கண்கள் மற்றும் இமை பராமரிப்பு

இமை பராமரிப்புBeauty tips

முகம்

நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.

கண்கள்

"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.

Eyes care

பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

Comments

முகத்துக்கு அடிக்கடி சோப் யூஸ் செய்வதுதான் தவறு. ஆனால் குளிக்கும்போது ஒரு முறையோ, இரண்டு முறையோ உபயோகித்தால் பரவாயில்லை. எல்லா சமயங்களிலும் பேஸ் வாஷ்தான் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை. பேஸ் வாஷில் அதிக மாய்ச்சுரைசிங் இருப்பதும், மைல்டாக இருப்பதும்தான் அதனை அடிக்கடி உபயோகிக்க பரிந்துரைக்க காரணமாயிருக்கிறது. ஆனால் கவனத்தில் கொள்ளுங்கள், அதிக மாய்ஸ்சுரைசிங் உபயோகம் சில சமயம் முகத்தில் பிக்மெண்டேஷனையும் உருவாக்கும். தினமும் குளிக்கும்போது சோப்பும், மதியம், இரவு முகம் கழுவ பேஸ் வாஷும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எப்படி இருக்கீங்க? நீங்கள் உங்கள் தோழியின் கண் சுருக்கத்திற்கு நல்ல தரமான பிராண்டில் ஆண்ட்டி ரிங்கிள் அண்டர் ஐ க்ரீம் உபயோகிக்க சொல்லுங்க. இது ஓலே மற்றும் லோரியலில் கிடைக்கிறது. அந்த அப்ளிகேஷனுக்குத்தானா என்பதை படித்துப் பார்த்து வாங்க சொல்லுங்கள். ஏனென்றால் சில சமயம் அண்டர் ஐ க்ரீமை மட்டும் கவனிக்காமல் வாங்கிவிட வாய்ப்புண்டு. அது கண் கருவளையத்தை மட்டுமே நீக்கும். நான் சொன்ன க்ரீம் மிகவும் சின்ன சைஸ் ட்யூப்களில் கிடைக்கும். ஆண்ட்டி ஏஜிங் வெரைட்டிகளிலும் கிடைக்கிறது. இதுதான் சுருக்கத்தையும் நீக்கும். இரவில் தூங்கும்போது அல்லது கண்ணாடி அணியாமல் இருக்கும்போது, மிகவும் சிறிய அளவு க்ரீமை எடுத்து கண் இமையில் மிகவும் லேசாக தடவி உபயோகிக்க சொல்லுங்கள்.

உங்களுக்கேற்ற காஸ்மெட்டிக்ஸை தேர்ந்தெடுக்க இந்த லிங்கை பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/3747

உங்கள் பெண்ணுக்கு பியர்ஸ் சோப்பிற்கு பதிலாக ஜான்சன்ஸ் லிக்விட் சோப் அல்லது ஜான்சன்ஸ் பேபி சோப் உபயோகியுங்கள். ஆயில் கூட ஜான்சன்ஸிலேயே வைட்டமின் ஈ மற்றும் அலோவேரா சேர்ந்தது இருக்கிறது. லைட்டாக இருக்கும். அலோவேரா கருமையை நீக்கும். கடலை மாவைவிட, இந்த லிங்கில் உள்ள பொடியினை அரைத்து வைத்து உபயோகியுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/3677

இந்த பொடியினை சோப் தேய்த்து குளிப்பாட்டிய பிறகு நன்றாக உடம்பு முழுக்க தடவி குளிப்பாட்டுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

வுங்கள் பதிலுக்கு நன்றி. நீங்கள் எப்பொழுது பதில் போடுவீர்கள் என்று தினமும் எதிர் பார்த்திருந்தேன். இந்த ஒரு வாரத்தில் வுங்களின் பழைய பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன். வுங்களின் பயனுள்ள குறிப்புகளை தேடிக்கொண்டிருந்தென் அது கிடைக்கவில்லை.இப்பொழுது நீங்களே எழுதிவிட்டீர்கள்.நீங்கள் சொன்னதை follow செய்கிறேன். என் மகள் colouragiraala என்று பார்க்கலாம். நாங்கள் இருப்பது ஹைதிராபாத்தில் இங்கு department ஸ்டோரில் rose petal பவுடர் கிடைகிறது. அதை use செய்யலாமா. புனுகுபட்டை, வசம்பை தெலுங்கில் என்ன சொல்வார்கள் வுங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். இப்பொழுது தான் வூருக்கு போய்வந்தோம். இனி அம்மா இங்கு வருவதற்கு இன்னும் 4 மாதம் ஆகும்.அதனால் தான் இங்கு கிடைக்கும் பொருட்களை use பண்ணலாமா என்று கேட்கிறேன்.தேவா நீங்கள் எழுதிய facial செய்யும் முறையை வீட்டில் செய்து பார்த்தேன். மிகவும் பயனடைந்தேன்

கேட்க மறந்து விட்டேன். எங்கள் வீட்டில் aloevera இருக்கிறது. அதை தலைக்கும் முகத்திற்கும் எப்படி use செய்வது. கற்றழையை குழந்தைகளுக்கு பயன் படுத்தலாமா. கற்றாழையின் வுபயோகம் குறித்து எழுதவும்..

எனக்கு இருக்கும் அதே பிரச்சணை உங்களுக்கும். புருவத்திலிருந்து பேஷியல் வரை நிறைய ஒற்றுமைதான். இந்த பொரி பொரியாக முகத்தில் வருவதற்கு முதல் காரணம் அவர்கள் உபயோகிக்கும் பொருட்களும், ஒவ்வாமையும்தான். இது அனைத்திற்கான விடையும் இந்த பதிவில் தெளிவாக எழுதி இருக்கேன் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/6566
ப்ளீச்சிங் செய்வது மாதம் ஒரு முறை என்றால் ஓகே. முதலில் ஹெர்பல் ப்ளீச்சர் ட்ரை செய்யுங்கள். இதனைப் பற்றியும் மேலே சொன்ன பதிவின் கேள்வி பதில்களில் விளக்கமாக இருக்கும். படித்துவிட்டு புரியவில்லையென்றால் எழுதுங்கள். பதிலளிக்கிறேன்.

எப்படி இருக்கீங்க? உங்களுக்கு உதவ ஆசைதான். ஆனால் நான் தெலுங்கில் தடுமாறி பேசறதே எதாவது கல்யாணம், விசேஷத்தில் மட்டும்தான். இதுல வசம்பு, புனுகுப்பட்டைக்கு தெலுங்கில் என்ன பெயர்னு கேட்டா என்னன்னு சொல்லுவேன். அய்யோ அவ்வா (என் பாட்டிதான்) நீங்க உயிரோட இருந்திருந்தாலாவது கேட்டு சொல்லி இருப்பேன். இப்ப அறுசுவை தெலுங்கு பண்டிட்டுங்க யாராவதுதான் ஹெல்ப் பண்ணனும். மல்லி, வாணி ரமேஷ், சிஜான்னு யாராவது வந்து சொல்லுங்க. நம்ம அட்மினுக்கு நல்லா தெலுங்கு தெரியும். அவர்கிட்ட வேணா கேக்கலாம். மற்ற மொழிகளில் சைட் வரும்போது, நம்ம அறுசுவையிலேயே இப்படி ஒரு டிக்ஷ்னரி விரைவிலேயே வரலாம். இப்போதைக்கு நெட்டில் இருந்து சுட்டது இந்த பெயரெல்லாம். அங்கே கடைகளில் கேட்டுப் பாருங்க.

வசம்பு - Telugu - Addasaramu அல்லது Vasa , Botanical Name - Acorus Calamus , English - Sweet flag, Hindi - Bach

பூலாங்கிழங்கு - Telugu - Gandha Kachuralu , Botanical name - Hedychium Spicatum

புனுகுப்பட்டை - Telugu - Punga - இதை மட்டும் கொஞ்சம் டபுள் செக் பண்ணிக்குங்க. இன்னொரு பெயர் Indian Beech tree, Botanical Name - Millettia pinnata , பழைய பெயர் - Pongamia pinnata . இது அதிகம் ஹைத்ராபாதில் இருக்கு. இங்கே ப்ரிஸ்பேனிலும் இருக்கு. எனக்கே இன்னைக்குதான் தெரிஞ்சுது. இங்கே UQ யுனிவர்சிட்டியில் அதிகம் வளர்க்கிறார்களாம்.

கடைசி ஐயிட்டம் கிடைக்காட்டி அம்மாவை பார்சல் அனுப்ப சொல்லிடுங்க. அலோவேரா அப்படியே பிரெஷ்ஷாக தடவிக் கொள்ளலாம். எதனுடனும் சேர்க்க தேவையில்லை. குழந்தைக்கு 1 வயதிற்கு மேலே ஆகிவிட்டது என்றால் தடவி 5 - 10 நிமிஷம் மட்டும் ஊறவிடலாம். தலைக்கு வேண்டாம். இது நல்ல சன் டான் ரிமூவரும் கூட.

அன்பு தேவா மேடம்
நான் உங்க கருத்துக்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு தான் நான் முதன் முறையா உங்க அழகு குறிப்புகளை பார்க்கிறேன். மிக்க நன்றி, மிகவும் பயனுள்ளதா இருக்கு. நான் Eyebrow threading மட்டும் தான் regular-a பண்றேன். நான் வேறு எந்த முயற்சியும் பண்ணியது இல்லை. நீங்க சொன்னது எல்லாம் படிக்கும் போது வீட்டிலிருந்தே பண்ற மாதிரி நிறைய விஷயங்கள் சொல்லிருக்கீங்க.கண்டிப்பா try பண்ணுவேன். என் கணவா் IT field, அதுனால அவருக்கு கண் பிரச்சனை அடிக்கடி வரும். நீங்க சொன்ன மாதிரி இனிமே ஆலிவ் ஆயில் மஸாஜ் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வுங்கள் பதிலுக்கு நன்றி. எனக்காக வுங்களுக்கு தெரியாத இவ்வளவு விசயங்களை எனக்காக collect செய்து சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி.வுங்கள் பதிலை பார்த்தால் நெருங்கிய தோழி போன்ற வுணர்வை ஏற்படுத்துகிறது.நீங்கள் சொன்னது போலே என் மகளுக்கு சோப்பு மற்றும் ஆயிலை மாற்றிவிட்டேன்.இனி நீங்கள் எழுதிய பவுடர் மட்டும் தயார் செய்யவேண்டும். இப்பொழுதெல்லாம் ஏதாவது சந்தேகம் வந்தால் தேவா ஆன்டிஇடல் கேள் மம்மி என்கிறார்கள் என்கிறார்கள் பிள்ளைகள். அந்த அளவுக்கு நீங்கள் என் வீட்டில் famous ஆகிவிட்டீர்கள் தேவா. தேவா இன்னொரு சந்தேகம் ஸ்டீம் பாத் எடுப்பது நல்லதா? அதன் நன்மைகள் தெரித்தால் சொல்லவும். ஸ்டீம் பாதல் வுடம்பு இளைக்குமா? ப்ளீஸ் தெரிந்தால் எழுதவும் தேவா.

உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி. பயனுல்லதா இருக்கு. நான் உங்க பேசியல் டிப்ஸ் follow பண்ணி லாஸ்ட் வீக் ட்ரை பண்ணேன் நல்லாருந்தது. ஆனா நான் ஹிமலாயா ஹெர்பல் பேசியல் products யூஸ் பண்ணேன். தட்ஸ் ஆல்சோ குட் அக்கா. ப்ளீசிங் தன இன்னும் ட்ரை பண்ணல. இது பண்ணா facela இருக்க முடிலாம் கலர் மாறிடும்ல?. FEM யூஸ் பண்ணலாமா ?

dont do that, if affects your child.

உங்கள் தெளிவான பதிலுக்கு நன்றி தேவா!
(தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தேவா அக்கா
நான் ஃபேஸ் வாஷ் எதுவும் யூஸ் பண்றது கிடையாது, நீங்க ஆமினாவுக்கு சொன்ன பதிவை பார்த்தேன், இனி நானும் யூஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன். முன்னாடியேல்லாம், 2 வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் மஞ்சளை பன்னீருடன் கலந்து பூசுவேன், அப்புறம் கடையில் கிடைக்கும் சாந்திக் என்ற ஒரு ஃபேஸ்பேக் போடுவேன். தற்போது எதுவுமே போடறதில்லை. இனிமே தான் கன்டினியு பண்ணனும்.

தினமும் முகம் ஃப்ரஷா இருக்க காலையில் ஃபவுன்டேஷன் க்ரீம் போட்டு ரோஸ் பவுடர் யூஸ் பண்ணலாமா? இப்படி தினமும் இதை யூஸ் பண்ணினால் சைட் இஃபக்ட் இருக்குமான்னு சொல்லுங்களேன். தினமும் மைல்டா லிப் ஸ்டிக் போடலாமா, அப்படி போட்டால் உதடுக்கு பாதிப்பு வருமா

அன்புடன்
பவித்ரா

எப்படி இருக்கீங்க? உங்ககூட பேசறதுல ரொம்ப மகிழ்ச்சி. சீதாலக்ஷ்மி மேடம் பதிவுகளில் நாம ஒவ்வொருத்தர் பதிவை படிச்சுக்கறதோட சரி. பேசினதில்லை. வீட்டில் எல்லாரும் நலமா? கண்ணுக்கு தினமும் பன்னீரை பஞ்சில் தொட்டு வைப்பதும் ரொம்ப நல்லது.

ஸ்டீம் பாத் செஞ்சா இளைக்குமான்னா நிச்சயம் அதுவும் துணை செய்யும் அவ்வளவுதான்னு சொல்லணும். ஆனால் மால்தீவ்ஸில் நாங்க இருந்தப்ப, அங்கே கிராமங்களில், டெலிவரிக்குப் பிறகு குண்டான பெண்களை ஒரு நாடாக்கட்டிலில் படுக்க வைத்து கீழே எரிஞ்ச தணலை ( நம்ம ஊர் தீமிதி போல) நிறைய கொட்டி இருப்பாங்க. இப்படி தினமும் செய்ய செய்ய அவங்க உடம்பில் இருக்கற கொழுப்பு சுத்தமா கரஞ்சு அவங்க சிக்குனு ஆயிடுவாங்கன்னு சொல்லுவாங்க. அதை நான் முதலில் நம்பவே இல்லை. அது எப்படி கொப்பளம் தான் வரும்னு சொல்லுவேன். ஆனால் இந்த ஐலேண்ட் பொண்ணுங்களை திடீர்னு ஒரு நாள் பார்க்கும்போது உடம்பு மெலிஞ்சு வருவாங்க. ஆச்சரியமாவும் இருக்கும். ஹாஸ்பிடலில் வேலை செஞ்ச நல்ல உடம்பு குண்டான ஒரு லேடி டாக்டர் ஐலேண்டுக்கு வேலைக்குப் போனப்ப தினமும் இப்படி செஞ்சுட்டு, திரும்பி வந்தப்ப வத்தல் மாதிரி ஒல்லியோ ஒல்லின்னு வந்தாங்க. அவங்க கூட படிச்ச, வேலைப் பார்த்த அத்தனை பேருக்குமே ஒரே ஆச்சரியம். அவங்க ஏற்கனவே டார்க் காம்ப்ளெக்ஷன்றதால இப்படி செஞ்சதுல அவங்க கலர் குறைஞ்சுதா என்னன்னு தெரியல. ஆனால் ரிசல்ட் என்னவோ கண்ணால பார்த்தேன். ஆனால் அவங்க அதோட டயட்டிங், எக்சர்சைஸ் எதாவது பண்ணாங்களான்ற சீக்ரெட்டை அவங்க சொல்லல. நல்லா குலோப்ஜாமூனாதான் தினமும் அதுக்கப்புறம் கூட சாப்பிட்டுட்டு இருந்தாங்க. ட்ரை பண்ணிப் பார்க்க நமக்கு கட்ஸ் லேது. என் சித்தப்பா ஒருத்தர் 100 கிலோவுக்கும் மேலே. அவரும் ஜிம் போய் தினமும் ஸ்டீம் பாத் எடுப்பார். நோ ரிசல்ட். உடம்பில் உள்ள அழுக்கை, கொழுப்பை வேர்வையா நீக்க உதவும். அவ்வளவே. நான் ஜிம் போகும்போது ஒரு 5 நிமிஷம் அந்த ரூமில் போய் உட்கார்ந்துக்கிட்டதோட சரி. இதனால ஸ்கின் சூப்பர் க்ளோயிங்கா இருக்கும். அது நிச்சயம்.

ப்ளீச்சிங் பண்ணா நிச்சயம் முகத்தின் முடி கலர் மாறிடும். முகம் வெள்ளையா இருந்து முடி கருப்பா இருந்தா அது ஒரு வித டல் லுக்கை கொடுக்கும். ப்ளீச்சிங் பண்ணும் போது முக நிறத்துக்கே முடி மாறிடும். ஆனால் ரொம்ப டார்க் காம்ப்ளெஷன் உள்ளவங்க ப்ளீச்சிங் பண்ணா முடி தனி கலரா அசிங்கமா தெரியும். அதனால அவங்க முகத்தில் முடியினை நீக்கின பிறகு ப்ளீச்சிங் செய்யலாம். Fem, Jolen, Nair போன்ற பிராண்டுகள் நன்றாக இருக்கும்.

நீங்க எதுக்கான பதிலா இதை சொல்லி இருக்கீங்கன்னு தெரியல. தெரிஞ்சா , தவறா இருந்தால் என் விளக்கத்தை கொடுக்கலாம்.

தினமும் வெளியில் செல்லும்போது வேண்டுமானால் நீங்கள் சொன்ன லைட் மேக்கப்பை போட்டுக் கொள்ளலாம். ஆனால் வீட்டில் இருக்க மேக்கப் என்றால் அதற்கு பவுண்டேஷன் க்ரீம் தேவையில்லை. மாய்ச்சுரைசிங் லோஷன் போட்டு, காம்பாக்ட் பவுடர் போட்டால் போதும். நீங்கள் மினரல் பவுண்டேஷனை தினமும் இரு வேளைக்கு மேல் உபயோகித்தால் மட்டுமே நெடு நாள் கழித்து சைட் எபெக்ட் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது மினரல் பவுண்டேஷனில் உள்ள நாநோ பார்ட்டிக்கல்ஸ் (மிகவும் சின்ன துகள்) சருமத்தில் ஊடுருவி கேடு விளைவிக்க வாய்ப்புள்ளதாம். மற்றபடி பொதுவாக பவுண்டேஷனில் எந்த வித சைட் எபெக்டும் கிடையாது. தரமான பிராண்டாக இருப்பது அவசியம். லிப்ஸ்டிக்குக்கும் எனது பதில் தரமான பிராண்ட் தான்.

தேவா மேடம்

உங்க பதில் பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி....
உங்களுடைய குறிப்புக்கும் நன்றி....

வீட்டில் அனைவரும் நலம். தங்கள்வீட்டில் அனைவரும் நலமா?. உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் என்ன பேசுவது என்று தெரியாது. பிறகு ஒருநாள் நீங்கள் அழகுக்குறிப்பு கொடுத்துக்கொண்டு இருக்கீா்கள் என்று தெரிந்தது. நீங்கள் கண்ணுக்கு கொடுத்த குறிப்பு எனக்கு பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Dear deva
pregnancy weight loss பண்றதுக்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்களேன். டெலிவரி முடிந்து 9 months ஆகுது, pregnancy period ல 20kg வெயிட் கெயின் பண்ணேன். இப்போ 15kgG kuraichiten. last 5 kg kuraiya matenthu, weight loss பண்ண எதாவது வழி சொல்லுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய் தேவா,

பயனுள்ள குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள். நன்றி. எனக்குக் கண்களின் மேல் இமையில் கரும்புள்ளிகள் போல் சிறு சிறு புள்ளிகள் உள்ளன. என்னுடையது மிகவும் சென்சிடிவ் ஆன சருமம். முகச் சருமத்தில் கரும் புள்ளிகள் எதுவும் இல்லை.ஆனால் இமைகளின் மேல் மட்டுமே உள்ளன. eye liner(Eye tex) போட்டேன் அந்த இடம் எரிகிறது.. முதல் முறை் போடும் போதே எரிந்தது.. ஆனால் திருமணத்தின் make up போது எந்த எரிச்சலும் இல்லை.. திரும்ப இரண்டு நாட்களுக்கு முன் பயன்படுத்திப் பார்த்தேன்.. எரிச்சலாகத்தான் இருந்தது. என்ன காரணமாக இருக்கும்? இமைகள் மேல் உள்ள கரும்புள்ளிக்கு என்ன செய்வது.. உதவுங்கள் ப்ளீஸ்..

ஹாய் தேவா எப்படி இருக்கீங்க.கணவர் குழந்தை நலமா. வுங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.நீங்க சொன்ன மாதிரி என் மகளுக்கு ஜான்சன் சோப்பு நன்றாக சூட் ஆகி யுள்ளது. blackness போய் கலர் ஆகியிருக்கிறாள் நீங்க சொன்ன பொடிக்கு தான் பொருட்கள் கிடைக்கவில்லை.அது ஊருக்கு போனால் தான் தயார் செய்து எடுத்துவரவேண்டும். ஸ்டீம் பாத் பற்றி வுங்கள் விளக்கம் அருமை.நானு ட்ரை பண்ணலாம் என்று இருக்கிறேன். தொடர்ந்து வுங்கள் பதிலை படித்துகொண்டிருப்பேன்

இந்த பிரச்சணைக்கு நான் ஆலோசனை சொல்லுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் ஒரு ஸ்கின் டாக்டரைப் பார்ப்பது முகவும் அவசியம். இந்த புள்ளிகளைப் பற்றி அவரிடம் கன்சல்ட் செய்வது அவசியம். இயற்கையாக அதுவரை தயிர் அல்லது பாலேடு மட்டும் தடவுங்கள். உங்களுக்கு EyeTex இப்போது ஒவ்வாமை ஏற்படுத்தலாம். திருமணத்தின் போது இதே பிராண்ட் தான் உபயோகித்தீர்களா? எத்தனை வருடங்கள் ஆகின்றது? இப்படி ஒவ்வாமையால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை நீக்க ஸ்கின் டாக்டர் நிச்சயம் எதாவது மருந்தினை பரிந்துரைப்பார். அந்த கரும்புள்ளிகள் நீங்கும்வரை Eyeliner உபயோகிக்க வேண்டாம். அடுத்த முறை ரெவ்லான், லோரியல், லான்கம் போன்ற தரமான பிராண்டுகளின் ஐலைனரை உபயோகப்படுத்திப் பாருங்கள். Eyetex, Sinthoor போன்றவை எனக்கும் கண்களில் அரிப்பினை உண்டு பண்ணியிருக்கிறது. ஆனால் மற்ற பிராண்டுகள் ஒத்துக் கொள்கின்றன. நன்றாக பொருந்திய லக்மே பிராண்டில் தற்போது புதிதாக வந்திருக்கும் ஐலைனரை உபயோகித்தாலும் எனக்கு கண்ணில் இதே அரிப்பு வருகிறது. எனவே அப்போது உபயோகப்படுத்திய பிராண்ட் ஏன் தற்போது ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைக்க வேண்டாம். அதே ப்ரொடக்ஷன் லைன் நிச்சயம் இருக்காது இல்லையா? முதலில் ஸ்கின் டாக்டரை கன்சல்ட் செய்யுங்கள்.

நன்றி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

நான் ஃபவுன்டேஷனில் LAKME தான் உயயோகிப்பேன்.

அன்புடன்
பவித்ரா

நன்றி தேவா.. இப்போதுதான் உங்கள் பதிலைப் பார்த்தேன்.திருமணத்தின் போதும் “eyetex" தான் உபயோகித்தேன்.நீங்கள் கூறியது போல் மருத்துவரை
கலந்தாலோசிக்கிறேன், நன்றி.

உங்க குறிப்புகள் எல்லாமே அருமை. அறுசுவையில் ஒரு பியூட்டி பார்லர் என்றே சொல்லலாம். இப்ப மேட்டருக்கு வரேன்.

நான் கண்ணாடி போட்டிருப்பேன். அதனால் இமைகளுக்கு EYE LINER இல்லை கண்களுக்கு மையோ வைத்தால் சரியாக தெரியாது என்ற எண்ணம் உள்ளது. நான் உபயோகித்தால் நன்றாக இருக்குமான்னு சொல்லுங்க. மையை விட கண்ணின் கீழ் போடுவதற்கு இன்னொரு முறையாக பென்சில் போடலாமான்னு சொல்லுங்க. சில பேர் கண்ணின் கீழ் போடுவதற்கு பென்சில் மாதிரி உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதை பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

நான் த்ரெடிங் பண்ணினதே இல்லை, பண்ணும் விருப்பம் இல்லை, புருவத்தில் அதிக முடி இல்லாம, சரியான் அளவே இருப்பதால் நான் செய்வது இல்லை. அதை பற்றிய உங்க கருத்தும் தேவை.

அன்புடன்
பவித்ரா

கண்களின் பவர் மிகவும் முக்கியம். ஒரு வீச்சு ..அது கதிர் வீச்சு என்று சொல்லும் வண்ணம்
பார்வை அமைய நோக்கு வர்மக் கலி என்று ஓன்று உள்ளது.
சாதரணமாக தினந்தோறும் சில பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.
வசீகரிக்கும் பார்வை, மயக்கும் பார்வை போன்றவை பெற மனம் தியானத்தால் தெளிவு பெற வேண்டும்.

தேவா மேடம்,
எனக்கு முகத்துல பருக்கள் ரொம்ப வருது மேடம்.அதுக்கு என்ன பண்ணலாம்.எனக்கு கொஞ்சம் ஆலோசனன சொல்லுங்கள் மேடம்.

kalaimathi

how are you? i need more eyebrows please help me

ENAKKU KANNUKKU ADIYIL KARUVALAYAM IRUKKIRADU SO, ADU POGA ENAKKU ORU WAY SOLLUNGA. THALAI MUDIYUM ADIGAMA KOTTUDHU. BLACK SPOTS & PIMPLES ADIGAMA VARUDHU . THANK YOU