கண்கள் மற்றும் இமை பராமரிப்பு

இமை பராமரிப்புBeauty tips

முகம்

நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.

கண்கள்

"கண்களின் வார்த்தைகள் புரியாதா" என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள். கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.

Eyes care

பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும். கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.

கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.

கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.

Comments

hai mam,
very useful to your tips regarding eyes balckmark.u gave natural tips like curd,turmerik,sandal,potapo.i have eyes blackmark.so i will try to apply this mied pack.afterthen i will sharing my opinion.
Thank u mam.
G.Sangeetha.

ALL IS WELL.
G.Sangeetha

very useful tips.
thank u mam.

enaku operation panni than kulanthai piranthathu.vayirula karuppavum kodu kodavum iruku enna panrathu.

tips aethavathu sollungalaen.

ethavathu oru doubt clear pannurathukku usefula irukkuthu.veetla lonelya feel pannama usefula irukka vaikkuthu

அக்கா,
உங்களது அழகு குறிப்புகளை இன்று தான் படித்தேன். மிகவும் பயனுள்ளது. எனக்கு 29 வயது. நான் தற்போது 5மாத கர்ப்பம். சுகர் இருக்கிறது. என் பிரச்சனை கடந்த 2 மாதமாக முகத்தில் முகப்பரு அதிகமாக இருக்கிறது.. டாக்டரிடம் கேட்டதற்கு ஹார்மோன் பிராப்ளம் ல வரும் சரியாகிவிடும் என்றார். ஆனால் இதுவரை முகபரு எனக்கு வந்ததேஇல்லை. வந்தாலும் கஸ்தூரி மஞ்சள் போடுவேன் உடனே சரியாகி பழைய கலர் வந்துடும்.. கர்ப்பமாக இருக்கும் போது அழகு கூடும் என்பர் எனக்கு முகபரு முகம் முழுவதும் இருக்கிறது கவலையாக இருக்கிறது. பார்பவர் அனைவரும் இதையே கேட்கிறனர்.. தயவு செய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள்... ப்ளீஸ்அ

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

it i very useful to me. i don't know about perfume. so ,pls tell me about it

hi i am new to this page

dont use

i am new to this site.i am having dark circle around my eyes...i m trying all cream..nothing is helpful....pls anyone tell one the powerful home remedies

இன்னொரு இழையில் உங்கள் இடுகை ஒன்று படித்தேன். மிகவும் கவலையோடு இருந்தால், தூக்கம் ஒழுங்கில்லாமலிருந்தால் கூட இப்படி இருக்கும். போதிய உறக்கம் கிடைக்கிறதா?

Akka ennoda eye yellow color LA eruku atha white a aka aasai athuku ethavathu eyarkai maruthuvam Eruka eruntha sollunga pls.My E.Mail :emilyhoney555@gmail. com.

kannil niraya surukkam karanam ena

இலங்கையில் பன்னிர் பட்டால் நரைக்கும் என்பார்கள். அதை கண்களுக்கு போடலமா. மேலே குறிப்பிட்டுள்ள‌ பன்னிர்க்கும் இங்குள்ள‌ பன்னிர்க்கும் வேறுபாடு உண்டா? சிரமம் பார்காமல் பதில் தரவும். :)

:-) யார்டா இவ்வளவு தைரியமா பப்ளிக்ல என்னைக் கிழவி எண்டுற ஆள் என்று பார்க்க வந்தன். :-)))

//இலங்கையில் பன்னிர் பட்டால் நரைக்கும் என்பார்கள்.// ;-) இலங்கையில் பன்னீர் எப்படிப் படும்!! :-)

அது... வாசனைக்காக ஓடிக்ளோனை தண்ணியில இல்லாட்டி ரோஸ் வோட்டர்ல கரைச்சு பன்னீர்ச் செம்பில விடுறவங்கள். ஸ்பிரிட் தானே அது! அதனால் தான் அப்பிடிச் சொல்லுறவங்கள் என்று நினைக்கிறன். அங்க ஒரிஜினல் பன்னீரை பன்னீர்ச் செம்பில விடுறது குறைவு.

//அதை கண்களுக்கு போடலமா.// நான் கண்ணுக்குள்ள எதையும் போட மாட்டன். என்ன கேக்கிறீங்கள் என்கிறது போஸ்ட்டை முழுக்கப் வாசிச்சால் தான் எனக்கு விளங்கும். இரவைக்கு நேரம் கிடைச்சால் வாசிச்சுப் பார்த்துச் சொல்லுறன்.

சுரேஜினைப் பிடிச்சால் ஏதாவது சொல்லுவா. :-) ஆனால் அவவையும் நரை-சுரேஜினி எண்டீங்களோ... அடி தான் கிடைக்க்கும். ;-))))

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இமா அக்கா. :) :).;) நிச்சயமாக உன்களை அப்பிடி சொல்லவில்லை.

இலங்கையில் எப்படி படும்??? . அதானே. :).

எனக்கு 10 வரூடத்திட்கு மேலாகா க‌ருவளயம் உள்ளது. கண்கள் சோர்வாக‌ கானப்படும்.

நித்திரைக்கு குறைவில்லை. என் மகளுக்கும்
வர‌ தொடங்கி உள்ள்து. (8 வயது).

அது தான் மேலெ உள்ள‌ குறிப்பின்படி நான் செய்து பார்கலாம் என‌ கேட்டேன்.

பன்னீர்.... அங்கு தரமான பன்னீர் எங்கே கிடைக்கும் என்பது தெரியவில்லை. நீங்கள் தேவா சொல்லியிருக்கும் மற்றவைகளை முயற்சி செய்து பாருங்கள்.

அலோவேரா பற்றி - சரியான செடி தானா என்பதை நிச்சயம் செய்து கொள்வது முக்கியம். ஒரு தோழியைச் சந்திக்கப் போயிருந்தேன். அலோவேரா பற்றிப் பேசினார். என் செடிகள் இறந்து போயின என்றதும், தன்னிடம் நிறைய இருப்பதாகச் சொல்லி சிலதைப் பிடுங்கிக் கொடுத்தார். :-) உண்மையில் அவை எவையும் அலோவேரா அல்ல.

குழந்தைக்கு க்ரீம்கள் வேண்டாம்.

என் அபிப்பிராயம்... கருவளையமும் தலையிடி போல தான். உடலில் எதுவோ ஒரு விடயம் சரியில்லாமலிருப்பதற்கான அறிகுறி இது. இருக்கும் இடத்தில் மட்டும் சிகிச்சை கொட்டுப்பது போதாது. காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரி செய்வது நல்லது.

மஞ்சள் பற்றி - நல்லது தான். ஆனால் அது கொடுக்கும் நிறம் தோலின் இயல்பான நிறத்தை / நிலையை மறைத்துவிடும்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா. நிச்சயமாக‌ முயர்ச்சி செய்கின்ட்றேன்.

நானும் யோசிப்பேன். என்ன‌ காரணம் என்று தெரியவில்லை. :(.

உடல் சூடு, தைரொயிட் காரணமா தெரியவில்லை.
கண்கள் அடிகடி சூடாக (வெக்கையாக‌) இருக்கும்.

அலோவெரா போட்டு பார்க்கின்ரேன்.

உங்கள் பணிகளிடையே பதில் தந்தமைக்கு நன்றி அக்கா.

//நானும் யோசிப்பேன். என்ன‌ காரணம் என்று தெரியவில்லை. // :-) யோசனை கூட காரணமாக இருக்கலாம்.

//தைரொயிட்// இது சுலபமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூடிய விடயம். மாத்திரைகளைச் சரியாக எடுத்தால் மட்டும் போதும்.

‍- இமா க்றிஸ்

உண்மை தான் அக்கா. தேவையில்லாத‌ விடயங்களையும் மனதில் போட்டுகொள்ளும் ஆள் தான் நான். குணத்தை மாற்ற வழி தெரியவில்லை. ):

ஆமாம். தைரொயிட் மருந்து தொடர்சியாக‌ போடுகிரேன். கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிரது.

நன்றி இமா அக்கா. <3

Enakku kuda kanuku kila rommbaa dark ah iruku. Enga amma Kum iruku. Avangaluku heart pressure problrm vandha Apo 5 years munadi dhan vanchi. Enaku light ah dhan irunchi but clg time la adhigam aidichu. Ipo kalyanam aagi family problems Nala rommbba adhigama aitu iruku. And kalyanathuku apram white color skin apdiye black aidichi. Black circles asingama iruku. Skin palaya maari white aaga and dark circles ku edhavadhu solunga plz. Ponnu ku 6 months dha aagudhu. Enna paathuka time ey ila enkita. Kalyanam aagi 1 year and 4 months aagudhu

Enakku kuda kanuku kila rommbaa dark ah iruku. Enga amma Kum iruku. Avangaluku heart pressure problrm vandha Apo 5 years munadi dhan vanchi. Enaku light ah dhan irunchi but clg time la adhigam aidichu. Ipo kalyanam aagi family problems Nala rommbba adhigama aitu iruku. And kalyanathuku apram white color skin apdiye black aidichi. Black circles asingama iruku. Skin palaya maari white aaga and dark circles ku edhavadhu solunga plz. Ponnu ku 6 months dha aagudhu. Enna paathuka time ey ila enkita. Kalyanam aagi 1 year and 4 months aagudhu

Sis enaku 7year ah karuvalayam iruku itha sari panna ethavathu way solunga sis pls sis

Hello Deva Medam,
என் கண்ணுல இப்போ தான் start கருவளையம் வாருவதற்கு,So நீங்க சொன்ன மாதிரி cucumber & poteto சாறு தடவுறன்..தூங்கும் போது கூட cucumber சாற்றை கண்ணுக்கு கீழ பூசுறன்.but பூசின பிறகு phone use ஆவிபடுது..அதனால என்னமாலும் problem வருமான்னு கேக்குறன்.bcz cucumber பூசிட்டு பார்க்குதால....

I'm waiting for your reply Medam..thank you

வணக்கம் _()_ ஆரம்பத்திலேயே ஒழுங்காக ப்ரொஃபைலை நிறப்பி இருக்கிறீங்க. :-)

கருவளையம் 'ஸ்டாட்' பண்ணினான் தொடர்ந்து இருக்கும் என்பது இல்லை. ஒழுங்காக நித்திரைகொள்ளுறீங்களா? நித்திரை காணாட்டிலும் கருவளையம் வரும். ஆனால் அது தொடராது. முதலில் நித்தியைக் கவனியுங்க.

ஃபோன்! அவ்வளவு கன நேரமா கதைக்கிறனீங்க! அது ஆவி வாற அளவு எல்லாம் வெப்பமாக இருக்காது. இன்னொரு விஷயம்... //பார்க்குதால....// எண்டு சொல்லியிருக்கிறீங்கள். அப்ப, இது கதைக்கிறதைப் பற்றின பயம் இல்லை. கன நேரம் ஃபோன் ஸ்க்ரீனை உற்றுப் பார்க்கிறதாலயும் கண் களைச்சுப் போய் கருவளையம் வரும்.

மருந்தை விட கண்ணுக்கு ஓய்வு தான் முக்கியம்.

(பி.கு;_ தேவாவை இந்தப் பக்கம் கண்டு கனகாலம். அதுதான் நான் பதில் சொன்னனான்.)

‍- இமா க்றிஸ்