நேந்திரம் பழம் பார்க்க எப்படி இருக்கும்?

நேந்திரம் பழம் பார்க்க எப்படி இருக்கும்? ஆங்கிலத்தில் அதற்கு
பெயர் உண்டா?

பதில் தரவும்

மிக்க நன்றி.
Keerthisvary

http://2.bp.blogspot.com/_p7ktf9CaRlg/SZ7r4RcoumI/AAAAAAAAAMM/zg4gd13GRUk/s400/Yellow+banana.JPG

பழங்களை மிக்ஸியில் அடித்து குடித்தால் அதில் அதிகளவு சுகர் ரீலிஸ் ஆகுமாம்.
பழங்களை அப்பிடியே சாப்பிட்டால் சுகர் தன்மை குறைவாக இருக்குமாம்
அது எப்படி எந்தவித சுகரும் சேர்க்காமல் ஸ்மூதியாக பருகினால் அதில் சுகர் அதிகளவு இருக்கும்.
ஏனக்கு இது புரியவில்லை..விளக்கம் தரவும் ப்ளீஸ்

தளிர்

//பழங்களை மிக்ஸியில் அடித்து குடித்தால் அதில் அதிகளவு சுகர் ரீலிஸ் ஆகுமாம்.// :-) ஆமாம், வினோதமாகத் தெரிகிறது, இல்லையா! பழங்கள் மட்டுமல்ல, மாமிசத்துக்கும் இதே கதைதான். பெரிய துண்டுகளைச் சாப்பிடும் போது கிடைக்கும் சத்து & கலோரிப் பெறுமானங்களை விட சிறிதாக அரிந்து / அரைத்துச் சாப்பிட்டால் அதிகமாக உடலுக்குக் கிடைக்கும். இதனால் தான் நன்றாக மென்று சாப்பிடச் சொல்வது. (அதே சமயம் மெல்லும் வாய்த் தசைகள் நிறைய வேலை செய்யும். அவற்றுக்கான சக்தியாக சிறிது கழித்துக் கொண்டு கணிக்கலாம்.)

//பழங்களை அப்பிடியே சாப்பிட்டால் சுகர் தன்மை குறைவாக இருக்குமாம்// அப்படி இல்லை. பழத்தின் தன்மை (வைட்டமின் இழப்பு போக) அப்படியே தான் இருக்கும், மாறுவது இல்லை. எம் உடல் வேலை செய்யத் தேவையில்லாததால் வரும் விளைவு ஒன்று இருக்கிறது இல்லையா! அதைக் கருத்தில் கொண்டால் விடயம் புரியும்.

முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உண்பதற்கு க்ளூகோஸ் கொடுப்பார்கள். அது சமிபாடு அடைய - அதன் மூலக்கூறுகள் உடைக்கப்படத் தேவையில்லாது இருக்கும். (இதே அளவு சக்தியை சோற்றிலிருந்து எடுக்க உடல் பல வேலைகளைச் செய்தாக வேண்டும். அதற்காகவும் சிறிது சக்தி வேண்டியிருக்கும்.) அந்த வேலையை தொழிற்சாலையில் இயந்திரங்கள் ஏற்கனவே செய்திருக்கும். உடல் செய்ய வேண்டிய வேலையைக் குறைப்பதால் அப்படியே முழுமையாக உறிஞ்சப்படக் கூடியதாக இருக்கும் + உடல் அதே வேலையைச் செய்யாதிருந்தால் ஏற்பட்டிருக்கும் சக்தி விரயம் இராது. எனவே இரட்டிப்பு சக்தி உடலுக்குக் கிடைப்பதாகக் கொள்ளலாம். இதுதான் உங்கள் கேள்விக்கும் ஆன பதில்.

