பாலிஸ்டர் துணியில் பூ செய்வது எப்படி?

தேதி: May 24, 2010

4
Average: 4 (12 votes)

 

மஞ்சள் நிற பாலிஸ்டர் அல்லது சாட்டின் துணி
பசை
பச்சை நிற டேப்
வெள்ளை நிற டேப்
பட்டர் பேப்பர்
நூல்
மஞ்சள் நிற அக்ரிலிக் பெயிண்ட்
கம்பி
மார்க்கர்
சார்ட் பேப்பர்

 

நீங்கள் செய்ய போகும் பூவின் இதழ் ஒன்றை எடுத்து, ஒரு சார்ட் பேப்பரில் வைத்து மாதிரி படம் வரைந்து வெட்டி எடுத்துக்கொள்ளவும். மாதிரி இதழ் இல்லை என்றால் படத்தில் உள்ள வடிவத்தில் இதழ் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சார்ட் பேப்பரில் வெட்டி வைத்திருக்கும் இதழை துணியின் பின்பக்கத்தில் வைத்து 5 இதழ்கள் வரைந்து கொள்ளவும்.
பிறகு இதழ்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கின இதழை விட ஒரு இன்ச் கூடுதலாக 5 கம்பிகள் வெட்டி எடுக்கவும்.
பிறகு கம்பியை படத்தில் உள்ளது போல் வளைத்து வெள்ளைநிற கம் டேப்பை ஒட்டவும். பிறகு இந்த கம்பியை இதழ்களில் ஒட்டவும்.
பின்னர் ஐந்து இதழ்களையும் பட்டர் பேப்பரில் ஒட்டி நன்கு காய விடவும்.
இதழ்கள் காய்ந்ததும் பட்டர் பேப்பரோடு சேர்த்து இதழ்களை தனித்தனியாக வெட்டி எடுக்கவும். பிறகு பின் பக்கம் ஒட்டிய பட்டர் பேப்பருக்கு மஞ்சள் நிற ஃபேப்பரிக் அல்லது அக்ரிலிக் பெயிண்ட் அடிக்கவும்.
இவற்றின் நடுவே ஒரு கம்பியை வைத்து நூலால் கட்டிய பின் பச்சைநிற டேப்பை சுற்றி முடிக்கவும்.
இப்பொழுது பூவின் இதழ்களை உண்மையான பூவின் இதழ் போல் வளைத்து அழகுப்படுத்தவும். சுலபமாக செய்யக்கூடிய அழகிய பூ ரெடி. இதுப்போல் நிறைய பூக்கள் செய்து ஃப்ளவர் வேஸில் வைத்து அலங்கரிக்கலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த பூ செய்முறையை வழங்கியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi vanitha,

how r u?The flowers which is done by u its looking very simple and neat.
thank u for sharing. keep posting..........

bye!

வனிதா எப்படி இருக்கீங்க? உங்களுடைய ஒவ்வொரு க்ராஃப்ட்டும் அருமை. ப்ளவர் வேஸ்ல இந்த ஒரு பூ மட்டும் வைச்சா போதும் போல வனிதா. செவ்வரளி பூ போல் இந்த பூவும் ரொம்ப சிம்பிளா அழகா இருக்கு.

ஹாய் வனிதா உங்களேட பாலிஸ்டர் துணிபூ பார்க்கவே ரெம்ப நல்லா இருக்கு.நிஜ பூகூடை மாதிரியே இருக்கு.சூப்பர்.வாழ்த்துக்கள்.

சித்ரா... நான் நலமாக இருக்கின்றேன். நீங்க நலமா? மிக்க நன்றி சித்ரா. நேரம் கிடைக்கும்போது நீங்களும் குயற்சி செய்து பாருங்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... நான் நலமாக இருக்கின்றேன். நீங்க நலமா? மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது நீங்களும் செய்து வீட்டை அழகுபடுத்துங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எரிக்... மிக்க நன்றி. நீங்களும் செய்து பார்த்து எங்களுக்கு படம் அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இந்த தளத்துக்கு புதுசு. இப்பதான் பதிவு பண்ணேன். வந்து முதல்பக்கத்த பார்த்த உடன உங்க பூ என்ன வரவேற்த மாதிரி இருகு. ரொம்ப அழகா செய்து இருக்கீங்க. எனக்கும் இதுப்போல கைவினை பொருள்லாம் செய்றதுல ஆர்வம் கொஞ்சம் இருக்கு. நேரம் இருக்கும்போது நானும் இத செய்துபாக்குறேன்ங்க

சூப்பராயிருக்கு வனிதா

all is well

Very nice flowers, Vani.

vaany

ரொம்ப அழகாக இருக்கு வனிதா மேடம்
நிஜ பூ போலவே இருக்கு
நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நீங்க செய்யற ஒவ்வொரு ஆர்ட் ஒர்க்குமே ரொம்ப அழகா இருக்கு. எனக்கே செஞ்சுப் பாக்கணும் போல இருக்கு. பொதுவா இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு அத்தனை பொறுமை இருந்ததில்லை. ஆனால் நீங்க சொல்லி இருக்கற விதமும்,அழகா போட்டோ எடுத்திருக்கறதையும் பார்த்தால் ரொம்ப நல்லா இருக்கு.ஆர்ட்ல இண்ட்ரெஸ்ட் இல்லாதவங்களுக்கும் இதை செஞ்சுப் பாக்கணும்ங்கற எண்ணத்தை ஏற்படுத்திடறீங்க. இதுவரை நீங்க செய்த ஒவ்வொரு பூவுமே ரொம்பவே அழகு. நேச்சுரலா இருக்கு. என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

வனிதா,
உங்க பாலியஸ்டர் பூக்கள் ரொம்ப அருமையாக இருக்கிறது. நிஜ பூக்கள் போலவே இருக்கிறது. ரொம்ப அழகாக செய்து காட்டியிருக்கீறீர்கள். சிறப்பு வகுப்புகளுக்கு சென்று பயிற்சி எடுத்தீர்களா?

