Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

உங்களுக்கு முதல் பதிவு நான் போடாம இருப்பேனா..

உங்க கணவருக்கு நீங்க உதவுனும்னு நெனச்சது நல்ல விஷயம் தான்..

1.ட்யூசன் எடுப்பதை பத்தி திரும்பவும் ஓனரிடம் பேசி பாருங்க
2.இணைய தளத்தில் ஏதாவது ட்ரை ப்ண்ணி பாருங்க..http://www.clickindia.com/search.php?q=work+from+home+chennai+free+registration+no+investment
3.இன்சூரன்ஸ் ல சேர்ந்தா எஜென்ட் ஆளை சேர்த்தி விடலாம்.
4.சமயல்ல நல்ல கெட்டினா.. வடகம், ஊறுகாய் மாரி ட்ரை பண்ணலாம். உங்க ஏரியா எப்டினு தெரிலே...
5.ஷேர் மார்க்கெட் பொறுத்தமா இருக்கும் உங்க வீட்டுல நெட் இருக்கறனால.
6.சின்ன கடை போடலாம். முதலீடு போட முடிந்தால்..
7. நீங்க கணக்குனால M.Sc M.Phil பண்ணா lecturer a போலாம்.

எனக்கென்னமோ நீங்க ஒனர்ட பேசி ட்யூசன்க்கு ஏற்பாடு பண்றது நல்லதுனு தோணுது..ஃபாத்திமா ...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நன்றி ரம்யா, உங்க பதிலுக்கு நன்றி,
டியூஷன் விஷயமா நீங்க சொன்ன மாதிரி மறுபடியும் பேசி பாக்குரேன்.
இணைய தளத்தில் ஏதாவது ட்ரை ப்ண்ணி பாக்கறேன். நீங்க குடுத்த லின்க் ட்ரை பண்ணி பாக்கரேன்.
இதற்கு முன் ஒரு தடவை ஆன்லைன் வொர்க் ஏமாற்றி விட்டார்கள்.
இன்சுரன்ஸ், வடகம் கு நான் வேஸ்ட்.
பதிலுக்கு ரொம்ப நன்றி. மற்ற தோழிகளும் உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரம்யா நீங்க ஜீனியஸ் (அதி மேதாவி) நு நிருபிச்சுகிட்டே இருக்கிங்கப்பா

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

வாங்க ஃபாத்திமா... ஏன் இன்னிக்கா நானா கெடச்சேன் ;-)

அமாம். நீங்கள் சொன்னதை போல ஏமாற்று வேலைகளும் நடக்கும். take Care

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஃபாத்திமா ஃப்பாரெக்ஸ் ட்ரேடிங் எப்படி..அது இஸ்லாம் மார்கத்தில் அனுமதிக்கக் கூடிய விஷயமா என்பது எனக்கு தெரியவில்லை..ஆனால் அதில் சிலர் நல்ல முறையில் காசு சம்பாதிப்பதாக கேட்டு இருக்கிறேன்..

ஃபாத்திமா நீங்கள் ரொம்ப தெளிவான பெண் உங்கள் கணவரும் ரொம்ப நல்லவர்..தைரியமாக தெளிவாக யோசித்து எதையாவது தொடங்குங்கள்..நிச்சயம் வெற்றி உங்களுக்கு தான்...என்னுடைய ப்ராத்தனைகள் உங்களுக்காக

ஹாய் பாத்தி வீட்டிலே வேலை செய்ய போறிங்களா நல்ல விஷயம் தான் . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் .உங்களுக்கு தையல் தைக்க தெரியுமா? தெரியவில்லை என்றால் ஓர் இரு மாதத்தில் கற்று கொள்ளுங்கள் .இது எல்லா வித பெண்களுக்கும் ஏற்ற தொழில் . வீட்டில் இருந்து எல்லா விதமான ஆடைகளையும் தைத்து கொடுக்கலாம் . கார்மன்ட் கம்பெனிஇடம் இருந்து துணி வாங்கி கூட தைத்து கொடுக்கலாம் .நல்ல வருமானம் கிட்டும் . அதை தவிர்த்து இயற்க்கை முறையில் அழகு நிலையம் நடத்தலாம் . அழகு படுத்துவதில் ஆர்வம் இருந்தால் . இது கோடை காலம் என்பதால்(ஆரஞ்சு ,மாம்பழம் ,பாதாம் கீர் , ரோஸ் மில்க்) ஜூஸ் வகைகளை செய்து பிளாஸ்டிக் பாகில் போட்டு .பக்கத்தில் இருக்கும் பொட்டிக்கடையில் விக்கலாம் .மசாலா பொருட்களை நாமே அரைத்து பாக்கெட் போட்டு விக்கலாம் .வேற ... தெரிந்தால் சொல்கிறேன் .

நன்றி லுதாயூனூஸ்,
நான் என் கணவரிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தேன். ஜூலை மாதம் தையல் மற்றும் எம்ப்ராய்டரி சேத்து விடரேனு சொல்லி இருக்காங்க.
தாளிகா உங்களுக்கும் ரொம்ப நன்றி. உங்கள் ப்ரார்த்தனைகளுக்கும் நன்றிபா.
ரம்யா நீங்க ரொம்ப சமத்து அதான் உங்கள கிண்டல் பண்ணினேன். சரியா?

இன்னும் நமக்கு தெரிந்த யோசனைகளை இதில் போடுவோம். மற்ற தோழிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Hai பாத்திமா நானும் வீட்டில் இருந்து தான் வொர்க் பண்ணுகிறேன் எனக்கு தெரிந்ததை நான் சொல்லுகிறேன். நான் HBT (Home Based Medical Transcription )பண்ணுகிறேன் இதற்கு நீங்கள் 2 மாதங்கள் ட்ரைனிங் முடித்தால் போதும் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்கலாம் கண்டிப்பாக 10, 000க்கு குறைவில்லாமல் சம்பாதிக்கலாம். அடுத்தது WWW.Mturk.com இது பலதரப்பட்ட HITS (Human Intelligence Task) கலந்த வொர்க் இதற்கு எந்த முதலீடும் தேவை இல்லை இதில் எப்போதும் வொர்க் இருந்து கொண்டே இருக்கும் உங்களுக்கு எது சுலபமோ அதை நீங்கள் தேர்வு செய்து பண்ணலாம். இதற்கு PAN card தேவை. நீங்கள் அந்த website போய் பார்த்தால் உங்களுக்கு புரியும். நாம் பண்ணுகிற வேலை பொறுத்து நமக்கு bank வழியாக நமக்கு பணம் வந்து விடும். நானும் இந்த வொர்க் பண்ணுகிறேன் பணம் கரெக்ட்டாக வந்து விடுகிறது. உங்களுக்கு இதில் ஆர்வம் இருந்தால் நான் மேலும் தகவல்கள் சொல்லுகிறேன்.

Keep smiling....

வாவ்.. ஃபாத்திமா... நல்ல யோசனை. நானும் மெடிக்கல் ட்ரான்ஸ்கிப்ஷ்ன் பற்றி நினைத்தேன்.. ஆனால் நம்பகமானதா என தெரியவில்லை.. அனுபவமுள்ள அருள் நல்லா சொல்லி இருக்கங்க.. கப்புனு புடுசுக்கோங்க ... ;-)
நன்றி அருள் ( இதுதான உங்க பேரு ;-) )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்க குரிப்பிட்டிருப்பதை பற்றி மேலும் தெரிஞ்ஷுக்கலாமா? இதை பற்றீ விரிவா சொல்லமுடியுமா ப்ளீஸ்[உங்க பையன் எப்படி இருக்கான்]

all is well

Thanks a lot for your information. Can you give me ur mail id please.
Ramya pudichukaren. En mela ungaluku evvalavu akkarai.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்