பறவை கூண்டு

தேதி: April 12, 2010

4
Average: 3.6 (20 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. ரேணுகா அவர்கள், இந்த பறவை கூண்டு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

 

நியூஸ் பேப்பர் ஸ்டிக் - 8
ஃபேப்பரிக் பெயிண்ட் - விரும்பினால்
க்ளு
நூல்
அட்டை
கலர் பேப்பர்

 

செய்தித்தாளை எடுத்து அதன் நான்கு முனைகளில் ஏதாவதொரு முனையிலிருந்து மிக நெருக்கமாக பேப்பரை சுருட்டவும். சுருட்டும் பேப்பரை ஒரு முனையில் ஆரம்பித்து அடுத்த முனையில் க்ளு தடவி ஒட்டவும்.
இப்போது பார்க்க குச்சிப்போன்று இருக்கும். இவ்வாறு சுற்றுவதால் எழுத்துகள் தெரியாது, பேப்பரை சுற்றி பார்டர் கட்டியது போன்று இருக்கும். விரும்பினால் செய்தித்தாள் குச்சிகளில் பெயிண்ட் செய்து நன்கு காய விடவும். இதுப்போன்று மொத்தம் 8 குச்சிகளை தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அட்டையை வட்டமாக நறுக்கி எடுத்துக் கொண்டு, அதில் படத்தில் உள்ளது போல் 8 துளைகள் போட்டுக் கொள்ளவும். அட்டை தெரியாமல் இருக்க பெயிண்ட் செய்யவும் அல்லது கலர் பேப்பரை ஒட்டவும்.
இப்போது அட்டையில் உள்ள ஓட்டையின் வழியாக செய்தித்தாள் குச்சிகளை விடவும். எல்லா குச்சிகளையும் ஓட்டையில் விட்டு அடியில் மடித்து ஒட்டவும். ஒட்டிய பேப்பர் தெரியாமல் இருக்க அதன் மேல் ஏதாவது ஒரு கலர் பேப்பரை ஒட்டிக் கொள்ளவும்.
கூண்டு எவ்வளவு உயரம் வேண்டுமோ அதற்கேற்றாற் போல் உயரம் வைத்து விட்டு மீதியை உட்புறமாக வளைத்து விடவும். இப்பொழுது பார்த்தால் கூண்டின் வடிவம் தெரியும். மேல் இருக்கும் பேப்பரின் நுனிகளை ஒன்று சேர்த்து ஒட்டவும் அல்லது நூலால் கட்டிக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சிறிய அளவில் செய்தித்தாள் குச்சி செய்து எடுத்துக் கொண்டு அதன் ஒரு முனையில் நூல் விட்டு மற்றொரு முனையில் எடுக்கவும். கவனமாக "ப" வடிவில் குச்சியை வளைத்து நூலில் இருமுனைகளையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். முடிச்சுக்கு பிறகு மீதி நூல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். "ப" வடிவ குச்சியை கூண்டுகுள் விட்டு நூலில் நுனியை இழுத்து கூண்டின் மேல் முனையில் சுற்றி கட்டவும். கூண்டின் மேல் பகுதியில் கட்டிய இடத்தை தவிர அதற்கு மேல் குச்சி இருந்தால் நறுக்கி விடவும். சிறிது தடிமனான நூலை கூண்டின் உள்ளே விட்டு வெளியே இழுத்து இருமுனைகளை முடிச்சு போடவும். முடிச்சு தெரியாமல் இருக்க கூட்டின் உட்புறம் முடிச்சுகளை தள்ளிவிடவும். அதன் அடுத்த பகுதி மேல் இருக்கும். இதை சுவற்றில் மாட்டும் பொழுது மேலே நூல் கட்டியது, ஒட்டியது தெரிந்தால் நுனியை சுற்றி கலர் பேப்பர் ஒட்டவும்.
குருவி செய்வதற்கு வெவ்வேறான நிறங்களில் இரண்டு சதுர பேப்பரை எடுத்து கொள்ளவும்.
மஞ்சள்நிற பேப்பர் உட்புறமாகவும், பச்சை வண்ண பேப்பர் மேற்பக்கம் இருப்பது போல் வைத்து குறுக்காக மடித்து மீண்டும் விரித்து வைக்கவும்.
மடித்த கோட்டை மையமாக வைத்து கொண்டு மற்ற இருமுனைகளையும் மடிக்கவும்.
மேலே தெரியும் சிறிய மஞ்சள் முக்கோணத்தை வெளிப்புறமாக மடிக்கவும்.
இப்போது முக்கோணத்தின் இருமுனைகளையும் உட்புறமாக மடிக்கவும். மடித்த பக்கங்களை பார்க்கும்போது மஞ்சளும், பச்சையும் சேர்த்து இருப்பது போல் இருமுனைகளிலும் தெரியும். பார்க்க பட்டம் போல் இருக்கும்.
பறவையின் கால்கள் செய்ய உள்புறம் இருக்கும் பேப்பரை வெளியில் இழுத்து மடிக்கவும்.
இப்போது மடித்த பக்கங்கள் படத்தில் உள்ளது போல் இருக்க வேண்டும்.
வெளியே இழுத்து இருக்கும் கால் பகுதியை மேல் நோக்கி மடிக்கவும்.
வால் போல் நீட்டி கொண்டு இருக்கும் கூர்மையான பகுதியை உள்புறம் மடித்து சிறிது இடைவெளி விட்டு வெளிப்புறம் மடிக்கவும்.
பறவையை அப்படியே மடித்து முகம் நுனியில் சிறிதளவு உள்புறமாக மடித்து விட்டு இருபுறமும் கண்கள் வரைந்துக் கொள்ளவும். பேப்பரில் செய்த அழகிய பறவை ரெடி.
செய்து வைத்திருக்கும் பறவையை கூண்டின் உள்ளே இருக்கும் "ப" வடிவ குச்சியின் நடுவே வைத்து ஒட்டவும். கலர் பேப்பரை ஸ்டிர்ப் போன்று நறுக்கி முழுகூண்டையும் சுற்றி ஒட்டிக் கொள்ளவும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பேப்பர் பறவை கூண்டு தயார். அதிக நேரம் எடுத்து பல வடிவங்களில் செய்யலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பறவைக்கூண்டு அழகாக இருக்கிறது ரேணு. பாராட்டுக்கள். ;)

