பாதித்த சம்பவம்

சமீபத்தில் ,கேட்டறிந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் மூன்று தினங்களுக்கு முன் நான் கேள்விபட்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பள்ளி செல்லும் பட்டு ரோஜா(4 வயது),இரண்டு மூன்று நாட்களாக காய்ச்சலால் பள்ளி செல்லவில்லை.நான்காவது நாளாக முழுதும் உடம்பு சரியாகாமல் பள்ளிக்கு போனது…அந்த குழந்தையின் இடத்திலிருந்து தனியார் பஸ்ஸில் பள்ளி செல்ல குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும்.

அன்று பஸ்ஸில் ஏறியவுடன் அது சோர்வினால் உறங்கிவிட்டதுபோல.
இறங்கும்போது யாரும் அதை கவனிக்கவில்லை.

பஸ் டிரைவரும் கவனிக்காமல் பஸ்ஸை கொண்டு ஷெட்டில் விட்டு பூட்டி விட்டு சென்றுவிட்டார்….

பள்ளி முடிந்ததும் அந்த குழந்தை வேறோரு பஸ்ஸீல் வீட்டுக்கு செல்லும்.
அந்த பள்ளியில்தான் அந்த குழந்தையின் அண்ணா படிக்கிறான்..பாவம் அவனும் கவனிக்கவில்லை..

மதியம் 12 மணிக்கு பள்ளியிலிருந்து வந்த வேறொரு பஸ்ஸில் தன் குழந்தையை காணாமல்,அந்த குழந்தையின் அம்மா பள்ளிக்கு போன் செய்ய
அங்கு அவர்கள் பள்ளிக்கு இன்றும் அவள் வரவில்லையென நினைத்தோம் என சொல்லி..பிறகு விஷயம் புரிந்து அந்த குறிப்பிட்ட பூட்டப்பட்ட பஸ்ஸை தேடி பார்த்தபோது அங்கே….கண்ட காட்சி….மிகவும் துயரமானது…:(

பூட்டப்பட்ட பஸ்ஸில் இருந்து காற்றோட்டம் ஏதுமின்றி,அதிக வெப்பத்தினாலும்,பயத்தினாலும்…அழுதழுது வாந்தியெடுத்து அது இறந்திருக்கும் சோகம் தெரிந்தது..:(

அந்தஓட்டுனர் கைது செய்யப்பட்டாலும்…அந்த விதியின் கோரப்பிடியில் சிக்கிய அந்த பிஞ்சு ரோஜாவின் மரணம்…..ஜீரணிக்கமுடியாதது :(

மரணத்தில் கொடியது குழந்தைகளின் மரணம்….!அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையவும் ஹாஸ்பிடலில் இருக்கும் அந்த தாயின் உடல்நிலை,மனநிலைக்காகவும் இறைவனை வேண்டிகொள்வோம்.

இலா மேடம் இது ரொம்ப வேதனையா இருக்கு.

சில பாதிக்கிற, நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துக்கிற முன்னாடி அதனை அப்படியே சொல்லாமல் இனிமேல் இப்படி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிமுடிக்கலாம்.
ஏன்னா ஏற்கனவே பயந்து பயந்து பாஷை புரியத புது இடத்தில் கம்யூனிகேஷன் பண்ணத்தெரியாமல் என்ன செய்வாங்களோன்னு விடியக்காத்தால 5 மணிக்கே எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பி மதியம் 2 மணி வரை டைம் பீஸையே பார்த்து பார்த்து வீட்டுல மனசே இல்லாமல் வேலையை செஞ்சுட்டு கரக்ட்டா 2 மணிக்கு முன்னாடியே போயி காத்திருந்து பஸ் வந்து குழந்தை இறங்கினதும் தான் நிம்மதியே அடையிறோம்.
நீங்க சொன்னது ஜிரணிக்க முடியாமல் பயத்தைதான் தருது. அவங்களுக்கு ஆறுதல் சொல்றதா இல்ல அவங்க குணமாகனும்னு கடவுள்கிட்ட வேண்டறதான்னு புரியாத மனநிலையிலேயே இருக்கிறேன். இனி யாருக்கும் எந்த இழப்பும் நேராமல் நீடுழி வாழனும்னு வேண்டி இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படாதிருக்க வழி முறைகளையும் கூறுங்கள்.

