மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை--அங்காடி தெரு.ஒன்றா ரெண்டா ஆசைகள்=காக்க காக்க மிகவும் பிடித்த பாடல்கள்.
உயிரே==பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன்...
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே.... படம் பேரு தெரியவில்லை.
மன்றம் வந்த தென்றலுக்கு மஞச்ம் வர நெஞ்சம் இல்லையோ....மவுனராகம்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே (பெண்)

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே (ஆண்)

வாய் மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா
வண்டு வந்து தீண்டாமல் பூவாகுமா
கொண்ட ஆசைகள் கைகூடுமா
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா? (பெண்)

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
அன்பு மொழி பேசி என் ஆசை வலை வீசி
கன்னி மீனை அள்ளிக் கொள்ள கை தாவுதே (ஆண்)

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே (பெண்)

ஆண் மனம் வைத்தால் அந்தி பின் வாங்குமா
நம்பி உள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா
தாலி என்ற வேலி கட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போல் உன்னை பாராட்டுவேன் (ஆண்)

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே (பெண்)

படம் : தூரத்து இடி முழக்கம்
பாடகர்கள் : எஸ். ஜானகி - கே.ஜே. யேசுதாஸ்.
இசையமைப்பாளர் : சலீல் செளத்ரி
பாடலாசிரியர் : கு.மா. பாலசுப்பிரமணியம்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையில்
மழைபாடும் பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் அர்த்தம் தருமோ?
கோடி கீர்த்தனமும்,கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிகண்ணீர் போல் அர்த்தம் தருமோ?

---------கன்னத்தில் முத்தமிட்டாள்-------------------

மலரோடு மலரிங்கு மகிழந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்.

வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே
உதிரத்தின் நிறமிங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசமில்லை

-------------------பம்பாய்------------

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பிடித்த சினிமா காட்சி

பனா(fanaa)-ஹிந்தி படம்

ஆமீர்கான் தீவரவாதி என தெரிந்தவுடன் மகனை காப்பாற்றி வேறு இடத்துக்கு போகிறாள் மனைவி கஜோல். அங்கிருக்கும் போன் மூலம் மேலதிகாரி தபுவுக்கு விஷயம் தெரியப்படுத்துகிறார்.

கஜோல் கைபற்றிய வெடிகுண்டை அவரிடமிருந்து எடுத்துக்கொண்டு தன் வேலையை முடிக்க கிளம்பும் நேரத்தில் கஜோல் ஆமிரை சுடுகிறார். ஆமிர் கோபத்துடன் அவளை நோக்கி சுட போகும் போது அவருக்கு மனம் வராது. உணர்வுகளை அழகாய் ஆக்கிய விதம் அருமை. கண்ணிர் விட்டு அழுதது அந்த காட்சிக்காக மட்டும் தான்.
பனா-ஹிந்தி படம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா


இது வைரமுத்து பாட்டு
வாணி ஜெயராம் பாடிருக்காங்கோ

ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ
கட்டி கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை (கட்டி கரும்பே)

ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ
ஊமைக்கு சொந்தம் யார் யாரோ
பூ வைத நெஞ்சில்
தீ வைததாரோ
உண்மையை சொல்ல வாராரோ
காளைக்கு தானே வீராப்பு
கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு
கன்றோடு பசு இன்று திண்டாடுது (கட்டி கரும்பே)

சிப்பிக்குள் முத்து வந்தாலும்
அது சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால்
கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது
கண்ணுக்குள் வெள்ளம் இப்போது
நாம் கரை சேரும் காலம் எப்போது
உன் தாய் பாலில் கண்ணீரை
யார் சேர்தது (கட்டி கரும்பே)

என் பொண்ணுக்கு மொதல் மொதலா நான் பாடியா பாட்டு.அவள் மழலை மொழில ‘மா கத்தி கதும்பே கண்ணா பாது’னு கேக்கறச்சே பாடுவேன்.(வாசக் கதவெல்லாம் சாத்திட்டுதான்.கழுத வந்தா அதுகிட்ட யாரு ஒதை வாங்கறது ஹி ஹி ஹி)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஷேக் அண்ணா

அருமையான பதிவு. வைரமுத்து சாரோட நயாகரா நீா்வீழ்ச்சி கவிதை சூப்பர்......

