6 மாதம் மகனுக்கு எவ்வளவு நேர இடைவேளில் உணவு கொடுக்கலாம்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்
எனது மகனுக்கு 6 மாதம் நடக்கிறது அவனுக்கு அப்பிள்,பேரிக்காய்,உருளை,கேரட்,காளிபிளவர்,செரலக் போன்றவை கொடுக்கிறேன்.
கேழ்வரகு கஞ்சி,இட்லி,பிஸ்கெட்,முட்டை முதலியவை
எப்போது கோடுக்கலாம் எந்த எந்த நேரங்களில் எவ்வளவு நேர இடைவேளில் கொடுக்கலாம் சொல்லுங்கள்
நன்றி
சோமா

வணக்கம் தோழிகளே
எனது கேள்விக்கு யாரேனும் பதில் தாருங்கள்

சோமா

Hi Soma
I am also having 7 months baby. Do not give egg before one year. I do not know about biscuits. Give food whenever he feels hungry. That's all i know . Arusuvai experts will come and tell you the rest. Take care. Bye

6 மாதம் கடந்த பின்பு, நன்கு வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவினை தாராளமாக கொடுக்கலாம். இது மருத்துவர் பரிந்துரைத்தது. முதலில் மஞ்சள் கருவில் கால் பாகம் அளவிற்கு கொடுத்து அதனால் பிரச்சனைகள் இல்லையென்பதை அறிந்த பின்பு அரை பாகம் அளவு கொடுக்கலாம்.

7 - 9 மாதத்தில் நன்கு அவித்த முட்டையின் மஞ்சள் கரு , நன்கு அவித்து அரைத்த இறைச்சி ,மீன் என்பவற்றை உங்கள் குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம், 9 - 12 மாதத்தில் மேற்குறிப்பிட்டவையுடன் பால்(3.25%) ,யோகட்(3.25%) ,சீஸ் போன்றவற்றை சேர்த்துக்கொல்லலாம் , 1 - 2 வயதில் முட்டை வெள்ளைக்கரு, டோபு , பட்டர் , ஐஸ்கிரீம் , பால் புடிங் போன்றவற்றை உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இவற்றை பற்றிய விபரங்களை எனது மகளிற்கு உணவூட்டல் பற்றி எனது மகளின் வைத்தியரினால் தரப்பட்ட கையுதவிப்புத்தகத்தில் உள்ளதை யே உங்களிற்கும் தருகின்றேன். இதன் படியே நான் எனது மகளிற்கு ஒவ்வொரு உணவையும் அறிமுகப்படுத்திக்கொன்டு வருகின்றேன் , எந்த ஒரு புது உணவையும் உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் போதும் ஒரு உணவு கொடுத்து மூன்றாவது நாளே புது உணவை அறிமுகப்படுத்துங்கள் இதனால் ஒவ்வாமை ஏதும் இருப்பின் இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும்

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கும் போது, முட்டையை ஹார்ட் பாயில் பண்ணாதீர்கள். அதை குழந்தைகள் அப்படியே முழுங்குவார்கள்.
சில குழந்தைகள் எப்படியோ முழுங்கனும் என்று முழுங்குவார்கள், சில குழந்தைகள் ருசித்து முழுங்குவார்கள்.
குழைவாக வெந்த முட்டையா இருந்தால் ஸ்பூனினாலே ஊட்டலாம்,முழுங்குவதும் சுலபம், எளிதில் ஜீரணமும் ஆகும்.
ஹார்ட் பாயில் எக் கொடுத்தால் சளி சமையத்தில் கொடுக்காதீர்கள். அப்படியே முழுங்கினால் வாமிட் வரும்.

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

அருசுவை தோழிகளுக்கு வணக்கம்
எனது கேள்விகளுக்கு பதில் தந்த அணைவருக்கும்
நன்றி

சோமா

மேலும் சில பதிவுகள்