கேஸ்கட் வால் ஹேங்கிங்

தேதி: April 29, 2010

5
Average: 4.1 (22 votes)

 

கேஸ்கட்
தீக்குச்சி பெரியது
வட்ட வடிவ அட்டை(கேஸ்கட் அளவு)
பிஷ்நெட் ஒயர்
வெல்வெட் பேப்பர் அல்லது நார்மல் கலர் பேப்பர்
க்ளு

 

கேஸ்கட் வால் ஹாங்கிங் செய்வதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கேஸ்கட் பின்னால் ஒரு தீக்குச்சியை வைத்து பிடித்துக் கொள்ளவும். பிஷ்நெட் ஒயரை கேஸ்கட்டின் மேல்புறம் வைத்து தீக்குச்சியின் மேல் பகுதியை சுற்றவும்.
பிறகு தீக்குச்சியின் கீழ் பகுதியை சுற்றவும்.
அடுத்து இரண்டாவது தீக்குச்சியை வைத்து மேலும், கீழும் சுற்றவும்.
இதுப்போல் பிஷ்நெட் ஒயரையும், தீக்குச்சியையும் வைத்து கேஸ்கட் முழுவதும் சுற்றி முடிக்கவும்.
கேஸ்கட் அளவிற்கு வெட்டி வைத்திருக்கும் வட்டமான அட்டையின் இருப்பக்கங்களிலும் விரும்பிய கலர் பேப்பரை ஒட்டிக் கொள்ளவும்.
கேஸ்கட்டை திருப்பி, அட்டையை அதன் மேல் வைத்து ஒட்டவும். சுவற்றில் மாட்டுவதற்கு சிறிது பிஷ்நெட் ஒயரை எடுத்து அதனுடன் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும்.
கேஸ்கட்டின் முன்பக்கத்தில் விரும்பிய படத்தினை ஒட்டிக் கொள்ளவும். எளிமையாக செய்யக்கூடிய அழகிய கேஸ்கட் வால் ஹேங்கிங் தயார். இந்த வால் ஹேங்கிங்கை திருமதி. ரேணுகா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரேணுகா, அழகா இருக்கு. தீக்குச்சியை ஒட்ட வேண்டாமா? விழாமல் எப்படி இருக்கும்.
vaany

வாணி எப்படி இருக்கீங்க?

ரெம்ப நன்றி வாணி.தீக்குச்சியை ஒட்ட வேண்டாம்.இறுக்கமாக சுற்றி கொண்டே போனால் போதும்.நல்ல ஸ்டாராங்க நிக்கும். நான் சொன்னபடி சுற்றி பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு புரிந்துவிடும்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
நலமா? கோகுல் எப்படி இருக்கான்? ரொம்ப நாள் ஆச்சி உங்களோட பேசி.
நீங்க செய்து காட்டியிருக்கும் வால் ஹேங்கிங் ரொம்ப நல்லா இருக்கு ரேணு. செய்யவும் ஈஸி மாதிரிதான் தெரியுது. இந்தியாவில என்னோட ஒரு சித்தி இந்த ஒயர் யூஸ் பண்ணி நிறைய பொருட்கள் செய்வாங்க‌. எப்படியும் கேஸ்கட் ஒன்னு தேத்திடலாம்னு நினைக்கிறேன். இந்த ஒயர்தான் இங்கே எங்க கிடைக்கும்னு பார்க்கனும். என் பொண்ணுக்கு சம்மர் ஹாலிடேஸ்ல செய்து பார்க்கவென்று இதையும் மார்க் பண்ணி வைச்சுக்கறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஸ்ரீ எப்படி இருக்கீங்க? உங்க கிட்ட பேசி எத்தனை நாள் ஆகுது. உங்களை தேடி ஒரு த்ரேடே போடலாம் என்று நினைத்தேன்.நல்ல வேலை கிடைத்துவிட்டீங்க:))

பொண்ணு எப்படி இருக்கா? எப்ப லீவு ஆரம்பம்? உங்க ஆபிஸ் வேலை எப்படி போகுது? இன்னமும் பிஸிதானா?

