மைதா சொஜ்ஜி

தேதி: April 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

மைதா மாவு - அரை கப்
சீனி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - 2 சிட்டிகை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 2


 

ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதனுடன் உப்பு, சோடா உப்பு, சீனி, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி பிசைந்து விட்டு பிழிந்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். மைதாமாவு கலவையில் தேங்காய் பாலை ஊற்றவும்.
மைதாமாவில் கால் கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றும் அளவிற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.
இதைப்போல் ஐந்து அல்லது ஆறு ஊற்றி ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
எளிய மாலைநேர சிற்றுண்டியான மைதா சொஜ்ஜி தயார். இந்த எளிமையாக செய்யக்கூடிய குறிப்பினை வழங்கியவர் திருமதி. தேவசேனா அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்