எனக்கும் நீங்க சொன்னதில் ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு வரி

”முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ”

நான் என்னோட நோட் புக்ல எல்லாம் எழுதி வைத்திருப்பேன்.......

அப்புறம் ஜே ஜே படத்தில் வரும் ஒரு பாடல் வரி

”தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப்பார்ப்பதென்று என் தேடல் தொடங்கியதே”

என் பையனுக்கு பாடின தாலாட்டு பாட்டு.
”சின்னஞ்சிறு கண்மலா் செம்பவள வாய் மலா்
சிந்திடும் மலரே ஆராரோ.......
வண்ணத்தமிழ்ச் சோலையே மாணிக்க மாலையே
ஆரிரோ...... அன்பே ஆராரோ.......

இது மாதிரி சொல்லிட்டே போகலாம்..... அப்புறம் நான் மட்டுமே 100 பதிவு போட்டுவிடுவேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

யார்யாரோ பாடினாலும்
ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் கூடினாலும்
தாய் தந்தை ஆகாதம்மா

அன்புடன்
பவித்ரா

வணக்கம் நான் தமிழ்
என்க்கு பிடித்த பாடல்
படம்=== பூவே பூச்சூடவா
பாடல்==பூவே பூச்சூடவா
பாடியவர்==கே.ஜே.ஜேசுதாஸ்
என் மனதிற்க்கு பிடித்த இனிமையான பாட

எப்பா!!!!!!!!!பா!!!!பா!!!!!!1 என்னாம்மா TYPE அடிக்கிராங்க எல்லொரும்
நம்மலால முடிஞ்சது இவ்வோளொதான்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

ஆஹா ஆஹா நல்ல த்ரெட் ஆரம்பிச்சு இருக்கீங்க ஷேக். நிறைய பாடல்கள் பிடிக்கும் எத சொல்ல எத விட.

அழகன் படத்துல வர ஜாதி மல்லி பூச்சரமே சங்க தமிழ் பாச்சரமே ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி ..............
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேரல்ல தாயும் வேரல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்

இந்த வரிகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதைப்போல அதில் பானுப்ரியா டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.
****************
இஷானி நீங்க சொன்ன வரிகள் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

***************
உன்னால் முடியும் தம்பி படத்துல வரும்
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
......................................
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

இன்னும் நிறைய பாடம்கள் இருக்கு அப்பறம் வந்து சொல்றேன்

ஷேக் பிடிச்ச காமெடி சீன் சொல்லாமா? எனக்கு மிகவும் பிடிச்சது, சூரியன் படத்துல வரும்ல
/// இதுலாம் அரசியல் வாழ்க்கைல சாதாரணப்பா///
அப்பறம் இப்போ ரீசண்டா வந்த வடிவேலு ஜோக்
ஒரு குழந்தை பலூன கொடுத்து வடிவேலுவ ஊத சொல்லும்ல அது கூட உடைஞ்சுடும், வடிவேலுவ மிரட்டி அது நிறைய பர்சேஸ் பண்ணும்
அப்போ சொல்லும் நாங்கல்லாம் குழந்தைங்க நாங்க சொன்னா ஜட்ஜே நம்புவாருனு. அந்த ஜோக் மட்டும் பார்த்தா நான் ஒரு அரை மணி நேரத்துக்கு சிரிச்சுட்டே இருப்பேன்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச வரி.

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
......................................
உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே

தாமரையின் வரிகள்ல சின்மயி, தேவன் குரல்கள்ல கேட்க அப்படி இரு இனிமையா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்