இது ஈஸிதான் ஸ்ரீ.இது ஸ்கூல் படிக்கும் போது கத்துக்கிட்டது.வயர் வெளிநாட்டில் கிடைக்குதான் என்று தெரியல.போன தடவை ஊருக்கு போனப்ப வாங்கி வந்தேன்.அடுத்த முறை ஊருக்கு போவதற்க்குள் செய்ய வேண்டும் தானே:) ஒரு வழியாக செய்து முடித்தேன்.

எனக்கு இன்னொரு ஐடியா கூட கிடைத்தது.இப்படி முயற்சி செய்து பாருங்க.ஒயருக்கு பதில் பேப்பரை ஸ்டிரிப்பா கட் செய்து யூஸ் செய்து பாருங்க.பேப்பர் கசங்காமல் செய்தால் நல்லா வரும் என்று நினைக்கிறேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

hello renuka,
r u from abudhabi?
do u know any friends from kuwait,
after a long gap i am here,sorry for the disturbance
will u please help.
vidyavasudevan, one among arusuvai members.

anbudan

ஹாய் ரேணுகா! பொன்னும், பையனும் எப்படி இருக்காங்க? உங்கள் கேஸ்கட் வால் ஹாங்கிங் நன்றாக இருக்கின்றது.செய்வது மிகவும் சுலபம்போல் இருக்கின்றது.இங்கு ஒயர் கிடைத்தால் செய்து பார்க்கலாம் என்றிருக்கின்றேன்.உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் வித்யா நான் அபுதாபி தான்.சாரிப்பா எனக்கு குவைத்தில் யாரையும் தெரியாது.உங்களுக்கு வேறு யாரும் கட்டாயம் உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் யோக ராணி எப்படி இருக்கீங்க? ராணி எனக்கு ஒரே ஒரு பையன் தான்:)அனைவரும் இங்கு நலம்

இது சுலபம் தான் ராணி.முடியும் போது முயற்சி செய்து பாருங்க.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

Fine and simple to do

ரேணு.... ரொம்ப சூப்பர் :) ரொம்ப நாளைக்கு பின் இன்று தான் அறுசுவை வர முடிந்தது. முகப்பில் பார்த்ததும் பதிவு போட்டுட்டேன். இதை நானும் பள்ளி படிக்கும் காலத்தில் (Craft Class) செய்திருக்கேன்.... உண்மையில் நான் செய்யவில்லை... எனக்காக நான் செய்ய வேண்டியதை என் அம்மா செய்து தந்தாங்க. ;) பள்ளி காலம் நினைவுக்கு வருது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

really good but will the match stick be steady and stable?

என்றும் அன்புடன்,
கவிதா

வால் ஹேங்கிங் செய்முறை சிம்பிளாக பார்க்க அழகாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

dear all:

this is Bala from Dubai, i am new to this web, all the sticks are stabled, u dont see ever

எப்படி இருக்கிங்க,மகன் நலமா?வால் ஹேங்கிங் ரொம்ப அழகாயிருக்கு.பள்ளி நாட்களில் நானும் இதை செய்திருக்கேன் ஆனால் மறந்துவிட்டது.பார்த்ததும் பாராட்டாமல் போக முடியவில்லை.ரொம்ப அழகாயிருக்கு.எனக்கு இந்த ஒயர் கிடைக்காது.பேப்பர் வைத்து செய்து பார்க்கிறேன் இப்போ அல்ல எப்போ கேஸ்கேட் வீணாகிறதோ அப்போ ஏன்னா இப்போதான்பா பழைய கேஸ்கேட்லாம் தூக்கிபோட்டேன்.முன்னாடியே இந்த குறிப்பு வந்திருந்தால் உபயோகமா இருந்திருக்கும்..

கலக்கலா இருக்கு வனி. கடைசில ரெண்டு வரி விபரம் என்ன, எங்க வாங்கலாம் என்று போட்டு இருக்கிறீங்களே, அது சுப்பர்.

