உல்லன் கேஸ்கட் வால் ஹேங்கிங் - பாகம் 1

தேதி: May 14, 2010

5
Average: 4.7 (6 votes)

அறுசுவை நேயர்களுக்காக திருமதி. பிரியா அவர்கள் இந்த உல்லன் கேஸ்கட் வால் ஹேங்கிங் செய்முறையை வழங்கியுள்ளார்.

 

கேஸ்கட் - ஒன்று
உல்லன் நூல் - 3 (பிங்க், வெள்ளை, பச்சை நிறங்கள்)
உல்லன் ஊசி

 

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் பிங்க் நிற உல்லன் நூலில் சுருக்கு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அந்த துளையில் ஊசியை விட்டு மீதி நூலை விரலில் சுற்றிக் கொண்டு ஊசியால் ஒரு முறை நூலை சுற்றி இழுத்து அந்த துளையின் வழியாக விட்டு வெளியில் இழுக்கவும். இதேப் போல் தொடர்ந்து எட்டு செயின் போட்டுக் கொள்ளவும்.
எட்டு செயின் போட்ட பிறகு ஊசியை திருப்பி முதல் செயினில் விட்டு இழுக்கவும். இப்போது பார்ப்பதற்கு வட்டமாக இருக்கும்.
மீண்டும் ஒரு முறை ஊசியால் நூலை சுற்றிக் கொண்டு வட்டமாக இருக்கும் பெரிய ஓட்டையில் விட்டு இழுக்கவும். இப்போது ஊசியின் முனையில் 3 நூல் சுற்றி இருக்கும் மீண்டும் ஒரு முறை ஊசியில் நூலை சுற்றி இரண்டு நூலில் விட்டு இழுக்கவும். இப்பொழுது ஊசியில் இரண்டு நூல் சுற்றி இருக்கும் மீண்டும் ஊசியால் நூலை சுற்றி இரண்டு நூலிலும் விட்டு இழுத்து விடவும்.
இதுப்போல் 7 முறை அதே ஓட்டையில் விட்டு இழுக்கவும். இப்போது முதல் இதழ் கிடைத்து விடும். 7 முறை முடிந்ததும் ஊசியால் நூலை சுற்றாமல் அப்படியே அந்த பெரிய ஓட்டையின் உள்ளே விட்டு அடிவழியாக ஊசியால் நூலை சுற்றி இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு நூல் இருக்கும். பிறகு நூலை சுற்றி இரண்டு நூல் வழியாக இழுக்கவும். ஊசியால் நூலை சுற்றி அந்த ஓட்டையில் விட்டு இழுக்கவும். இப்போது ஊசியின் முனையில் 3 நூல் இருக்கும் மீண்டும் ஒரு முறை ஊசியில் நூலை சுற்றி இரண்டு நூலில் விட்டு இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு நூல் இருக்கும் ஊசியால் நூலை சுற்றி இரண்டு நூலிலும் விட்டு இழுத்து விடவும்.
இதே போல் 7 முறை இதே ஓட்டையில் விட்டு இழுக்கவும். இப்போது இரண்டாவது இதழ் கிடைக்கும். இதே போல் மீண்டும் 7 முறை ஓட்டையில் விட்டு மூன்றாவது இதழ் போட்டுக் கொள்ளவும்.
மூன்று இதழ் போட்டு முடிந்த பிறகு 4 செயின் போட்டுக் கொள்ளவும். இப்போது பூவை திருப்பிக் கொள்ளவும். முதல் இதழின் நடுவில் ஒரு பெரிய செயினின் அடிவழியாக ஊசியை விட்டு நூலை சுற்றி இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு நூல் இருக்கும். ஊசியால் நூலை சுற்றி இரண்டு செயினிலும் விட்டு இழுக்கவும். (படத்தில் காட்டியுள்ளபடி)
மீண்டும் 4 செயின் போட்டுக் கொள்ளவும். பிறகு இரண்டாவது இதழின் நடுவில் ஊசியை அடிவழியாக விட்டு நூலை சுற்றி இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு நூல் இருக்கும். ஊசியால் நூலை சுற்றி இரண்டு செயினிலும் விட்டு இழுக்கவும். மீண்டும் 4 செயின் போட்டு இதே போல் அடுத்த இதழின் நடுவில் விட்டு இதற்கு முன் போட்டது போல் அடிவழியாக நூலை விட்டு இழுத்துக் கொள்ளவும்.
அடுத்த இதழ் போட ஊசியால் நூலை சுற்றி இழுக்காமல், அடுத்த 4 செயினின் இடைவெளியில் விட்டு இழுக்கவும். இதற்கு முன்பு போட்டது போல் 9 பெரிய செயின் அதே ஓட்டையில் போட்டுக் கொள்ளவும்.
இதே போல் நான்கு இதழ் போடவும். 4 இதழ் போட்ட பிறகு ஊசியால் நூலை ஒரு முறை சுற்றி துளையின் வழியாக விட்டு இழுத்து நூலை வெட்டி விடவும். இப்போது நூலை இறுக்கமாக இழுத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
ஏதாவது ஒரு இதழ் முடியும் இடத்தில்(இரண்டு இதழ்களுக்கு இடையில்) நடுவில் பச்சை நிற நூலை கோர்த்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். பிறகு ஊசியால் நூலை சுற்றி இழுத்து பச்சை நூல் கோர்த்த இடத்தில் விட்டு இழுக்கவும். இப்போது ஊசியில் இரண்டு செயின் இருக்கும் மீண்டும் ஒரு முறை ஊசியால் நூலை சுற்றி இரண்டு செயினிலும் விட்டு இழுத்து விடவும். இப்போது 8 செயின் போட்டுக் கொள்ளவும். இதன் தொடர்ச்சி பாகம் 2 ல் உள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செய்முறை தெளிவாக இருக்கின்றது. அறுசுவை குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். மீதியையும் பார்த்து விட்டு வருகிறேன்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta