முள்ளிக்கா சீடை

தேதி: May 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 200 கிராம்
உருட்டு உளுத்தம் பருப்பு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - குண்டு மணி அளவு
உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - 2 கப்


 

முதலில் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசி, உளுந்து இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமும், உளுந்து அரை மணி நேரமும் ஊற வேண்டும்.
ஊற வைத்த அரிசி, உளுந்தை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்துண்டு, மிளகாய் வற்றல் போட்டு அரைக்கவும். சிறிது கொரகொரப்பாக இருக்கும்படி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை போட்டு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிய நெல்லிக்காய் அளவாக கிள்ளி போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
இரண்டு நிமிடம் வைத்திருந்து வெந்ததும் எடுத்து விடவும். இதைப்போல் எல்லா மாவையும் செய்துக் கொள்ளவும்.
சுவையான மாலை நேர சிற்றுண்டி முள்ளிக்கா சீடை தயார்.
இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன் அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலா உங்கள் சமையல் சுப்பர்.உழைப்பாளர் தினத்துக்கு நல்ல ஒரு ரேசப்பி தந்துள்ளீர்கள்.லிவு நாள் அதுவும் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு அசத்திட வேண்டுயதுதான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

nan ithai saithu asathiten