‍- இமா க்றிஸ்

ஹி..ஹி.. நாங்களும் குறை கண்டுபிடிப்போம்ல.. :-)

பேரை தப்பாப் போட்டாலும், ரெண்டு வரி விபரத்தை (கிண்டலா) பாராட்டியிருக்கிற விதத்தில உங்க குசும்பு தெரியுது.. :-)

இமா'கு ரொம்ப வயசாயிட்டுது :((

அதுக்காக நீங்களும் அட்மினும் (இந்த வேலையை பண்ணது அண்ணா'வா??? இல்லை பத்மா, ரேவதி யாராச்சுமா??? அவங்களாம் நல்ல பிள்ளைகளாச்சே... அண்ணா'வா தான் இருக்கும்) சேர்ந்து என்னை காமடி பீஸ் ஆக்கறீங்களே.... நியாயமா??? :(

இமா... தூங்கி எழுந்து நல்லா கண்ணை கழுவிட்டு லேப்டாப் பக்கம் வாங்கோ. வனி வாணி குழப்பம் சரி... அது என்ன ரேணு வனி ஆன கதை??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேணு!
இந்த வொர்க்கை நான் ஸ்கூல் படிக்கும்போது செய்திருக்கேன். ஆனா, அதெல்லாம் விருப்பமே இல்லாம கொடுமைக்கு செய்தது.
ஆனா, இப்ப பசங்களுக்கு செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தனும்.
என்கிட்ட ஸ்பேர் கேஸ்கட் இருக்கு. ஆனா, இந்த ஒயர்தான் கிடைக்குமான்னு செக் பண்ணனும்.
தீக்குச்சி என் சொன்னபேச்சு கேட்குமான்னு தெரியல.
ரொம்ப எளிமையாய் அழகாய் இருக்கு ரேணு!

குறிப்பு:
குவைத்தில் நான் ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருக்கப்ப எப்பிடி நீங்க யாரையும் தெரியாதுன்னு சொல்லலாம்???? (:-)
வியாழக்கிழமை நான் ரொம்ப பிஸிப்பா. அதனால்தான் வித்யா த்ரெட்டினை பார்க்கல!

மகேஸ்வரி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

ஹாய் uk5mca (உங்க பேரு கவிதாவா?)நன்றிப்பா.நிச்சயம் நிக்கும் கலையவும் கலையாது.

கேஸ்கட் முழுதும் சுற்றியதும் முதல் குச்சியை சுற்றிய மற்றும் கடைசி குச்சியை சுற்றிய வயர் சிறிது இருக்கும்,கொஞ்சம் கம் தடவி ஒன்னுக்குள் ஒன்னு விடுங்க.அல்லது ஸ்டாப்லர் அடிங்க.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வனி உங்களைகானாம் என்று நினைத்தேன் வந்துட்டீங்க. ஸ்கூல் படிக்கும் போது

எல்லாரும் செய்த ஒன்று என்று தான் அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தே அனுப்பினேன். எப்படி சுற்றுவது என்றே மறந்துவிட்டது. அரைகுறையாய் இருந்த ஞாபகத்தில் எப்படியோ சரியான முறை கண்டுபிடித்தேன். ரெம்ப நன்றி வனி.இப்ப அம்மாகிட்ட கொடுக்காத நீங்களே
சமத்தா செய்து பாருங்க.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசியாஅக்கா நலமா?இங்கு வந்தாச்சா?ஒரு தகவலும் இல்லையே?ரெம்ப நன்றிக்கா

பாலா ரெம்ப நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேனகா பேசி நாளாகுது நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?எல்லாருக்கும் பள்ளி நாட்கள் ஞாபகம் படுத்திட்டேன் போலா:))ரெம்ப நன்றி மேனகா.

