இட்லி உப்புமா

தேதி: May 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

இட்லி - 8
பச்சைமிளகாய் - 6
பூண்டு - 10
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
காய்ந்த மிளகாய் - 2


 

இட்லியை வேக வைத்து குளிர்சாதனப் பெட்டியில் எட்டு முதல் பத்து மணி நேரம் வைத்து விடவும். இட்லியை கையால் ரவை போல் உதிர்த்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் உதிர்ப்பதற்கு எளிதாக இருக்கும்
பச்சை மிளகாய், பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை உதிர்த்து வைத்திருக்கும் இட்லிப் பொடியில் கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இட்லியை போட்டு மிதமான தீயில் மூடி வைத்து கிளறவும்.
இட்லி சூடானவுடன் இறக்கவும். சுவையான இட்லி உப்புமா ரெடி. என்னுடைய பசங்க இட்லி என்றால் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இட்லி உப்புமா என்றால் சாப்பிடுவார்கள். இந்த எளிமையாக செய்யக்கூடிய இட்லி உப்புமா குறிப்பினை நமக்கு வழங்கியவர் திருமதி. இந்திரா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

Save the Energy for the future generation

இட்லி உப்புமா நன்றாக இருக்கின்றது இந்திரா. நானும் இந்த முறைப்படிதான் செய்வேன்.நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் இட்லியை விட இட்லி உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு யோகராணி,
நன்றி. பொதுவாக நம்ம பசங்களுக்கு இட்லி பிடிக்காது. ஆனால் என்னோட வட இந்திய தோழியோட பொண்ணு கேக் சாப்பிடுவது போல் சாப்பிடுவாள். இட்லி உப்புமா என்றால் என் பசங்க ஒன்றும் சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

Save the Energy for the future generation

ரொம்ப நல்லா இருந்தது இந்திரா... இனி அடிக்கடி செய்வேன். மிக்க நன்றி, சுவையான குறிப்புக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா