
முகம்
நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.
கண்கள்
"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.
பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.
Comments
தேவா..
உங்க குறிப்பு நல்ல உதவி இருக்கு.. உங்களுக்கு ரெம்பா நன்றி.. எனக்கு ஒரு புருவம் மட்டும் கொஞ்சம் சின்னதாவும் இன்னொன்னு கொஞ்சம் பெருசாவும் இருக்கு... நான் பூயிட்டிசன் கிட்ட கேட்டதுக்கு நார்மலா எல்லோருக்கும் அப்படிதான் இருக்கும்னு சொல்றாங்க.. அது உண்மையா?
எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை
புருவம்
புருவம் பெரிதாகவும் ஒன்று சின்னதாகவும் இருந்தால் த்ரெட்டிங் முறையில் அழகாக சரி செய்து கொள்ளலாம். நாம் சொல்வதைக் கேட்டு பொறுமையாக அட்ஜஸ்ட் செய்து விடும் பார்லருக்கு செல்லுங்கள். த்ரெட்டிங் செய்து முடித்தவுடன் கண்னாடியை அருகில், தூரத்தில்னு பல ஆங்கிளில் வெச்சு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் எங்கே எவ்வளவு எடுக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி செய்ய சொல்லுங்கள். செய்ய மறுப்பவர்கள், சாக்கு போக்கு சொல்பவர்களை மாற்றுங்கள். நம் உடலில் சில உறுப்புகள் கூட ஒன்று போல் இன்னொன்றும் அதே அளவுடன் இருப்பது அபூர்வம்தான்.
ஐலைனர்
ஹாய் பவித்ரா , கண்கள் மை போட்டால் தெளிவாக தெரிய அதற்கேற்ற கண்ணாடியை தேர்வு செய்யுங்கள். ஹை இண்டெக்ஸ், ஃபரேம்லெஸ் போன்ற வகைகளை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஐலைனர் பென்சிலைப் பற்றித்தான் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். லக்மே, ரெவ்லான், லோரியல் போன்ற பிராண்டுகளில் உள்ள லாங்க் ஸ்டே ஐலைனரை உபயோகித்தால் காலையிலிருந்து இரவு வரை கலையாமல் அழகான லைனாக இருக்கும். இந்தியாவில் Kohl பென்சில் என்றும் சொல்வார்கள். ஆனால் kohl பென்சிலில் லாங்க்ஸ்டே கிடைப்பது இல்லை. த்ரெட்டிங் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இப்போதிருக்கும் லுக்கே உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் விட்டுவிடுங்கள். த்ரெட்டிங் செய்தால் மாதம் தோறும் ரெகுலராக செய்து கொள்ள வேண்டும். ஆனால் த்ரெட்டிங் செய்தால் கண்கள் நிச்சயம் எடுப்பாக தெரியும்.
முகப்பரு
ஹாய் கலைமதி, முகத்தில் பரு வராமலிருக்க ஆய்லி சருமமாக இருந்தால் முல்தானி மட்டியும் சாதாரண சருமமாக இருந்தால் கடலைமாவு,மஞ்சள்,எலுமுச்சை சாறு, தயிறு கலந்த பேக் போடுங்கள். கூடுமானவரை பருக்களை கிள்ளாமல் இருங்கள். க்ளியர்சில் பேஸ் வாஷ், க்ரீம் உபயோகியுங்கள். பருக்கள் போய்விடும்.
புருவம் வளர
ஹாய் நிஷா, தினமும் உறங்கும் முன்பு விளக்கெண்ணெய் சிறிது பஞ்சில் நனைத்து புருவத்தில் தடவி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
கண்
ஹலோ மேடம் நான் புதிதாக உங்கள் தொடரை வசிக்கும் வசகி ரொம்ப அருமையா இருந்தது கண் அரிப்பாக இருந்தால் என்ன செய்யலாம் மேடம் கொஞ்சம் சொல்லுங்களேன்
eyes
very useful tips for about eyes,thanks
எப்பவும் சிரித்துக்கொண்டு இருப்பேன். வேதனைக்கு ஒதுக்கும் நேரம் சிறிதே!!
for my eyes
dear mam,
under my eyes black circles are there
how can i reduce by home made product help for me
kannil karuvalayam
kannil karuvalayam irukkirathu nan seithuparkkiran
நான் புதிய உருப்பினர்.
நான் புதிய உருப்பினர். கேள்விகளை எப்படி அனுப்புவது என்று தெரிய படுத்தவும்
முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன
ஹாய் தேவ மேடம் நான் புதிய உறுப்பினர் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன் பஜனுள்ளதாக உள்ளது மேடம் எனக்கு முகத்தில் பருக்கள் நிறைய உள்ளது எண்ணெய் சருமம் கொண்டது.. இதில் உங்கள் பதிவில் பார்த்தேன் பருவுகும் எண்ணெய் சருமத்துக்கும் வழி குறிபிட்டு இருந்தீர்கள் அதில் ஒரு சந்தேகம் முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன?இது இல்லாமலும் மட்டயவைஜை வைத்து செய்யலாமா ப்ளீஸ் சொல்லுங்கோ..எனக்கு பத்து வருசத்துக்கு மேலை இருக்கு இந்த பிரச்சனை நான் இப்போ கனடா ல இருக்குறான் நான் தற்போது மூன்று வருடமாக பாயர் அண்ட் lovely ஆயுர்வேதிக் பலன்சே உஸ் பண்ணுறன் என்ன செய்வது எண்டு தெரியவில்லை வெளியில் போக விருப்பம் இல்லாமல் இருக்கு பருவை இல்லாமல் செய்ய வழி சொல்லுங்கோ மேடம் வீட்டிலை இருந்து செய்ய கூடிய மாதிரி ஏதும் வழி சொல்லுங்கோ மேடம் ரொம்ப நன்றி
முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன
ஹாய் தேவ மேடம் நான் புதிய உறுப்பினர் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன் பஜனுள்ளதாக உள்ளது மேடம் எனக்கு முகத்தில் பருக்கள் நிறைய உள்ளது எண்ணெய் சருமம் கொண்டது.. இதில் உங்கள் பதிவில் பார்த்தேன் பருவுகும் எண்ணெய் சருமத்துக்கும் வழி குறிபிட்டு இருந்தீர்கள் அதில் ஒரு சந்தேகம் முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன?இது இல்லாமலும் மட்டயவைஜை வைத்து செய்யலாமா ப்ளீஸ் சொல்லுங்கோ..எனக்கு பத்து வருசத்துக்கு மேலை இருக்கு இந்த பிரச்சனை நான் இப்போ கனடா ல இருக்குறான் நான் தற்போது மூன்று வருடமாக பாயர் அண்ட் lovely ஆயுர்வேதிக் பலன்சே உஸ் பண்ணுறன் என்ன செய்வது எண்டு தெரியவில்லை வெளியில் போக விருப்பம் இல்லாமல் இருக்கு பருவை இல்லாமல் செய்ய வழி சொல்லுங்கோ மேடம் வீட்டிலை இருந்து செய்ய கூடிய மாதிரி ஏதும் வழி சொல்லுங்கோ மேடம் ரொம்ப நன்றி
முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன
ஹாய் தேவ மேடம் நான் புதிய உறுப்பினர் உங்கள் பதிவுகள் எல்லாம் பார்த்தேன் பஜனுள்ளதாக உள்ளது மேடம் எனக்கு முகத்தில் பருக்கள் நிறைய உள்ளது எண்ணெய் சருமம் கொண்டது.. இதில் உங்கள் பதிவில் பார்த்தேன் பருவுகும் எண்ணெய் சருமத்துக்கும் வழி குறிபிட்டு இருந்தீர்கள் அதில் ஒரு சந்தேகம் முல்தானி மட்டி அப்புடி என்றால் என்ன?இது இல்லாமலும் மட்டயவைஜை வைத்து செய்யலாமா ப்ளீஸ் சொல்லுங்கோ..எனக்கு பத்து வருசத்துக்கு மேலை இருக்கு இந்த பிரச்சனை நான் இப்போ கனடா ல இருக்குறான் நான் தற்போது மூன்று வருடமாக பாயர் அண்ட் lovely ஆயுர்வேதிக் பலன்சே உஸ் பண்ணுறன் என்ன செய்வது எண்டு தெரியவில்லை வெளியில் போக விருப்பம் இல்லாமல் இருக்கு பருவை இல்லாமல் செய்ய வழி சொல்லுங்கோ மேடம் வீட்டிலை இருந்து செய்ய கூடிய மாதிரி ஏதும் வழி சொல்லுங்கோ மேடம் ரொம்ப நன்றி
ஹலோ தேவா மேடம், உங்கள்
ஹலோ தேவா மேடம்,
உங்கள் குறிப்புகள் மிகவும் அருமை. இத்துடன் கண்களின் ஆரோக்கியத்துக்கான சிறிய பயிற்சி முறைகளையும் எழுதினால் அனைவருக்கும் பயன்படும். குறிப்பாக கணிணி வேலை பார்க்கும் என் போன்றவருக்கு உதவியாக இருக்கும்.
help me plz madam
hello madam naan intha pakkathirku puthithu.eanaku face-la niraya pimple varuthu. naan face wash cream clean & clear use panren..ithu use pannalama?illa vera eantha face wash use pannuna nallathu.ean face-la pimple irukarathala ean azhagai kedukkuthu..please eanaku nalla oru tip thaanga please...
god is love
hai mam
hai mam how r u? ungaludaya yella tipsum super.kan karuvalaya perachana yellorukum irukku,etha nanum try panteren medam.thanks for your tips.
sayathra
hai
hai akka ungalutaya yalla tips supper akka. very very nice and mugathli enni basi athigam iruku akka athuku yethavuthu tips thanga pls
its nice to see this
its nice to see this page......
give some more points to do apt facial for a dry skin..
thank you...
SugirthaPradeep
DEVA madem
ஹாய் மேடம். நான் இந்த பக்கத்ட்திர்கு புதிது.எனக்கு கன்னுக்கு மை போடனும்னு ஆசையா இருக்கு.எந்த ப்ரான்ட் வாங்கினா நல்லா இருக்கும்னு சொல்லுங்க .உங்கலோட எல்லா டிப்ஸ்ம் நல்லா இருக்கு.அதுக்கு வாழ்த்துக்கல்.உஙலுக்கு மெயில் ஐடி இருக்க சொல்லுஙga plz.எனக்கு face wash cream best brand சொல்லுஙga plz.i am waiting for your reply.....
good brand-reply
கண்களுக்கு போட கூடிய தரமான ஐ ப்ராண்டுகளை சொல்லுங்கள்.
செளந்தர்யா,
கண்மையில் நான் வைப்பது ஐடெக்ஸ் மட்டும்.இது நன்றாக உள்ளது.இப்ப இல்லப்பா சின்ன பாப்பால இருந்து இதே பிராண்டுதான் ....
renuka
பதிலுக்கு நன்றி ரேனுகா.நான் colossal kajal use பன்ரேன்.அது கொஞ்ச நேரம் ஆனதும் கன்னுக்கு கீழே வந்துடுது.face wash பன்னுனா கூட கருப்பாவே இருக்கு.ஐடெக்ஸ் -மை தானே.சின்ன டப்பாவில் இருக்குமே.குழந்தைகளுக்கு வைப்போமே அதுவா?
: ஹாய்....
ஹாய் தேவா மேடம்
உங்கள் குறிப்புகள் அனைத்துமே அருமை
என் முகம் ரொம்ப டல்லாக இருக்கிறது அதற்கு ஒரு தீர்வு சொல்லவும்
கவிதை என் சுவாசமும் நேசமும்
Ranjit
How to remove my black circle under eye.
Eye care
Enakum same problem. Enna seivathu endru solu ple. 6 year ah iruku
eye
என் கண்ணூக்கடியில் சின்ன விக்கம் போல் வுல்லது அது போக என்ன செய்ய வேண்டும். 15 நாளா கார்னியர் BB கிரிம் போடறேன்
eye
v.good tips
under arm -waxing doubt
ஹலோ மேடம்.Under arm waxing பன்னலாமா?வலி இருக்குமா?அதை பற்றி சொல்லுங்கள்.
KARUVALAIYAM
HAI MAM,
Very useful to your tips regarding eyes balckmark.u gave natural tips,like curd,turmerik and sandal,potato.so i will try to apply this mied pack.afterthen i will sharing my opinion.
Thank u mam.
G.Sangeetha
ALL IS WELL.
G.Sangeetha
blackmark
hai mam,
very useful to your tips.
ALL IS WELL.
G.Sangeetha