அந்த நாள்...!! இனிய நாள்..!!

அன்பு தோழிகளே,

இதுவரை நீங்கள் அறுசுவையில் இருந்து மற்ற தோழிகளின்

ஒரு சில குறிப்புகளை உங்கள்

உறவினருக்கோ/நண்பர்களுக்கோ/கணவர்,குழந்தைகளுக்கோ நீங்கள் செய்து

கொடுத்து அதிக பாராட்டை பெற்றிருக்கலாம்.!!!!

அதனால் அந்த குறிப்புகள் உங்கள் வீட்டின் மெனு லிஸ்டில் வாரமொருமுறை

தவறாமல் இடம் பெற்றிருக்கலாம்.

அதை பின்னூட்டமூலம் குறிப்புகள் வழங்கியவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம்

அப்படி ஏதுமிருந்தால் அந்த குறிப்புகளை (உங்கள் குறிப்பை தவிர) செய்து

காட்டி அசத்திய/பாராட்டை பெற்ற அந்த இனிய நாளை ஒவ்வொன்றாய்

இங்கே பகிர்ந்து கொள்வீர்களா?..!!

அப்படியே அந்த குறிப்புக்கான லிங்கையும் போட்டால் உதவியாக இருக்கும் தோழிகளே..!

அன்புடன்
இளவரசி

ஹாய் இளவரசி...,நலமாக இருக்கின்றீர்களா..?
வீட்டில் அனைவரும் நலம் தானே...?
புது தலைப்பில் புது பகுதி தொடங்கி இருக்கின்றீர்கள்.
அதற்க்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.
நிச்சயம் சொல்வதற்க்கு உண்டு இளவரசி.
அதில் முதலில் இந்த அருசுவைக்கு வந்து முயற்ச்சி செய்து பார்த்த ஆசியா உமர் அவர்களின் “பிரட் புட்டிங்”மற்றும் “எம்டி சால்னா”.
இது இப்போது என் வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு டிஷ் ஆகும்.
என் குழந்தைகளின் விருப்பமான ஒன்றாகி விட்டது.எனவே....இது எனக்கு நல்ல பாராட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இளவரசி.
இன்னும் சிலவற்றை அப்பப்போ வந்து சொல்லுறேன் சரியா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நலமே அப்சரா?

நீண்ட நாள் கழித்து உங்களுடன் பேசுவதில் மகிழ்ச்சி...

நானும் முதன் முதலில் முயற்சித்தது ஆசியாவின் ப்ரெட் புட்டிங்தான்.

என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டதால் அது அவர்களின் ஒருநாள் டிபன்பாக்ஸ் ஐட்டமாக ஆகிவிட்டது....

என் தோழிகளுக்கும் பரிந்துரை செய்து அவ்ர்கள் குழந்தைகளூம் மிகவும் விரும்புவதாய் சொல்வார்கள்....எல்லா பாராட்டும் ஆசியாவுக்குதான்...!!

புட்டிங் வகையில் நான் முதன்முதலில் முயற்சித்ததும் இதுதான்...

அப்சரா உங்களின் ரைஸ் புட்டிங்க் கூட முயற்சிக்க ஆசைதான்..:-.முயற்சிக்கும் நாளில் சொல்கிறேன்.....

மற்ற தோழிகளூம் வாங்க....வந்து பகிர்ந்து கொள்ளுங்கள்..!!!

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாலோ இளவரசி!நலம்தானே?
நல்லதொரு திரி ஆரம்பித்துள்ளீர்கள், வாழ்த்துக்கள்.
நான் அறுசுவை கண்ட நாள் முதல் பல புதுப்புது உணவு வகைகளை இங்கு பார்த்து சமைத்துபயனடைந்துள்ளேன்.பாராட்டையும் பெற்றுள்ளேன்.
அவை பற்றி நேரம் உள்ள நேரம் ஒவ்வொன்றாக பதிகின்றேன்.

