சாம்பார் சப்பாத்தி

தேதி: May 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

சாம்பார் - ஒரு கப்
ஓமம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மசாலா தூள் - கால் தேக்கரண்டி
கோதுமை மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவைக்கு


 

சாம்பாருடன் ஓமம், தேவையான அளவு உப்பு, எண்ணெய் மற்றும் மசாலா தூளை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதன் பிறகு கோதுமை மாவை சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து 10 நிமிடம் வைத்துக் கொள்ளவும்.
இந்த சப்பாத்தி மாவை முதலில் சாதாரண சப்பாத்தி போல் போடவும்.
பிறகு அதன் மேல் லேசாக மாவை தூவி அல்லது எண்ணெய் + நெய் கலந்த கலவையை தடவி முதலில் சப்பாத்தியை இரண்டாக மடிக்கவும் . திரும்பவும் இரண்டாக மடிக்கவும். அப்போது முக்கோண வடிவம் கிடைக்கும். திரும்பவும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
சூடான தவாவில் சப்பாத்தியைப் போட்டு இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி கெட்சப் அல்லது தயிரில் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடலாம். மதியம் வைத்த சாம்பார் மீதம் இருந்தால் மாலை நேர டிபனாக எளிதில் செய்துவிடலாம்.நல்ல மிருதுவாகவும் அதே சமயத்தில் சத்தானதாகவும் இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இந்திரா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

it very nice to see, day before yesterday, i made sambar, it was remain, but yesterday i throw it in the dustpin, now onwards, i will not waste any bit of sambar, imtely i make sappathi,

thank you for your receipe, this is simple & tasty.

பார்க்கும்போதே செய்ய ஆசையா இருக்கு...டால் சப்பாத்தி செய்வாங்க..நீங்க
சாம்பார் கலந்து செய்வது புதுமையாகவும் செய்ய ஆசையாகவும் இருக்கு
வாழ்த்துக்கள்..கலக்குறீங்க போங்க...
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மசாலா தூள் na enna?
suven
Japan
சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்

இந்திரா... நல்ல குறிப்பு. முயற்சிக்கிறேன் ஒரு நாள். நான் பருப்பு சேர்த்து செய்திருக்கேன், இப்படி செய்ததில்லை. கண்டிப்பா செய்துட்டு சொல்றேன். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் இந்திரா சாம்பார் சப்பாத்தி பார்க்கவே சூப்பரா இருக்கு.இன்று காலை இட்லிக்கு செய்தசாம்பார் மீதம் இருக்கு அதனால் இன்று இரவு செய்துப்பார்க்கிறென்.

அன்பு மனோ,
உண்மையில் இந்த குறிப்பே மீந்து போன சாம்பாரில் எளிதாக சப்பாத்தி செய்வது தான். நிறைய நாட்கள் சாம்பார் மீதம் இருக்கும் , அதை வைத்து இந்த சிற்றுண்டியை செய்து விடலாம். அடுத்த முறை செய்து பாருங்கள்.
அன்பு இளவரசி ,
பருப்பு சப்பாத்தியின் எளிய செய்முறை தான் இது. ஆனால் அதை விட இது எளிதானது. சாப்பிட பக்க கறிவகை எதுவும் தேவையில்லை. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
அன்பு சுவன்,
கறி மசாலா , கரம் மசாலாவை மசாலா தூள் என்றுக் குறிப்பிட்டுள்ளேன்.நம்ம அறுசுவை தளத்திலே பொடி வகைகளில் இருக்கிறது பாருங்கள்.
அன்பு வனிதா,
நிச்சயமாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அன்பு எரிக்,
உங்கள் பின்னூட்டத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.

Save the Energy for the future generation

ஹாய் அக்கா உங்க சாம்பார் சப்பாத்தி ரொம்ப வித்யாசமாக இருக்கு. நான் இப்போதான் அறுசுவையை பார்த்து சமையல் கத்துக்குறேன். உங்க எல்லா குறிப்பும் ரொம்ப நல்லா இருக்குக்கா. நேற்று தான் உங்க சப்பாத்தி குறிப்பு பார்த்தேன். கொஞ்சம் வேலை இருந்தது அதான் வந்து பதிவு போட முடியல. இன்று எங்க வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைக்க போறாங்க அம்மா. முள்ளங்கி சாம்பாரில் இதே மாதிரி சப்பாத்தி பண்ணா நல்லா இருக்குமா அக்கா.

அன்பு தங்கை அனுஷா,
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. அருசுவை தளத்திலிருந்து சமையலை A to Z படித்துவிடலாம். முள்ளங்கி சாம்பாரிலும் பண்ணலாம். சாம்பாரில் முள்ளங்கி துண்டுகள் இருந்தால் நீக்கிவிடவும். செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தாருங்கள்.

Save the Energy for the future generation

ஹாய் இந்திரா நேற்றிரவு சாம்பார்சப்பாத்தி செய்தேன் வித்தியாசமான சுவையிடன் நல்லா இருந்தது.இனி அடிக்கடி பண்ணுவேன்.இதற்க்காக தனியா கூட்டும் வேண்டாம் ,வேலையிம் ஈசிதானே.ஒரு நல்ல ரெசிபி தந்துருக்கிங்க நன்றி.

நிச்சயம் செய்து பார்க்கணும்.அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு எரிக்,
நீங்க சொல்வது போல் இது செய்வது மிக எளிமை. மத்தியானம் வைத்த சாம்பாரில் எளிதாக முடித்து விடலாம்.செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி.
அன்பு ஆசியா,
நிச்சயமாக செய்து பாருங்கள். ரொம்ப சுலபமாக செய்து விடலாம். பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்.

Save the Energy for the future generation