Don't Worry Be Happy.

இளவரசி படித்ததும் வேதனையாக இருந்தது. சில விஷயங்களை பெற்றோர் செய்யணும்...

1. குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்றால் அனுப்பாமல் இருக்கலாம்.

2. பெற்றோர் நேரில் சென்று பள்ளியில் விட்டு வகுப்பாசிரியரிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாம்.

3. அனுப்பியே ஆக வேண்டிய கட்டாயம் என்றால் பேருந்தில் பயணம் செய்யும் ஆசிரியர் யாரிடமாவது சொல்லி அனுப்ப வேண்டும்.

4. ஆசிரியர் இல்லாதபட்சத்தில் பேருந்து ஓட்டுனர், க்ளீனர் யாரிடமாவது சொல்லி ஏற்றி விட்டிருக்க வேண்டும்.

5. போன குழந்தையின் நலனை இடையில் ஒரு முறையாவது பள்ளிக்கு போன் செய்து கேட்டிருந்தால் கூட நேரமே தேடி இருப்பார்கள்.

இது எதுவுமே நடக்காதது வருத்தமே... அந்த குழந்தைக்காகவும், பெற்றோருக்காகவும் பிராத்திப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெய லஷ்மி,நான் நீங்கள் சொல்லியதுபோல் நேராமல் இருக்க இந்த துக்க செய்தியோடே உடனே இதே பதிவில் ஏதாவது அறிவுரை சொன்னால் தவறாக எடுத்துகொள்ளப்படுமோ என்றுதான் யாரும் பதிவு போட்டபின் சொல்லலாம் என நினைத்தேன்.
..:(

வனிதா அதற்கான ஆலோசனை சொன்னதற்கு நன்றி..

இது போன்ற அசம்பாவிதங்கள் ந்டக்காமல் இருக்க ஒரு சில முன்னெச்சரிக்கை மேற்கொள்ளலாம்

1.நாம் குழந்தையை பள்ளிக்கு அனுப்புமுன்..அதற்கு சரியான தூக்கம்(குறைந்தது 10மணி நேரம்),சத்தான ஆகாரம் இரண்டும் இருக்கும்படி பார்த்துகொள்ளலாம்.

2.உடம்பு சரியில்லையென்றால் 4/6 நாட்கள் லீவு போட்டால் ஒண்ணும் ஆகிவிடாது
படிப்பைவிட குழந்தைகளின் உடல்நலம் முக்கியம்..சிலவேளை சிரப் குடித்த எஃபெக்ட்டால் மயக்கமாக இருக்கலாம்
3.இரவில் நேரமே தூங்க செய்து,காலை எழுப்பலாம்.
4.இரண்டு குழந்தைகள் என்றால் தம்பி,தங்கையை நன்கு கவனித்து கூட்டி சொல்ல
வேண்டும் என சொல்லவேண்டும்.
5.நம்பிக்கையான பஸ்ஸில் டிரைவரிடம் குழந்தையின் உடல்நிலை சரியில்லை கவனித்து கொள்ள சொல்லிஅனுப்பலாம்.
6.தோழிகள் அருகில் அமரும்படி சொல்லி சேர்ந்து இறங்கி,ஏற சொல்லலாம்.
7.வகுப்பு ஆசிரியையின் தனிப்பட்ட நம்பரை அவசரத்திற்கு தொடர்பு கொள்ள வாங்கி வைக்கலாம்

இந்த குழந்தையின் விஷயத்தில் எப்போதும் ஒரு ஆசிரியை உடன் அமர்ந்து வருவதால் KG1 kuzandhai என்பதால் கவனித்து கூட்டி செல்வாராம்...
அன்று துரதிஷ்டவசமாக அவர் பள்ளிக்கு லீவு போட்டு விட்டார் :(
எல்லா "இருந்திருக்கலாமும்"இல்லாமல் போனதால்தான் குழந்தை இறந்திருக்கலாம்.." என நினைக்கிறேன்.அந்த ரோஜா மலரின் புகைப்படத்தை பத்திரிக்கையில் பார்த்தபோது..தாங்கமுடியவில்லை...

