ஹரா பரா கபாப்

தேதி: May 10, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

இது ஒரு குஜராத்தி சமையல் குறிப்பு. இந்த குறிப்பினை திருமதி. இந்திரா அவர்கள் துபாயில் உள்ள கோவிந்தா உணவகத்தில் சுவைத்து நன்றாக இருந்ததால் அதன் செய்முறையைக் கேட்டு செய்து பார்த்து விட்டு அதை நமது அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

உருளைக்கிழங்கு - ஒன்று
பட்டாணி - கால் கப்
பாலக் - கால் கப்
கொத்தமல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு இன்ச்
பச்சைமிளகாய் - ஒன்று
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
கார்ன் ப்ளார் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மெல்லிதாக துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க வைத்து அதில் பால‌க்கை போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் பால‌க்கை வெளியே எடுத்து தண்ணீர் சுத்தமாக இல்லாமல் நன்றாக பிழிந்து, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். இது கால் கப் இருக்க வேண்டும்.
இதைப் போல் பச்சை பட்டாணியையும் வேக வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதன் அளவும் கால்கப் இருக்க வேண்டும். ஒரு தட்டில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பொடி வகைகள், இவற்றுடன் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கின பாலக், அரைத்த பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இந்த கலவையில் கார்ன் ப்ளாரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். இத்துடன் பாதாம் அல்லது முந்திரியை இரண்டிரண்டாக உடைத்து சேர்க்கலாம்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் கலவையை வடை போல தட்டி போடவும். தீயை மிதமாக வைத்து கபாப் வெந்ததும் எடுக்கவும்.
வெளியே மொறுமொறுப்பான, உள்ளே மிருதுவான ஹரா பரா கபாப் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்த சமையல் குறிப்பை வெளியிட்ட மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி.

Save the Energy for the future generation

இந்திரா என்ன இவ்வளவு சீககிரம் அடுத்த டிஷ்.இதை படிக்கும் போதே மிகவும் சுவையாக இருக்கும் என தெரிகிறது. செய்து பார்த்து மறுபடியும் சொல்கிறேன்.

life is short make it sweet.

ஹாய் இந்திரா வாவ்....
ரொம்ப சூப்பரான முற்றிலும் வித்தியாசமான குறிப்பு கொடுத்து இருக்கீங்க.
நிச்சயமா செய்து பார்ப்பேன் இந்திரா.
என்னவோ நமக்குள் ஒற்றுமை போங்க.
பரவாயில்லை சந்தோஷமா இருக்கு.
வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் இந்திரா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

டியர் கீதா, நலமா? உங்களைப் போன்ற சைவம் சாப்பிடபட்டவர்களுக்காக இந்த குறிப்பு. எங்க வீட்டுக்காரர் சைவம். ஆதலால் நான் நிறைய சைவம் தான் சமைப்பேன். செய்து பார்த்து பின்னூட்டம் தாருங்கள்.

மிக்க நன்றி அப்சரா

Save the Energy for the future generation

இந்திரா இந்த வாரக்கடைசி கண்டிப்பா இதை டிரை பன்னிட்டு சொல்லுரென் பா. பார்க்கவெ ந்ல்லாயிருக்கு.சூப்பர்

all is well

ஹாய் மதி,
கண்டிப்பாக செய்து பாருங்க. பட்டாணி மற்றும் பாலாக்கை நன்றாக பிழிந்துவிடுங்கள். ஒரு சொட்டு நீர் கூட இருக்ககூடாது. அது தான் ரொம்ப முக்கியம்.செய்து பார்த்து பின்னூட்டம் தாருங்கள்

Save the Energy for the future generation

ஹாய் இந்திரா அக்கா நலமா ? ஹராபரா பார்க்க ரொம்ப நல்ல இருக்கு வித்யாசமான குறிப்பாக இருக்கு

டியர் நஷ்ரீன்,
நலம். நீங்க நலமா? செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Save the Energy for the future generation

ரொம்ப சூப்பராக இருக்கு.வெஜ் ரெசிப்பியில் அசத்துறீங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் இந்திரா அக்கா நான் நலம் உங்கள் கார பார செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது சாட் மசாலா இல்லை அதனால் சாட் மசாலா போடாமல் தான் செய்தேன் நல்ல குறிப்புக்கு நன்றி

என்றும் அன்புடன்
நஸ்ரின்