ஜில் ஜில் ஜிகர்தண்டா.

தேதி: April 16, 2010

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (17 votes)

 

தேவையான பொருட்கள்.
பால் -அரை லிட்டர்
பாதாம் பிசின் - 5கிராம்
நன்னாரி சிரப் - 5குழி கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் - 5குழிகரண்டி
ஐஸ்கட்டி - சிறிது
ரோஸ் மில்க் சிரப் - சிறிது


 

செய்முறை.
500 மில்லிபாலை 400மில்லியாக குறுக்கி காய்ச்ச வேண்டும்.பாதாம் பிசினை தண்ணீரில் கழுவிவிட்டு 8மணிநேரம் ஊற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கண்ணாடி கிளாஸில் 400 மில்லியாககுறுக்கி ஆற வைத்த பாலில் இருந்து ஒருகுழி கரண்டி விடவேண்டும்.
அதன் மேல் ஊறிய பாதாம் பிசினை ஒரு ஸ்பூன் விடவேண்டும்.
மூன்றாவதாக நன்னாரி சிரப்பை விட வேண்டும்.அடுத்ததாக ரோஸ்மில்க் சிரப்புடன் சிறிது ஐஸ் கட்டியை சேர்க்க வேண்டும்.
ரோஸ் மில்க் சிரப் 5துளிகள் சேர்க்க வேண்டும்.இறுதியாக ஒரு குழிகரண்டி வெனிலா ஐஸ்கிரீம் மிதக்க விட்டு பரிமாறவேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஹா ராதா நினைத்தாலே எச்சில் ஊறுகிறது. எனக்கு மிகக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்வும் பிடிக்கும். எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன். உங்கள் குறிப்புக்கு மிக நன்றி.
கண்டிப்பாக செய்வேன்.....ஒரு உதவி பாதாம்பிசின் என்றால் என்ன பெயரில் super market-il கேட்பது.?

சுபத்ரா

with love

ஆஹா ராதா நினைத்தாலே எச்சில் ஊறுகிறது. எனக்கு மிகக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்வும் பிடிக்கும். எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன். உங்கள் குறிப்புக்கு மிக நன்றி.
கண்டிப்பாக செய்வேன்.....ஒரு உதவி பாதாம்பிசின் என்றால் என்ன பெயரில் super market-il கேட்பது.?

சுபத்ரா

with love

சுபத்ரா..உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! பாதாம் பிசினை கலர் தண்ணீரில் ஊறவைத்து அதன் மேல் சிறிது சீனியை தூவி ஸ்பூன் போட்டு கடற்பாசி என்று விற்பார்கள்.சிறுவயதில் சாப்பிட்ட அனுபவம் உண்டு.ஒரு கடையில் பாதாம் பிசின் என்று கேட்டால் கொடுப்பார்கள்.ஒரு கடையில் பாதாம் பிசின் என்று கேட்டால்,பாதாம் ப்சினா,அப்பிடின்னா!ஒ கடற்பாசியா..என்று எடுத்து கொடுக்கிறார்கள்.ஜவ்வரிசியை தூளாக்கி பதபடுத்தியது என்று கூறுகிறார்கள்.இது மரப்பட்டையில் உள்ளபிசின் போல் இருக்கிறது.. எங்கள் ஊர் தமிழ்மருந்து கடையில் இது கிடைக்கிறது..இது உடலுக்கு குளிர்ச்சியை தருவது..

radharani

ஜிகர்தண்டா படமும் அனுப்பினேன்..அட்மின் அவர்கள் அடுத்து படகுறிப்பை போடுவார் என எதிர்பார்க்கிறேன்...

radharani

ரொம்ப நன்றிப்பா......நான் கண்டிப்பா இந்த வாரம் செய்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மதுரையில் இது , நீங்க மதுரையா.....?

நான் அதை சாப்பிட்டு இருக்கிறேன் அதிக தடவை, இது வரை செய்ததில்லை, அதான் கேட்டேன்ப்பா......நன்றி.

with love

ஹாய் ராதா, பாதாம் பிசினின் படத்தையும் எடுத்து அட்மின்னிடம் வெளியிட சொல்வீர்களா? இந்தக் குறிப்பைச் செய்துப் பார்க்க ஆசையாக உள்ளது. பாதாம் பிசின் என்ன என்று புரியவில்லை.

Save the Energy for the future generation

பாதாம் பிசின் படத்தை கண்டிப்பாக அனுப்புகிறேன்..ஜிகர்தண்டா ப்ரிபரேஷன் தேவையான பொருட்களில் பாதாம் பிசின் படமும் இருந்தது.என்ன காரணம் என்று தெரியவில்லை அட்மின் அவர்கள் படத்தை வெளியிடவில்லை... பாதாம்பிசின் படத்தை அட்மின் அவர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.. ஜிகர்தண்டா செய்து பார்த்து எனக்கு பின்னூட்டம் அனுப்புங்கள்..நன்றி..

