8 மாத குழந்தைக்கு தேவையான உணவுகள் என்ன? உதவவும்..

நான் மன்றத்திக்கு புதிது.
என் மகளுக்கு 8 மாதம் ஆகிறது.என்ன என்ன உணவுகள் குடுக்கலாம்?
முட்டை குடுக்கலாமா?

u can give boiled apple, carrot, beans, potato.. mashed banana... Give citrus fruits like orange, grapes after one year.. also give egg after one year.. In US they say baby will get dry skin or allergy if they give egg before one year.. But I heard that in India they give at 8 months also..

மற்ற அலர்ஜி ப்ரச்சனைகள்..சளி இருமல்,சுவாசக்கோளாறு,வயிற்றுவலி தோல் சம்மந்தமான ப்ரச்சனைகள் இருந்தால் 1 வயது வரை காத்திருக்கவும்..இல்லையென்றால் தற்பொழுது வேகவைத்த முட்டையின் மஞ்சளை மட்டும் ஒரே ஒரு ஸ்பூன் கொடுத்து பாருங்கள்...நாளு நாள் காத்திருந்து எதுவும் ஆகவில்லையென்றால் அடிக்கடி கொடுக்கலாம்..ஆனால் முட்டையின் வெள்ளையை தவிர்க்கவும்

i like this web site

பாசி பருப்பு, அரிசி, கேரட்,உப்பு,சீரகம், நெய் எல்லாம் சேர்த்து குழைய வேக வைத்து மசித்து ஊட்டலாம்.
பாலக் சூப், தக்காளி சூப், காய்கறி சூப் குடுக்கலாம்.
இட்லியை பாலில் மசித்து ஊட்டலாம்.
சத்து மாவு கஞ்சி வைத்து குடுங்க.ராகி கஞ்சி, ரவை கஞ்சி குடுக்கலாம்.
காய்கறி வேக வைத்து மசித்து குடுங்க.முருங்கைகாயில் உள்ளே இருக்கும் சதை பகுதி மட்டும் குடுங்க.எதுவும் குழந்தைக்கு தொண்டையில் சிக்காதவாறு பார்த்து குடுங்க.
வாழைபழம் மிகுந்த சத்தான பழம். நல்லா பழுத்த பழமா மசித்து குடுங்க.தினம் ஒரு பழம் குடுக்கலாம்.
மாம்பழம், ஆப்பிள் குடுக்கலாம். ஆப்பிளை வேக வைத்து(ஆவியில்) பால் சேர்த்து மிக்சியில் அரைத்து ஜூஸ் மாதிரி குடுக்கலாம்.
நேந்திரம் பழம், ஆப்பிள் இரண்டையும் ஆவியில் வேக வைத்து பால் சேர்த்து குடுத்தால் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

கஞ்சி வைக்கும் போது சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு சேர்த்து குடுங்க.
பொதுவாகவே சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு, கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, தேன் சேர்த்து கொள்வது நல்லது.

எந்த உணவும் முதல் முறை குடுக்கும் போது 1-2 ஸ்பூன் குடுத்து 4 நாள்களுக்கு ஏதும் ஆகாட்டி கொஞ்சம் கொஞ்சமா அதிகபடுத்தி குடுத்து பழக்குங்க. எந்த புது உணவும் முதல் முறையா குடுக்கும் போது இரவில் குடுக்க வேண்டாம்.ஏதாவது அலர்ஜி ஆனா மிகவும் சிரமம் ஆகும்.
நாம் சாப்பிடும் உணவை இப்ப இருந்தே கொஞ்சம் கொஞ்சமா பழக்கபடுத்தலாம்.

முட்டைய பொறுத்த வரை அலர்ஜி ஆக கூடியது.அதனால வெள்ளை கருவை 1 வயது வரை தர கூடாது.உங்க குழந்தைக்கு எந்த அல்ர்ஜி பிரச்சனையும் இல்லாட்டி மஞ்ச கரு மட்டும் குடுக்கலாம்.அதுவும் தளிகா சொன்ன முறையில் குடுக்கவும்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

enaku very useful

success

kulandhaiku enna unavu kudukalam......

epothu enaku answer kidaikum......

ஹாய் சிவசக்தி.... தற்போது உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கறீங்களா....? ஆம் என்றால் 6 மாதம் வரை அதுவே போதுமானது. மேலும் இட்லி கொடுக்கலாம். காய், கீரை, பருப்பு வேகவைத்த சூப் கொடுக்கலாம். மேலும் இது பற்றிய விபரங்கள் நம் அறுசுவையில் நிறைய விவாதித்துள்ளனர். அவைகளையும் தேடி பார்வையிடுங்கள். உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

Hi, Iam a new member of arusuvai,Today my daughter 2nd birthday.I love my sweetbaby.

உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்கள் குழந்தையின் பெயர் என்ன?

மேலும் சில பதிவுகள்