விதியை காரணம் சொன்னாலும்,நம்மையும் அறியாமல் குழந்தைகள் விஷயத்தில்
பள்ளிக்கு அனுப்பும் அவசரத்திலும்,ஆர்வத்திலும் அஜாக்கிரதை ஏற்படாமல் பார்த்து கொண்டால்..ஓரளவுக்கு இது போன்று நிகழாமல் இருக்கும் என்பதால்தான் போட்டேன்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி, வேதனையான செய்தி.இதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.

இங்கு அமெரிக்காவில் பள்ளிகளில் இம்முறையை கடை பிடிக்கிறார்கள். நம் குழந்தை பள்ளிக்கு செல்லவில்லையென்றால், நாம் ஃபோன் செய்து சொல்லி விட வேண்டும். நம்மிடம் இருந்து எந்தவித தகவலும் இல்லையென்றால், உடனே வீட்டிற்கு ஃபோன் செய்து குழந்தை வீட்டில்தான் இருக்கிறது என்று உறுதி செய்து கொள்கிறார்கள்.

மேலும் பஸ் டிரைவர்கள், பஸ்ஸை நிறுத்திய பிறகு பஸ் முழுதும் நோட்டமிட்டு final check up செய்யனும்.

இது மிகவும் சுலபம்தானே. பள்ளிகள் இம் முறையை பின்பற்றலாமே. தனியார் பஸ்களும், குழந்தைகள் விஷயத்தில் ஒரு procedure-ஐ ஃபாலோ பண்ண வேண்டும்.

இளவரசி வேதனையான செய்தி. இதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்த உங்களுக்கு நன்றி. இது போன்ற சம்பவம் இனியும் நிகழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம். நமக்கு தெரிந்தவர்களிடம் இது பற்றி கூறி உஷாராக இருக்க சொல்லுங்கள்.
அந்த குழந்தையின் தாயும் தந்தையும் மற்றும் குடும்பத்தினரும் விரைவில் மன அமைதி பெறவும், ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