Save the Energy for the future generation

நான் அருசுவைக்கு புதிதாக சேர்ந்து இருக்கிரேன்.. உங்கள் பாலிச்டெர் பூ ரொம்ப அழகா இருக்கு.. உங்களுக்கு அர்கென்டி துணி ல பூ செய்ய தெரியுமா.. தெரிஞ்சா சொல்லி தாங்க.. உங்க மெஹன்டி உம் நல்லா இருந்துசூ
by sreejothi

தேவி சுரேஷ்... மிக்க நன்றி. :) உங்களை வரவேற்கும் விதமாக என் குறிப்பு இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. அதே போல் உங்க குறிப்புகளையும் அறுசுவைக்கு அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மதி... மிக்க நன்றிங்க.

வாணி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிதா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேவா... உங்களை போன்ற பெரியவர்கள் அறுசுவையில் தந்த ஊக்கமே இதுக்கு காரணம். மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்திரா.. மிக்க நன்றி. பயிற்சி ஏதும் இதுவரை போனதில்லை இந்திரா. எங்காவது பார்ப்பது, அம்மா சொல்வது இதை வைத்து முயற்சிப்பது தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்ரீஜோதி... மிக்க நன்றி. :) நீங்க கேட்கும் பூ வகை எனக்கு செய்ய தெரியலங்க. ஆனா இந்த பேரில் நம்ம அறுசுவையில் குறிப்பு பார்த்த நினைவு. தேடி சொல்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஸ்ரீஜோதி வெல்கம் டூ அறுசுவை. ஆர்கண்டி துணில பூ செய்யும் முறையை பத்தி வனிதாக்கிட்ட கேட்டிருந்தீங்களே, அதோட லிங்க இதுல இருக்கு பாருங்க.
http://www.arusuvai.com/tamil/node/5632.

கலக்குறீங்க வனிதா.அசத்தலாக இருக்கு.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா... மிக்க நன்றி :). நீண்ட நாட்களாக காணலயே உங்களை... என்னாச்சு?? நலமாக இருக்கீங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... :) ஸ்ரீஜோதி கேட்ட லின்க் குடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க. அவங்க பார்க்கல போல இன்னும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பப்ப வந்திட்டு தான் போறேன்,கண்ணில் படும் நல்ல குறிப்புகளுக்கு தவறாமல் பின்னூட்டம் கொடுக்கிறேன்.நீங்களும் ,குழந்தைகள் நலமா?இப்ப சிரியாவா?சென்னையா?

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் வனி எப்படி இருக்கீங்க? யாழினி, குமரன் நலமா? நல்லா செய்து இருக்கீங்க வனிதா. செய்முறையும் ஈஸியா இருக்கு வனி. செய்துட்டு சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப நேரமே இல்ல அதான் இப்ப விஷ் பண்ணிட்டு அப்பறம் செய்துகலாம்னு நினைச்சேன்.

ஆகா...........அருமையா இருக்கு.வனிதா... முகப்பிலே பார்த்தவுடனேயே நினைத்தேன் இது உங்கள் வேலையாகத்தான் இருக்கும் என்று.எல்லா குறிப்பும் போலவே இதுவும் பளிச் பளிச்னு அழகா ப்ரெசென்ட் பன்னி இருக்கீங்க....இன்னும்........... இன்னும் நிறைய எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். எங்கள் வீடு பூந்தோட்டம் ஆகட்டும். இந்த முறை இலைகூட வித்தியாசம் தெரிய வில்லை. நியமாகவே வாழ்த்துகின்றேன் வனி.
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பல திறமைகளையுடைய வனிதா.. எப்டி இப்டி எல்லாம் கலக்றீங்க.. ;-)
ரொம்பவே நல்லா இருக்கு பா ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆசியா... குழந்தைகள் நலம். இனி சிரியா பக்கம் போக முடியாதுங்க... மாத்திட்டாங்களே... இப்போ மாலத்தீவு தான் போகணும். தர்சமயம் சென்னை தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹரிகாயத்ரி... மிக்க நன்றி. நானும் குழந்தைகளும் ரொம்ப நலம். நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க செய்துட்டு சொல்றேன்னு சொன்னதே சந்தோஷமா இருக்கு. சீக்கிரம் செய்து அனுப்புங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யோகராணி... மிக்க நன்றி. சீக்கிரம் செய்து பார்த்து அனுப்புங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... மிக்க நன்றி. திறமை உங்களை விடவா??? பல பல டாப்பிக்கோட அறுசுவை முகப்பு முழுக்க கலக்கறீங்க... ;) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி வினோஜா..

சாரி, இங்க கன்யாகுமாரி லா நல்லா மழை அதான் பதில் உடனே அனுப்ப முடியலை.. போன் லைன் சரி இல்ல பா அதான்.. thanks for ur reply..

keep smiling

பூ மிகவும் அழகாக உள்ளது... மிக்க நன்றி....

என்றும் அன்புடன்... ரம்யா.G

மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta