மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

walaikum salam good friend உங்களது பெயர்&உங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

Assalamu alaikkum
hai, i am sherin....
from kanyamumari
may i know about u madam

God bless you all... by SHERIN

வைரமுத்து தன் முதல்பாடலான "பொன்மாலை பொழுதில்"
பொன் மாழை பொழுது..
இது ஒரு பொன்மாழை பொழுது!
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்!

...என்று மாலைபொழுதில் ஆகாயத்தில் இருக்கும் சிவப்பு நிறத்திற்க்கு
உவமை அளிப்பார்.ஆகாயத்தை பெண்ணிற்க்கு ஒப்பிட்டு சிவப்பு நிறம் உடைமாற்றியதால் வெட்கப்பட்டு அதனால் ஏற்பட்ட சிவப்பு என்கிறார்.அந்த வரி என்னை ரொம்பவும் கவர்ந்தது

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எனக்கு பிடித்த பாடல்"உழவன்" படத்தில் இடம்பெற்ற
"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ" எழுதியவர் வைரமுத்து. இந்த பாடலில் ரம்பாவும் அழகு,பிரபுவும் ரொம்ப அழகு!

பிடிச்ச நபர்களை பற்றி கூட சொல்லலாமா? அப்ப நான் இவங்களை பற்ரி சொல்லியே ஆகனும்! இரண்டு பேர், மங்குனி அமைச்சர்,சேட்டைக்காரன் அப்படின்னு பேர் வச்சிகிட்டு Face book ல எழுதறாங்க பாருங்க! படிச்சு ,படிச்சு,சிரிச்சு, சிரிச்சு, வயிறு புண்ணாயிடும். முடிஞ்சா ஒருமுறை போய் படிச்சு(சிரிச்சு) பாருங்க!

குழந்தைகளின் ஜனாதிபதி...
நூறு சதவீத உண்மை...
அப்துல் கலாம் அருமையான மனிதர்....
அவரை பற்றி என்ன சொல்ல??

மேலும் பள்ளி விழாக்களில் கலந்து கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடுவர் என்று பத்திரிகைகளிலும் நாளிதழ்களிலும் படித்து இருக்கிறேன்..

கனவு காணுங்கள் என்றார்..அவரை பார்பதே பெரிய கனவுதான் என்னை பொறுத்தவரையில்...
அவர் ஒரு விழாவில் போசியத்தை தொலைகாட்சி மூலம் பார்க்க நேர்ந்தது.
அவர் பேசிய சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
குழந்தைகளை அவர் எவ்வாறு வழி நடத்த நினைக்கிறார் என்பதற்கு ஒரு சில சான்றுகள் தான் இவைகள்...

முதலில் அவர் பெற்றோரையும், குழந்தைகளுக்கும் தனி தனியாக உறுதி மொழி எடுக்க சொன்னார்...
எல்லோரையும் மை டியர் பிரெண்ட்ஸ் என்று அவர் அழைத்த விதமே அவ்வளவு ஆனந்தமாக இருந்தது...

குழதைகளுக்கான உறுதி மொழி:
நான் என் வீட்டில் ஒரு 25 புத்தகளை கொண்ட ஒரு நூலகம் அமைப்பேன்...
தினமும் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பேன்...

பெற்றோகளுக்கான உறுதி மொழி..
என் குழந்தையின் நூலகத்தை ஒரு பெரிய நூலகமாக மாற்றி தருவேன்.. குறைந்தது 500 புத்தகமாவது இருக்கும் வகையில் அமைப்பேன்...தினமும் ஒரு நூலை படிப்பதை வழக்கமாக்கி கொள்வேன்...

மேலும் சிறு உதாரணங்களை குழந்தைகளுக்காக சொன்னார்..
ஒரு முறை அவரை பார்க்க பார்வை இல்லாத பத்தாம் வகுப்பு படித்த மாணவன் ஸ்ரீகாந்த் வந்து இருந்தானாம்...

அப்போது அந்த மாணவன் கலாமை பார்த்து நீங்கள் இது வரை என்ன சாதனை செய்து இருக்கீங்கள் என்று கேட்டானாம்..
அதற்கு அப்துல் கலாம்...ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாக வந்ததே சாதனை தானே என்று சொன்னாராம்...

பதிலுக்கு நீ என்ன சாதனை செய்ய போகிறாய் என்று கேட்க...
அந்த மாணவன் முதல் முதலாக பார்வை இல்லாத ஜனாதிபதி நான் தான் என்று சொல்ல வைப்பேன் என்றானாம்...

அவனை தட்டி கொடுத்து நிச்சயம் வருவாய் என்று சொல்லி, அவனுக்கு இருக்கும் தனம்பிகையை கூறும் பொழுது குழந்தைகளிடம் இருந்து பலத்த கைதட்டல் காண முடிந்தது...

அவர் தான் ஆசிரியர் சொல் படித்தான் படிக்கவேண்டிய பாடத்தை கூட தேர்வு செய்தார் என்றும்..ஒவோருவற்கும் தாய் தந்தைக்கு பிறகு அடுத்த கடவுள் ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் தான் என்றும் கூறினார்...
அந்த மாமனிதர் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

எனக்கு பிடித்த நபர் என்றால் என் நினைவுக்கு வருவது நபிகள் நாயகம் தான்...(பாபு(அட்மின்) அண்ணா! நான் இங்கு மதத்தை பற்றி ஏதும் கூற வில்லை)

எல்லா நபி மார்களும் நான் சொல்வதை கேளுங்கள்..செய்யுங்கள் என்று சொன்னபோது இவர் மட்டும் நான் செய்வதை நீங்கள் செய்யுங்கள் என்றார்.
மைக்கேல் ஹார்ட் என்ற அறிஞர் இந்த உலகத்தில் இவர்கள்வந்து தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்று நூறு பெரை "the hundred" என்ற தன் புத்தகத்தில் வரிசை படுத்தினார்.அதில் அவர் முதலிடம் கொடுத்தது நாயகத்திற்க்கு தான்.மூன்றாவது இடம் ஏசுநாதருக்கு.

அது ஏன் என்று சொல்ல இந்த இழை போதாது.(மேலும் தலைப்பு வேறு பக்கம் சென்றுவிடும்.ஆகையால் இத்துடன் முடித்து கொள்கிறேன்)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் ஷேக் அண்ணா...,வேட்டை பற்றிய கவிதை உண்மையிலேயே சூப்பராக இருக்கு.
எனக்கும் ”பொன்மாலை பொழுது”பாட்டு வரிகள் ரொம்ப பிடிக்கும்.

ஹாய் யோகராணி....எப்படி இருக்கீங்க...?
எனது பிடித்த நபர் பற்றி சொல்ல நினைத்ததை தாங்கள் சொல்லி விட்டீர்கள்.
அப்பப்பா அவரின் எளிமை மற்றும் எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.
அப்துல் கலாம் போன்ற நல்ல மனிதர்கள் இந்த அரசியலில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் (ஹூம்.....கொஞ்சம் நப்பாசை தான் என்ன செய்ய...)

ஷேக் அண்ணா....நிச்சயமா நீங்க சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை.ஆனால் அதை நாம் இங்கு சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும்.ஆனால் இந்த உண்மை தெரிந்தவர்கள் வியக்காமல் இருக்க முடியாது.

“அன்புள்ள ரஜினிகாந்த்”படத்துல வர ’கடவுள் உள்ளமே.....’என்ற பாடலை கேட்டால் மனம் என்னவோ ஆகும் .எனக்கு அழுகை அழுகையாக வரும்.
பாடல் என்னவோ கடவுள் வாழ்த்து போல தெரிந்தாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.அதில் சில...
“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் காண்பது இல்லை
ஊருக்கொரு ஜாதி இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு நாலம் இல்லையே இறைவா உயிர்பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே..
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.”

மீண்டும் வருகிறேன் சில வரிகளோடு...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

Assalamu Alaikkum sheik anna..
hi all madams....
ellarum nalama irukingala?

enakku piditha nabar MOHAMMED NABI(SAL) avarkal..
sheik anna sonnathu sari than...

appurama sollanum na.
annai therasa piditha nabar..
anbai muthalai konda penmani..
thooimayana ullam konadavanga......
makkalukku seavai seivathai muthala kondavanga...
nalla penmani.....
athanala pidikkum....

God bless you all... by SHERIN

வாரணம் ஆயிரம் படதில் வரும் அணல் மேலே பணித்துலி அழைபாயும் ஒரு கிழி பாடல்...தாமரை யின் வரி மிகவும் அழகாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்