என்னுடைய சமையலறையைப் பற்றி சொல்ல முதல் காரணம், அதில் உள்ள பாதுகாப்பு வசதிகள். தற்போது நம் நாட்டில் மிகவும் குறைவான இடத்தில், நன்றாகத் திட்டமிட்டு, மிக அழகாக,பயனுள்ளதாக சமையலறை அமைக்கின்றார்கள். ஆனால் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வீடு கட்டப் போகும் அல்லது சமையலறையை மாற்றியமைக்க எண்ணும் நம் அறுசுவை நேயர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த குறிப்புகளை தருகின்றேன்.
எனது சமையல் அறையின் அளவு 10'X10' தான். ஆனால் நன்றாகப் வடிவமைத்துப் பயன்படுத்தியுள்ளார்கள். எல்லா சுவர்களிலும் டைல்ஸ் ஒட்டியுள்ளார்கள். இதனால் தோற்றம் சிறப்பாக இருப்பதோடு, சுத்தம் செய்வதும் எளிதாக இருக்கின்றது. நான் சின்ன குளிர் சாதனப் பெட்டி தான் வைத்துள்ளேன். இதில் அதிகப் பொருட்கள் வைக்கமுடியாது. இதனால் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது குறைவு.

என்னுடைய சமையலறையில் எனக்கு மிகவும் பிடித்தது அதனுடைய வெளிச்சம். எப்பவுமே வெளிச்சமாக இருக்கும். (இரவில் தெரு விளக்கின் புண்ணியம்). அதற்கு முக்கிய காரணம், இந்த பெரிய ஜன்னல். இதை முழுவதும் திறக்க இயலாது. அது ஒரு பெரிய பாதுகாப்பு. அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இந்த பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இடத்தில் நின்றால் வெளியே நன்றாக தெரியும். பாத்திரம் கழுவும் போது, காய்கறி நறுக்கும்போது வேலைப் பளுவே நமக்குத் தெரியாது. அதைவிட தனியாக தேநீர் அருந்தும் போது, தனியாக சாப்பிடும் போது நமது தனிமையைப் போக்கிவிடும்.

இந்த சமையலறையில் உள்ள காபினெட்டுக்கு உட்புறம் லாமினேட் செய்யப் பட்டு உள்ளது. இதனால் அதை சுத்தப்படுத்துவது மிகவும் சுலபம். குக்கிங் ரேஞ்சுக்குப் பக்கத்தில் உள்ள காபினெட் பக்கங்களும் லாமினேட் செய்யப்பட்டுள்ளது. நாம் சமைக்கும் போது எதாவது கறை படிந்தாலும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.


அடுத்து தீ எச்சரிக்கை மணி(Fire Alarm). கொஞ்சம் புகை வந்தாலும் இது ஒலி எழுப்ப ஆரம்பித்து விடும். முழு கட்டிடத்திலும் எச்சரிக்கை ஒலி கொடுக்கும். அதன் பிறகு கட்டிடப் பாதுகாப்பாளர் வந்த பிறகுதான் நிறுத்த முடியும். இதுபோக கையால் இயக்கும் ஒரு தீயணைப்பு உபகரணம் சமையலறையில் உள்ளது. இதை உபயோகிக்கும் முறையும் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சமையலறையில் கழிவுநீர் குழாய் உள்ளது. வேண்டுமென்றால் தண்ணீர் விட்டு கழுவி விடலாம்.

இந்த சாப்பாட்டு மேஜையை நமக்குத் தேவையான சமயத்தில் நிமிர்த்தி வைத்துக் கொள்ளலாம். தேவையில்லாத சமயங்களில் மடித்து வைத்துக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இருக்கும் சமயத்தில் சாப்பாட்டு அறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அளவில் சிறியதாக இருந்தாலும், போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் தேவைக்கேற்ப இருப்பதால், எனது சமையல் அறையை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்திரா - ஐக்கிய அரபு அமீரகம்

Comments
என் சமையலறையை பிரசுரித்த
என் சமையலறையை பிரசுரித்த அட்மின் அவர்களுக்கு நன்றி
Save the Energy for the future generation
அன்பு இந்திரா! உங்கள் சமையலறை
அன்பு இந்திரா! உங்கள் சமையலறை ரொம்ப அழகாக இருக்கு! நானும் U.A.E லதான் இருக்கேன்.ஆனா உங்க அளவுக்கு நான் neatஆ maintain பண்ணல.உங்க
கிச்சனை பார்த்தா பொறாமையா இருக்கு.
இந்திரா
இந்திரா... உங்க கிட்சன் பார்க்க அழகா இருப்பதோடு, பாதுகாப்பா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்குங்க. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
kavitha
டியர் இந்திரா மேடம்,
உங்கள் சமையல் அறை மிகவும் நீட் ஆக இருக்கிறது
உங்களது வீட்டீலும் ,வின்னி வீட்டிலும் உள்ள ஜன்னல் என் சமையலறையில் இல்லை பக்கவாட்டில் இருக்கு
இந்த பக்கத்தை என் கணவரிடம் காண்பித்தால் முறைக்கிறார் இந்த ஊரில் இவ்வளவுதான் உனக்கு என்கிறார் இந்தியா சென்று வீடு கட்டினால் கண்டிப்பாக இப்படி ஒரு ஜன்னல் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன்
என்றும் அன்புடன்,
கவிதா
ரொம்ப அழகு
படம் அழகாக எடுத்து அனுப்பி இருக்கீங்க,நல்ல விளக்கம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
எல்லோருக்கும் மிக்க நன்றி.
டியர் திவ்யா சுரேஷ் , நீங்கள் அபுதாபியில் எங்கே இருக்கீறீர்கள்? இப்ப தான் நானும் சுத்தமா வைத்திருக்கிறேன். நிறைய தோழிகளைப் பார்த்து நானும் மாறிட்டேன். நீங்களும் நிச்சயமாக மாறுவீங்க. எடுத்ததை அதன் இடத்தில் வைத்தாலே பாதி சுத்தம் வந்துவிடும். அப்புறம் சமையல் முடிந்தவுடன் அடுப்பு, மேடை எல்லாம் ஒருவாட்டி துடைத்தால் எப்பவுமே சுத்தம் தான்.
வனிதா, நீங்க சொல்ற மாதிரி பாதுகாப்பு தான் என்னோட கிச்சனுக்கு அழகே.
டியர் uk5mca, ஏற்கனவே அந்த ஜன்னலின் உபயோகங்களை சொல்லியிருக்கிறேன். நானும் இந்தியா போய் வீடு கட்டும் போது இது போல் பெரிய ஜன்னல் வைக்க சொல்வேன். அது போல் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய முயற்சி செய்வேன். சீக்கிரமே வீடுக் கட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
டியர் ஆசியா உமர் மேடம்,
படம் நன்றாக இருக்கிறதா? என் பையனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அவன் தான் எடுத்தான். விளக்கங்கள் எழுத நிறைய நேரம் எடுத்தது என்றே சொல்லவேண்டும். பேசுகிற பேச்சில் நிறைய ஆங்கிலம் பயன்படுத்துகிறோம். ஆதலால் எழுதும் போது நிறைய யோசிக்க வேண்டியுள்ளது. எல்லோருக்கும் மிக்க நன்றி.
Save the Energy for the future generation
ஹாய் இந்ரா.
உங்கள் சமயலரை மிகவும் நன்றாக இருக்கின்ற்து.நானும் இது போல் வைத்துக்கொள்ள முயற்ச்சி செய்கிறேன்
life is short make it sweet.
இந்திரா
அருமையான அழகான கிச்சன்.....விளக்கமும் சூப்பர்....
என்னுடைய கிச்சனும் கிட்டத்தட்ட இதே வடிவமைப்புதான்...
பெரிய ஜன்னல்கள் ஒரு கிச்சன் எஃஸிட் கதவு உள்ளது...ஜன்னலில்
பார்க்க பெரிய தோட்டம் வைத்திருக்கிறேன்..ப்சுமையான இலைகளை/வண்ண மலர்களை பார்க்கும்போது வீட்டில் யாருமில்லாதபோது அவைகளே என்னோடு பேசுவதுபோல் இருக்கும்
நீங்களும் வாருங்கள் ஒருமுறை..:-
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
இந்திரா,
இந்திரா,
உங்கள் சமையல் அறை மிகவும் அழகாக உள்ளது.
with love
டியர் கீதா, உங்கள்
டியர் கீதா, உங்கள் பாரட்டுக்களுக்கு நன்றி. உங்கள் முயற்சி நிச்சயம் நிறைவேறும்.
டியர் இளவரசி. எனக்கு தோட்டம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலையிலும் , மாலையிலும் தேநீர் நேரத்தில் தோட்டம் நல்ல துணை. அதிலும் பூக்களும் இருந்தால் இன்னும் கொள்ளை அழகாக இருக்கும் இல்லையா? தனிமையே தெரியாது. கண்டிப்பாக வருகிறேன்
டியர் சுபத்ரா உங்கள் பாரட்டுக்களுக்கு ரொம்ப நன்றி
Save the Energy for the future generation
கிச்சன் அழகு..
டியர் இந்திரா,
கிச்சன் அழகும், பாதுகாப்புமாக இருக்கு. இங்கு பாதுகாப்புக்கு எங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?
நாமே நம்மால் முடிஞ்சதை செய்துக்க வேண்டியது தான்.
அன்புடன்,
செல்வி.
டியர் செல்வி மேடம், உங்கள்
டியர் செல்வி மேடம், உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்தியாவிலும் இதுபோல் பாதுகாப்பான கிச்சன் அமைக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
அன்புடன்,
இந்திரா
Save the Energy for the future generation
இந்திரா
இந்திரா, உங்க கிச்சன் மிகவும் அழகாக உள்ளது. அந்த ஜன்னல் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. சமையல் அறையிலேயே Fire Extinguisher வைத்து இருப்பது மிகவும் சிறந்த அம்சம். படங்கள் நன்றாக உள்ளது என மகனிடம் சொல்லவும்.
இந்திரா மேடம்! நான் மதினா
இந்திரா மேடம்! நான் மதினா சையது ஏரியாவில் இருக்கேன். நீங்க?
ஹாய் வானதி, பையனிடம்
ஹாய் வானதி,
பையனிடம் சொல்லிவிட்டேன். எனக்கும் ஜன்னல் ரொம்ப பிடிக்கும். பாதுகாப்பும் பிடிக்கும். சமையல் பண்ணும் சமையத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
பால் ஏதாவது பொங்கி தீய்ந்து விட்டால், அம்பேல். அபாய ஒலி கட்டடம் முழுவதும் ஒலித்து விடும். எல்லோருக்கும் பதில் சொல்லி வெறுத்துவிடும்.ஒருமுறை அனுபவம் இருக்கிறது.
திவ்யா, நான் டாக்ஸி ஸ்டாண்டுக்கு அடுத்து இருக்கிறேன். (மோரூர் சாலை)
Save the Energy for the future generation
ஹாய் இந்திரா
இந்திரா உங்க கிச்சன் நல்லாயிருக்கு,அதோட நீங்க சொன்னவிதமும் நல்லாயிருக்கு.உங்க கிச்சனில் எனக்கு மிகவும் பிடித்தது குட்டி சாப்பாட்டு மேஜை,டிரைனில் இருப்பது போலவே இருக்கு... இந்த மாதிரி ஒரு மேஜை இருந்து, அம்மாவும் பக்கத்தில் இருந்து,சுட சுட தோசை சுட்டு போட்டுட்டிருந்தா....ஆஹா நினைக்கும்போதே...ம்ம்ம்.
உங்க பையனும் நல்லா படம் எடுத்து அனுப்பியிருக்கார்.
டியர் கவி, பாராட்டுக்களுக்கு
டியர் கவி,
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. நம் எல்லோருக்குமே அம்மா சாப்பாடு என்றால் தனி விருப்பம் தான். அவுங்க சாப்பாட்டில் தான் அன்பும் கலந்து இருக்கிறது. ஆண்களை பொறுத்தவரை தாயிக்கு பின் மனைவி அதே அன்போடு கொடுக்கிறார்கள். நமக்கு அம்மா மட்டும் தானே அன்போடு சாப்பாடு கொடுக்கிறார்கள். சரியா? என் பையனுக்கு படம் எடுப்பது என்றால் ரொம்ப பிடிக்கும்.
Save the Energy for the future generation
இந்திரா மேடம் உங்க கிச்சன்ல
இந்திரா மேடம் உங்க கிச்சன்ல இருக்கிற ஜ்ன்னல்,டேபிள் ரெண்டும் ரொம்ப நல்லயிருக்கு எனக்கு எங்கே பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போனாலும் அவங்க வீட்டு கிச்சனை பார்ப்பது மிக்வும் பிடிக்கும் . அருசுவையில் இந்த பகுதி எனக்கு மிக்வும் பிடித்த பகுதி . படங்கலும் அழகாயிருக்கு.
all is well
டியர் சுந்தரமதி, எல்லா
டியர் சுந்தரமதி, எல்லா சமையலறையையும் பார்க்கும் போது நமக்கு நல்ல தெளிவு கிடைக்கும். நம்ம சமையலறையையும் அதே போல் வடிவமைக்கலாம். பாராட்டுக்களுக்கு நன்றி மதி.
Save the Energy for the future generation
இந்திரா...,
ஹாய் இந்திரா நலமா...?
உங்கள் கிச்சன் படம் சூப்பராக உள்ளது.
உண்மையிலேயே இந்திரா சமையலறையில் நல்ல வெளி வெளிச்சம் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
நானும் துபாயில் தான் இருக்கேன்.
இதுவரை மூன்று வீடுகள் மாறியாச்சு.ஆனால் எனக்கு வெளிச்சம் படும் கிச்சன் அமையவே இல்லை.
பகலிலும் லைட் போட்டு கொண்டு தான் வேலை பார்ப்பேன்.
மற்றபடி இந்த ஊரில் நல்ல விதமாகவே வடிவமைத்து விடுகின்றார்கள்.
அது எனக்கு பிடித்தமான ஒன்று.எனவே பார்த்து பார்த்து வைத்திருப்பேன்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
டியர் அப்சரா, நானும் துபாயில்
டியர் அப்சரா, நானும் துபாயில் தான் இருந்தேன். 3 வருசம் முன்னாடி தான் அபுதாபி வந்தோம். முராக்கபாத் போலீஸ் ஸ்டேசன் பின்னாடி இருந்தோம். அந்த வீட்டிலும் கிச்சன் நல்ல வெளிச்சம். ஆனால் ஹால் , படுக்கையறையில் எப்போதும் லைட் போடவேண்டும். அதுவும் இங்கே வில்லாக்களில் சமையலறையெல்லாம் ரொம்ப அருமை. நல்ல வெளிச்சம், பெரியது, ஒரு சின்ன சாப்பட்டு மேசை போட்டுக்கலாம். எல்லாத்தையும் பார்த்து வைத்துக் கொள்வோம். முடிந்தால் இந்தியாவில் போய் கட்டிக்கொள்ளலாம். சரியா அப்சரா?
Save the Energy for the future generation
இந்திரா
இந்திரா நலமா....?
ஆமாம் எனக்கு தெரிந்த தோழிகள் அபுதாபியில் இருக்கின்றனர்.
எந்த வீட்டிற்க்கு போனாலும் கிச்சன் பெரிதாகதான் இருக்கும்.நல்லா வசதியாகவும் ,அழகாகவும் இருக்கும்.அப்படி பார்க்க ஆசையாக இருக்கும்.அங்கேயே உட்கார்ந்து அவர்களுடன் பேசி கொண்டு இருப்பேன்.
ஊரில் என் மாமியார் வீடு நல்லா பெரியதாக இருக்கும் இந்திரா.
என்ன அந்த காலத்து மாடல்.ஆனால் ஹால் அளவு கிச்சன் பெரிதாக இருக்கும்.
அதான் என் கணவரிடம் சொல்லுவேன்.இவ்வளவு பெரிய இடத்துக்கு மாடல் கிச்சன் வைத்து கட்டினால் ரொம்ப சூப்பராக இருக்கும் என்று.
இப்போது என் நாத்தினார் வீடு கட்டி கொண்டு இருக்கார்.அவரிடம் மெயினாக கிச்சனை நல்ல படியாக அமையுங்கள் என்று நான் ஒரு சில ஐடியாக்கள் சொல்லி கொண்டு இருக்கேன்.
(ஹூம்....நம் ஆசையை யார் மூலமாவது தீர்த்துக்கலாமுன்னு ஒரு நப்பாசைதான்.)
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
டியர் அப்சரா, நாத்தனாரிடமும்
டியர் அப்சரா,
நாத்தனாரிடமும் பெரியதாக , நல்ல வெளிச்சம் மற்றும் காற்றோட்டமாக கட்ட சொல்லுங்கள்.வேலை செய்யும் போது நல்ல சௌகரியமாக செய்யமுடியும். சின்ன சமையலறையில் எவ்வளவு தான் அடுக்கி வைத்திருந்தாலும் அடைத்து வைத்தது போல் இருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிய சமையலறையில் சாமான் இருப்பதே தெரியாது. நம்ம எல்லோருடைய ஆசையையும் இறைவன் நிறைவேற்றி வைப்பார்.
Save the Energy for the future generation
இந்திரா..,
ஹாய் இந்திரா நலமாக இருக்கின்றீர்களா?
எனக்கு ஒரு டவுட் கேக்கனும்.
நீங்க எங்கே தங்கி இருக்கீங்க?என்ன வாடகை கொடுக்குறீங்க?
டபுள் பெட்ரூமா...சிங்கிள் பெட் ரூமா...?
இந்த தகவலை தயவு செய்து சொல்ல முடியுமா...?
தப்பா எடுத்துக்க வேணாம்.ஒரு தோழி அபுதாபியில் வீடு பார்த்துட்டு இருக்காங்க.
அவங்க டபுள் பெட்ரூமுன்னு கேட்டா 120,000 ந்னு சொல்றதா சொல்லி கவலை பட்டாங்க வேற வழி இல்லாம இப்போதைக்கு குடியேறி இருக்காங்க.
உங்க கிச்சன் வசதி ரொம்ப நல்லா இருந்துச்சு.அதை அவங்களுக்கு அனுப்பி பார்க்க சொன்னேன்.அதான் அவங்க உங்க விட்டின் விபரங்களை கேக்க சொன்னாங்க.
முடிந்தால் சொல்லுங்கள் இந்திரா.என் தோழிக்கு அது உபயோகமாக இருக்குமுன்னு நினைக்கிறேன்.சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
டியர் அப்சரா, நான் இன்று
டியர் அப்சரா,
நான் இன்று தான் இந்தியாவில் இருந்து வந்தேன். அபுதாபியில் வாடகை இப்போது மிக அதிகம். எங்களுக்கு கம்பெனி கொடுத்திருக்கும் வீடு. வாடகை பற்றி தெரியாது. முழு கட்டிடமும் கம்பெனி மொத்தமாக எடுத்துள்ளது.
Save the Energy for the future generation
ஹாய்,இந்திரா..
நலமா..இன்றுதான் இப்பகுதியை பார்த்தேன்.சமையல் அறை வெகு அழகாக உள்ளது.
radharani
இந்திரா கிச்சன்
இந்திரா கிச்சன் ரொம்ப நல்ல இருக்கு என் கிச்சனில் இதே போல் பெரிய ஜன்னல் உண்டு ஆனால் பிரயோஜனம் இல்லை திறந்து வைக்க முடியாது, முழுவதும் பேப்பர் போட்டு ஓட்டி வைத்துள்ளேன். இங்கும் நிறைய அருமையான கிச்சன்கள், இருக்கு. பார்த்து ஏக்கமாக இருக்கும் இது போல் எப்ப அமையுமோன்னு.
சமீபத்தில் ஷார்ஜா பக்கம் , அபுதாபி பக்கம் வீடுகளுக்கு செல்லும் போது இது போல் தான் இருந்தது .
எனக்கு தெரிந்து கிச்சனில் சின்னதா பால்கனி வைத்து கட்டினால் நல்ல இருக்கும்.
ஜலீலா
Jaleelakamal
Safety
Hai mam,
ur kitchen is so neat & expecially window in ur kitchen is so beauty full mam. In safety feauters ideas are great
hii
ஹாய் மேடம் நானும் UAE ல தான் இருக்கிறன் (துபாய் ) . இங்க கூடுதலா kitchen ல நல்ல வசதிகள் இருக்கு ..... அது எனக்கு ரொம்ப பிடிச்சருக்கு ...உங்க kitchen ரொம்ப நீட் ஆ இருக்கு ........keep it up ......இனி நானும் இப்பிடி தான் வச்சுக்க போறன்....
Hi mam i loved ur
Hi mam
i loved ur kitchen,esp those big windows near ur sink,i havent seen such a clean kitchen,all photos r nice n ur descriptions too
Regards
GayuArun