இளவரசி, நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவம் இங்கு(கத்தார்) நடந்தது தான் பா.
2 குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் இருவரையும் ஒரெ பள்ளியில் சேர்ப்பதைத் தான் விரும்புகின்ரன்ர். அதில் தப்பேதும் இல்லை. ஆனால் இருவரும் வேரு வேரு வகுப்பில் படிக்கும் போது அவர்கல் வீட்டுக்கு வரும் நேரமும் மருபடுகின்ரது. இங்கு காலை 5.45 மனிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும். 3 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் குழந்தைகளாவது புரிந்து கொண்டு கிளம்பி விடும். ஆனால் அதர்க்கும் சிரியதுகல் பாவம் பா. அதுவும் K.G.1 குழந்தைகள் ரெம்பவே பாவம் பா.
5.45 மனிக்கு அனுப்பி விட்டு அவர்கள் 11.45 அல்லது 12 மனிக்குல் வரும் வரை நம் மனது படும் பாடு சொல்லி முடியாது பா.
என் கருத்து என்னவென்ரால் முதல் வகுப்பு போகும் வரையாவது பக்கத்தில் உள்ள பள்ளியில் சேர்ப்பது நல்லது. அந்த மாதிரி நர்சரியில் சேர்க்கும் போது ஸ்கூல் டைம் மாருபடும். காலை 7 மணிக்கு மேல் தான் வேன் வரும். 12 மனிக்குல் வீட்டுக்கு வந்துviduvaarkal.மேலும் அந்த பள்ளிகளில் உள்ள ரெஸ்பான்ட்ஸ் பெரிய பள்ளிகலில் இருக்கது பா. இன்கு மூத்த பிள்ளை ஒரு பள்ளியில் படிக்கிறார் என்றால் அவருடைய தம்பி அல்லது தங்கைக்கு தான் அட்மிசனில் ஃபர்ஸ்ட் பிரிஃவரென்ஸ். அதனாலேயே K.G யில் இருந்து சேர்த்து விட்டால் பிரகு 1 அம் க்லாஸ்க்கு அலையும் தொல்லை இல்லை, அதுவும் ஒரு காரனம். K.G சேர்ப்பதர்க்கே 3 மாதம் முன்பு பதிந்து வைக்க வேண்டும். இல்லை என்ரால் நாம் நினைத்த ஸ்கூலில் இடம் கிடைக்காது. மேலும் பள்ளி எதுவுமே நடந்து போகும் தோரத்தில் கிடையாது. அப்படியே இருந்தாலும் அது அரபி ஸ்கூலாகத் தான் இருக்கும். இதெல்லாம் ஒரு பிரச்சனை தானப்பா.
பள்ளி செல்வதர்க்கு நம்மூர் டைம் தான் பா பெஸ்ட்.இவர்கள் மதியம் 2.30 மனிக்கு வந்துவிடுவார்கல் தான். ஆனால் எனக்குத் தெரிந்து பாதி பிள்ளைகல் கிள்ம்பும் முன் சப்பிடுவதே இல்லை. ஒரு க்ளாஸ் மில்க் மட்டும் தான். இல்லையென்றால் ஒரு தோசை. அதையும் அவசரத்தில் சாப்பிட்டுவிட்டு சில சமயம் பஸ்சில் போகும்போதெ வாமிட்டும் பண்ணிடுரான்க. என்ன பன்ரது. பிழக்க வந்த இடத்தில் எல்லாத்தையும் அனுசரித்து தணெ செல்ல வேன்டியிருக்கு

priyamudan sangops

Little Blooms Never Ever Fades...

When pregnant we Dream
when born -it is our Life in a form of Babies
we fly in Air to buy everything we see ...
when crawling toys go here & there
when Growing we admire each & every step....
when talking our Ears will long for more..
what a "feeling" on Earth
that nothing we can compare of
GOD!!!!!did you create Life
to show the Pain or Value...
whatever it is..
My eyes is not stopping from Tears
My heart is facing painfull breathing....

இது மிகவும் வருந்ததக்க செய்தி. வனிதா கூறியது போல பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கொஞ்சம் பெரிய குழந்தையெனில் (பஸ்ஸில் அனுப்பியதால்) இது போன்ற சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என சொல்லி கொடுக்கலாம்.

எனெனில் இந்த காலத்து குழந்தைகள் படுச் சுட்டியாகவே இருக்கிறார்கள்.
இது போன்ற சம்பவம் எப்பொழுது வேண்டுமெனில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.பக்குவமாக சொல்லி கொடுப்பதும் நமது கடமை

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

elu madam! நீங்க சொன்னமாதிரியான ஒரு சம்பவம் இங்கயும்(Abudhabi) கிட்டத்தட்ட வருஷத்துக்கு முன்ன நடந்தது.அதிலிருந்து இங்க வேன் டிரைவர்ஸ் எல்லாம் கொஞ்சம் கவனமாத்தான் இருக்காங்க. மூன்றரை வயசுக்கு மேல சேர்த்தா நல்ல ஸ்கூல்ல சீட் கிடைக்காதுன்னு இரண்டேகால் வயசில என் மகனை nursury ல சேர்த்திருக்கேன். காலைல எழுந்திருக்க முடியாம எழுந்திருச்சு school போகும்போது பார்க்கவே கஷ்டமாதான் இருக்கு. என்ன செய்ய முடியும்?

இளவரசி மேடம்,

மிகவும் அதிர்ச்சியான, நினைத்துப் பார்க்கவே இயலாத துயரம் இது..

1. பள்ளியோ, பேருந்தோ, பள்ளி விளையாட்டு மைதானமோ, வேறு இன்னும் சிறப்பு வகுப்புகளோ எங்கு குழந்தைகளை அனுப்பினாலும், அங்கு *** அவசர / உடனடி *** தொடர்பு கொள்ள தொலை பேசி எண்களை பெற்றோர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்..

2. சிறார்களுக்கான கல்வி, கலை, விளையாட்டு நிருவனத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலருமே எந்நேரமும் விழிப்போடு செயல்படும் வகையில்,
அவர்களுக்கு அளிக்கப் பட்ட வேலையோடு,
***குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,
***முதலுதவி,
***இரண்டு முறை கண்கானிப்பது (வகுப்பு முடிந்து பேருந்து ஏறி விட்டனரா, பெருந்தில் இருந்து வகுப்பறை சென்றடைந்து விட்டனரா, மேலும் என்னேரமும் ஒரு அலுவலர் குழந்தைகளின் உதவிக்கு என்று ....)
-போன்ற நடவடிக்கைகளை சேர்த்துக் கொள்ளலாம்...

3. குழந்தையின் வருகையை ஒவ்வொரு இடத்திலும் பதிவு செய்யலாம்.. பெற்றோர் பேருந்து ஏற்றி விடுவதில் இருந்து, சாயங்காலம் பெற்றோர் பேருந்தில் இருந்து அழைத்துக் கொண்டு வரும் வரையிலும் குறிப்பெடுக்கலாம்..sign in, sign out time.
ஓட்டுனர் உடன் ஒரு அலுவலரோ ஆசிரியரோ கட்டாயம், பெற்றொரிடம் குறுகிய கையெழுத்து, அன்றைய தேதியில் பெற்ற பின் பேருந்தில் ஏற்றி விடலாம்.. அதே போல், அதே அலுவலர் வகுப்பறையில் குழந்தையை விட்டபின் வகுப்பு ஆசிரியரிடம் குறுகிய கையெழுத்து, அன்றைய தேதிக்கு பெற்றுக் கொள்ளலாம்... இது போல் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகையிலும் பெற்றுக் கொள்ளலாம்,
அன்றைய தேதியில் குழைந்தையின் இருப்பிடத்தை கவனிக்க முடியுமே ....

4. விவரம் அறியாப் பருவத்தில், ஆண்டுத்தேர்வே ஆனாலும் குழந்தைகளின் உடல் நலம் தான் முக்கியம்..உடல் நலம் தேறிய பின் பள்ளிக்கு அனுப்பலாம்.

5. படிப்பு, நடனம், பாட்டு, மற்ற எல்லா கலைகளையும் இளம் வயதிலேயே கற்றுத் தர வாய்ப்பு இன்று அதிகம் உள்ளது..
அதிலே பாதுகாப்பும் மேற்சொன்ன அக்கறையான செயல்முறைகளும் அந்த பயலகத்தில் உள்ளதா என்று பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்..

6. இது பற்றி பெற்றோர் சிலர் ஒன்று சேர்ந்து கூட பள்ளி அலுவலகத்தில் பேசி, ஆலோசனையாகவோ, விண்ணப்பமாகவோ தம் கருத்துக்களை தெரிவித்து செயல்படுத்தலாம்...

7. குழந்தை நன்றாக தூங்க இரவில் மற்ற வேலைகளை சற்று ஒதுக்கி விட்டு கவனிக்க வேண்டும்... விருந்தினர் வருகையோ, வேலைச் சுமையோ, எதுவாக இருந்தாலும்.. நம்ம வேலை நம்மோடு.. குழந்தையின் உணவு அருந்தும் வேளை, தூங்கும் நேரத்திற்கு பிறகு மற்றதை பார்த்துக் கொள்ள வேண்டும்..

வேற என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அக்குழந்தையை நினைக்கும் போது...மிகவும் கஷ்டமாக இருக்கின்றது..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மேலும் சில பதிவுகள்