ஹெல்தி சூப்

தேதி: May 26, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (10 votes)

 

காலிப்ளவர் இலை மற்றும் தண்டு (வேண்டாம் என்று போடுவது)
பூசணி, சுரைக்காய், தர்பூசணி தோல் (வேண்டாம் என்று போடுவது)
முட்டைக்கோஸ் - 3 இலை
காரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
உருளைக்கிழங்கு - பாதி
பச்சை மிளகாய் - பாதி
மிளகு - கால் தேக்கரண்டி
வெண்ணெய் - அலங்கரிக்க


 

காய்கறிகள் அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெண்ணெய் தவிர எல்லா காய்கறிகளையும் குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் அல்லது 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
வெந்ததும் வெளியில் எடுத்து நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த கலவையை சல்லடையால் வடிகட்டிக் கொள்ளவும்.
தேவைக்கேற்ப கொதிநீர் சேர்த்து, வெண்ணெயை மேலே மிதக்கவிட்டு பரிமாறவும். தண்ணீர் சூப் வேண்டுமென்றால் மிக்ஸியில் அரைக்காமல் வடிகட்டி வெண்ணெய் மிதக்க விட்டு பரிமாறவும். நார்சத்து அதிகமான சத்தான சூப் ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இந்திரா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ஆரோக்கியமான, ஈஸியான சூப் கொடுத்து இருக்கீங்க. இத டயட் சூப்பா கூட எடுத்துக்கலாம் போல இந்திரா. அறுசுவை முகப்புல உங்க ரெசிப்பியா ஒடிக்கிட்டு இருக்கு. இதுப்போல இன்னும் நிறைய குறிப்பு கொடுத்து கூட்டாஞ்சோறு பகுதில ஒரு தங்க பதக்கம் வாங்க வாழ்த்துக்கள்.

இனி அருசுவை தோழிகள் உபயத்தில் வீட்டில் ஒரு பொருளூம் வீனகாது போல.நாலைக்கே செய்துபார்துடவேண்டியதுதான். கலக்குரீங்க பா . வாழ்த்துக்கள்

all is well

அன்பு வினோஜா ,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்த சமயம் கொஞ்சம் வேலைப் பளு குறைவாக உள்ளது. ஜூன் ஆரம்பித்து பையனின் தேர்வு , இந்தியா போக தயார் ஆவது என்று நேரம் இருக்காது. இப்போது வீட்டில் செய்வதை தான் போடுகிறேன். ஆனல் படம் எடுத்து எழுதி அனுப்ப நேரம் கிடைக்கிறது. பார்ப்போம். எத்தனை நாட்கள் முடிகிறது என்று. தங்க பதக்கம் எல்லாம் ரொம்ப கஷ்டம்.தொடர்ந்து ஏழு குறிப்புகளைக் கொடுத்து இந்திரா வாரம்" என்று போட்டிருக்கலாம் ஆனால் இடையில் அறுசுவைக் குறிப்பு வந்து விட்டது. உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
அன்பு சுந்தரமதி,
உண்மையாக காலிப்ளவர் இலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நார்சத்து அதிகம். இரவு இதுபோல் ஒரு கப் சூப் , ஒரு துண்டு ப்ரௌன் ப்ரெட் சாப்பிட்டு கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்தால் எல்லோரும் ஐஸ்வர்யா ராய் தான்.

Save the Energy for the future generation

உங்களது சூப் செய்து பார்த்தேன்
நான் காளிபிலோவேர் தோல் ,பூசணி தோல் ,உருளை,காரட் மட்டுமே போட்டேன்
நன்றாக வந்தது
இந்திரா மேடம் நிறைய குறிப்பு தாங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

very super soup and healthy thk pa neenga which country pa

தோல் வைத்து துவையல் தான் செய்யலாம் என்றிருந்தேன். தோல் மற்றும் சதைக்கு நடுவில் தான் அதிக சத்து இருப்பதாக படித்த ஞாபகம். நல்லதொரு குறிப்பு. சூப் வித்தியாசமான சுவையுடன் நன்றாக இருந்தது.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!