வாரத்தில் ஒரு நாள் விரதம்..

வாரத்தில் ஒரு நாள் விரதம் இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுவும் காலை முதல் மாலை 6 மணி வரை.. வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துகொண்டு இருப்பதை பற்றி கூறுங்களேன்.

பதிலுக்கு வெய்ட் பண்ணீட்டு இருக்கேன் அருமை தோழிகளே ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தோ ... வந்துட்டேன் தோழியே . நல்ல விஷயம் தான். எங்க விரதம் தண்ணி கூட குடிக்கதா விரதம் . இது ரொம்பவே சுவரிச்யமஹா இருக்கும் . வயிற்றில் உள்ள கிரைண்டருக்கு லீவு கொடுப்போம் .

ஹாய் ரம்யா எனக்கு தெரிந்தத சொல்றேன். எங்க மதத்தில் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு இருப்பொம். அதை போல மாததில் குறிப்பான மூன்று நாட்கள் நோன்பு இருப்பதும் நன்மைனு சொல்லுவாங்க.

நோன்பு வைப்பதின் அடிப்படை எழைகளின் பசியையும், வறுமையையும் நாம புரிஞ்கனும் என்பது தான்.

அப்பதான் அவங்க கஷ்டத்த புரிஞ்சு நாம அவங்களுக்கு உதவுவோம். அதுமட்டும் இல்ல இது சகிப்பு தன்மை எற்படுத்த நல்ல வழினு சொல்லலாம்.
நாங்க காலை முதல் மாலை 6 மணி வரை தண்ணி கூட குடிக்க மாட்டோம். இதனால் நமக்கு பிடித்தது நமக்கு அருகில் இருந்தாலும் ஒரு வித மனக்கட்டு பாட்டோடு இருப்பொம்.

இந்த மனக்கட்டுபாடு ஒரு சில ஆண்கள் புகை பிடித்தல், குடி போன்ற கெட்ட பழக்கங்களை தற்காலிகமாக வாவது நிறுத்த பயன் படுது. அதனால் சொல்ரேன் நோன்பு (விரதம்) ரொம்பவே நன்மையான் செயல் தான்

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நன்றி.. லுதா.. அழைத்தும் வந்ததற்கு... ஆமாம் எனக்கும் ஒரு முஸ்லீம் தோழி இருக்கிறாள் உங்களை போல ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா..

உங்களுக்கு ஒன்று தெரியுமா.. இந்த தலைப்பு போட்டவுடன் உங்களிடம் இருந்து தான் முதல் பதில் வரும் என எதிர்பார்த்தேன் ;-(

பதில் வரவில்லை என்ற உடன் என்னுடைய அடுத்த பதிவில் உங்களை திட்டி அழைக்கலாம் என்று நினைத்தேன் ;0)... ( தவறாக எண்ண வேண்டாம் ) நல்லவேளை சமர்த்தா பதிவு போட்டுட்டீங்க.. ;)

இதனால் உடல் நலத்துக்கு அப்போ நல்லது இல்லயா ஃபாத்திமா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் அப்படி சொல்லல. எனக்கு தெரிந்த வரைக்கும் இருக்க முக்கியமான் காரணங்களை சொன்னேன். எனக்கு தெரிந்த ஒரு தளத்தில் படித்ததை போட்டு இருக்கேன்
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.

குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :
கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும்.

வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல் :
இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஃபாத்திமா... கலக்கிட்டீங்க போங்க.. நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.. விஸ்வரூபம் எடுத்து ஒரு விளக்கம் குடுத்துடீங்க.. எப்டிங்க அதுக்குள்ளே தளத்தில் தேடி தமிழில் டைப் பண்ணி இவ்ளோ சீக்ரம் பதிவு போட்டீங்க.. கில்லி தான் போங்க...

தலைப்பு குடுத்தது வேணா நானா இருக்கலாம்.. ஆனால் மொத்த பேரும் உங்களுக்கு தான் ஃபாத்திமா... எப்டியோ நான் எதிர்பாக்காத தகவல்களையும் குடுத்திட்டீங்க.. ஃபாத்திமா....ரொம்ப நன்றி... ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தமிழில் தான் அந்த தளத்தில் இருந்தது. அதன் மூலம் அப்படியே காபி பண்ணி கொஞ்சம் எடிட் பண்ணி பதிவை போட்டேன். என்னை ரொம்ம்ம்ம்ம்ம்பவே புகழ்ந்துட்டீங்க. அவசர பட்டுடீங்களே

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அருமை அருமை பாத்திமா ரொம்ப அழகா சொல்லியிருக்கிங்க .எங்களுக்கு தெரியாத பல விசயங்களை சொல்லியிருக்கிங்க .நன்றி கலந்த பாராட்டு . ரம்யா இந்த தலைப்பை கொடுத்ததற்கு உங்களை பாராட்டியே ஆகவேண்டும்

மேலும் சில பதிவுகள்