கைவினைப்பகுதி அமைப்பு நன்றாக இருக்கிறது அட்மின். 'Difficulty level' சேர்த்திருப்பது பிடித்திருக்கிறது. ;) உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

வாழ்த்துக்கள் ரேணு. மீண்டும் உங்களை க்ராப்ட்ஸ் வொர்கோடு இங்கு பார்பப்தில் மகிழ்ச்சி. நன்றாக இருக்கு பறவை கூண்டு. இந்த சம்மர் வெக்கெஷனில் மகளுக்கு செய்ய சொல்கிறேன்.
நிங்க எப்படி இருக்கிங்க? பையன் எப்படி இருக்கான்.

அன்புள்ள இமா நலமா?எனக்கு தெரியும் முதலில் உங்கள் கருத்து வரும் என்று :)ஆசிரியர் அல்லவா:)

மிக்க நன்றி இமா...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்புள்ள விஜி நலமா?வீட்டில் அனைவரும் நலமா? பொண்ணு எப்படி இருக்கா?

இங்கு அனைவரும் நலம் விஜி.மகனும் நன்றாக இருக்கார்.

இந்த கிராப்ட் முன்பே அனுப்பி வைத்தேன்,வீடு மாறியதில் நெட் இல்லாமல் ஒரு மாதம் இல்லாமல் இருந்தேன்.மீண்டும் வந்து நான் அனுப்பியதில் இருந்து அறுசுவை புது தளத்திற்க்காக நிறுத்தப்பட்டு இருந்தது.

ஊருக்கு போனதும் எல்லாரையும் பார்த்தால் எவ்வளவு சந்தோஷ்மா இருக்குமோ இன்னிக்கு அப்படி இருக்கு உங்கள் அனைவரையும் பார்த்தது

நன்றி விஜி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா... ரொம்ப நாளைக்கு பின் ஒரு நல்ல குறிப்போடு வந்திருக்கீங்க.... பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. நல்ல குறிப்பு, சின்ன குழந்தைகளுக்கு சொல்லி தந்தால் ரொம்ப ஆசையாக செய்வாங்க. பார்க்கவே அழகா இருக்கு. எங்க வீட்டில் நான் தான் சின்ன குழந்தை ;) செய்து பார்த்து சொல்றேன்... ஆன்ட்டி (உங்களை தான் ரேணுகா சொன்னேன்)!!! ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஊருக்கு போனதும் எல்லாரையும் பார்த்தால் எவ்வளவு சந்தோஷ்மா இருக்குமோ இன்னிக்கு அப்படி இருக்கு உங்கள் அனைவரையும் பார்த்தது// ;)
எனக்கும் அப்படித்தான் இருக்கு. பேசாவிட்டாலும் கண்டதும் ஒரு சந்தோஷம். ;)

‍- இமா க்றிஸ்

அறுசுவை புதுத்தளம் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சி. அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் அறுசுவைக் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.

பறவைக்கூடு அழகாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
செபா

வனி நலமா? யாழினி எப்படி இருக்கா? குட்டி பையன் இன்னும் சேட்டை எல்லாம்
ஆரம்பிக்கலையா? ஊரில் இருந்து வந்தாச்சா?இன்னும் ஊரில் தான் இருக்கீங்களா?

எல்லாத்தையும் பார்த்து எத்தனை நாள் ஆகுது மகிழ்ச்சி வனி, உங்க வீட்டில் நீங்க
தான் சின்ன குழந்தை நம்பிவிட்டேன்,அதுக்காக என்னை ஆண்ட்டி என்று
கூப்பிட்டீங்களே:(((குட்டிஸ் கூட என்னை அக்கான்னு தான் கூப்பிடும்:)))

சரி விடுங்க நீங்க என்பதால் சும்மா இருக்கேன்:)ஏற்கனவே பாட்டி, மாமியார் எல்லாம் ஆயாச்சு:)))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

உண்மைதான் இமா என் மனதின் சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை....

பேசாவிட்டாலும் அனைவரின் பதிவுகள் தினம் பார்த்தாலே அனைவரும் இங்கு தான்இருக்கிறோம் என்ற எண்ணம் இருந்தது,கொஞ்ச காலம் பதிவே இல்லாமல் இருந்ததால் ஒரு கவலை மீண்டும் பதிவுகள் ஆரம்பிக்க புதுசாக ஒரு உற்சாகம்:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செபா அம்மா நலமாக இருக்கீங்களா?உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பறவைக் கூண்டு அருமை...

puthu vithamana arusuvai parka romba santhosama iruku

girija

தேன்மொழி நலமா? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

romba nalla irukku,supera panirkinga.Ithe pola neria crafts seia wishes

Hi Shamee thankyou very much for ur reply and wishes.
I will try my best

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta