மனதிற்குபிடித்த பாடல்,கவிதை வரி

வெட்டிவேரு வாசம் வெடலபுல்ல நேசம்
பூவுக்கும் வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுன்டோ மானே?

..இந்த பாடல் வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அந்த பாட்டில் ஒரு அருமையான உள்ளர்த்தம் உண்டு.நான் பிறகு சொல்கிறேன்.அது உங்களுக்கு தெருயுமா?
மனதிற்கு பிடித்த பாடல்வரி,சினிமா காட்சி,கவிதை வரி,செய்தி,நபர் எது?யார்?ஏன்?

எனக்கும் வாலியின் வரிகள் பிடிக்கும். அதில் எப்போதும் ஒரு இளமை துள்ளல் இருக்கும். அந்த காதலுனும்... பாட்டும் ரொம்ப பிடிக்கும். அந்த வரிகள் நீங்க சொல்லியிருப்பதைவிட கொஞ்சம் வித்தியாசமாக வரும்

“உன் வலக்கையில் வளையல்கள் நானல்லவா
நீ வளைக்கையில் வளைகின்ற நாணல்லவா”

உண்மைதான். அவருடைய வார்த்தை ஜாலம் வேறு யாருக்கும் வராது.

அன்புடன்,
இஷானி

*********மன்னிக்கவும். இருமுறை பதிவாகிவிட்டது**********

அன்புடன்,
இஷானி

நீங்கள் கூறியது போல தான் நானும் பல நாட்கள் நினைத்துக் கொண்டு இருந்தேன். சமீபமாகத்தான் இணையத்தில் வரிகளைப் பார்த்தேன்.. நான் கூறியது போல்தான் வரிகள் வருகின்றன. “ இந்த “ என்பது மட்டும் ”இந்த” தானவா அல்லது “ உந்தன்” ஆ என்று சற்று சந்தேகம்.. :)

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைகின்றது
நான் படும் பட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்ரது
எனக்காக இரு ஜீவன் துடிக்கின்ரது
எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

அன்புடன்
பவித்ரா

இப்போது தான் கவனித்தேன். நீங்கள் சொல்வதுபோல் தான் வரிகள் வருகின்றன. நான் தான் தவறாகப் புரிந்துகொண்டுள்ளேன்.

அன்புடன்,
இஷானி

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"
இந்த பாடல் கேட்பதற்கும் அருமையாகவும், சோர்வு நேரத்தில்ல தன்னம்பிக்கை ஊட்டுகிற பாடலாகவும் எனக்கு நிறைய நேரத்தில அமைந்துள்ளது
அப்புறம் எனக்கு பிடித்த ஒரு வரி
"இதுவும் கடந்துபோகும்"
புகழ்ச்சி, சந்தோஷம் இந்த நேரத்தில இதை நினைத்துக்கொண்டால் பெருமை நமக்கு வராது துக்க நேரத்தில இதை நினைத்துக்கொண்டால் நமக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும்
ponni

வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுக்காற்று உனதல்லாவா?
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா?
நீ என்றால் நான் தான் என்று ஊரறிய,உலகறிய
இருவரில் ஒருவர் உயிர் கரைய
உடனடியாய்
உதடுகளால்
உயில் எழுது.....
............................................................................................

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்: ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓர் இனம்.
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல,
ஒரு முறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
இது போல இன்னும் நிறைய இருக்கிறது

நீராருங்கடல்கொடுத்த நில மடந்தைகெழில்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்