இறால்வெங்காய தொக்கு

தேதி: May 22, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு பரிமாறலாம்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

இறால் -1/4
வெங்காயம்-2
தக்காளி -2
மிளகாய்தூள் - 1/2தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லிதூள் -1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

தேங்காய் பால்-1/2 கப்


 

இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்
வெங்காயம் தக்காளி பொடியக நறுக்கவும் .
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறால்சேர்த்து வதக்கவும்
இறால் சிறிது வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
இறால் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி மசாலாக்கள் உப்பு சேர்த்து வதக்கி
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் .
தண்ணீர் நன்றாக வத்தியவுடன் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக சுண்டியதும் இறக்கவும்

சுவையான இறால் தொக்கு ரெடி


சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு தேங்காய் பால் சேர்த்து சமைத்து பார்த்தேன்
நன்றாக இருந்தது நீங்கள் இன்னும் நிறைய குறிப்பு தாருங்கள்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு

அன்புடன்
நஸ்ரின் கனி

ஹாய் கவிதா எப்படி இருக்கீங்க உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு

அன்புடன்
நஸ்ரின் கனி

it is very nice, i try this week result is good.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி