தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

தொட்டிலில் எனை அன்று தாலாட்டினாள்
கட்டிலில் எனையிட்டு சீராட்டினாள்
தட்டினில் உணவிட்டு சோறூட்டினாள் -புது
மொட்டினைப்போல் எனை அழகூட்டினாள்
கதைகள் பல கூறி அறிவுக்கு விருந்தூட்டினாள்
கலையாத நேசத்தை அவள் காட்டினாள்
நற்சேயாய் எனை அவள் உரு மாற்றினாள்
உண்மை வழி நடக்க அவளே வழி காட்டினாள்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

kavithaigal aanaithum supper.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அதெப்படி என் கற்பனைகள்
உடனே நிஜமானது
ஓ...கனவு .

மழையின்றி நனைகிறேன்
உனன்பில்.

என் உள்ளத்து ராகங்களை
நீ சரியாகச் சொல்கிறாய்
பேனா.

என் கண்ணீரின் தோழி
கைக்குட்டை/

ஷேக் அண்ணாதடி எடுதுக்கொண்டு என்னைத்தேட வேண்டாம். ஏதோ என்னால் முடிந்த ஹைக்கூ ஹி ஹீ

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

DO OR DIE

மன்னித்து விடுங்கள் எல்லோரும்..நான் என்றோ ஆரம்பித்து வைத்த இழையை..இப்போதுதான் வந்து பார்க்கிறேன்..காரணம் இப்போதுதான் கடந்த ஒரு மாத காலமாக அறுசுவைக்கு அடிக்கடி வருகிறேன்..கண்டிப்பாக எல்லோருக்கும் பதில் அளிக்கிறேன்..நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பவித்ரா மேடம்..நிலவை வைத்து கவிதை பாடாத கவிஞனே இல்லை எனலாம்..உங்களது நிலா கவிதை மிக நன்று..லேசாக ஹைக்கூ வாடை அடிக்கிறது..ஒருவேளை நீங்களும் வருங்கால கவியோ என்னவோ?நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

லாவண்யா மேம்....களவை கற்று மறப்பது காதலுக்குமா?ஆனால் காதலித்துவிட்டு அதை மறந்துவிட்டால் பச்சை துரோகம் இல்லையா?கவிதை மிக நன்று..தொடர்ந்து எழுதுங்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மோகனா மாமி என்ற ஒருவர் அறுசுவையில் இருந்தாரே?என்ன ஆயிற்று அவருக்கு?எனக்கு தெரிந்து அவர் விளையாட்டாகவோ..இல்லை நிஜமாகவோ எழுதும் கவிதைகளில் எதுகை மோனையின் பயன்பாடு அதிகம் இருக்கும்!மாமி உங்களது இரண்டு கவிதைகளும் அருமை!அதிலும் தீபாவளி கவிதை மிக மிக நன்று..ஏனெனில் இந்திய மக்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளில் தான் மகிழ்ச்சியாக இருப்பதையும்,இந்திய மக்களின் நிலைப்பாட்டையும் சில வரிகளில் கூறிவிட்டார்..இந்த கவிதை வைரமுத்துவின் "வாழ்க்கையோடு போராட்டம் இங்கே!இதில் வாழ்கின்ற நிமிஷங்கள் எங்கே "என்ற வரிகளை நினைவுபடுத்தியது..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆஹா..யோகா கூட கவிதை எழுதுவியா?பலே பலே...
யுலகத்தில் எல்லாமே வரம்பு மீறி கிடக்க..அதை நம் பண்பினாலையே அதை வீழ்த்தமுடியும் என்பதை திருக்குறள் போல் இரண்டே வரிகளில் விளக்கியிருக்கிறார்...யோகலக்ஷ்மி..தொடர்ந்து எழுதுங்க..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆஹா..யோகா கூட கவிதை எழுதுவியா?பலே பலே...
உலகத்தில் எல்லாமே வரம்பு மீறி கிடக்க.. நம் பண்பினாலையே அதை வீழ்த்தமுடியும் என்பதை திருக்குறள் போல் இரண்டே வரிகளில் விளக்கியிருக்கிறார்...யோகலக்ஷ்மி..தொடர்ந்து எழுதுங்க..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்