தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

ஒரு மலரை பறித்தேன்.அது என்னைபார்த்து சிரித்து பிறகு சொன்னது..."நீ என்னை பறிக்கும் முன்பே நான் உன்னை பறித்துவிட்டேன்"

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

"களவும் கற்று மற" - என்பது
இதய திருட்டையும் சேர்த்து தான் என்று
அறியவில்லை.....
நீ என்னை பிரியும் வரை.

- லாவண்யா

என் மனக் குமுறலுக்கு
செவி சாய்த்து
சிறு அணைப்பில் எனை
பரவசப் படுத்துகிறாய்...
துன்பத்தில் அழும்போது
மெளனமாய் புன்னகையில்
மனதை லேசாக்குகிறாய்....
உன் மெல்லிய விரல்கள்
தலை கோதிவிட
மடியில் முடங்கித்
தூங்கிப் போகிறேன்
நிம்மதியாய்....

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அது வானம்
மருதானி வைத்தெடுத்த
மாலை நேரம்

பறவைகள் ஒரேநெர்கோட்டில்
பறக்க பயிற்ச்சி எடுக்கும் காலம்

ஆகாயத்தின் ஒரே தேவதை நிலவுதான்
அதற்க்கா இத்தனை நட்சத்திர காவலாளிகள்?

தேவதை உரசி செல்வதற்க்கும்
உறங்குவதற்க்குமா இத்தனை
மேக மெத்தைகள்?

அதுசரி..
தேவதையை இதுவரை எத்தனைபேர்
தரிசித்திருப்பீர்கள்?

ஓ....
நீங்கள் பணம் கொட்டினால்மட்டும் வானம்
பார்ப்பவர்கள் ஆயிற்றே

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஏங்குவான் கண்ணீரைத் தாங்குவான்
உயர்வான்-- ,தாங்கும் தண்ணீரைத்
தாங்காதாம் தாமரை.

நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்


ஏழைகளை
இன்றேனும்
இன்பமாய்
இருக்க செய்யும்
இரக்கமுள்ள
இந்தியதாய்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


பிறரை
படிப்பிக்க
பொய் சொல்லும்
பொல்லாதவரின் மூளை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஷேக் சார்

ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ஒவ்வொரு கவிதையும். அதிலும் ஆகாயத்தின் ஒரே தேவதை நிலவுதான் கவிதை ரொம்ப பிடிச்சிருந்தது. அதுவும் அந்த கடைசி வரி சூப்பர்

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நீ என்னை
நிலா
என்று
சொன்னதாலோ
நிலவை போல
நானும் தேய்கிறேன்
உன்னை நினைத்து

How is it?

அன்புடன்
பவித்ரா

என்னுடைய அண்ணன் திருமணத்திற்கு வாழ்த்து மடல் அடிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த கவிதை, சொந்த கவிதை, ஹைக்கூ மாதிரியான கவிதை சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்