பார்காமலேயே காதல் சாத்தியமா?

நிறையபேர் காதலர்தினம் படத்தில் போல் பார்காமல் காதல் செய்வதாய் கேள்விபட்டிருக்கிறேன்.அது எந்த அளவுக்கு உண்மை என்பதும் தெரியாது.இது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்

தோழரே....காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்று நினைகின்றேன்...ஆகயால் பாற்க்காமலும் காதல் வரும் என்பது எனது கருத்து....

நிச்சயம் இந்த பார்க்காமல் காதல் பண்றதுலாம் சுத்த ஹம்பக் தான். தாங்கள் மத்தவங்களா பேசப்படனும்கிறதுக்காக செய்றது இதுலாம்,. இப்பலாம் பாத்து பண்ற காதலே தோத்து போகுது இதுல பார்க்காம காதலா? நடக்கலாம் அதுலாம் சில சொற்ப காதலர்கள் மட்டுமே இருக்க முடியும். எல்லாராலும் அப்படி ஒரு மனக்கட்டுபோடும். உண்மையாகவும் இருக்க முடியாது என்பது என் கருத்து.

உண்மை சம்பவம். என் தோழி அவளது தூரத்து உறவின் முறையில் அத்தை மகனை பார்க்காமலே தொலைபேசியின் மூலம் காதலித்தாள்.நான் எச்ச்ரித்தேன் அவள் என் காதல் உண்மையானது, அவரின் மனதை தான் நான் காதலிக்கிறேன் என்று டயலாக் விட்டாள். நான் அவரது போட்டவை அனுப்பி வைக்குமாறு கேள் என்று அவளிடம் கூறினேன். அவளும் அப்படியே அவரிடம் கூரி போட்டோவும் வந்தது. அவர் மிகவும் சிறு பையன் போல் தோற்றம் அளித்தார். அழகும் சுமாராகவே இருந்தார். அவ்வளவு தான் நைசாக கழன்று விட்டாள். அந்த நபர் விசம் சாப்பிட்டு விட்டு குடும்பத்தில் பெரிய பிரச்சனையே மூன்டு விட்டது .

என்னைய பொருத்தவரைக்கும் பாக்காம காதல் சாத்தியம்னுதான் தோணுது!
ஆனா மறுபடியும் அவங்க நேர்ல பாத்ததுக்கு அப்புறம் அந்தக் காதல் மறுபடியும் பூக்குமா? இல்லை புட்டுக்குமா!!!! அதுதான் தெரியிலை..........

Don't Worry Be Happy.

பாத்தாலே காதல் எல்லாம் வரமாட்டேங்குது இதுல பாக்காம்லே எல்லாம்
புட்டுக்கும்பா.

பார்க்காமல் காதல் இதுலாம் சினிமால புதுசா எதையவது சொல்லனுமேனு அவங்க யோசிச்சு சொல்றாங்க அவ்வளவுதான். நடைமுறைக்கு இது நிச்சயம் சாத்தியமே கிடையாது. அங்கொன்று இங்கொன்றுமா வேணும்னா பூக்களாம்.

பார்க்காமல் காதல் உண்மை என் விஷயத்தில். நான் கடந்த 3 வருடமாக என்னவரை பார்க்காமல் தான் லவ் பண்றேன் அவரும் அப்படியே. நாங்கள் மனதை புரிந்துக் கொண்டு காதலிக்கிறோம். காதலிப்போம். இன்னும் 2 or 3 மாதங்களில் கல்யாணம் பண்ண போறோம்.

வாழ்க உங்கள் காதல்

Don't Worry Be Happy.

Thanks Jeyalakshmi Sister

ஓ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிசினி கேட்கவே ரொம்பவும் ஆச்சரியமா இருக்கே. அந்த வெகு சிலரில் நம்ம கூடவே அந்த சிலர் இருந்து இருக்காங்களே ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. கேட்கவே சந்தோஷமாகவும் இருக்கு சீக்கிரத்தில் உங்கள் திருமணம் நடைபெற்று இதே காதலுடன் வாழ்நாள் முழுதும் இருக்க என் வாழ்த்துக்கள் கவி.

மேலும் சில பதிவுகள்