இங்க இந்த ஒயர் எங்கும் பார்த்ததில்லை.முடியும் போது செய்து பாருங்க. நான் எப்பொழுதும் கேஸ்கட் தூக்கி போடமாட்டேன் எதும் செய்து பார்க்கலாம் என்றே 4 , 5 சேர்ந்து கிடைக்கு.வேனுமென்றால் ஒன்னு அனுப்பிவைக்கவா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரொம்ப அருமை ரேணு இத பார்த்துட்டு பாராட்டாம போக முடியல,

ரொம்ப ரொம்ப அருமை,

என்றும் உங்கள்

ஜலீல்லாக்கா

Jaleelakamal

இமா எனக்கு அழுகை அழுகையா வருது, இமா இந்த ரேணுவை மறந்தாச்சு அப்படியா?

கணக்கு எடுத்தாதான் ரேணு அப்படியா?சரி சரி வனி பேரை போட்டதால்ல சும்மா விடறேன்.
கடைசி ரெண்டு வரி விபரம் படிச்சதுக்கு நன்றி இமா:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆஹா எனக்கு அட்மின் அண்ணாவை பார்த்ததும் அழுகை நின்னு சிரிப்பு வந்துடுச்சு.

ஆனாலும் ஒரு சந்தேகம் அண்ணா இமாவை குறைபிடிக்க வந்தீங்களா?இல்லை என்னை கிண்டல் பண்ண வந்தீங்களா? எதுக்கு வந்தீங்களோ எனக்காக வந்தீங்களேன்னு சும்மா விடறேன். வந்து கிண்டல் பண்ணியதுக்கு நன்றின்னா:))

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆமாம் வனி எனக்கும் ஒரே குழப்பம் நம்ம பேரு ஒத்து போகலையே.இமா கனவு எதும் கண்டு இருப்பாங்க.அதுல நீங்க வந்து இருப்பீங்க.அதான் உங்களையே நினைத்து பதிவு போட்டுட்டாங்கபோல.:)

அப்படி தானே இமா:) பாவம் இமா ஒரு பெயரை மாத்தி போட்டதுக்கு எல்லோரும் இமா இப்படி பயம்படுத்துவதா?

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் கீதா எப்படி இருக்கீங்க?வீட்டில் எல்லோரும் நலமா?பேசியே ரெம்ப நாள் ஆகுதுப்பா.இந்த கிராப்ட்டை பார்த்ததில் இருந்து எல்லோருக்கும் ஸ்கூல் ஞாபகம் தான் வருது.முடியும் போது செய்து பாருங்க கீதா.முதல் குச்சி கரெக்ட்டா நின்னுச்சுன்னா மற்றது ஒழுங்கா நிக்கும்.

அச்சோ கீதா நான் உங்களை தெரியாதுன்னு சொல்லல.நான் நினைத்தது சொந்தகாரங்க,நேரில் பார்த்த பிரெண்ட்ஸோ என்று நினைத்தேன்,அதான் தெரியாதுன்னே.

வெள்ளி சனி வீக்கெண்ட் அதனால் எப்பவும் வியாழகிழமை வேலை இருக்கும்.அன்று நிறைய பேர் பிஸிஆயிடுவாங்க.உங்க பதிவை பார்த்தது சந்தோஷம் கீதா.ரெம்ப நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலிலா அக்கா நலமா? உங்களை இங்க பார்த்தது சந்தோஷமா இருக்கு.ரெம்ப நன்றிக்கா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஐயோ!! என்ன ஆச்சு!! இருங்க படிச்சுட்டு வரேன். ;)

‍- இமா க்றிஸ்

என்ன சிரிப்பு இங்க?? க்ரர்ர்ர்ர். ;) இமா வந்தாச்சு, குச்சியோட ;)

அது... அறுசுவைல எல்லாரும் எவ்வளவு அலர்ட்டா இருக்கீங்க என்று டெஸ்ட் பண்ண இமா போட்ட பதிவு. பரவாயில்ல, மற்ற எல்லோருக்கும் முன்னால ப்ரதர் வந்து கண்டு பிடிச்சு சிரிச்சிட்டாங்க. எத்தனை வேலை இருந்தாலும் அலர்ட்டாதான் இருக்கீங்க. பாராட்டுக்கள் அட்மின். ;)))

