மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

//உயிரே உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை பாலை சோலை இவை ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும் என்னால் யோசனை செய்ய முடியாதே முடியாதே//

எனக்கும் இந்த வரிகள் என்றால் பிடிக்கும்

அன்புடன்
பவித்ரா

எனக்கு பிடித்த பாடல்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடலில்
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே ஆனந்தமே
என்ற வரி மிகவும் பிடிக்கும்.

அபியும் நானும் படத்தில் ஒரே ஒரு ஊரில பாடலில்
வரமா வந்தம்மா.
வாஞ்சையுள்ள தங்கம்மா.
சித்தெரும்பு நசுக்காத சிங்கம் தான் எங்கம்மா
மறு பிறவி உண்டுன்னா என்க்கென்ன வேணும். இந்த வரிகள் எனது முதல் மகள் ஜுமனாவிற்காக இந்த வரிகளை கேட்டால் எனது செல்வத்தின் முகம் தான் என் நினைவிற்கு வரும்.

அடுத்தது, அபியும் நானும் படத்தில்,
வா வா என் பேரழகே
பொன் வாய் பேசும் தாரகையே
........
செல்ல மகள் சிணுங்கள் போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை.
பொன் மகளின் புன்னகை போல் ...
இன்னும் அந்த பாடல் முழுவதும் மிகவும் அருமை.
என் ரெண்டாவது செழுல்லம் ராபியா குட்டி அதால் என்றால் இந்த பாட்டை மொபைலில் காட்டுவேன். அதை பார்த்து சிரித்து கொண்டு அழுகையை நிறித்தி விடுவாள்.
இந்த இரண்டு பாடல்களும் இந்த படமும் என் குழந்தைகளுக்காகவே படைக்க பட்டதை போல உணர்கிறேன். ஒரு வேளை என் குட்டீஸ் என் கூட இருந்து இருந்தால் நாங்களும் அப்படி தான் இருந்து இருப்போம்னு நினைக்கிறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

என் முதல் குழந்தையின் பெயரும் ஜுமானா. அவள் தற்போது இல்லை. அவளுக்கு ஒவ்வொரு பூக்களூமே... ஆட்டோகிராப் பட பாடல் கேட்டால் சிரிப்பாள். அந்த பாடல் இப்போ கேட்டால்
நான் அழுது விடுவேன்.

reem கவலைபடாதீங்க. நாம அழக்கூடாது. நமக்கு நம்ம குழந்தைகளை வச்சு வளக்குற பாக்கியம் இறைவன் குடுக்கல. ஆனால் அதை விட சிறப்பான வாழ்க்கை நிலையான் வாழ்க்கை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு குடுத்து இருக்கான். உங்க குழந்தை பேரும் என் ஜுமானா பேரும் ஒன்று என்றால் ஆச்சரியமாக இருக்கு. என் குழந்தைகளும் உங்கள் குழந்தையும் சுவனத்தில் மகிழ்ச்சியாக விளையான்டுகிட்டு இருப்பாங்க.

அவங்கள நாம விரைவில் சந்திக்க கூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு தரட்டும். நாம தேடுற மாதிரி நம்ம குழந்தைகளும் நம்ம தேடி ஏங்காமல் இருக்கனும்னு இறைவனை வேண்டிக்குவோம்.

ஷேக் அண்ணா ஸாரி காமெடி யா போன த்ரெட்ல ட்ராஜெடி கலந்துடேன். REEM உங்க மெயில் ஐடி இருந்தா குடுங்க நம்ம பேசலாம். என்க்கு டியூஷன் கு டைம் ஆகிடுச்சு அப்புறம் வர்ரேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஃபீல் பண்ணாதீங்க, எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல தெரியவும் இல்லை, நான் சொல்றது எல்லாம் இறைவன் இருக்கிறார், அவர் பார்த்துக்கொள்வார்.

அன்புடன்
பவித்ரா

இந்த பாடலின் சிலவரிகள்தான் என்னை கவி எழுதவே தூண்டியது என்பேன்..நான் ஒரு ஆண்மகன் என்பதால் இதை கேட்கும்போதெல்லாம் மனுதுக்குள் அழுவேன்!
'பாடவா உன் பாடலை!
பாடவா உன் பாடலை!என் வாழ்விலே
ஓர் பொன்வேளை ஹோ...

வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
கடலோடு அலைப்போல உறவாட வேண்டும்
இலை மூடும் மலர்போல எனைமூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்!
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ்ச் சங்கம்!

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு பூரிப்பு!ஒரு பீச்சியடிக்கும் ஆனந்தம்!சொல்லமுடியாத வலி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பவி,ஆமினா,ராதா,ரீம்,ஃபாத்திமா,கல்பனா,மாமி,தமிழரசி,கவ்ரி லட்ஷ்மி,லட்சுமி,கீதாஜி,கோகிமேடம,வனிதாஅக்கா,யோகரானி,சீதா,செந்திகுமார்,
இஷானி,அப்ஸரா,ரிஸ்வானா,ஷமிலாசாஜ் மற்றும் எல்லோருக்கும் உங்களின் பங்களிப்பிற்காக என் மனமார்ந்த நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் பவித்ராஸ்ரீ, அறுசுவை கீழே தமிழ் எழுத்துதவி போங்க

இதோ இது தான் எனக்கு பிடித்த பாடல் வரிகள்...

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வெண்டும் (3) சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்ரு வேண்டும்

நெற்றி வேர்கின்ற போது அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்
வண்ண விண் மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் போ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்
பழமொழி கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எஙள் தைமொழி என்ட்ரு வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

யுத்தம் இல்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்
பஞ்ச பசி போக்க வேண்டும்
பாலைவனம் போக்க வஎண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்
போனவை அவை போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

இந்த பாடல் போல உலகத்தை கற்பனை செய்து பார்த்தால்,அவ்ளோ அருமையாய் இருக்கும்... உண்மையா சொல்ரேன்... வாழ்க்கை மிகவும் அற்புதமானது... Anywhere is paradise,its up to us...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

Mudal mariyadai yil ulla poongathu thirumbuma iduvum.Autograph padathil irundhu ovovoru pookalume solgirade.

nisarbanu

மேலும் சில பதிவுகள்