படுத்தி விட வேண்டும்.

நல்லா இருக்கீங்களா.நாங்களும் நலம்...நன்றி கவி

எல்லா தாய் மார்களுக்கும் உபயோகமான தகவல் தளிகா.
எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.மேலும் உங்கள் ஆக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
தொடர்ந்தும் எழுதுங்கள். வாழ்த்தி வரவேற்கின்றேன்.
அன்புடன் யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்களுடைய பதிலுக்கு நன்றி தளிகா madam.

என் மகனுக்கு இரண்டேகால் வயதாகிறது.ஒரு மாதமாக Nursury க்கு போகிறான். அங்கே மற்ற பிள்ளைகளை கடித்து விடுவதாக எனக்கு கம்பளைண்ட் வந்து கொண்டேயிருக்கிறது.நன்றாக பேசுகிறான்,"கடிக்ககூடாது,தப்பு" என்று சொன்னால்,'sorry,கடிக்கமாட்டேன்' என்று சொல்கிறான்.ஆனால் மீண்டும் அதே தான் செய்கிறான்.அடித்தும் பார்த்துவிட்டேன்.என் அணுகுமுறை தவறா? நான் வேறு என்ன செய்யவேண்டும்? புது த்ரெட் தொடங்க எனக்கு தெரியவில்லை! மற்ற தோழிகளும் எனக்கு உதவுங்கள்,please!

எனக்கு தெரிந்த சில வழிமுறைகள்..என் நாத்தனார் குழந்தைக்கு இருந்தது இரு ஐடியா செய்தேன் மாறி விட்டது...இன்டெர்னெட்டில் எதாவது காயம் பட்ட குழந்தையின் மனதை பாதிக்காத புகைப்படம் எடுத்து காண்பித்து இதில் ஒரு பைய்யன் கடித்து வைத்து விட்டான் அதான் இப்படி காயம் என்று...ஊசி போடும் ஒரு ஒபுகைப்படமும் காட்டி..அதனால் பாவம் காயம் பட்டு ஊசி போட வேண்டி வந்தது ரொம்ப வலிக்கும் என்று சென்டிமென்டாஅக சொல்லுங்கள்...அவர் கவனிக்கா விட்டால் இரவில் தூங்கும் முன் சொல்லுங்கள்.ஒரு ஆரவ்க் கோளாறில் தான் கடிக்கிறார்கள்..சிலது சந்தோஷத்தில் கடிப்பார்கள்...இப்படி செய்ததும் குழந்தைக்கு புரிந்ததும் பிறகு விட்டு விட்டாள்...பிறகொரு முறை சின்ன குழந்தையை கடிக்க நான் சொன்னேன் உன் கைய்யை ஒருக்க அது போல் கடித்து பார் என்று..கடித்து விட்டு அழுது விட்டது:-D..அன்றோடு புரிந்து விட்டது.பிறகு செய்வதில்லை:-D

தளிகா மேடம் ! ரொம்ப நன்றி பதில் தந்ததிற்கு.நான் try பண்ணி பார்த்துவிட்டு இரண்டு நாளில் பதிவு போடுகிறேன். Thank you again!

hai mam.

i have 4 months baby. enna sapadu \ennoda payanuku start pannalam? health food sollunga. ennoda maternity leave mudichu nan job poganum. enna food try pannalam.

sneha

hi medam,nan puthu entha pakuthikku,srilanka tamil now dubai yil erukiram.unkal SA mikavum payanaka erukku anakku.anakum pathil tharuverkala?an makal 3 month baby.feed pannuran but baby pasikithu anru aluvathee ella 2week.nanaka 2hrs oruka koduthalum oru pakkam than kudikira?piraku vaayee thirakira ella.anakku kavalaiya erukku,paak kanatho anru?nan anna seiya pls pls sollunka?doctoridam kaddanuma?but nalla active erukira.