Work from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்

ஹாய் தோழிகளே. எனக்கு ஆலோசனை சொல்லுங்க. என் கணவர் வெப் டிசைன் பண்றங்க. அவங்களுக்கும் இப்ப ப்ராஜெக்ட்ஸ் சரியா இல்ல. Financial Position டைட் ஆகிடுச்சு. கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகமாகிட்டதால ஒன்னும் மேனேஜ் பண்ண முடியல. நான் B.sc., Maths முடிச்சு இருக்கேன். கம்ப்யூட்டர் Knowledge ஓரளவுக்கு உண்டு. Data Conversion or Data Entry எல்லாம் நல்லா பண்ணுவேன்.
என் கணவர் ரொம்ப நல்லவர். அவங்களுக்கு என்னை வெளிய வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்ல. வீட்டிலிருந்து வேலை செய்யுற மாதிரி எதாவது சொல்லுங்களேன். டியூஷன் எடுக்க ஹவுஸ் ஓனர் அனுமதி தரலை. என்ன பண்றது. கைவினை பகுதியில் இருக்கரதை செய்து பாக்கலாம் என்றால் சில பொருட்கள் எங்க கெடைக்கும்னு தெரியல. இப்பவும் என் கணவர் மேனேஜ் பண்ணிடலாம் சரி ஆகிடும்னு சொல்லுறாங்க. ஆனால் அவங்க மூட் அவுட் ஆகுறது பாக்க பாவமா இருக்கு. உங்களுக்கு தெரிந்த ஐடியா சொல்லுங்களேன்.

என்னை போன்ற பல தோழிகளுக்கு இது உதவியா இருக்கும்னு நெனைக்கிறேன்.

https://www.mturk.com/mturk/welcome இது mturkoda மெயின் page இதுல right corner tipல worker/requester அப்படின்னு இருக்கும். புதுசா register பண்ண போறதுனால requester click பண்ணா ஒரு sign in form வரும் அதுல I am a new user click பண்ணிட்டு sign in using our secure server அப்படின்னு இருக்கும் அதை click பண்ணா password verification form வரும் அதுல register பண்ணிட்டு work start பண்ணலாம்

Keep smiling....

நீங்க www.mturk.com பத்தி கொஞம் விவரம சொல்லுங பா நானு intrestah இருகென் .அதுல எப்டி செரனும் நு சொல்லுஙக. plz reply me

Priya Benjamin

approximate ah monthly evvalavu earn pannalam pa?

Priya Benjamin

ரொம்ப thanks Arul.... நல்ல ஹெல்ப் நீங்க பண்ணியிருக்கீங்க...... register பண்ணின அப்புறம் எப்படி work start பண்றதுனு தெரியல.... please help பண்ணுங்களேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)

Baby Day Care:
Nowadays somany women are going to work, so you can open Baby Care Centre to take care of their babies, initially you can buy
1) Animals, flowers pictures etc, some building toys
2) Set timings for everything which needs to be preplanned & organised.
3) Some little games, good teachings, some stories, dances, music etc.
little money is needed but not much, you can start imediately as along as you know some one who is going to work, for advertisement you can print some pamlets & handover to houses.

you can go to students house & take tutions according to your specialised areas in subjects, if you have special skills, then you can teach who is need of those skills.

regards
sathya

அருள் மேரி முதலில் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மெடிக்கல் ட்ரான்ச்கிரிப்ஷன் பற்றி நானும் கேள்வி பட்டு இருக்கிறேன். சென்னையில் உங்களுக்கு தெரிந்த சென்டர்கள் ஏதும் இருக்கிறதா? உங்கள் மெயில் ஐடி நோட் செய்து கொண்டேன். நான் டைபிங் ஹையர். அதனால் டைபிங் ஸ்பீட் பற்றி கவலை இல்லை.
என் மெயில் ஐடி fathi_nice@yahoo.co.in.
லதா வினித்குமார் நீங்க சென்னைல எங்க இருக்கீங்க. முடிந்தால் நாம் ஒன்றாக ட்ரைனிங் எடுக்க முயற்சி செய்வோம்.

