எனது சமையலறை - திருமதி. வாணி

 திருமதி. வாணி சமையலறை


அமெரிக்காவில் வீடு வாங்க வருபவர்கள் முதலில் பார்ப்பது சமையல் அறையே. சமையல் அறை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் இருப்பது நலம்.

my kitchen
 

சமையல் அறையில் அழகான படங்கள், பூச்சாடிகள் வைத்திருந்தால் பார்க்கவே மனதுக்கு இதமாக இருக்கும். பழங்களை வைப்பதற்கு ஒரு கூடை, வெங்காயங்களை வைப்பதற்கு ஒரு கூடை என்று அழகாக அடுக்கி வைக்கலாம்.

my kitchen
 

ஒவ்வொரு நாளும் சமையல் முடிந்ததும் ஸ்டவை டிஷ் வாஷிங் சோப் போட்டு, ஸ்பாஞ்சினால மென்மையாக கழுவி, துடைத்து விட பளிச்சென்று இருக்கும். எண்ணெய், அழுக்குகள் சேராமல் அழகாக இருக்கும். நான் வாங்கிய ஸ்டவ் இன்னும் புதுசு போல இருப்பதன் காரணம் இதுவே.

my kitchen
 
இது கிச்சன் ஐலன்ட் எனப்படும் இதில் கீழே பொருட்களை சேமித்து வைக்கலாம். மேலே சாப்பாடு பரிமாறலாம். பக்கதிலிருக்கும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வேலைகள் செய்து முடித்தால் அலுப்பு தெரியாது.
my kitchen
 

மைக்ரோவேவ் - இதனை நான் பாவிப்பது குறைவு என்றாலும் மிகவும் சுத்தமாக வைத்திருப்பது பிடிக்கும். ஈரத்துணியால் சுத்தம் செய்து விட்டு, ஒரு மைக்ரோவேவ் பவுலில் தண்ணீர், லெமன் அல்லது ஆரஞ்ச் தோலினைப் போட்டு 50 செக்கன்ஸ் சூடாக்கவும். மைக்ரோவேவினை திறக்காமல் அப்படியே கொஞ்ச நேரம் விட்டு விடவும். இப்படி இடைக்கிடை செய்தால் மைக்ரோவேவ் அவன் சுத்தமாக இருக்கும்.

my kitchen
 

கிச்சன் pantry இல் பொருட்களை அழகாக அடுக்கி வைக்கலாம். நான் பேக் செய்ய பயன்படும் பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறேன். எடுப்பதற்கும் இலகுவாக இருக்கும். அதோடு பொருட்கள் முடிந்து போனால் பார்த்து வாங்க சுலபமாக இருக்கும்.

my kitchen
 

Comments

வாணி... கிட்சன் சூப்பர். சின்னதா இருந்தாலும் அழகா மெயின்டைன் பண்றீங்க. வாழ்த்துக்கள். முக்கியமா அந்த டேபில் எனக்கு ரொம்ப பிடிச்சுது. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vani romba alaka irukku pa unga stave super pa

all is well

hai vany, nan arusuvaiku puthu member. unga kitchen parka neata, alaga iruku. kitchen sinnatha irunthalum athai nalla maintain panni vacchi irukkinga. kathai malar pakuthil ulla ungal kathai arumaiyaga irunthathu.

வனிதா, மிக்க நன்றி. கிச்சன் ஓரளவு பெரிது தான். ஆனால் நின்று படம் எடுப்பதற்கு வசதியாக இருக்கவில்லை. மற்றப் பக்கம் நின்று எடுத்தால் ஹால் தெரிந்து இருக்கும். எனவே தான் இப்படி எடுக்க வேண்டியதாப் போச்சு.

சுந்தர்மதி, மிக்க நன்றி.

வர்ஷினி, வாங்க. நலமா? கருத்துக்கு மிக்க நன்றி. கிச்சன் சுத்தமாக இருந்தால் தானே சாப்பிட மனம் வரும் சரியா?

உங்கள் சமையலறையை அழகாக வைத்திருக்கிறீர்கள் வாணி. ;)

‍- இமா க்றிஸ்

வாணி, கிச்சன் அழகா இருக்கு. உங்க டிப்ஸும் சூப்பர். எனக்கும் ஃப்ரெஷ் பூக்களை பூச்சாடியில் வைப்பதற்கு ரொம்ப பிடிக்கும்.

உங்கள் கிச்சன் அம்சமாக இருக்கு,டிப்ஸும் சூப்பர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு வாணி
உங்கள் சமையலறை ரொம்ப அழகாக இருக்கு
காம்பாக்ட் ஆகவும்,neat ஆகவும் இருக்கு.உங்களது டிப்ஸ் அருமை
நானும் எப்பவும் அடுப்பை துடைத்து விட்டு தான் தூங்குவேன் அது எங்கள் வீட்டு பழக்கம் லக்ஷ்மி அப்போது தான் வாசம் செய்வாள் என்ற ஐதீகம் உண்டு
kitchen island ஐடியா எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வின்னி, மிக்க நன்றி.

இமா, நன்றி.

ஆசியா அக்கா, மிக்க நன்றி.

கவிதா, மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். சுத்தமாக இருந்தால் தானே மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாணி

அப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!!!
5 ஸ்டார் ஹோட்டலே தோத்து போச்சு போங்க!!!!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

i told u na, the kitchen maintenance cane be done perfect in foreign countries only, you must display indian kitchen here. even the flat promoters should c these pictures and they must construct the kitchen in that style.

அமினா, நன்றிங்க.

சுஜாதா, நீங்கள் சொல்வது ஒரளவு சரி தான். நாங்கள் ஊரில் இருந்த போது கிச்சனை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் இப்படி பளிச்சென்று இருக்காது. கிச்சன் சுத்தமாக இருந்தாலே மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இங்கும் சில வீடுகளில் சமையல் அறை அழுக்காக வைத்திருப்பார்கள்.
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.

பொதுவா ஒரு வீட்டின் கிச்சனை பார்தால் போதும் அவங்க ஆரோக்கியம் எல்லாம் தெரிந்து விடும் அந்த வகையில் இந்த கிச்சன் சூப்பரோஓஓஓஓஓ.சூப்பர் .. அழகா ரசனையா இருக்கு

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

ஜெய், வாங்கோ. நீங்கள் சொல்வது சரிதான். ரசித்தமைக்கு மிக்க நன்றி.
வாணி

வாணி நலமா? குழந்தைகள் நலமா? கிச்சன் அழகா இருக்கு. உங்க டிப்ஸும் சூப்பர்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

vani kitchenil table supper thankyou

Thank u for your information..... The microwave safe is really super... I'll try it..
Thank u Vani...

Hai Vani

Unka kitchen kuttiya iruthanlum super.I like that table.