தினமொரு புதுக்கவிதை

யாருக்காவது கவிதை எழுத ஆசை இருந்தால் இந்த இழையை பயன் படுத்திக்கொள்ளலாம்.. எனக்கு தெரிந்த. வரை அதில் உள்ள நிறைகுறைகளை சொல்கிறேன்....

கவிதகைளை சரி பார்க்கும் அளவுக்கு நீ என்ன அர்த்தங்களின் குத்தகைகாரனா?வார்த்தைகளின் கனாக்காரனா என என்மேல் வினா தொடுத்துவிடாதீர்கள்!தேர்வு எழுதுபவனைவிட திருத்துபவருக்கே அதிகம் பிழை கண்ணுக்கு படுவதுபோல் வேளியே இருந்து பார்த்தால்தான் குறை நிறை தெரியும் என்ற நோக்கத்திலும் எண்ணத்திலும் ஆரம்பிக்கபட்டதே இந்த இழை!
வேறெந்த நோக்கமும் இல்லை..இல்லை!

எனக்கும் விமர்சிப்பவர்களூக்கும் நிறைய வித்தியாசம்!அவர்கள் நிலவில் கறை என்கிறார்கள்..நானோ கறையை சுற்றி நிலவு என்கிறேன்.நிலவு ஒரு பாலைவனம் என்கிறார்கள்..நான் இறைவன் இலவசமாய் தந்த குளிர்சாதனம் என்கிறேன்...எப்போதும் குறைகளை அலசி பார்ப்பது கூடாது..நேசிப்பவரின் தேகம் எழுபது சதவீதம் நீரினால் ஆனதே என நினைத்தால் காதலை தொடரமுடியுமா?-ஷேக்

என்னுடைய ஒரு கவிதை..

நீ என்னுள் நிரம்பிய பிறகு
சிந்திய துளிகள்
இந்த கவிதைகள் அனைத்தும்.....

என் அவலின் வலி

ஏன் உன் இதயத்தை வருடி பார்கிராய்
நான் விட்ட அம்பு உன் இதயததை காயப்படுத்திவிடதோ

கருத்துக்களுடன் வாழ்த்துக் கூறிய தோழர் ஷேக் அவர்களுக்கு மிக்க நன்றி.
நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்திய -- தொலைநோக்கு பார்வை

விடுதலை இந்தியா பிறந்து வளர்ந்து
வருடம் கழிஞ்சாச்சு
dollorக்கும் white collorக்கும்
மீண்டும் அடிமை ஆயாச்சு

தேக்கி வைத்த வளமையெல்லாம்
தீர விற்றாச்சு
திறமை மட்டும் வாழ்கை
என்ற நிலைமை வந்தாச்சு

மண்ணில் கொஞ்சம் விண்ணில் கொஞ்சம்
ஆளுமை வந்தாச்சு
மொழியில் கொண்ட ஆளுமையெல்லாம்
மறந்தே போயாச்சு

ஊழல் மற்றும் லஞ்சம் இன்று
கோடிகள் கடந்தாச்சு
வல்லரசாகும் கனவும் இங்கு
கனவாய் கழிஞ்சாச்சு

நீர் தேக்கிய ஏரி குளங்கள்
வறண்டு போயாச்சு
விளைநிலங்கள் எல்லாம் இன்று
வீடுகள் ஆயாச்சு

நாடழிந்து போனால் என்ன
என்ற எண்ணம் வந்தாச்சு
கர்வம் கொண்ட தமிழும் இன்று
ஈழம் தோற்றாச்சு

சோலை நிற்கும் பூக்கள் ரசிக்க
நேரம் இங்கில்லை
நாளை எண்ணி வருந்தும் உனக்கு
வாழ்வும் இனியில்லை

உன் கையிருக்கும் விளக்கு என்றும்
விடியல் ஆகாது
நீ உனக்கு மட்டும் வாழ்ந்து வந்தால்
நிலைமை மாறாது

அறுசுவைக்கு வரவேற்கிறோம்,,,கவிதை
வார்த்தைகள் எளிமையாக இருந்தாலும்
அதன் அர்த்தங்கள் இன்றைய இந்தியாவின்
கஷ்டமான அடிமைநிலையை உணர்த்துவதாய் உள்ளது.
என்று புரிந்து தெளிவரோ நம் மக்களும் நாமும்கூட......,!

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து அவ்வபோது கவிதை எழுத ஆரம்பித்தேன். இதை கவிதை என்று சொல்ல முடியாது. ஏதோ எனக்கு தெரிந்த வார்த்தைகளை ஒன்றாய் கோர்ப்பேன்.
அதில் ஒன்று

நேசம்

மண்ணில் அழப்பிறந்தவன்
மற்றவர் மனதை நேசிக்கிறான்...!
மண்ணில் மடியப் பிறந்தவன்
காதலை நேசிக்கிறான்....!

-தமிழரசன்7

அழுகுரல்

கடலோரம் நம் கால் பதிந்த சுவடுகள்

திருட்டு தனமாய் ஊர்
சுற்றி திட்டு வாங்கிய தருனங்கள்

நீ இன்றீ நான் இல்லை
என்று வாழ்ந்த நிமிடங்கள்

கருவறையிலும் சண்டை போட்டு
கொண்ட நம் கை கால்கள்

நம் நாட்களை என்னி
நினைவுகள் கூட கனவு
கான துடிக்கும்

இன்றும் இமைகளுக்குள் தான் வாழ்கிறோம்
எங்கள் கண்களை திறக்கும் வரை - ஆம்

இது திருமணத்தில் பிரிக்கபட்ட
ஒரு இரட்டையர்களின் அழுகுரல்

விழிகளை மூடியதும் ...
விழித்து கொள்கிறது
உன் நினைவுகள்!

உன் ஞாபக சகதியில்
விழுந்த நாள் முதல்
எழ முயல்கிறேன்...
முடியவில்லை!

உன் நினைவுகள் மட்டும்
நெஞ்சில் நெருஞ்சியாய்
ரணப்படுத்துகிறது!

உறக்கத்திற்கும் எனக்கும்
ஓர் ஒப்பந்தம்... உனது
அருகாமை கிடைத்தவுடன்
அது காலாவதியாகட்டும் என்று!

இனி இருக்கும் நாட்களை,
இனிதாக்க விரும்பி காத்திருக்கிறேன்...
கனவுகளோடு. வருவாயா?

பணிவான சொல் ஒன்றே எல்லாவற்றையும் வென்றுவிடும்
அன்புடன் ஷமீனா

மேலும் சில பதிவுகள்