தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

அய்யோ பாரதி...நான் குறை கூறுவதாக நினைக்கவேண்டாம்!நிச்சயமாக நீ நன்றாக எழுதுகிறாய்...விமர்சனம் ஒரு கலைஞனை உரசிப்பார்க்கும் உரைகல்..உங்கள் கடைசி கவிதை நன்றாகவே உள்ளது...பாரு!நீ ஏன் கவிதை பூங்காவில் எழுதுவதில்லை?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தவம் அண்ணா!"தாடி வைத்தவன் எல்லாம் தாகூர் இல்லை..மீசை வைத்தவன் எல்லாம் பாரதி இல்லை" என சிலர் சொல்கிறார்கள்..நானோ தாடியும் மீசையும் என்றும் கவிதை எழுதுவதில்லை என்கிறேன்..கவிதை என்பது யாரோ யாருகுக்காகவொ எழுதி வைக்கப்பட்ட சொத்து இல்லை..மனசு ஒரு மத்தாப்பு!கவிதையே அதற்கு தீ வைக்கிறது..தீ எனக்கு மட்டுந்தான் சொந்தம் என்று எவரும் சொல்வதில்லை..சொல்வதிலும் அர்த்தம் இல்லை!..தவம் எனும் தீ நன்றாகவே எரிய ஆரம்பித்துவிட்டது!விருப்பமான ஒருவரின் விவரிக்க முடியாத அன்பை விளக்கம் எனும் விளக்கின் மூலம் எரியவிட்டு ஒளி காட்டிய தவம் அண்ணாவிற்கு நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தாடியும் ஆன்மீகமும் துறவிக்கு
தாடியும் அரிவாளும் கேடிக்கு
தாடியும் அறிவும் அறிஞருக்கு
தாடியும் பட்டாடையும் சாமியாருக்கு-ஆனால்
தாடியும் கந்தலும் இன்றுவரை மாறவில்லை ஏழைக்கு...

அன்புடன்
THAVAM

ஆட்டிற்கும் தாடி உண்டே
அஃறிணை கூட கவி என்பீரா?
பூனைக்கும் மீசை உண்டே
புரிந்து கொண்டீரா?இல்லை

தாடியை கவியின்
அடையாள சின்னமாய் அரசாங்கம்
அறிவித்து விட்டதா?

முகம்மதியர்கள்
முழுவதும் கவிஞர்கள் என்பீரா?

கண்ணதாசன்,வைரமுத்து தாடிக்கோலம்
பூண்டதில்லை கண்டதுண்டா?
தாய்ப்பால் தமிழ் பால் தவிர நீங்கள்
கவிப்பால் என்றாவது உண்டதுண்டா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஆட்டிற்க்கு தாடி உண்டு
ஆட்டிற்க்கு அறிவு உண்டோ?

பூனைக்கு மீசை உண்டு
பூனையின் மீசை
முறுக்கிவிடப்படுவதில்லையென்று
புரிந்துதான் எழுதுகின்றேன்

அடையாள சின்னங்களை
அவல சின்னங்களாய்
அடையாளம் கண்டது
அரசா மக்களா?

முகம்மதியரின் தாடி
கலாச்சாரத்தின் நாடி
இந்துக்களின் தாடி
ஆன்மீகத்தை தேடி
ஏசுவின் தாடி
அன்பின் பாடி

கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு
கோல மயில் என் துனையிருப்பு
என்றான் நாட்டுக்கோட்டை கவிஞன்-அவன்
தாடியை நாடிய பொழுது
நாடவில்லை அவனின் இன்னுயிர்.

தண்ணீர் தேசம் எழுதினான், வைரத்தில் முத்தானவன்
தண்ணீர் இல்லா தேசம் கண்ணீர் தேசமானதை நினைத்து

புட்டி பாலுக்கே வழியில்லாமல்
பட்டினியாய் எம் பிள்ளைகள்
கள்ளங்கபடமிலா பிஞ்சுகள்
கள்ளிப்பால் குடிக்க
கவிநானெழுதி
குவலயத்தில் என்ன பயன்????

அன்புடன்
THAVAM

அருட்பால் பொருட்பால் காமத்துபால்
மூன்றும் எழுதிய வள்ளுவனோ..

பசிப்பால் உணவின்றி தவிப்பால்-இன்று குழந்தை
உண்ட கள்ளிப்பால் எழுதாமல் விட்டானே!

இந்த நினைப்பால் அதிகார வர்க்கத்தின் பூரிப்பால்

இந்திய தாயோ தத்தளிப்பாள்! ஆனால் பூமாதேவி இச்சுமையின் காரணமாய் பூமியை அழிப்பாள் பின் உள்ளம் களிப்பாள்.

மழை இங்கே இல்லையென்றாலதில்
பிழையில்லை என்பேன்!
தண்ணீரே இல்லையென்றதும்
கண்ணீர் வந்தது கண்களில்

நம்மை சுற்றியிருக்கும்
நிலப்பரப்பில் முக்கால் பாகம்
நீர்தான் என்பதை
நீர் அறிவீரா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கவிஞர் ஷேக் அண்ணாவிற்கு இனிய மாலை வணக்கம். இந்த இழயை பார்த்ததும் எனக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டது. நான் கல்லூரி படித்த காலத்தில் என் தோழிக்காக எழுதிய கவிதை தான் நான் எழுதிய முதல் கவிதை.

இங்கு அன்னியர்களுக்கு இடமில்லை
சாமி சரஸ்வதிதேவிக்கு கூட...........
என்னவனின் கடிதங்கள்
மட்டுமே அனுமதி....
இந்த ரதிதேவியின்
பாடப் புத்தகத்தில்.......

அண்ணா. நல்லாயிருக்கா.... அடுத்த மாதம் அடுத்த கவிதையோடு வருகிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சகோதரி பிரியா அரசு!...முதல் கவிதையிலேயே அமர்களப்படுத்திட்டிங்க போங்க..யாருக்கும் அனுமதி கிடையாதா?தெவத்திற்கு சரி!ஆனால் கண்களுக்கு?காற்றுக்கு?தொடர்ந்து எழுதுங்க சரியா!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நட்பு என்ற உறவு
நம்மளவில் இருந்தாலும்
ஒரு படி உயர்த்தியாக
உயிரையும் கொடுப்போம்.

எம் நட்பின் புனிதம்
இருந்தாலும் வாழும்
இறந்தாலும் வாழும்
உயிர் உள்ளவரை தொடரும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகராணி அக்கா!உங்களை அறுசுவைக்கு மறுபடியும் என் கவிதை அழைத்துவந்ததில் மகிழ்ச்சியே...வாவ்!நட்பும் யானை போலத்தானா?இருந்தாலும் ஆயிரம் பொன்!இறந்தாலும் ஆயிரம் பொன்!..இருதய அரங்கத்தில் காதலுக்கு இரண்டே இருக்கைகள்..நட்பிற்கோ இருப்பிடம் எல்லாமே இருக்கைகள்..நட்பின் புனிதத்தை அழகாய் எடுத்துரைத்த யோகாவுக்கு நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்