fever diet for 16 month baby

என் மகளுக்கு 2 நாட்களாக காய்ச்சல்
அதனால் இப்போது என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கிறாள்
குழந்தை சோர்ந்து விட்டாள்
எதுவுமே சாப்பிடவில்லை
டாக்டர் சரியாகி விடும் என்கிறார்
என்ன கொடுப்பது என்றே தெரியவில்லை
என்ன பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்களேன்

கவிதா, வயிற்று ப்ரச்சனை எதுவும் இல்லையென்றால் சூப், ரசம் சாதம், இட்லி, Jell-o, cracker இவையெல்லாம் குடுக்கலாம். ஸ்டமக் வைரஸ் போன்ற ப்ரச்சனை எனில் வாந்தி நிற்கும் வரை நீராகாரமாக குடுங்கள். பால், fruit juice ஒன்றிரண்டு நாட்களுக்கு குடுக்க கூடாது என்று டாக்டர்கள் சொல்வார்கள். அப்படி ஸ்டமக் வைரஸ் இல்லயெனில் பால், fruit juice குடுக்கலாம். கவலைப் படாதீர்கள், சரியாகி விடும்.

கவிதா வாமிட் வருவதால் இஞ்சி சாறு தென் கலந்து ஒரு ஸ்பூன் கொடுங்க.

சாப்பாடு எதுவும் செல்லாது ஆகையால் கொஞ்சம் ஆறிய வெண்ணிர் அப்ப அப்ப ஒரு வா கொடுங்க.

முடிந்தால் அதிகம் பால் கலக்காத ஹார்லிக்ஸ் அதுவும் ஒரேயடியாய் குடிக்க மாட்டார்கள், அரை ம்ணிக்கொரு முறை கால் டம்ளர் கொடுத்தால் போதும்.
ஹார்லிக்ஸில் சிறிது குளுக்கோஸ் சேர்த்து கொள்ளலாம். வாந்தி வருவதால் குளுக்கோஸ ஒரு விரலால் தொட்டு நாக்கில் சிறித்து வையுங்கள்.

Jaleelakamal

குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டால் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன் பிறகு ஒரு சிறிய ஸ்பூன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஓ.ஆர்.எஸ் கரைசலை கொடுக்கவும். இதன் மூலம் வாந்தி ஏற்படுதல் நின்று விடலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும்.

வாந்தி எடுக்கும்பொழுது இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சிறிது சிறிதாக ஸ்பூன் மூலம் கொடுக்கவும். சுமார் 12-24 மணிநேரம் கழித்து வாந்தி ஏற்படுவது இல்லையெனொல் இட்லி, பாலில் ஊற வைத்த ரொட்டி, அரிசி கஞ்சி போன்ற மிருதுவான திட உணவுகளைக் கொடுக்கவும்.
(ஓ.ஆர்.எஸ் இல்லனா 200 மில்லி நீரில் 2 ஸ்பூன் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது எலுமிச்சைசாரு கலந்தால் ஓ.ஆர்.எஸ் கரைசல் தயார் ஆகிவிடும்)

நீரின் இழப்பை சரியீடு செய்ய போதிய அளவு தண்ணீர் குடிக்க கொடுக்கவும்

Don't Worry Be Happy.

மிகவும் நன்றி
hospital கொண்டு சென்றேன்
விடாமல் dysentry ஆனது
அதனால் stomach flu என்கிறார்கள்
லேசான ஆகாரம் கொடுக்க சொல்கிறர்கள்
வின்னி,ஜலீலா,ஜெயா ரொம்ப தேங்க்ஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

வயிற்றுபோக்கும் காய்ச்சலும் இரண்டுக்கும் சரியான உணவு..சாதம் வடித்த கஞ்சி தான்..இழந்த சக்தியை கிடைக்க ஏற்றது.இதையே கொடுத்து போர் அடித்து போனால் மோர் சாதம் கொடுக்கலாம்..மற்ற பால் ஐடம்ஸ் எதுவும் வேண்டாம்...சிறிது மாற்றம் தெரிந்த பின் வெறும் வானலியில் லேசாக சூடுபடுத்தின ப்ரெட் /பன் அல்லது ஆரோரூட் பிஸ்கட் கொடுத்து பார்க்கலாம்...நாக்கில் லேசாக தேன் தடவி விடுங்கள்.
தேனில் மஞ்சள் தூள் குழைத்து 1/2 ஸ்பூன் கொடுத்து பாருங்கள்.
வாந்தி இருந்தால் அதற்கான மருந்து கொடுத்து அரை மணிநேரம் கழித்து சாப்பாடு கொடுங்கள்..

sorryppa.இப்பொ தான் உங்க பதிவு பார்த்தேன்.குழன்தைக்கு இப்பொ காய்ச்சல் எப்படி இருக்கு.முதலில் pediyalyte,gingerale,gatrode இப்படி ஏதாவது குடுங்கள்,dehydrate ஆகிவிடாமல் இருக்க.பிரகு,கொஞ்சம் கொஞ்சமாக அரிசிக்கஞ்சி குடுங்கள்.சீக்கிரம் சரியாகி விடும்,கவலைப்படாதீர்கள்.vegetable soup, bread kudukkalaam.

டியர் பிரியா,
மகளுக்கு இப்போ காய்ச்சல் இல்லை
வாந்தி கொஞ்சம் நின்று விட்டது
இன்னும் dysentry மட்டும் நிற்கவே இல்லை
ரொம்ப கஷ்ட படுகிறாள்
pedialyte ,கடைந்த மோர் சாதம் கொடுத்தேன்
டியர் thalika ,
நீங்க சொன்ன அட்வைஸ்கு மிகவும் நன்றி
நானே உங்களுக்கு ஒரு கேள்வி போடலாம்னு இருந்தேன்
நீங்களே reply பண்ணிடீங்க
நான் உங்க column பார்ப்பேன்
குட் வொர்க் congrats அண்ட் தேங்க்ஸ்

என்றும் அன்புடன்,
கவிதா

இப்ப தான் நியாபகம் வருகிறது..என் மகளுக்கு வந்தபொழுது ஒருவர் சொல்லி மாதுளம்பழ ஜூஸும் ஆப்பில் ஜூசும் கொடுத்தேன்..சற்றி நிவாரணம் கிடைத்தது..

கண்டிப்பாக கொடுக்கிறேன் மேடம்
இங்கு மாதுளம் பழம் கிடைப்பது இல்லை ஆனால் ஆப்பிள் கிடைக்கும்
கண்டிப்பாக கொடுக்கிறேன்
மிகவும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, இங்கு எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் மாதுளம்பழ யூஸ் வாங்கலாம். விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த யூஸ்.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நான் போகும் சூப்பர் மார்கெட், கொரியன் ஸ்டோரில் மாதுளம் பழம் விற்கிறார்கள். உங்கள் ஏரியாவிலும் பாருங்கள்.

வாணி

மேலும் சில பதிவுகள்