இதே தியரிதான் வெள்ளைச் சீனியை விட பழுப்புச் சீனி நல்லது; அதைவிட சர்க்கரை (இலங்கைத் தமிழில் சொல்கிறேன்,) நல்லதுஎன்பதன் பின் உள்ள விளக்கமும். உடல் செய்ய வேண்டிய வேலையைக் குறைத்துக் கொடுத்தால் அந்தச் சக்தி விரயம் இல்லை எனும் போது அதிக கலோரிப் பெறுமானம் உடலுக்குக் கிடைப்பது போல் ஆகும். சாதத்தில் கஞ்சி - சாதம் சாப்பிடுவதை விட அதிக கலோரிகளைக் கொடுப்பதும் இதனால் தான்.

//அது எப்படி எந்தவித சுகரும் சேர்க்காமல் ஸ்மூதியாக பருகினால் அதில் சுகர் அதிகளவு இருக்கும்.// நிச்சயம் சுகர் அதிக அளவு இராது. ஆனால்... 1. தோல் சீவி விடுவீர்கள். அதை உடைக்கும் 'வேலையை' வாய்க்கும் கொடுப்பதில்லை; வயிற்றுக்கும் கொடுப்பதில்லை. கொடுத்தால் குறைவான 'சுகர்' தான் உடலில் சேரும். 2. அடிக்கும் போது - அந்த இயந்திரம் எத்தனை நிமிடங்கள் அடிக்கிறது, அதுவும் அதன் கூரிய தகடுகளினால்! அது உங்கள் பல்லும் இரைப்பையும் செய்ய வேண்டிய வேலை. அந்த 'வேலையை' நீங்கள் உடலுக்குக் கொடுத்தால் குறைவான 'சுகர்' உடலில் சேரும். 3. நார்ப் பொருளை முற்றாக இயந்திரம் உடைத்து விட்டது. அந்த 'வேலை' இல்லை; நார்ப் பொருளும் வீண். இந்த வேலையைக் கொடுத்தால் குறைவான 'சுகர்' உடலில் சேரும். 3. இந்த நார்ப்பொருள் இருந்திருந்தால் பழம் முற்றாக உடைக்கப்பட்டிராது. முழுச் சத்தையும் உடல் உறிஞ்ச இயலாது. அதனால் குறைவான சக்திதான் விளைவாகக் கிடைத்திருக்கும். (வைட்டமின்கள் சிறிது அதிகமாக கிடைக்கலாம்.)

அடித்துக் குடித்தால் அங்கே முழுமையாகப் பயன் கிடைக்கிறது - அதிக கலோரிகள் கிடைக்கிறது இல்லையா! இது நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கும் உணவு. ஆரோக்கியமான மனிதர் உண்டால் தேவையில்லாமல் சேமிப்பதாகத் தானே முடியும்.

//எந்தவித சுகரும் சேர்க்காமல் ஸ்மூதியாக// நீங்கள் 'ஜூஸாக' எனவில்லை என்பது கவனத்திற்கு வருகிறது. 'ஜூஸ்' தனியே ஒரு பழத்தின் சாறு அல்லது நீர் மட்டும் சேர்த்த சாறு. 'ஸ்மூதி' பால் / தயிர் & வேறு சில பொருட்கள் சேர்ப்பது. சேர்க்கும் உணவுகளைப் பொறுத்து கலோரிப் பெறுமானம் அதிகமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா உங்கள் அருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி.
என் சந்தேகமும் தீர்ந்துவிட்டது..

நான் மனதாரா சொல்கிறேன்..உங்களுடைய அறிவு அனுபவம் ஒரு பொக்கிஷம்..
''May God bless you ma''

தளிர்

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணா. :-)

பாராட்டுகள் கிடைக்கும் போது முதலில் எனக்குள் சொல்லிக் கொள்வது... 'பெருமை கொள்ளாதே மனமே!' :-) அறுசுவை இல்லாவிட்டால் இந்த வசதி உங்களுக்குக் கிடைத்திராது; எனக்கும் கிடைத்திராது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்