//கிராப்ட்ன்னாலே வனியா..// பார்த்துட்டு 'பின்ன எவ்வளவு அழகா பண்ணி இருக்காங்க,' என்று திரும்பவும் நினைச்சிட்டு போய்ட்டேன். அது ரேணு, வனிக்கு போட்ட பதிலால வந்த எஃபெக்ட். ரேணுதான் அனுபவிக்கணும்ம் ;)

இங்க சனிக்கிழமையா, அதுதான் நிறைய வேலை. நடுவே கிடைச்ச காப்ல ஷேக் தம்பியை ஒரு ஷேக் பண்ணி விட்டு ஓடிரலாம் என்று வந்து... (அங்கதான் பிழை ஆகும் என்று நினைச்சேன். தப்பா இங்க ஆச்சு. ஹும்.) 'அட, இமா பின்னூட்டம் இல்லாம ஒரு க்ராஃப்ட் குறிப்பு இருக்கலாமா?' என்று ஆர்வக் கோளாறில, சட்டென்று பின்னூட்டம் போட்டேன். அப்ப தோணிச்சு, இப்புடியே எல்லாருக்கும் ஒரு டெஸ்ட் வச்சா என்ன என்று. பாஸாகிட்டீங்க, பாஸாகிட்டீங்க. எல்லாரும் பாஸாகிட்டீங்க. ;D 100%

//பேரை தப்பாப் போட்டாலும்,// சாரி ரேணு. அடுத்த தடவை டெஸ்ட் பண்றப்ப வேற யாராச்சும் எழுதின குறிப்பு யூஸ் பண்றேன். அப்பிடியே .........யையும் யூஸ் பண்றேன். ;D

//ரெண்டு வரி விபரத்தை (கிண்டலா) பாராட்டியிருக்கிற விதத்தில உங்க குசும்பு தெரியுது.. :-)// இதுக்கு என்னத்த நான் சொல்றது!! ;))))) காக்காய் இருக்க பனம்பழம் விழுந்த மாதிரி. ;)))))))) ஒரு செட்டியார் குடைய வச்சு சண்டை பிடிச்சுட்டு இருக்கேன் இன்னும். முன்னால இதே, இதே ஃபிஷ் நெட் ஒயர் என்னனு தெரியாம ஒரு குறிப்புல திண்டாடி, பிறகு பிரச்சினையை ஒரு மாதிரி சமாளிச்சாச்சு. ;)

ரேணு படம் சுப்பர் க்ளியரா இருக்கு. அந்த ரெண்டு வரி எனக்கு எவ்வளவு உதவியா இருக்கும் என்கிறது இங்க யாருக்குங்க புரியப் போகுது! இமாவுக்கு மட்டும் தான் தெரியும் அந்தக் கஷ்டம் எல்லாம். நிறைய குறிப்பு அழகா இருந்தாலும் ஒண்ணும் செய்து பார்க்க முடியல. ம்.. நினச்சு இருக்கேன். இந்தியா வந்தால், கவனிக்கவும் வந்தால், இந்த ஃபிஷ் நெட் ஒயர், குங்குரு மணி, வளையல் பிரேம், நெக்லஸ் செய்ய வெள்ளைக்கல்லு, கயிறு, பர்னர் திரி, செட்டியார் குடை ஸ்டான்ட் இப்படி சிலபல பொருட்கள் (தர்மாகோல் - ஒரு விதமான கோல் இல்லை. அது போல் சாட் பேப்பர் - பேப்பர் இல்லை என்று ஒரு ஐடியா இருக்கு மீதிப் பொருட்கள்) ஹோல் சேல்ல வாங்கிட்டு வரதா இருக்கேன்.

இன்னும் ஒரு வயதே நிரம்பாதவங்க... யாருப்பா அது? வ னி தா, வனிதா, //ரேணு வனி ஆன கதை// நீங்களே சொல்லிட்டீங்களே. அதேதான். ;)

அழாதைங்கோ ரேணு. அடுத்த முறை நான் நிச்சயம் வேற ஆளைப் பிடிக்கிறன். அதெப்படி மறக்கிறது? ப்ரிஜ்ல இன்னும் போட்டோ பிரேம் ஒட்டி இருக்கே. (நீங்கதானே அது!) இப்ப டிஷூ தரவும் ஆக்களைக் காணேல்ல. நான் போஸ்ட்ல அனுப்புறன்.

//வனி பேரை போட்டதால்ல சும்மா விடறேன்.// மிக்க நன்றி ரேணு. ;)
//கடைசி ரெண்டு வரி விபரம் படிச்சதுக்கு நன்றி இமா// ஹி.. ஹி. ;) நாம்லாம் படம் பார்த்தே கிராஃப்ட் பண்ணிருவோம் என்கிறதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கிறீங்க எல்லாரும். ;)

காலைல தான் நினச்சேன், இங்க சிரிச்சுக் கதைச்சுக் கனநாள் எண்டு. அது நான் துவங்கி விட வேணும் எண்டு இருந்திருக்குது.

//அண்ணா இமாவை குறைபிடிக்க வந்தீங்களா?// இல்லை... இல்ல. மாட்டி விடுறதுக்கு. ;) + அறுசுவைல நடக்கிற ஒவ்வொரு அதிர்வும் தனக்குத் தெரியும் எண்டு காட்டுறதுக்கு. ;)))

//வந்து கிண்டல் பண்ணியதுக்கு நன்றின்னா:))// ம்.. எல்லாம் என் விதி. ;) நீங்களும் சேர்ந்து பழி வாங்குறீங்க. நடத்துங்க. ;))

நல்ல வேளை, பப்பி, சந்து கூட்டணியை இந்தப் பக்கம் காணேல்ல. ஸூ! இப்போதைக்கு தப்பினேன்.

நல்லா சிரிச்சீங்களா? குட். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!!! ;)

இப்போதைக்கு அனைவருக்கும் நல்லிரவு கூறி விடை பெறுகிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா உங்க பதிவு பார்த்து சிரிப்பு அடக்கமுடியலை.ஒரு பழமொழி சொல்லுவாங்க
தானே கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு அது மாதிரி.:)

இமா வீட்டு பிரிஞ்சில் போட்டோ பிரேம் இருக்கும் வரை என்னை மறக்கமாட்டீங்கன்னு நம்பலாம்:)அதுக்குன்னு பிரேமை தூக்கிபோட்டுடாதீங்க:)

நானும் அவ்வளவு சீக்கரம் படிக்கமாட்டேன் இமா. இருந்தாலும் 2 வரி எழுதனும் என்பது முக்கியம் தானே:)
அறுசுவையில் சிரித்து பேசியே ரெம்ப நாள் ஆகிவிட்டது.உங்களால் நல்ல சிரித்துவிட்டேன். ஜூஸ் வேனுமா இமா?சிக்கனமா இல்லை தாரளமா போட்டு தரேன்.பயப்படாமல் குடிக்கலாம்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
நான் நலமே. ஆமா ரொம்ப நாள் ஆச்சு, நாம பேசி! ஆனால், நான் இங்கேயேதான் இருந்தேன் ரேணு! போன மாதமெல்லாம் நிறைய விஸிட் பண்ணேன் அறுசுவையை. நான் உங்களைதான் எங்கயும் பார்க்கவே முடியலையேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆக்சுவலா, போன மாசம் கொஞ்சம் வொர்க் லோட் ஓக்கேவா இருந்தது. இப்பதான் நெக்ஸ்ட் வீக்கில இருந்து, அடுத்த புது ப்ராஜக்ட் ஒன்னு ஆரம்பம்!. அப்பப்ப முடியும்போதெல்லாம் அறுசுவையை எட்டிப்பார்க்க வருவேன். :) மீண்டும் பிறகு சந்திக்கலாம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ரேணுகா அழகா செய்து இருக்கீங்க.1 சந்தேகம் தீக்குச்சியை சுற்றி முடிக்கும் போது எப்படி முடிப்பது. பிஷ்நெட் ஒயர் அவிழ்ந்து விடதா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta