தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

யுதாவர்ஷினி மேடம் என் திருமணத்திற்கு நான் கீழ்கண்ட வாசகம்தான் அடித்தேன்..முடிந்தால் அதை ட்ரை பண்ணி பாருங்கள்.

"நட்சத்திரங்கள் இல்லாமல்
நிலா வருமா?
நண்பர்கள் கூட்டம் இல்லாமலொரு
திருமணமா?"

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பவி இப்பதான் உனது கவிதை பார்த்தேன் சாரிப்பா..
ஆனால் நல்ல ஒரு சிந்தனை...
இன்னும் ஏதும் புதுமையாக முயற்சி செய்து பார்க்கலாமே..உண்மையாக இந்த கவிதை எனக்கு பிடித்திருந்தது..கீப் இட் அப்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அன்பே,
உன்னை பூவுடன் ஒப்பிட மாட்டேன்,,,,
ஏனென்ட்ரால் அது வாடி விடும்,
நிலவுடன் ஒப்பிட மாட்டேன்,,,,
அது பகலில் இருக்காது,,
சூரியனுடன் ஒப்பிட மாட்டேன்,,,
அது இரவில் இருக்காது
தென்ட்ரலுடன் ,
அது எப்பொதவது தான் வரும்,,
தேனுடன்
அது அதிகமானால் திகடிவிடும்
மேகதுடன்,,,
அடிக்கடி கலைந்து விடும்
உஹும்
உனை எதனுடனும் ஒப்பிட மாட்டேன்
என்னவனெ நீ
ஒப்புமைக்கெல்லம் அப்பார்பட்டவன்
உனக்கு நிகர் நீ மட்டுமே

plz dont consider the spelling mistakes,cannot type in tamil properly

மழை பெய்து முடித்த
பின் தோன்றும் பூமி போல
அழுது முடித்த பின்
அவள் முகம்!!!!!!!

ஓடும் மின்விசிறி போல தான்
வாழ்க்கையும்,,,,,,
இன்பங்களும் துன்பங்களும்
நிலையாக இருப்பது
இல்லை,,,,,,சுழன்று
கொன்டே இருக்கின்றன

உன்னை தேடி கொன்டிருகையில்
என்னை தொலைத்து கொண்டிருக்கிறேன்,,,,,,,,
ஆம்,என்னை
உன்னில் தொலைத்து கொண்டிருக்கிறேன்,,,,,,,,

சுரியன் இல்லாத உலகை
போலவே நானும்
கர்ர் இருளில்
நீ இல்லததால் !!!!!!!!!!!!!!!

Hai Friends,

உனக்குத்தான் எவ்வளவு பொறுமை
உன்னை காணாத கோபத்தில்,
நான் கண்டபடி திட்டிய போதும்
மென்மையாக சிரித்து கொண்டு இருக்கிறாயே.,
புகைப்படத்தில் !

இந்த கவிதை என் கணவரை நினைத்து நான் எழுதியது. படித்துவிட்டு நன்றாக உள்ளதா என்று கூறவும்.

கிண்டலாய் கேட்டதினால் சொல்கிரேன் பதில் இப்போ!

பாரதியின் கவிதையில் களங்கம் இருக்குமா !

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இது நன்றாக உள்ளது பாரதி சிஸ்டர்..ஆனால்..ஹைக்கூ கவிதை பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்..அதிக பட்சம் மூன்று வரிகள் மட்டுமே இருக்கும்.இருக்க வேண்டும்..கடைசி வரியை படித்தால்தான் அந்த கவிதையின் முழு அர்த்தம் விளங்கும்...இதுவும் ஒரு ஹைக்கூ முயற்சி!
தொடர்ந்து எழுதுங்கள் பாரதி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்