அவற்றில் ஒன்று.
அதிரா அவர்களின் பாகற்காய் பிரட்டல் கறி செய்து வீட்டில் பாராட்டை பெற்றேன்.
வீட்டில் முன்பெல்லாம் இந்த கறி என்றால் கசக்கும் என்று சாப்பிட மாட்டார்கள்.இப்போது கணவன் பிள்ளைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். தொடர்ந்தும் அக்கறியை செய்து வருவதால் ஊரிலேயே பாகற்காய் கறி வைப்பதென்றால் என்னிடம் அபிப்பிராயம் கேட்பார்கள் என் தோழிகள்.
இந்த பெருமை எல்லாம் அருசுவைக்குத்தான் சேரும்.

நன்றியுடன்
யோகராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் இளவரசி, அப்சரா, யோக‌ராணி

எல்லாரும் எப்படி இருக்கிங்க?

நல்லதொரு த்ரெட் தொடங்கி இருக்கிங்க இளவரசி. பாராட்டுக்கள்!

நானும் அறுசுவையை பார்த்து நிறைய ஐய்ட்டம்ஸ் ட்ரை பண்ணியிருக்கேன். அதுவும் நம்ம அதிரா & ரேணு நடத்திய 'சமைத்து அசத்தலாம்' பகுதிக்காக என்று கிட்டத்தட்ட அனைவரது குறிப்புகளும் எக்கச்சக்கமாக செய்து சுவைத்திருக்கிறேன். அதில் நிறையே பாராட்டும் கிடைத்திருக்கு பல குறிப்புகளுக்கு. சோ, எதை சொல்றது, எதை விடறதுன்னே தெரியலை. ஞாபகம் வரவர ஒன்னொன்னா சொல்கிறேனே! : )

ஜெயந்தி மாமியின் 'பூசணிக்காய் தயிர் பச்சடி' ரொம்ப ஃபேவரைட் - ‍ எனக்கும், என் ஹஸ்க்கும். இப்பல்லாம் இது செய்வதற்கென்றே பூசணிக்காய் பார்த்தால் கடைகளில் இவர் வாங்கசொல்கிறார்!. அடுத்து, செல்வியக்காவின் 'சுரக்காய் தட்டபயிறு குழம்பு' ‍ இதுவும் ரொம்ப பிடிச்சிப்போச்சு! அப்புறம், ஆசியா அக்காவின், புளிக்காய்ச்சல் எனக்கு ரொம்ப இஷ்டம்! ஆசியா அக்கா என்றவுடன் ஞாபகம் வருகிறது. அவங்க குறிப்பில் இருந்து நான் நிறைய செய்து பார்த்து இருக்கேன். இங்க நீங்க சொல்லிதான், அவங்களோட 'ப்ரெட் புட்டிங்'ஐ நான் மிஸ் பண்ணிட்டேன்னு தெரிந்தது. அப்புறம் என்ன, உடனேயே செய்தாகிவிட்டது. என் பசங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சுப்பா! (எனக்கும்தான்! : )) செய்த உடனேயே காலி! இன்று காலைல‌ பசங்க அதுதான் லன்ச் பாக்ஸ்‍கு வேண்டும் என்று சொல்லிட்டாங்க, சோ இன்றும் செய்து பசங்க பாக்ஸ்கு கொடுத்தனுப்பிட்டு, கொஞ்சம் நாங்களும் சாப்பிட்டோம்! : )

சோ, இந்த‌‌ புட்டிங்‍ஐ என‌க்கு தெரிய‌ப்ப‌டுத்திய‌ உங்க‌ இரண்டு பேருக்கும் (அப்சரா & இளவரசி) ஒரு ந‌ன்றி! அப்புறம் அவங்களோட எம்டி சால்னாவும் நான் ரீசண்டா ட்ரை பண்ணி எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. முக்கியமா என் பசங்களுக்கு இது ரொம்ப பிடித்து இருந்தது, ஹஸ் இடம் இருந்து பாராட்டும் கிடைத்தது. இன்னும், மனோ மேடம், ஜலிலா அக்கா, தளிகா என்று என் பட்டியல் நீளமா இருக்கு. ஏன், உங்களோட ஒரு குறிப்பும் இருக்கு இளவரசி! (அது என்னன்னு யோசிசக்க ஆரம்பிச்சிட்டிங்கதானே?!! ) ‍ஓக்கே, எல்லாத்தையும் இன்னைக்கே எழுதினால், என் ப‌திவு ரொம்ப பெரிசாகிடும்... அதனால, மீதி அடுத்த‌ ப‌திவில்... : ) ந‌ன்றி! வ‌ண‌க்க‌ம்.

அன்புடன்
சுஸ்ரீ

அனைவருக்கும் வணக்கம்.
அறுசுவை இணையதளத்தில் பல குறிப்புகள் செய்து பலன் அடைந்துள்ளேன்.
நான் சமைக்க கற்றுக் கொண்டதே இதில் தான் என்றால் மிகை அல்ல.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்
1. வேர்கடலை கார குழம்பு- மனோகரி மேடம்.
2. சௌசௌ பச்சடி - ரஞ்ஜனி மதன் மேடம்
3. பிஸிபேளாபாத் - சன்ரவி மேடம்
அனைத்தையும் தேடி டைப் செய்ய முடியவில்லை
சுருக்கமாக அறுசுவை யில் குறிப்பு தந்துள்ள அனைவருக்கும் எனது நன்றி

யோகராணி ,உங்க பதிவிற்கு நன்றி....இன்னும் பயன்பெற்ற குறிப்புகளை பார்த்து சமைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்

சுஸ்ரீ,உங்களுக்கும் பிரெட் புட்டிங் புடிக்குமா?

என்னோட குறிப்புல நீங்க எத சொல்வீங்கன்னு தெரியுது:-

மேலும் பயன்பெற்ற தோழிகளின் குறிப்பையும் எழுதுங்கள்

லாவண்யா,நீங்கள் சொல்லியுள்ள மூன்று குறிப்பும் நானும் செய்து பார்க்க ஆசை..
தொடர்ந்து நேரம் கிடைக்குபோது உங்க அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

அறுசுவையில் நான் செய்து பார்த்து பாராட்டை பெற்ற குறிப்பு கீதாச்சலின்

மைக்ரோவேவ் மைசூர்பாக்...ரொம்ப அருமை...
அடுப்பில் செய்யும்போது சிலவேளை பதம் மாறியிருக்கிறது..ஆனால் இது முதல் முயற்சியிலேயே சூப்பரா வந்துச்சு...என் குழந்தைகள்,கணவர் ருசித்து சாப்பிட்டார்கள்
என் ப்ரெண்ட்ஸ்க்கும் இத ரெகமண்ட் பண்ணினேன்..
கீதாச்சலுக்கு என் நன்றி..நிறைய பயன்பெற்ற குறிப்புகள் இருக்கு...

ஒவ்வொன்றாக சொல்கிறேன்...
பதிவு சொன்ன அனைவருக்கும் நன்றி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இன்று காலையில் தோசைக்கு புதிதாக தயாரித்த ஸாதிகாவின் இட்லிப்பொடி,மதியம் செந்தமிழ்செல்வி அவர்களின் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பும் ,வனிதாவின் பருப்புகீரை பொரியலும் செய்தேன்..
மூன்றுமே நல்ல சுவை.....

பொரிச்ச குழம்பில் எனக்கு பிடித்த சிறு மாற்றங்கள் மட்டும் செய்து வைத்தேன்..
குழம்பின் கடைசி சொட்டு கூட மிஞ்சவில்லலை...நன்றிம்மா..

வனிதாவின் முறையில் கீரையை நறுக்காமல் செய்ததால் முழுதாக சாப்பிட..முழுமையான சுவை....நன்றி வனிதா

ஸாதிகா மேடம்,உங்க இட்லிபோடி என் மகளுக்கு மிகவும் இஷ்டமாகி இனி எப்போதும் தோசைக்கு இந்த பொடி தொட்டு சாப்பிடுகிறேன்..கலக்கல் காம்பினேஷன் என்று சொன்னாள்...நன்றி மேடம்

இந்த நாளை இந்த மூன்று குறிப்புகள் மூலம் இனிய நாளாக மாற்றிய செல்விம்மாவிற்கும்,வனிதாவிற்கும்,ஸாதிகாவிற்கும்,முக்கியமாய் அறுசுவைக்கும் என் மனமார்ந்த நன்றி :-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நான் அறுசுவையிலிருந்து நிறையவே செய்து பார்த்திருக்கேன்.
சிலவற்றை மட்டும் கீழே எழுதியிருக்கேன்.
திருமதி. சாமுண்டீஸ்வரி அவர்களின்>>>>>>> கடலை மாவு சாம்பார்.
இந்த டிஷ் சாதத்துடனைவிட சப்பாத்தியுடன்சரியான காம்பினேஷன்.
திருமதி. ஜெயலஷ்மி ஸ்ரீனிவாசன் அவர்களின்>>>>>வெங்காய சப்பாத்தி.
இந்த டிஷுடன் தொட்டுக்கொள்வதற்குகூட ஏதுமே தேவையே இல்லை.
வனிதா வில்வார் அவர்களின்>>>>>>>>>>> நெல்லிக்கய் சட்னி.
இட்லி, தோசை, தயிர் சாதமுடனும்கூட பெஸ்ட் காம்பினேஷன்.
திருமதி. ரங்க நாயகி ராஜ கோபாலன் அவர்களின்>>>>> கேரட் ரைஸ்
இதுவும் சூப்பர் டேஸ்டா இருக்கு.
APPFAR. அவர்களின்>>>>>>>>>>> கோதுமை ரவை தோசை.
இந்த டிஷ் வயிற்றுக்கு ஹெவி ஆகாமல் ஈஸியா இருக்கு
நம்ம செண்பகா பாபு அவர்களின் வாழைப்பூ குழம்பு தான் படித்துப்
பார்த்த உடனே செய்து பாக்கனும்போல இருந்தது. அனா இன்று வரையிலும்
சான்சே கிடைக்கலை. நான் இருக்கும் இடத்தில் நினைச்ச நேரம் வாழைப்பூ
எல்லாம் க்டைக்காது.

கோமு எவ்வளவு குறிப்புகள் செய்து பார்த்திருக்கிறீர்களா?நீங்கள் சொல்லியுள்ளதில் எதுவும் நான் முயற்சிக்கவில்லை...செய்து பார்க்கிறேன்..
தங்கள் பதிவிற்கு நன்றி

வாணியின் ரவா கேசரி முறையில் சில மாற்றங்கள் செய்து செய்து பார்த்தேன் சுவையாக இருந்தது....குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்..

ஜலீலாவின் வெஜ் பிரியாணியும் ஒரு நாள் செய்திருக்கிறேன்..என் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது கலக்கலா இருக்கும்.

அதிராவின் கறி பன் ரெசிப்பி கூட நல்ல ரெசிப்பி,,நான் ஏதோ சொதப்பி கொஞ்சம் சுவை குறைந்து போனது...

செய்து பார்த்த நாட்களை நினைக்கும்போது மீண்டுமொருமுறை நன்றி சொல்ல தோணுது .வாணி,ஜலீலா,அதிராவுக்கும்,அறுசுவைக்கும் என் நன்றி...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மேடம்! பாராட்டுக்கள் ,நல்ல த்ரெட் ஆரம்பிச்சிருக்கீங்க.நான் முதன்முதலில் செய்த தம் பிரியாணி ஜலீலா மேடத்தோட "சென்னை சிக்கன் பிரியாணி"தான். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மூணு முறை செய்துவிட்டேன். அப்புறம் இந்திரா மேடத்தோட" முட்டை கொத்து பரோட்டா".சூப்பர் டேஸ்ட்!

மேலும் சில பதிவுகள்