பர்வீன் கவலை படாதீங்கபா. எல்லாம் நன்மைக்கே. துன்பத்தை தந்து சோதிக்கும் இறைவன் நிச்சயம் ஒருநாள் மகிழ்ச்சியை தருவான் என நம்பிக்கையோடு இருப்போம்.
சத்யகுகன் உங்களுடைய suggestionகும் ரொம்ப நன்றி. நான் நினைச்சது மாதிரியே இது பல தோழிகளுக்கு பயனுள்ளதா இருக்கு. இன்னும் நமக்கு தெரிந்த கருத்துக்களை இங்கே போடுவோம். பர்வீன், லதா, மற்றும் என்னை போன்றவர்களுக்கு இது நிச்ச்யமா பயனுள்ளதா இருக்கும்.

இந்திரா, ஆஸிமா, உங்களுக்கும் என்னுடைய நன்றிகள்.
அருள் மேடம் ஆஸிமா சொன்ன மாதிரி என் கிட்டயும் PAN கார்ட் இல்ல. என் கணவரிடம் தான் இருக்கு. அதை வைத்து பண்ண முடியுமா.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் ஃபாத்திமா,
அருள் மேரி சொன்னது சூப்பரான வேலை. கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணுங்கப்பா. முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார். ரம்யா நான் பழமொழியை கரக்ட்டா யூஸ் பண்ணினேனா.

ஃபாத்திமா எனக்குத் தெரிஞ்ச இன்னொரு வேலை பத்தி சொல்றேன். பொதுவாவே நீங்க எல்லாரும் பிரியாணி ரொம்ப நல்லா பண்ணுவீங்க. இதையே நீங்க பண்ணலாமே. உங்களுக்கு தெரிஞ்ச ஹிந்து ஃபிரண்ட்ஷ்க்கு அவங்க வீட்ல நடக்கிற சின்ன சின்ன ஃபங்ஷன் (like birthday parties) ஆர்டர் பிடிச்சு பன்ணிக் கொடுக்கலாம் . நீங்க போயி கொடுக்கணும்னு இல்ல உஙளவர்கிட்டே கொடுத்தனுப்பலாம். அவங்களே கூட வந்து வாங்கிப்பாங்க. முதல்லேயே கேஷ் வாங்கிரலாம். இதுகூட நீங்க உங்க ஷ்பெசல் ஐடம் கூட சேர்துக்கலாம்.

என்னோட தோழி சாதரணமா ஆரம்பிச்சு இப்போ சக்ஸஷ்ஸா பண்ணிட்டிருக்கா. நாங்ககூட மத்ததெல்லாம் ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி பிரியாணி மட்டும் அவகிட்டதான். ஆரம்பத்தில ஒண்னிரன்டு ஆர்டர் கிடச்சாலும் நல்லா பண்ணிங்கன்னா அவங்க முலமாவே ஆர்டர் கிடைக்கும்.

Don't Worry Be Happy.

ஹாய் ஃபாத்திமா.. எல்லார்க்கும் பயன்படும் வகையில் நல்ல தலைப்பு ஆரம்பித்துள்ளீர்கள். நன்றி...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முதலில் நான் உங்களுக்கு ஒரு மெசெஜ் சொல்லிடரேன். நான் இதுவரை பிரியானி சமைத்தது இல்லை. இருந்தாலும் உங்க ஐடியாக்கு ரொம்ப நன்றி. இந்த தலைப்பை பார்வையிடும் மற்ற தோழிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம். மிக்க நன்றி. புதுசு புதுசா நிறைய ஐடியாக்கள் குடுக்கறிங்க. நன்றி தோழிகளே

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹலோ அருள் மேரி மேடம்,வணக்கம் நான் இது தான் உங்க கிட்ட முதல் தடவையாக பேசுகிறேன்,நான் B.sc Computer Science முடிச்சிருக்கேன்,நான் கல்ஃப்ல(Gulf) இருக்கேன்.நான் ஹவுஸ் வொயிப்பாக தான் இருக்கேன்,எனக்கு வீட்ல இருந்து வேலை பார்க்கணும்னு ரொம்ப ஆசை நீங்க சொன்ன HBT நெட்ல படிக்கலாமா?ஏன்னா நான் இங்க டிரெயினிங் எதுவும் போக முடியாது.அது எனக்கு ஒத்து வரலனாலும்,HITS பத்தி நீங்க எனக்கு ஏதாவது உதவி உங்ககிட்ட கேட்கலாமா?நான் ஏற்கனவே PAN CARDக்கு அப்ளை பண்ணி இருக்கேன்.உங்க மெயில் ஐடி கேட்டா குடுப்பீங்களா?

மேலும் சில பதிவுகள்