அறுசுவை புதிய தளம்

அறுசுவை நேயர்களுக்கு எனது அன்பு வணக்கங்கள்.

நீண்ட காலமாக பேச்சளவில் இருந்து வந்த அறுசுவை புதிய தளம், ஒரு வழியாக இன்று உயிரூட்டப்பட்டு, உங்கள் கணினி திரைக்கு வந்துவிட்டது. எதனால் இந்த தாமதம் என்று என்னுடைய காரணங்களை பட்டியலிட விருப்பம் இல்லை. என்னால்தான் தாமதம் என்ற அளவில் மட்டும் உண்மையை ஒப்புக்கொண்டு, இறந்த காலத்தில் இருந்து எஸ்கேப் ஆகவே விரும்புகின்றேன்.

தளம் வெளியாகும் இந்த நேரத்தில், நான் நினைவு கூற விரும்பும், நன்றி கூற விரும்பும் நல்ல உள்ளங்களின் பட்டியல் சற்று பெரிதாக இருக்கும். சின்ன விசயத்தைக்கூட ஆஹா, சூப்பர் என்று பாராட்டி, என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்த என் மனைவி, நான் துவண்ட நேரங்களில் எல்லாம் தன் பொக்கை வாய் சிரிப்பின் மூலம், எனக்கு உற்சாக பானம் அளித்திட்ட எனது குழந்தை, சில மாதங்களாக விடுப்பே இல்லாமல், உணவு, காலம் மறந்து, பணி செய்வதே கடனாய் இருந்து வருகின்ற பத்மா, ரேவதி, இவர்களில் இருந்து எனது பட்டியலைத் தொடர வேண்டும். பட்டியலின் நீளம் கருதியும், யார் பெயரையாவது விட்டுவிடுவோமோ என்ற எனது மறதி பிரச்சனையின் அச்சம் காரணமாகவும், தனித்தனியே பெயர் குறிப்பிடாமல், பொதுவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எனது பலஹீனங்களை பகிரங்கப்படுத்தி மனம் நோகச் செய்யாமல், என்னுடைய பலங்களை மட்டும் நினைவுறுத்தி, தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வரும் அறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த புதிய தளம் எத்தனை பேருடைய எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் என்பது தெரியவில்லை. நிச்சயம் என்னை முழுமையாக திருப்திபடுத்தவில்லை. நான் திட்டமிட்ட விசயங்கள் ஏராளம். செயல்படுத்த முயற்சி செய்தவையும் ஏராளம். முடிவில் கொண்டு வந்துள்ளது என்னவோ அதில் ஒரு சிறு பாகம்தான். இருப்பினும், என்னுடைய நிறைய முயற்சிகள், 70 சதவீதம், 80 சதவீதம் முடிவுற்ற நிலையில் இருப்பதால், இனி அவற்றை ஒவ்வொன்றாக அறுசுவைக்குள் கொண்டு வருவது எளிது என்று நம்புகின்றேன். தொடர்ந்து அறுசுவையில் புதிய சேர்க்கைகள் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

தற்போதைக்கு பரிசோதனை கட்டத்தில் இந்த தளத்தை வெளியிட்டு இருக்கின்றேன். நிறைய சோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால், அடுத்த சில வாரங்களுக்கு பார்வையிடுதலில் அவ்வபோது தடங்கல்கள் வந்த வண்ணம் இருக்கும். இப்போது ஒரு சர்வரில் இருந்து மட்டும் இயங்குவதால், லோடிங் டைம் அதிகம் எடுக்கும். மல்டிபிள் சர்வர்ஸ் க்கு மாறும் வரை இந்த பிரச்சனை இருக்கும். இந்த தளத்தில் தேடுக வசதி தற்போது பணி செய்யாது. எனவே, தேடுக வில் எதையும் கொடுத்து இப்போது தேட வேண்டாம்.
விரைவில் அது சரி செய்யப்பட்டதும் அறிவிக்கின்றேன். சில பகுதிகள் முழுமையடையாமல் இருக்கும். இந்த தளம் ஒரு முழுமையான தளமாக மாற சிறிது காலம் எடுக்கும். அறுசுவை ஆங்கில தள பணிகள் முடிவடையாத காரணத்தால், சில வாரங்களுக்கு பிறகுதான் அதனை ரிலீஸ் செய்ய இயலும். தற்போது தமிழ் தளத்தில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன.

அனைவருக்குமான ஒரு வேண்டுகோள். நான் குறிப்பிட்டுள்ளதுபோல் இப்போதைய தளத்தில் செய்ய வேண்டிய விசயங்கள் நிறையவே உள்ளன. எனவே, அட்மின் அது ஏன் இப்படி, இது ஏன் அப்படி என்பது போன்ற கேள்விகள், இப்படி இருந்தால் என்ன, அப்படி செய்தால் என்ன என்பது போன்ற ஆலோசனைகள், சந்தேகங்கள், குறைகள் எதையும் இங்கே மன்றத்தில் பதிவு செய்ய வேண்டாம். அவற்றை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மன்றத்தில் கொடுக்கப்படும் அது மாதிரியான பதிவுகளுக்கு என்னிடம் இருந்து பதில் கிடைக்காது. பொது மன்றத்தில் கேள்வி கேட்பது எளிதாய் இருக்கும் அளவிற்கு பதில் கொடுப்பது இருப்பது கிடையாது. குறைகளை, பிரச்சனைகளை நாங்கள் மட்டுமே அறிய வேண்டும் என்பதால் தயவுசெய்து அவற்றை எங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

புதிய தளத்தில் உள்ள சிறப்பம்சங்களை <a href="/tamil/node/14763">இங்கே காணலாம்.</a> உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதிகம் எழுத இயலவில்லை. சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் வருகின்றேன்.

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றிகள்.

அன்புடன்
பாபு

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!வாழ்த்துக்கள்!!நெஞ்சமெல்லாம் இனிக்கிறது புதுத்தளம் கண்டு.எல்லா சிறப்புகளும் பெற்று தலைசிறந்த தளமாக சிறக்க ஸாதிகாவின் வாழ்த்துக்கள்!

arusuvai is a wonderful website

ஆஹா எவ்வளவு அருமையாக இருக்கிறது, உண்மையில் மகிழ்ச்சியாகவும்,சிறிது வருத்தமாகவும் உள்ளது.புதிய அறுசுவையே பார்த்தில் மகிழ்ச்சி. நான் இதற்காக எந்த உதவியும் செய்யவில்லை என்ற வருத்தம். நான் பணிக்கு செல்வதால் என்னால் எந்த உதவியும் செய்ய இயலவில்லை.

நான் எதிர்பார்த்ததை விட மிகவும் அழகாக , கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பசுமை நிறத்தில் ரம்மியமாக அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் அட்மின் அவர்களுக்கும், அனைத்து குழுக்களுக்கும்.
மற்றும் மனம்நிறைந்த நன்றியும்...:-))))))

சுபத்ரா

with love

வாழ்த்துக்கள்.

அட்மின் அண்ணா, மற்றும் அருசுவை நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்,

புது சைட் ரொம்ப நன்றாக உள்ளது, வாழ்த்துகள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

நன்றி

சூப்பர் அண்ணா சூப்பர்!!! பட்டய கிளப்பிட்டீங்க.!!! வாழ்த்துக்கள். இதே போல் அறுசுவையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நானும் உடன் இருந்து காண ஆசை. அட்டகாசமா இருக்கு அண்ணா..... அட்மின் குழுவினருக்கு என் அன்பான வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதிய அறுசுவைத் தளம் புதிய பொலிவுடன் அழகாக இருக்கிறது, பாபு!
உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்

mikka nandri mikunda siramthaukidaiyel oru valiyai pudiya thalam vanthuvitatharkka valthukkal

விசுவாசமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்! கிரேஸ்ரவி

இனிய சித்திரை புத்தாண்டில் அருசுவையும் புதுப்பொலிவுடன் கண்ணுக்கு குளிர்சியாக பார்க்கவே அழகாக பச்சை பசேலுன்னு இருக்கு. வாழ்த்துக்கள்.
இரவுபகலாக உழைத்த உழைப்பு தெரிகிறது.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹய்யா...... வந்தாச்சு வந்தாச்சு நம்ம அருசுவை.
அழகான உருவில் அம்சமாக வந்தாச்சு......
பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு அட்மின் அவர்களே....
கஷ்ட்டத்தின் பிரதிபலிப்பு நன்றாகவே தெரிகி்ன்றது.
வாழ்த்துக்கள் பாபு அண்ணா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

வாழ்த்துக்கள்!
புதிய அறுசுவை தளத்தினை மனதார வாழ்த்தி வரவேற்கிறோம்!
நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப அழகான வடிவமைப்புடன், நிறைய புதுமைகளுடன் கூடிய இனிய தளமாய் இருக்கிறது!
பாபு அண்ணா, பாப்பி (அண்ணாவுக்கு ஊக்கம் கொடுத்தமைக்காக),
நவீனாக்குட்டி (தந்தைக்கு புத்துணர்வை கொடுத்து பணிகளை சீக்கிரமே முடிக்க வைத்து புதிய தளத்தினை ரிலீஸ் செய்ததற்கு)
மற்றும், முகமறியா பத்மா, ரேவதி அனைவருக்கும் எங்களுடைய நன்றிகள்,
பாராட்டுக்கள்,வாழ்த்துகள்!

மேலும் சில பதிவுகள்