1

1

radharani

ஹாய் ராதா, எப்படி இருக்கீங்க?
கண்டிப்பாக செய்துப் பார்த்து பின்னூட்டம் அனுப்புகிறேன். சமீபத்தில் மதுரை ஸ்பெஷல் குங்குமம் படித்தேன். அதிலும் இந்தக் குறிப்பு பார்த்தேன். எல்லாக் குறிப்பும் அதில் அருமை.நீங்கள் படித்தீர்களா?

Save the Energy for the future generation

இந்திரா..மதுரை ஸ்பெஷல் குங்குமம்,படித்ததில்லை.மதுரை சென்றால் காலேஜ் ஹவுஸ் உள்ளே இருக்கும் புக்ஸ்டாலில் புத்தகம் வாங்குவேன்.இங்கு அவள்விகடன்,சிநேகிதி,போன்ற புத்தகங்கள் கிடைக்கிறது.இனிகேட்டு வாங்கி படிக்க வேண்டும்.

radharani

மாதத்தில் முன்றுமுறையாவது மதுரை சென்று வந்துவிடுவோம்.சம்மரில் என் மகனுக்கு மிகவும் பிடித்த பானம் இது.ஒவ்வொரு முறை வெவ்வேறு கடைகளில் வாங்கும் போது அதன் சேர்மானத்தை பார்ப்பேன்.பொருளின் பெயரை கேட்பேன்..ஒரு சிலர்கூறுவார்கள்.பாய் கடை ஜிகர்தண்டாதான் என் மகனுக்கு மிகவும் பிடிக்கும்.அவர் கடையில் பாலாடை போல் ஏதோ சேர்ப்பார்.ஆரஞ்சு கலரில் இருக்கும்.அதன் பெயர் தெரியாமல் நான் ரோஸ் சிரப் சேர்த்துள்ளேன்.இது வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டதால் இதையே செய்து கொடுக்கிறேன்.

radharani

.
இன்று தினமலர் இணைப்பு சிறுவர்மலரில் ஜிகர்தண்டா குறிப்பு படித்தீர்களா...

radharani

ஹாய் ராதா,
தினமலர் சிறுவர் மலர் பார்த்தேன். அதில் குறிப்பிட்டிருப்பது கடல் பாசி.நான் ஒரு வெப் முகவரி கொடுத்துள்ளேன். அதுவா என்று பாருங்கள். அதுவாகின், உங்கள் குறிப்பில் கடல் பாசி என்றும் குறிப்பிடுங்கள். எல்லோருக்கும் புரியும்.
http://www.himayah.net/files/agar.jpg

Save the Energy for the future generation

இந்திரா, அந்த வெப் முகவரியில் இருப்பது சைனாகிராஸ் என்று இங்கு கூறுவார்கள்.நான் கூறும் கடற்பாசி( பாதாம் பிசின்)மரத்தில் இருக்கும் பிசின் போலவே இருக்கும்.தண்ணீரில் ஊற வைத்தால் ஒரு ஸ்பூன் பத்து ஸ்பூன் அளவு ஊறி இருக்கும்.படத்தை அனுப்புகிறேன்.

radharani

ஹாய் ராதா, நானும் குழம்பி உங்களையும் குழப்புகிறேன். நீங்களே படத்தை அனுப்பிவிடுங்கள். இங்கே கிடைப்பது கஷ்டம் தான் என்று எண்ணுகிறேன்.அனுப்புங்கள் பார்க்கலாம்.

Save the Energy for the future generation

, படம் இரண்டு நாட்களுக்கு முன் அனுப்பியாகிவிட்டது.உங்கள்email id கொடுத்தால் அதற்கு அனுப்பி வைக்கிறேன்.

radharani

ஈமெயில் ஐடிக் கொடுத்தால் எல்லோருக்கும் கிடைத்துவிடும். தோழிகள் மட்டும் பார்க்கமாட்டார்கள். எல்லோரும் பார்ப்பார்கள். ஆகையால் அட்மின் போடும் போது பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஈமெயில் ஐடி கொடுப்பதில் ஆட்சேபணை இல்லை. புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

Save the Energy for the future generation

நான் மதுரைதான்.இப்ப இருப்பது அருப்புக்கோட்டை.ஜிகர்தண்டா மதுரை ஸ்பெஷல்.நேற்று மதுரை சென்றிருந்தேன்..டவுன்ஹால் ரோட்டில் உள்ள அமிழ்தினியில் பாதாம் பிசின் வாங்கினேன்.அவர்கள் பாதாம் பிசின்,கடற்பாசி, எல்லாம் ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

radharani