மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

சரண்யா மிகவும் நல்ல பாட்டு இது. நான் சின்ன வயதில் ஸ்கூல் படிக்கும் போது டான்ஸ் ஆடியிருக்கேன் அப்போல இருந்தே இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்போலாம் இந்த பாட்ட அவ்வளவா பார்த்தது இல்லை கேட்டு தான் இருந்தேன், பார்த்ததும் தான் தெரிஞ்சுது அப்படி ஒரு அருமையா picturisation செய்து இருப்பாங்க வாவ்.

மனதிற்கு பிடித்த

மனதிற்கு பாடல் என ஏராளம் உள்ளது..
அழகு நிலவே - பவித்ரா
கற்பூர பொம்மை - கேளடி கண்மணி
பூமிக்கு வெளிச்சம் - டிஷ்யூம்
காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை
சின்ன சின்ன ஆசை - ரோஜா
என்னுள்ளே - வள்ளி
ஆத்தங்கர மரமே - கிழக்கு சீமையிலே
ராசாவே உன்ன - முதல் மரியாதை
காடு திறந்து - வசூல் ராஜா என அடுக்கி கொண்டே போகலாம். இடம் இருக்காது

பிடித்த படம்
மௌன ராகம், வசூல் ராஜா, அன்பே சிவம்,விருமாண்டி, கண்ட நாள் முதலாய், ஆயுத எழுத்துனு ஒரு லிஸ்ட் இருக்கு,

பிடித்த கவிதைனா தபு சங்கரோட எல்லா கவிதையும், வைரமுத்து வரிகளும் பிடிக்கும்.

பாடகர்களும் எல்லாரையும் பிடிக்கும்..ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை..

எஸ்பிபி குரள், ஜானகியின் இனிமை, சித்ராவின் குரள் தெளிந்த நீரொடை போல, ஹரிணி காற்று மாதிரி, சின்மயி மேஜிக்கல் வாய்ஸ், கார்த்திக் நல்ல பேஸ் வாய்ஸ், சுஜாதா - உச்சரிப்புனு , சாதனா- ஒரு சாஃப்ட்வேர் இருக்கும் வாய்ஸ் ல.. நரேஷ் மற்றும் ஸ்ரேயா ரொம்ப இளமையான வாய்ஸ்..

சொல்லிட்டே போகலாம்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

படம்:வியட்நாம் வீடு
பாடல்:உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
உன்னை மனந்ததனால் சபயில் புகழும் வளர்ந்ததடி

கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில்
என் விம்மல் தனியுமடி

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்து விடாதிருந்தேன்

முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
உன்னைப் போல் தெய்வமொன்றே அறியும்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மனதிற்கு பிடித்த பாடல்வரி : பல பாடல் வரிகள் உள்ளன.ஒன்றை மட்டும் கூறுவது மிக மிகக் கடினம். கவிஞர் வாலி , தாமரை , நா. முத்துக்குமார் ஆகியோரின் வரிகள் மிகவும் பிடிக்கும்.

காதலர் தினம் படத்தில் வரும்,
பல்லவன் சிற்பத்தில் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இங்கு சிலையே..
இந்த அழகுக்கில்லை ஈடு..

என்னை முதல் முதலில் பாடல் வரி எழுதியவர் யார் என யோசிக்க வைத்த வரிகள்.. பிறகுதான் 80 களில் இளையராஜா அவர்களின் இசையில் என்னை ஈர்த்த பல பாடல்கள் வாலி அவர்களின் வார்த்தை விளையாட்டு எனத்தெரிந்தது.. :)

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா
....
இது கன்னங்களா இல்லை தென்னங்கள்ளா...”

கவிஞர் வாலி அவர்களின் வார்த்தையாடல் மிக மிகவே பிடிக்கும்.. :)

”சரிகம பதநி சே
மாத்தியோசி த்ட்ஸ் வாட் வி சே ..”

“முன்பே வா என் அன்பே வா..”

என அவருக்கு வயதானாலும் அவரின் கவிதை வரிகள் மட்டும் இளமை ஆகிக் கொண்டே போகின்றன.. :)

கவிதை வரி: “ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்!” வாலி அவர்கள் பள்ளிப்பருவத்தில் எழுதியது..

வைரமுத்துவி்ன் வரிகள் இயல்பில் ஈர்த்ததில்லை எனினும்,

“மொட்டு ஒன்று மலர்ந்த்திடத் துடிக்கும்
அதை முட்டும் தென்றல் தட்டித் தட்டித் திறக்கும்..
அது மலரின் தோல்வியா இல்லைக் காற்றின் வெற்றியா?...
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்
அதை சின்ன உளி தட்டித் தட்டித் திறக்கும் அது
கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா...”
...

பனிக்குடங்கள் மெல்ல உடைந்து விட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்...

பாடல் மிகப் பிடிக்கும்... :)

கவிஞர் தாமரையின் வரிகள்..
முதல் முறைக் கேட்கும் போதே இது தாமரையின் வரிகளாக இருக்கும் என உள்ளுக்குள் குரல் கேட்கும். ஏனோ “வசீகரா “ மட்டும் வசீகரிக்க வில்லை.. :)

மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையென் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன்
என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி

அன்புடன்
பவித்ரா

பவித்ரா சொன்ன பாடலின் வரிகள், பாரதி படத்திலுள்ள நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா பாடல் எத்தனை முறை கேட்டாலும் அழுக்காது கேட்டு கொண்டே இருக்கலாம்.

பால் போலவே... வான் மீதிலே....
யாரை காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மலை சூடினான்
கன்னியழகை பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
கலஞனாகினான்........

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் காலகள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்

படம்- உயர்ந்த மனிதன்

எனக்கு இந்த பாட்டை என் அம்மா தாலாட்டாய் பாடினார்களாம். இப்போ என் மகனுக்கு இந்த பாட்டை பாடினா தான் தூக்கம் வரும்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்த வலைப்பூ எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அத்தி அத்திக்கா அத்தை மடிமேலே ஆடித்திரிந்தோம் சுகமல்லோ
(படம் : ஆதி‍‍‍ எஸ் பி பாலாம, சாதனா சர்கம்)

ஒரு கூட்டு கிளியாக ஒரு சோட்டு குயிலாக பாடு பண்பாடு (படிக்காதவன்

மன்னில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே (படம் : நிலவே மலரே ‍
பி சுசிலா)

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் (படம் : )

காற்று வந்தால் தலை சாயும் நாணல், காதல் வந்தால் தலை சாயும் நாணம்

அரங்க நாயாகி மேடம்.இதுதான் உங்கள் இயற்பெயரா?நன்று

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்